Lankamuslim.org

One World One Ummah

அல் குர்ஆன் மீதான அவதூறு: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

with one comment

boபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சியாக இருக்கின்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை சோதனைக்கு உட்படுத்துவதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பிலான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை அவதூறுபடுத்தும் வகையில் கொம்பனிவீதி பொலிஸூக்கு அருகில் வைத்து பேசியதாக கூறப்படும் சம்பவம் மற்றும் ஜாதிக பல சேனா, கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு சம்பவங்களிலும் பிரதிவாதியாக குறிப்பிட்டு ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.-TM

Written by lankamuslim

ஜூலை 27, 2015 இல் 11:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. ஜாதிக பலசேனாவின் தலைவரும் நவ சம சமாஜக் கட்சியின் வேட்பாளருமான வட்டரக்க விஜித்த தேரருக்கு எதிராக பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர், பொலிஸ் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

    தேசியக் கொடி தொடர்பில் ஜாதிக பலசேனாவின் தலைவரும் நவ சம சமாஜக் கட்சியின் வேட்பாளருமான வட்டரக்க விஜித்த தேரர் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தொடர்பில் இதுவரையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையிலும் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்றும் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

    தேசியக் கொடி விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ள போதிலும் முறைப்பாடுகள் எதுவும் இதுவரையிலும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    வட்டரக்க விஜித்த தேரர் கூறியதாக கூறப்படும் கூற்றுதொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் முறைப்பாடுகள் இன்றி விசாரணைகளை முன்னெடுக்கமுடியாது என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

    ஜாதிக பலசேனாவின் தலைவரும் நவ சம சமாஜக் கட்சியின் வேட்பாளருமான வட்டரக்க தேரர், தேசியக்கொடிக்கு தீ வைக்கவேண்டும் என்றும் இது இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் கூறி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Imran

    ஜூலை 27, 2015 at 12:41 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: