Lankamuslim.org

One World One Ummah

துடைத்தெறிய வேண்டிய பிற்போக்கு எண்ணக்கருவான இனவாதத்தை பரப்ப முயற்சி

leave a comment »

Kaber hasimஅரசியல் எதிர்வாதிகள் வாக்குகளை பெறும் நோக்கில் இனவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். கபீர் ஹசீம் தனது பேஸ்புக் சமூக வலைத்தள கணக்கில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

துடைத்தெறிய வேண்டிய பிற்போக்கு எண்ணக்கருவான இனவாதம் இந்த விதமாக சமூகத்திற்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.உயர்ந்த பல்லின கலாசாரத்தை கொண்டுள்ள இலங்கையில் ஒரு சிறிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இனவாதம் காரணமாக ஏற்பட்ட போரினால், பல வருடங்கள் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்க்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டியது சகலரதும் கடமை எனவும் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட படம் ஒன்றில் “கட்சி அல்லது நிறம் எதுவாக இருந்தாலும், எங்கள் வாக்கு, ஒரு சிங்கள பெளத்தருக்கே.” என்ற வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டுவதை பாரர்த்ததாக குறிப்பிட்டார். சுவரொட்டிகளுக்கு முன்னால் சில சிறுவர்கள் காணப்பட்டதால் அது யாருடையது என  பார்க்க முடியவில்லை என கூறினார்.

“இவ்வாறான ஒரு சமூகம் உருவாவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவே நாம் போராடி வருகிறோம். இலங்கை மிக நீண்ட காலமாக இவ்வாறான இன வெறிச் செயற்பாட்டால் பல்வேறு தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தது.  ஒரு நாடாக நாம் ஒரு உயர்ந்த கலாசாரத்தை பின்பற்றுவதன் மூலம் சிறந்த குடிமக்களாகலாம்” என ஹாஷிம் கூறினார்.

“இது போன்ற நடத்தைக்கு அரசியலில் அல்லது சமுதாயத்தில் இடம் வழங்கக் கூடாது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.எதிர்வரும் தேர்தலில் கபீர் ஹாசிம் ஐக்கிய தேசிய முன்னணியில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஜூலை 25, 2015 இல் 6:42 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: