Lankamuslim.org

One World One Ummah

தோப்பூர் மையவாடி மற்றும் தனியார் காணிகள் அரச மற்றும் விகாரை காணிகளாக உரிமை கோரப்படுகிறது !!

leave a comment »

thopoorதோப்பூர், செல்வநகர் முஸ்லிம் மையவாடி, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மாவடியை அண்மித்த பிரதேசத்தில் இது தொடர்பான பெயர் பலகையும் இடப்பட்டுள்ளது. சேருவில பெரிய விகாரைக்கு சொந்தமான 1,000  ஏக்கர் காணியில் , தோப்பூர் செல்வநகர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் உள்ளதாக தெரிவித்து நில அளவைத் திணைக்களத்தினால் நேற்று சனிக்கிழமையும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் நிள அளவை மேற்கொள்ளப்பட்டு கல் நடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உறுதியுள்ள தோப்பூர் பிரதேச மக்களின் காணிகளை எவ்வாறு அத்துமீறி சேருவில விகாரைக்கு சுவிகரிப்பது என தெரிவித்து தோப்பூர் பிரதேச மக்கள் நிள அளவை அதிகாரிகளோடு முரண்பட்டனர். இதன்போது ஊர் முக்கியஸ்தர்களால் பிரச்சினை சுமுகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டது. தோப்பூர், செல்வநகர் பிரதேசத்திலுள்ள நீணாக்கேணி, இதில்லங்குழி, ஆலையக்குடா, மணியண் குளம் போன்ற இடங்களிலுள்ள காணிகளுக்கே நிள அளவைத் திணைக்களத்தினால் கல் நடும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இப்பிரதேசத்திலுள்ள காணிச் சொந்தக்காரர்களுக்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிகள் இருப்பதாக காணிச் சொந்தக்கார்கள் தெரிவிக்கின்றனர். .

இவ்வாறு தோப்பூர் நாவற்கேணிகாடு பிரதேசத்தில் கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் 298 ஏக்கர் காணி சேருவில விகாரைக்கு இருப்பதாக நிள அளவை மேற்கொள்ளப்பட்டு பின்னர் தற்காலிகமாக காணி அளவை வேலைகள் இடைநிறுத்தப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

thopoor thopoor 2

Advertisements

Written by lankamuslim

ஜூலை 26, 2015 இல் 6:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: