Lankamuslim.org

One World One Ummah

மதச் சுதந்­திரம் , பாது­காப்பு அதற்கான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது

leave a comment »

Hakeem.lankamuslim.orgசிறு­பான்மை இன­மக்­க­ளுக்கு இன்று தேவை அதி­காரப் பர­வ­லாக்­கலை விட மதச் சுதந்­திரம் பாது­காப்பு ஆகும். அதனை ஐ.தே.முன்­ன­ணியின் கொள்கைப் பிர­க­டனம் உறுதி செய்­துள்­ள­தாக முஸ்லிம் காங்கிரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

புலி­களின் இடைக்­கால நிர்­வாக சபை, சுனா­மிக்கு பின்­ன­ரான இடைக்­கால நிர்­வாக சபை அனைத்து யோச­னை­க­ளையும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிரா­க­ரித்தார். அவர் ஒரு போதும் பிரி­வி­னைக்கு துணை போக­வில்­லை­யென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற ஐ.தே.முன்­ன­ணியின் பொலிஸார் கொள்கை பிர­க­டன வெளி­யீட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், ஐ.தே.கட்­சி­யுடன் முன்பு நாங்கள் இணைந்து செயற்­படும் போது தேர்தல் கொள்கை பிர­க­ட­னத்தில் அதி­காரப் பர­வ­லாக்கல் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினோம்.

ஆனால் இம் முறை அதி­காரப் பர­வ­லாக்­கலை விட சிறு­பான்­மை­யின மக்­களின் மதச் சுதந்­திரம் பாது­காப்பே முக்­கி­ய­மா­க­வுள்­ளது எனவே கொள்கைப் பிர­க­ட­னத்தில் அதற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நாட்டைக் காட்டிக் கொடுத்­தவர். பிரி­வினை வாதத்­திற்கு துணை போனவர். வெளி­நா­டு­க­ளுக்கு நாட்டை அடகு வைத்­தவர் என்ற குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இன்றும் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அன்று புலி­க­ளுடன் இணைந்து புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை செய்து கொண்­டதில் பங்­க­ளிப்பு செய்­தவர் என்ற முறையில் எனக்கு உண்மை தெரியும்.

புலி­களால் அன்று இடைக்­கால நிர்­வாகச் சபை யோசனை முன்­வைக்­கப்­பட்­டது. சுனாமி அனர்த்­தத்­திற்கு பின்னர் சுனா­மிக்கு பின்­ன­ரான இடைக்­கால நிர்­வாகச் சபை யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.

ஆனால் ரணில் புலி­களின் இந்த யோச­னை­களை நிரா­க­ரித்தார். ஆனால் அந்தச் செய்­திகள் வெளி­வ­ர­வில்லை. இதன் கார­ண­மா­கவே ரணிலை பிழை­யாக நோக்­கி­னார்கள்.

புலி­களின் இந்த யோச­னைகள் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்தால் 2005 இல் மஹிந்த வெற்றி பெற்­றி­ருக்க மாட்டார். ஜனநாயகத்தை பாதுகாப்பதன் மூலமே நாட்டை பாதுகாக்க முடியும். அதற்காக நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தி புறச்சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.-வீரகேசரி

Written by lankamuslim

ஜூலை 24, 2015 இல் 9:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: