Lankamuslim.org

One World One Ummah

சர்­வ­தேச ஹெரோயின் வலை­ய­மைப்பை இயக்­கிய செல்வம் திரைப்­பட தயா­ரிப்­பாளர் முஜா­ஹித்

leave a comment »

interஎம்.எப்.எம்.பஸீர்: பிர­ப­ல­மான சர்­வ­தேச போதைப் பொருள் வலை­ய­மைப்பு ஒன்­றினை மலே­ஷி­யாவில் இருந்­த­வாறு இயக்கி வந்த, செல்வம், பரா­வர்­தன ஆகிய சிங்­கள திரைப்­ப­டங்­களின் தயா­ரிப்­பா­ள­ரான மொஹம்மட் முபாரக் மொஹம்மட் முஜா­ஹித்தை கைது செய்து நாட்­டுக்கு அழைத்து வர சிவப்பு அறிவித்தல் தயா­ரிக்கும் பணியை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆரம்­பித்­துள்­ளது. வெளிநாட்டு உள­வாளி ஒரு­வரின் உத­வி­யு­டனும் வெளிநாட்டு சட்ட அமு­லாக்கல் நிறு­வனம் ஒன்றின் தக­வல்­க­ளுக்கு அமை­வா­கவும் கடந்த இரு வரு­டங்­க­ளாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் முன்­னெ­டுத்த சூட்­சும விசா­ர­ணை­களில் அந்த வலை­ய­மைப்பு தொடர்­பி­லான அத்­தனை ஆதா­ரங்­களும் சிக்­கி­யுள்ள நிலை­யி­லேயே இந் நடவ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். அதன்­படி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்த ஹெரோயின் வலை­ய­மைப்பு செயற்­பட்­டுள்­ள­தா­கவும் 2014.08.15 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் அந்த வலை­ய­மைப்பு 7 கொள்­க­லன்கள் ஊடாக நாட்­டுக்குள் சுமார் 750 முதல் 1000 கிலோ வரை­யி­லான ஹெரோயின் போதைப் பொருளை பாகிஸ்தான் உள்­ளிட்ட நாடு­களில் இருந்து இலங்­கைக்குள் கடத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் இந்த வலை­ய­மைப்­பா­னது சர்­வ­தேச போதைப் பொருள் கடத்தல் மன்­ன­ரான வெலே சுதா­வுக்கும் பல சந்­தர்ப்­பங்­களில் போதைப் பொரு­ளினை விற்­பனை செய்­துள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்­பகல் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

2013 ஆம் ஆண்டு மார்ச் மதம் 5 ஆம் திகதி சர்­வ­தேச சட்ட அமு­லாக்கல் நிறு­வனம் ஒன்றி­ட­மி­ருந்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வுக்கு முக்­கிய தகவல் ஒன்று பரி­மா­றப்­பட்­டுள்­ளது. பாகிஸ்தானிலி­ருந்து கொள்­க­லன்கள் ஊடாக இலங்­கைக்குள் ஹெரோயின் கடத்­தப்­ப­டு­வ­தா­கவும் அவை இலங்­கையில் இருந்து சில சந்­தர்ப்­பங்­களில் துருக்கி உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்யப்படுவதா­கவும் அதன் பிரதான முகவர் இலங்­கை­யி­லேயே உள்­ள­தா­கவும் அந்த தக­வலில் குறிப்பிடப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து இது தொடர்பில் பொலிஸ்போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விரி­வான விசா­ர­ணை­யொன்றை மிக சூட்­சு­ம­மாக முன்­னெ­டுத்­தது.இந்த விசா­ர­ணை­க­ளுக்­காக வெளி நாட்டு உள­வாளி ஒரு­வரின் ஒத்­து­ழைப்­பையும் பொலிஸார் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.அவர் நாட்டில் தங்­கி­யி­ருந்து இது தொடர்பில் உளவு பார்த்­துள்ள நிலையில் பிர­தான முக­வ­ராக கரு­தப்­படும் நபரின் தொலை­பேசி இலக்­கத்­தையும் ஒரு­வாறு தேடிப்­பி­டித்­துள்ளார்.

குறித்த தொலை­பேசி இலக்­கத்தில் அந்த முக­வரை அழைத்து ஒரு­வாறு அவரோடு பழ­கிய அந்த உள­வாளி கொழும்பில் பிர­ப­ல­மான நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் பிர­தான முக­வரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டவும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்ளன. இந்த சந்­திப்­பா­னது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரின் கண்­கா­ணிப்­பி­லேயே இடம்­பெற்­றுள்­ள­துடன் அதன் பின்னர் வெளிநாட்டு உள­வா­ளியும் அவ­ரது நாட்­டுக்கு அனுப்­பப்­பட்­டுள்ளார்.

இந்த சந்­திப்பைத் தொடர்ந்து பொலிஸார் அந்த ஹெரோயின் போதைப்பொருள் வலை­ய­மைப்பின் இலங்கை முகவர் தொடர்பில் தொலை­பேசி இலக்கம், நட்­சத்­திர ஹோட்டல் சி.சி.ரி.வி.கம­ராவில் இருந்த பதி­வுகள் மற்றும் அவர் வந்த வாகன இலக்கம் ஆகி­ய­வற்றை வைத்து பின் தொடர்ந்­த­துடன் அவர் தொடர்­பி­லான விப­ரங்­க­ளையும் சேக­ரிக்­க­லா­யினர்.

இதன் பல­னாக அந்த இலங்கை முகவர் கண்டி பிர­தே­சத்தைச் சேர்ந்த மொஹம்மட் சப்றி நஜி­முடீன் என அடை­யாளம் கண்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார், அவர் தற்­போது மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறையில் உள்ள வோட் பிளேஸ் சியாம் அல்­லது மொஹம்மட் சியாம் என்ற பிர­பல போதைப் பொருள் வர்த்­த­கரின் சகோ­த­ரரே அவர் எனவும் கண்­ட­றிந்­தனர்.

இத­னை­ய­டுத்து கோட்டை நீதி­வா­னுக்கு இர­க­சிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் அஹமட் சப்றி ந­ஜி­மு­டீ­னுடன் மிக அருகில் உள்­ள­வர்கள், தொடர்­பு­களைப் பேணுவோர் என அனை­வ­ரதும் தொலை­பேசி, வங்கிக் கணக்­கு­களை ஆராய அனு­ம­தி­யினைப் பெற்­றுக்­கொண்­டனர்.

இந் நிலை­யி­லேயே இந்த வலை­ய­மைப்பை மலே­ஷி­யாவில் இருந்து திரைப்­பட தயா­ரிப்­பாளர் மொஹம்மட் முபாறக் மொஹம்மட் முஜாஹித் என்­பவர் இயக்­கு­வது பொலி­ஸா­ருக்கு தெரி­ய­வந்­தது. இயக்­கு­நரின் மகளும் மரண தண்­டனை பெற்று சிறையில் உள்ள போதைப் பொருள் வர்த்­தகர் வோட்­பிளேஸ் சியாமும் கணவன் மனைவி என பொலிஸார் கண்­ட­றிந்த போது விச­ாரணை மேலும் தீவி­ர­ம­டைந்­தது.

இந் நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி இயந்­திர பாகங்கள் அடங்­கிய கொள்­கலன் ஒன்றில் மறைத்து பாகிஸ்­தா­னி­லி­ருந்து ஹெரோயின் போதைப் பொருள் கடத்­தப்­ப­டு­வ­தாக போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு தகவல் கிடைத்­தது. இதனைத் தொடர்ந்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் உஷார் அடைந்­துள்ள நிலையில் சுங்கத் திணைக்­க­ளத்தின் கொள்­கலன் சோதனைப் பிரி­வுக்கு அருகே மாறு வேடத்தில் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளனர்.

குறித்த கொள்­க­லனை பொறுப்­பேற்­க மொஹம்மட் ஹம்ஸா என்ற நபர் அங்கு வந்­துள்ளார். 93 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் அந்த கொள்­க­லனில் இருந்த நிலையில் சுங்கப் பிரி­வினர் அதனை கண்­ட­றிந்து ஹம்­ஸா­வையும் கைதுசெய்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு அது தொடர்­பி­லான விசா­ர­ணை­களைப் ஒப்படைத்தனர்.

ஹம்­ஸா­விடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் இலங்கை முக­வ­ராக செயற்­பட்ட நஜி­முடீன் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் பல­னாக கடந்த வருடம் கண்டி பகு­தியில் வைத்து 57 கிலோ ஹெரோ­யி­னுடன் பிர­தான முக­வ­ரான நஜி­முடீன் கைது செய்­யப்­பட்டார். அந்த நடவடிக்கையோடு குறித்த போதைப் பொருள் கடத்தல் வலை­ய­மைப்பின் நட­வ­டிக்­கைகள் முடங்­கின.

2009 முதல் 2014.08.22 வரை அந்த வலை­ய­மைப்பு 7 கொள்­க­லன்­களில் நாட்­டுக்குள் ஹெரோயின் கடத்­தி­யுள்­ளது. வீட்டு தள­பா­டங்கள், இயந்­திர உப­க­ர­ணங்கள், புடவை, பிரைவூட் எனப்­படும் தள­பாட வகை, அரிசி போன்ற கொள்­க­லன்­களில் மறைத்தே இவைக் கடத்­தப்­பட்­டுள்­ளன. அவ்­வாறு கடத்­தப்­பட்ட ஹெரோ­யினின் நிறை 750 கிலோ முதல் 1000 கிலோ வரையில் இருக்கும் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதில் ஒரு பகுதி துருக்கி உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கு ஏற்­று­ம­தியும் செய்­யப்­பட்­டுள்­ளது.

நஜி­முடீன் கைது செய்­யப்­பட்­டதன் பின்னர் அவ­ரது மனைவி நஜி­முடீன் பயன்­ப­டுத்­திய மடிக்­க­ணி­னியை சேதப்­ப­டுத்தி அதில் உள்ள தக­வல்­களை அழித்­துள்ளார். எனினும் சேதப்­ப­டுத்­தப்­பட்ட மடிக்­க­னியில் இருந்து அழிக்­கப்­பட்ட தக­வல்­களை மொறட்­டுவை பல்­க­லையின் உத­வி­யுடன் பொலிஸார் பெற்­றதில் பல்­வேறு தக­வல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன.

இந்த வலைய­மைப்பைச் சேர்ந்த 20 இற்கும் மேற்­பட்டோர் பொலி­ஸாரால் இது­வரை கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். தனது இந்த கடத்தல் முறை­மையை மறைக்க இயக்­கு­ன­ரான பிர­தான சூத்­தி­ர­தாரி மொஹம்மட் முஜாஹித் திரைப்­ப­டங்­க­ளையும் தயா­ரித்துள்­ள­மையும், செல்வம், பரா­வர்­தன போன்­றன அவற்றில் சில எனவும் பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

ஒரு திரைப்­படம் தொடர்பில் திரைப்­பட கூட்­டுத்­தா­ப­னத்­திடம் இருந்து பெற வேண்­டிய 50 இலட்சம் ரூபா பணத்தைக் கூட முஜாஹித் பெற்­றி­ருக்­க­வில்லை என குறிப்­பிடும் பொலிஸார் அதனை அவ­ருக்கு செலுத்த வேண்டாம் என நீதி­மன்றின் தடை உத்தரவையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனைவிட பிரபலமான சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதாவுக்கும் முஜாஹித் என்ற இந்த திரைப்பட இயக்குனர் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஹெரோயின் விநியோகித்துள்ளமையையும் பொலிஸார் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.

இந் நிலையில் கடந்த 22 ஆம் திகதி கோட்டை நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் திரைப்பட தயாரிப்பாளர் முஜாஹித்தை கைது செய்ய திறந்த பிடியாணை ஒன்றினை பெற்றுக்கொண்டனர். அதன் படி மலேஷியாவில் மதிப்பு மிக்க வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வரும் அவரை சிவப்பு அறிவித்தல் ஒன்றூடாக கைதுசெய்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன என்றார்.-வீரகேசரி

Advertisements

Written by lankamuslim

ஜூலை 29, 2015 இல் 4:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: