Lankamuslim.org

One World One Ummah

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சாத்தியமா?

with one comment

East 2இலங்கையின் இணைந்த வடகிழக்குப் பகுதியில் அதிகூடிய அதிகாரப் பகிர்வு என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு கிழக்கு (Audio) மாகாணங்கள் இணைக்கப்பட்டது செல்லாது என நாட்டின் அதியுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், கூட்டமைப்பினர் இணைந்த வடக்கு கிழக்கு பற்றி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்று உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை மாற்றாமலோ அல்லது நாடாளுமன்றத்தில் வேறு சட்டவழிமுறைகள் கொண்டுவராமலோ இரு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பது சாத்தியப்படாத விஷயம் என இலங்கை அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த இணைப்பு குறித்து இரண்டு மாகாண சபைகளும் இதுவரை எந்தவொரு பிரேரணையும் கொண்டுவந்து தீர்மானங்களை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறுகிறார்.இணைப்புக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசினாலும், கிழக்குவாழ் முஸ்லிம் மக்களிடையே அதற்கான ஆதரவு இருக்காது என்றும், முஸ்லிம் தலைவர்கள் அதை எதிர்த்தே வந்துள்ளனர் என்றும் டாக்டர் தங்கராஜா கூறுகிறார்.

கூட்டமைப்பினர் இணைப்பு குறித்து பேசுவது சிங்கள மக்களிடம் சந்தேகங்களை ஏற்படுத்தி சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவில்லாத சூழலையே உருவாக்கும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

டாக்டர் யுவி தங்கராஜாவின் கருத்துக்களை இங்கே கேட்லகாம்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 26, 2015 இல் 8:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. “மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதை”யாகவே தமிழ் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி பேசுவதும், ஸ்ரீ.ல.மு.கா. கரையோர முஸ்லிம் மாவட்டம் பற்றி பேசுவதும்…..

  உண்மையில், அப்போதைய சூழ்நிலையில், பெரும்பான்மை ஆட்சியாளர்களினால் தமிழர்களுக்கும் (முஸ்லிம்களுக்கும் கூட) அரசியல், பொருளாதார, மற்றும் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த காரணத்தினாலும் அதனை அடிப்படையாக வைத்து புலிகள் உருவாகி, அவர்களின் ஆதிக்கம் வடகிழக்கில் இருந்த காரணத்தினாலும் அந்த நேரம் வடகிழக்கு இணைப்பு நடந்ததும், பின்னர் தனித்தமிழ்நாடு பற்றிய பிரகடனமும் சாத்தியமானதாக இருந்தது.

  அவ்வாறே, பெரும்பான்மையினரின் உரிமை மறுப்புகளுக்கும் மேலாக, புலிகளினதும் அவர்களின் பிரதிநிதிகளினதும், முஸ்லிம்களின் மீதான “இனவெறியாட்டமும், உயிர்வாழும் உரிமையைக்கூட பறிக்கும் கேவலமான, அரக்கத்தனமான, மோசமான ஆயுத- மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மூலமான தாக்குதல்கள் மூலம் “இரண்டாவது பெரும்பான்மை” இனத்தின் மூலமாகவும் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலை காரணமாக இருதலைக்கொள்ளி எறும்பாக நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்களும் தமக்கான சுதந்திரமான ஆட்சி, அதிகாரம் வேண்டி, நிலத்தொடர்பற்ற தனி மாகாணத்தை வட, கிழக்கில் வேண்டி நின்றனர்.

  இருப்பினும் இவ்விரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் இருவகையான போராட்டங்களும் மகிந்தவின் இரும்புக்கரங்கள் மூலம் அடக்கப்பட்டன.

  இந்நிலையில், தற்போது ஏற்கனவே இனவாதம் பேசிய பல பெரும்பான்மை இன செல்வாக்குள்ள பிரதிநிதிகளும், ஆட்சியாளர்களும் பழைய இனவாத சிந்தனைகளை களைந்து “ஒரு குடியின்கீழ் அனைத்து மக்களும் பாதுகாப்பு பெறுவோம்” என்ற கோசத்தோடும் “அதிகாரப்பகிர்வு, அல்லது சகலருக்கும் சகலதும்” என்ற கோசத்தோடும் அரசியல் முன்னெடுப்புக்களை நகர்த்தும் இவ்வேளையில்… அதற்காக பாடுபட்டு “ஒரு பொது ஆட்சியை” வேண்டி நிற்கும் இவ்வேளையில்…….

  அதை நம்பாத நிலையில், எப்படியிருந்தாலும் மீண்டும் தங்களுக்கு “வடக்கு கிழக்கை இணைத்து தனியாக தமிழரை தமிழரே ஆளும் தமிழ்தேசமாக்கி தாருங்கள்” என்ற கோசத்தை தமிழ் கூட்டணி வைக்குமாயின்….. நிச்சயமாக, ஏற்கனவே எல்லா விதத்திலும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசைகளை, புறக்கணித்து, நிராகரித்து, அநியாயம் இழைத்து, (வெறும் பசப்பு வார்த்தைகளைத்தவிர) இன்றுவரை ஒரு சிறு உதவிகளைக்கூட செயல்ரீதியாக செய்யாமலும், ஏனையவர்கள் செய்யும் உதவிகளைக்கூட முஸ்லிம்களுக்கு கிடைக்கவிடாமல் (தாங்கள் மட்டுமே பெறவேண்டும் என்ற ஒரே கோட்பாட்டில்) இந்த நிமிடம் வரை செயற்பட்டு வரும் தமிழ் பிரதிநிதிகளை எந்த விதத்திலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் நம்பத்தயாருமில்லை, அவர்களோடு சேர்ந்து போராடத்தயாருமில்லை. அவ்வாறான எந்தவொரு முஸ்லிமினதும், முஸ்லிம் தலைமையினதும் முடிவு தனது, அல்லது தங்களது தற்கொலைக்கு சமமானதாகும். அதோடு, அவ்வாறு இது ஆதரிக்கப்படுமாயின்…. தற்போதைய பொதுபலசென போன்ற மதவாத பயங்கரவாதிகள் முஸ்லிம்கள்மீது தமது பயங்கரவாதத்தை முன்னெடுப்பதற்கு, பெரும்பான்மை மக்களின் ஆதரவையும் அனுமதியையும் பெறுவதற்கு மிக இலகுவாக வழிவகுப்பதோடு, நல்ல சிந்தனையுள்ள சிங்கள, பௌத்த மக்களையும் முஸ்லிம்கள் மீது வெறுப்படையச்செய்யும். எனவே முஸ்லிம் காங்கிரஸ் போன்று சமூகத்தின் மீது எள்ளளவும் அக்கறையில்லாத சுயநல அரசியல் சாக்கடைகளை இந்த விடயங்களில் ஒத்துப்போவதற்கோ, அதற்காக குரல் கொடுப்பதற்கோ ஏனைய முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல், சமூகப்பிரதிநிதிகளும் இடம் கொடுக்கக்கூடாது. இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால்… நேற்று (26.07.2015) முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் திரு. ஹசன் அலி என்பவர் தமிழ் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு இணைப்பை வரவேற்றிருந்தார். இது இன்றைய அரசியல் சூழ்நிலையில், நாட்டு சூழ்நிலையில் எந்தளவு முட்டாள்தனமானது. அவ்வாறு இந்நேரம் இணைக்கப்பட்டிருந்தால் அவரது கட்சியை சேர்ந்த அரசியல் வியாபாரிகளில் ஒருவரான ஹாபீஸ் நசீர் முதலமைச்சராக இருந்திருப்பாரா? இது முஸ்லிம்களை பிரச்சினையில் சிக்கவைப்பதாகும்.

  அவ்வாறுதான் வடக்கு-கிழக்கு இணைப்பு சாத்தியமாகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்….நிச்சயமாக, வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு கிடைத்தே ஆகவேண்டும். அதை இல்லாமல் செய்யும் முஸ்லிம் பிரதிநியாக மீண்டும் அதே முஸ்லிம் காங்கிரசும், அதே தலைவரும் இருப்பதால்… ஏற்கனவே முஸ்லிம்களை நிராகரித்த ரணிலே ஆட்சிக்கு தலைமை வகுக்க இருப்பதால்…. இந்த கூட்டு வியாபாரிகளின் பழைய வியாபாரம் -2002 இல் ஏற்பட்டது போல் ஏற்படாமல் இருக்க… அனைத்து முஸ்லிம் சமூகமும், புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒற்றுமைப்பட்ட, பொதுவான ஒரு மாற்று அரசியல் தலைமைகளையும், பிரதிநிதிகளையும் உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்..

  அண்மையில் ரவூப் ஹகீம் “தான் எப்போதுமே ரணிலின் / ஐ.தே.க. யின் அபிமானி” என்று பச்சையாக சொல்லியிருந்தார் என்பதையும், எனவே அவர் 2002 இணைப்போலவே மீண்டும் ரணிலோடு “ஒப்பந்தங்கள்” மூலம் அடிமைப்படுவார் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

  Risniy

  ஜூலை 27, 2015 at 4:43 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: