Lankamuslim.org

One World One Ummah

உங்களை ஆதரித்ததால் நாங்கள் கெட்டோம்: BBS

with one comment

bbmahiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்த காரணத்தினால் தமது இயக்கத்தின் நன்மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக பொதுபல சேனா இயக்கம் அறிவித்துள்ளது. பொதுபல சேனா இயக்கத்திற்கு பாரியளவில் மக்கள் ஆதரவும் பிரபல்யமும் காணப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால் பொதுபல சேனா குறைந்தபட்சம் இருபது லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ மன்னர் மனநிலையில் செயற்பட்டதாகவும், அவருக்கு ஆலோசனை வழங்கியவர்கள் பிழையான வழியைக் காட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சக்திகளை துரத்தியடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.சீதாவக்கையை ஆட்சி செய்த மன்னர் ராஜசிங்கனே முதலில் மேற்கத்தைய சக்திகளை தோற்கடித்த பெருமைக்குரியவர் எனவும், பௌத்த மதத்தை கைவிட்டதனை தொடர்ந்து மக்களினால் அவர் தோற்கடிக்கப்பட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே நிலைமையே மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தற்போதைய தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 25, 2015 இல் 1:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. மேற்குலகை தளமாக கொண்ட சிங்கள பேரினவாத அமைப்பான பொதுபலசேனா என அழைக்கப்படும் அமைப்பு கடந்த காலங்களில் செய்துவந்த அட்டூழியங்களுக்கு எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்றி வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களை தொப்பி போட்ட முட்டாள்கள் என்று ஒருபோதும் எண்ணிவிடக்கூடாது. இலங்கைத்திருநாட்டில் அக்காலத்தில் வந்த வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்து பெண் கொடுத்து இந்நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சிங்கள மன்னர்களி்ன் வழித்தோன்றலில் வந்தவர்களா என்று எண்ணத்தோன்றுகிறது. வெறும் ஊடக அறிக்கைகள் என்று அலம்பாமல் முடியுமாக இருந்தால் முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்று நிரூபிக்க முடியுமென்றால் நேரடி விவாதத்திற் வருமாறு அன்பாய் அழைக்கிறோம் என்று இலங்கையை தலைமையகமாக கொண்ட மாற்றத்திற்கான இளைஞர்கள் படையணி தெரிவித்துள்ளது.
  securedownload
  இலங்கையில் தொலைக்காட்சி, மற்றும் வானொலி ஆகியவற்றில் இந்த விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்படுவதற்குரிய அனைத்து வேலைப்பாடுகளையும் தாங்கள் பொறுப்பெடுப்பதாகவும் கூறியுள்ள இப்படையணி மஹிந்த அரசாங்கத்தோடு இணைந்து செய்த அட்டூழியங்கள் தாங்க முடியாமல்தான் ஆட்சியினையே மாற்றினார்கள், கட்சிகளுக்காகவோ பணத்திற்காகவோ ஜனாதிபதி மைத்திரிக்காகவோ அல்ல விடிவுகாலம் வேண்டும் என்பதற்காகவே!

  இதற்கு தொடரந்தும் குந்தகம் விளைவித்து கொண்டிருக்கும் இவ்வமைப்பு இன்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கைகளையும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது, நேரடி விவாவதத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் படையணி சர்வதேச உலமாக்களின் ஆலோசனைகளையும் பெற்றுள்ளது. அது மாத்திரமின்றி டாக்டர் சாக்கீர் நாயக் அவர்களுடனும் இது தொடர்பில் தொலைபேசி மூலம் பேசுவதற்கும் தயாராகியுள்ளது.
  பொதுபலசேனா அமைப்பு சொல்வது போல முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்று நிரூபிக்க முடியுமாயின் நேரடி விவாத்திற்கு தாராளமாக அழைக்கிறோம். இஸ்லாம் மார்க்கம் எப்போதும் மற்றைய மதங்களுக்கு எதிரானது அல்ல மாறாக சமாதானத்தை எடுத்தியம்பும் ஒரு மார்க்கமாகும். ”அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதன் பொருள் உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பதே.
  இப்படிக்கு
  மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர் படையணி
  இணைப்பு : https://www.facebook.com/MYCCSRILANKA

  Imran

  ஜூலை 25, 2015 at 10:46 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: