Lankamuslim.org

One World One Ummah

தமிழ் பேசும் மக்களால் நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­த முயற்­சி : மஹிந்த

leave a comment »

mahiநாட்டை பிரி­வி­னையின் பாதையில் கொண்டு செல்லும் நோக்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கைகோர்த்துள்ளன. அதேபோல் தமிழ் பேசும் மக்­களை எமக்கு எதி­ராக திருப்பி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். ஆனால் இந்த நாட்டில் சிறு­பான்மை மக்கள் அச்­சப்­படும் எந்த நட­வ­டிக்­கை­யையும் நாம் முன்­னெ­டுக்க மாட்டோம் என உறு­தி­ய­ளிப்­ப­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். ஆட்­சி­ய­மைத்து ஆறு­மாத காலத்­துக்குள் நாட்­டுக்கு பொருந்­தக்­கூ­டிய புதிய அர­சியல் அமைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் வெளி­யி­டப்­பட்­டது. கொழும்பு ௦5 இல் அமைந்­துள்ள ஹென்றி பெட்ரிஸ் மைதா­னத்தில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் மற்றும் மதத் தலை­வர்கள்,கலை­ஞர்கள் உள்­ளிட்ட பொது­மக்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். இந்த தேர்தல் விஞ்­ஞா­பன வெளி­யீட்டு நிகழ்வில் பிர­தான உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

எம்மால் இன்று வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை பார்க்கும் போது அன்று நாம் வெளி­யிட்ட மஹிந்த சிந்­த­னையே நினை­விற்கு வரு­கின்­றது. நாட்டின் இன்­றைய நிலைமை அன்று இருக்­க­வில்லை. இன்று மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர். ஆனால் அன்று எம்மால் சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­ய­வில்லை. இரா­ணுவ பாது­காப்பு, பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தி யில் நாம் செயற்­ப­ட­வேண்டி இருந்­தது. அன்று எம்மால் வவு­னி­யாவைத் தாண்டி பய­ணிக்க முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. வடக்கு எப்­படி இருக்கும் என்­பது எமக்கு தெரி­ய­வில்லை. இன்று வடக்கில் வாழும் எமது விவ­சா­யிகள் வெங்­காயம் விதைப்­ப­தைப்போல் அன்று புலி­க­ளினால் மிதி­வெ­டிகள் விதைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதேபோல் அன்று கொழும்பின் நிலைமை மிக மோச­மாக இருந்­தது. குப்­பையால் நிறைந்­தி­ருந்த கொழும்­பையே அன்று நாம் பார்த்தோம். கொழும்பு மட்­டு­மல்ல நாட்டில் அனைத்து பகு­தி­களும் மிகவும் மோச­மான நிலையில் தான் இருந்­தன. அவற்றில் இருந்து நாட்டை மீட்­டெ­டுத்­தது நாம்தான். கடந்த நான்கு ஆண்­டு­களில் நாம் நாட்டை மாற்­றி­ய­மைத்தோம். அமை­தி­யான நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்க முடிந்­தது.

மோச­மான நிலையில் நாடு
ஆனால் மீண்டும் நாட்டின் நிலைமை மாறி­வ­ரு­கின்­றது. மீண்டும் சாதா­ரண மக் கள் கஷ்­டப்­படும் நிலைமை ஏற்­பட்­டு ள்­ளது. இந்த நிலையில் மஹிந்­த­வுக்கு மீண்டும் ஏன் இடம் வழங்­கப்­பட்­ட­தென ரணில் கேள்வி எழுப்­பி­யுள்ளார். ஆனால் நான் ஆட்­சியில் இருந்து வெளி­யே­றிய போதும் மக்கள் என்னை மீண்டும் அழைக்­கின்­றனர். இலட்சக் கணக்­கி­லான மக்கள் எனது வீடு­தே­டி­வந்து தலை­மைத்­து­வதை ஏற்க வற்­பு­றுத்­து­கின்­றனர். அவர்கள் அனை­வரும் விடுக்கும் கோரிக்­கையை நல்ல தலைவன் புறக்­க­ணிக்க முடி­யாது. அதே போல் இன்று வடக்கில் இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளமை, வடக்கில் பெண்­களின் பாது­காப்­புக்கு அச்சம் ஏற்­பட்­டுள்ள நிலையில், வேறு மாவட்­டங்­களில் இருக்கும் மக்கள் வடக்­குக்கு செல்ல முடி­யாத நிலையில் மக்கள் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே மீண்டும் அமை­தி­யான நாட்டை உரு­வாக்கிக் கொடுக்­கவே மக்கள் என்னை அழைக்­கின்­றனர்.

எமது அர­சாங்­கத்தில் 15 இலட்சம் மக்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை பெற்றுக் கொடுத்தோம். விவ­சா­யி­க­ளுக்கு உர மானி­யங்­களை பெற்றுக் கொடுத்தோம். பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண் டோம். பெருந்­தோட்ட துறையின் அபி­வி­ருத்­திக்கு நாம் பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். ஆனால் அவை அனைத்தும் இன்று அடி­மட்­டத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. இந்த ஆறு­மாத ஆட்­சியில் இந்த நாடு 25ஆண்­டுகள் பின்­னோக்கி சென்­றுள்­ளது. அந்த உணர்வு மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டதன் கார­ணத்­தினால் தான் மக்கள் மீண்டும் என்னை நாடி வந்­துள்­ளனர்.

மீண்டும் போராடத் தயார்
நாம் கடந்த காலத்தில் நல்ல படிப்­பி­னை­யினை கற்­றுள்ளோம். பொறுத்துக் கொள்­ளக்­கூ­டிய அளவு நாம் பொறுத்­துக்­கொண்­டுள்ளோம். நாட்­டுக்­காக நாம் போரா­ட­வேண்டி இருந்த நிலை­யிலும், யுத்தம் ஒன்றை செய்ய வேண்­டிய நிலை­யிலும் நாம் அவற்றை செய்தோம். அதேபோல் மீண்டும் இந்த நாட்­டுக்­காக போரா­ட­வேண்­டிய நிலைமை ஏற்­படும் சந்­தர்ப்­பத்தில், நாட்­டுக்­காக யுத்தம் ஒன்றை மீண்டும் மேற்­கொள்­ள­வேண்­டிய சந்­தர்ப்­பத்தில் அதை நாம் மேற்­கொள்ள தயா­ராக உள்ளோம். நாம் மீண்டும் புதி­தாக சிந்­திக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த ஆறு மாத­காலம் மக்கள் சிந்­திக்க வேண்­டிய கால­மாக இருந்­தது. இப்­போது நாம் புதி­தாக செயற்­பட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எம்மால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­திகள் இந்த ஆறு­மாத காலத்தில் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. அவற்றை மீண்டும் நாம் முன்­னெ­டுக்க வேண்டும். கொழும்பை சுத்­த­மான நக­ர­மாக மாற்றும் அதே நேரம் ஏனைய மாவட்­டங்­க­ளையும் சுத்­த­மான நக­ர­மாக மாற்றி இலங்­கையை தூய்­மை­யான நாடக மாற்ற வேண்டும்.

மீண்டும் நிவா­ரணம்
இந்த ஆறு­மாத காலத்தில் நிலைமை இப்­ப­டி­யென்றால் 6௦ மாத காலத்தில் நாட்டின் நிலைமை எப்­ப­டி­யி­ருக்கும். நாடு முற்­றாக அழிந்­து­விடும். நாம் மீண்டும் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப தயா­ராக உள்ளோம். நாட்டை நவீ­ன­ப்ப­டுத்தும் பய­ணத்தில் இளை­ஞரை ஒன்­றி­ணைத்து கொண்­டு­செல்ல வேண்டும். பொரு­ளா­தா ரத்தை பலப்­ப­டுத்த வேண்டும். மக்கள் உண­ரக்­கூ­டிய நிவா­ர­ணங்­களை கொண்­டு­வ­ருவோம். அனைத்து மக்­க­ளுக்கும் வீட்டு வச­தி­களை பெற்றுக் கொடுப்போம். போசாக்­கான உணவு, சுகா­தார வச­தி­களை மேலும் பலப்­ப­டுத்­துவோம். அரச மற்றும் தனியார் துறை­யி­ன­ருக்கும் சலு­கை­களை பெற்­றுக்­கொ­டுப்போம்.

ஒரு அணி­யாக கட்சி
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணயில் இரண்டு அணி இல்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் ஒரு அணி மட்­டுமே உள்­ளது. அந்த அணியும் ஐக்­கிய தேசியக் கட்­சியை எதிர்க்கும் அணி­யா­கவே உள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் தான் பல அணிகள் இன்று உரு­வா­கி­யுள்­ளன. இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஒன்­றாக கைகோர்த்­துள்­ளன. அதேபோல் வேறு பல கட்­சி­களும் கைகோர்த்­துள்­ளன. அன்று சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட ஜாதிக ஹெல உறு­ம­யவும் அவர்­க­ளுடன் தான் கைகோர்த்­துள்­ளது. நாட்டு மக்கள் அனை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை பார்த்­தி­ருப்­பீர்கள். அது என்ன சொல்­கின்­றது. அவர்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு ஏற்ப சுய நிர்­ணய கொள்­கைக்கு இடம் கொடுக்க முடி­யுமா? வடக்­கையும், கிழக்­கையும் ஒன்­றி­ணைத்து தனி­நா­டாக மாற்­று­வதும், ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ர­ணைக்கு முன்னால் எம்மை நிறுத்த முயற்­சிப்­பதும் ஏற்­றுக் ­கொள்ள முடி­யுமா? ஒட்­டு­மொத்த பிரி­வினை சக்­தி­களும் இன்று ஒரு அணியில் கைகோர்த்து நாட்டின் நல்­லாட்சி, ஜன­நாயகம் பற்றி பேசு­கின்­றனர். ஆகவே இவர்கள் நினைப்­பது நாட்டை நல்­லாட்­சியின் பாதையில் கொண்­டு­செல்­லவோ, நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்­கவோ அல்ல. இந்த நாட்டை பிரி­வி­னையின் பாதையில் கொண்டு செல்­லவே இவர் கள் முயற்­சி­கின்­றனர்.

சிறு­பான்மை இனத்­துக்கு தடை­யாக இருக்க மாட்டோம்
எமது ஆட்­சியில் நாம் சிறு­பான்மை மக்­களின் உரி­மை­க­ளையும் அவர்­க­ளது கலா­சா­ரத்­தையும் பாது­காத்தோம். கடந்த கால போராட்­டத்தில் இடிக்­கப்­பட்ட இந்து ஆல யங்கள், கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களை நாம் புனர்­நிர்­மாணம் செய்து கொடு த்தோம். ஆனால் கடந்த குறு­கிய காலத்தில் தமிழ், முஸ் லிம் மக்கள் மத்­தியில் எம்­மைப்­பற்­றிய தவ­றான எண்­ணத்தை வர­வ­ழைத்து எமக்கு எதி­ரான வகையில் சில சூழ்ச்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் மத்­தியில் ஒரு அச்சம் ஏற்­பட்­டுள்­ளன என்று சொன்­னாலும் அது தவ­றில்லை. அது இந்த தேர்­தலில் நிரூ­ப­ணமா­கி­யது. ஆகவே இவர்­க­ளது சூழ்ச்­சியை தமிழ் மக்கள் தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். எந்த மதத்­துக்கும், சிறு­பான்மை இனத்­துக்கும் எந்த வகை­யிலும் நாம் தடை­யாக இருக்க மாட்டோம். அனை­வ­ரையும் பாது­காக்கும் ஆட்­சியை முன்­னெ­டுப்போம்.

ஆறு­மாத காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு
அதேபோல் நாட்டின் சுயா­தீன தன்­மையை பாது­காக்கும் சகல நட­வ­டிக்­கை­களையும் நாம் முன்­னெடுப் போம். பல­மான சட்ட, நீதி முறை­மை­யினை நாம் உறு­திப்­ப­டுத்­துவோம். அதேபோல் சர்­வ­தேச உற­வு­மு­றையை பலப்­ப­டுத்தும் வகையில் எமது வெளி­நாட்டு கொள்கைகளை அமைத்துக்கொள்வோம். அத்தோடு நாம் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வரும் கொள்கையையும் பொறுப்பேற்று புதிய தேர்தல் முறைமையை உருவாக்குவோம். அதேபோல் பாராளு மன்றத்தை பலமான சபையாக மாற்றி அடுத்த ஆறுமாத காலத்தில் நாட்டுக்கு பொருந்தக் கூடிய புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவோம். மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய பலமும் உறுப்பினர்களும் எம்மிடம் இருக்கின்றனர். மீண்டும் இந்த நாட்டை சிறப்பான பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடியும். இந்த நாட்டை கோபத்தாலும் வைராக்கியத்தாலும் முன்னெ டுத்து செல்ல முடியாது. ஒற்றுமையான ஒன்றுபட்ட சமூகத்தின் மூலமாகத்தான் நாட்டை முன்னெடுக்க முடியும். ஆகவே மீண்டும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம் எனக் குறிப்பிட்டார்.-வீரகேசரி

Advertisements

Written by lankamuslim

ஜூலை 29, 2015 இல் 12:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: