Lankamuslim.org

One World One Ummah

மஹிந்தவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் !!

leave a comment »

mahiகேள்வி: :சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் கிடைக்­காமை கார­ண­மாக கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தீர்கள். குறிப்­பாக முஸ்­லிம்­களின் வாக்குகள் உங்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. அதற்குக் காரணம் உங்­க­ளு­டைய ஆட்­சி­யின்­போது பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­திய குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­மையேயாகும். இன்­னமும் கூட சிறு­பான்மை மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்?

பதில்: முன் னாள் ஜனா­தி­ப­தி மஹிந்த ராஜ­பக்ஷ

நாங்கள் இது தொடர்பில் சம­ரசம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்டோம். இனியும் மேற்­கொள்வோம். அடி­மட்­டத்­தி­லி­ருந்து அனைத்து சமூ­கங்­களின் மத்­தியிலும் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.

அனைத்து சமூ­கங்­களின் மத்­தியிலும் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­

வுள்­ளேன். அத்துடன் கடந்த காலத்தில் விட்ட தவ­றுகளை திருத்­திக்­கொள்ளவும் தயா­ராக இருக்கின்றேன் என்று முன் னாள் ஜனா­தி­ப­தி மஹிந்த ராஜ­பக் ஷ தெரிவித்தார். பிர­த­ம­ராக பத­வி­யேற்றால் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டமக்­களின் வாழ்­வா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்­துஅவர்களை காயங்­க­ளி­லி­ருந்து மீட்டு ஒரே தேச­மாக பய­ணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் உத்­தி­யோ­க­புர்வ பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் பொது­மக்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு நேற்றைய தினம் பதி­ல­ளிக்­கும்­போதே அவர் மேற்கண்டவாறு குறிப்­பிட்டார்.

இந்த நேர்காணலில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் கேட்­கப்­பட்ட சுமா 4 ஆயிரம் கேள்­வி­களில் ஒரு­சி­ல­வற்­றுக்கே அவர் பதி­ல­ளித்­தி­ருந்தார். அதன் விபரம் வருமாறு

கேள்வி:மேர்வின் சில்வா அரச ஊழி­யரை மரத்தில் கட்டி வைத்து தாக்­கும்­போது நீங்கள் ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை? தலாதா மாளிகை வளா­கத்தில் கார் ஓட்டப் பந்­தயம் நடத்­து­வ­தற்கு மகா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் ஏன் அனு­மதி அளித்­தீர்கள்?

பதில்:உங்­க­ளு­டைய கருத்­துக்­களை ஓர­ள­வுக்கு நான் ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதனால் தான் நாம் செய்த தவ­றுகள் குறித்து அடிக்­கடி சுய­வி­மர்­சனம் செய்­வ­துண்டு. தவறை திருத்­து­வ­தற்கு முதல் அதனை புரிந்­து­கொள்ள வேண்டும். ஏனைய அர­சியல் பிர­மு­கர்­களை விட நாம் சுய­வி­மர்­சனம் செய்­துள்ளோம் என நான் நினைக்­கிறேன். நாம் எமது தவ­று­களை திருத்­திக்­கொள்ள தயா­ராக இருக்­கிறோம்.

கேள்வி:தேர்­தலின் பின்னர் அர­சாங்கம் அமைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்­சிக்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஆத­ரவு வழங்­கு­மாயின் நீங்கள் என்ன செய்­வீர்கள்?

பதில்:எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு பெரும்­பான்மை ஆச­னங்­களை பெற்று தெ ளிவான வெற்­றியைப் பெறும் என்ற நம்­பிக்கை எமக்­குண்டு. அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ரவு தொடர்­பி­லான கேள்­விக்கு இட­மி­ருக்­காது. மக்கள் விடு­தலை முன்­னணி ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கு­வது அக்­கட்­சியின் தீர்­மா­ன­மாகும். அவர்­களின் ஜன­நா­யக உரி­மையை அன்­றுபோல் இன்றும் என்றும் நாம் மதிப்போம்.

கேள்வி:நாட்டை மீட்­டெ­டுத்த தலைவர் என்ற வகையில் நாம் உங்கள் மீது பெரும் மதிப்பு வைத்­துள்ளோம். எனினும் தங்­க­ளு­டைய ஆட்­சி­யின்­போது நிகழ்ந்த ஊழல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்து கவ­லை­ய­டை­கிறேன். பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்த உங்­களால் மாத்­தி­ரமே ஊழல்­களை கட்­டுப்­ப­டுத்த முடியும் என்­பது எனது கருத்து. எதிர்­வரும் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் ஊழல்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் என்ன?

பதில்:ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் 12ஆவது பிரிவில் ஊழல் மோச­டி­களை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பான கொள்­கையை உள்­ள­டக்­கி­யுள்ளோம். “அனை­வ­ருக்கும் சம­மான நீதி – முறை­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான ஆட்சி” என அதற்கு பெய­ரிட்­டுள்ளோம். இதில் அனைத்து வித­மான ஊழல்கள் தொடர்­பிலும் ஆரா­யப்­படும். அதற்­கென சர்­வ­கட்சி உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழு நிய­மிக்­கப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­படும். அத­னூ­டாக அர­சி­யலில் மூடி மறைக்­கப்­பட்ட மத்­திய வங்கி பிணை முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு தரா­தரம் பாராமல் தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

கேள்வி:

தனியார் துறை ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­பீர்­களா?

பதில்:

எமது அர­சாங்­கத்தில் தனியார் துறை ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை 3 ஆயி­ர­மாக அதி­க­ரிப்­பதை சட்­ட­மூ­ல­மாக்­குவோம்.

கேள்வி:

சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் கிடைக்­காமை கார­ண­மாக கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தீர்கள். குறிப்­பாக முஸ்­லிம்­களின் வாக்குகள் உங்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. அதற்குக் காரணம் உங்­க­ளு­டைய ஆட்­சி­யின்­போது பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­திய குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­மையேயாகும். இன்­னமும் கூட சிறு­பான்மை மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்?

பதில்:

நாங்கள் இது தொடர்பில் சம­ரசம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்டோம். இனியும் மேற்­கொள்வோம். அடி­மட்­டத்­தி­லி­ருந்து அனைத்து சமூ­கங்­களின் மத்­தியிலும் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.

கேள்வி:

புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிக்கும் எண்ணம் உங்­க­ளுக்கு இல்­லையா? பொதுத் தேர்­தலில் நீங்கள் வெற்றி பெற்­றாலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட்­சியில் அமைச்சர் அந்­தஸ்து மாத்­திரம் தானே கிடைக்­கப்­போ­கி­றது?

பதில்: நான் ஒரு விசு­வா­ச­மான சுதந்­தி­ரக்­கட்­சிக்­காரன்.

கேள்வி:

நீங்கள் பிர­த­ம­ராக பத­வி­யேற்றால் உங்கள் முதல் திட்டம் என்ன?

பதில்:

நாம் ஆரம்­பித்து தற்­போது இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மீளவும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­துதான் எனது முதல் திட்­ட­மாகும். அத்­திட்­டங்கள் இடை­நி­றுத்­தப்­பட்­டதால் பாரிய வேலை­யின்மை பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளதை நீங்கள் அறி­வீர்கள். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் கொள்கை பிர­க­டனம் வெ ளியி­டப்­பட்­ட­வுடன் எமது விரி­வான திட்­டங்­களை நீங்கள் தெரிந்­து­கொள்ள முடியும்.

கேள்வி:

நீங்கள் பிர­த­ம­ரானால் கட்­சிக்குள் இருக்கும் தவ­றி­ழைத்­தோரை, அவர்­க­ளது வாக்கு வங்­கியை பார்க்­காது தண்­டிக்கும் தைரியம் உங்­க­ளுக்கு உள்­ளதா?

பதில்:

ஆமாம். ஊழல்கள் நிறுத்­தப்­பட்டு அனை­வ­ருக்கும் சம­மான சந்­தர்ப்­பத்தை வழங்கும் பொருட்டு முறை­யான பொறி­முறை உரு­வாக்­கப்­படும்.

கேள்வி:

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் மூத்த உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு பிர­தமர் பத­வியை முன்­மொ­ழிந்­து­விட்டு, தேர்­தலில் போட்­டி­யி­டாமல் நீங்கள் ஏன் வில­கி­யி­ருக்கக் கூடாது? நீங்கள் தேர்­தலில் போட்­டி­யிட தீர்­மா­னித்­ததால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­புக்குள் பிள­வுகள் ஏறட்­பட்­டு­விட்­டதே? இது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு சாத­க­மாக அமைந்­து­வி­டாதா?

பதில்:

நான் எனது கட்­சி­யி­னதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பி­னதும் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­யவும் பொது­மக்­க­ளுக்­கா­கவுமே போட்­டி­யிட முன்­வந்தேன். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு எப்­போதும் பிள­வு­ப­ட­வில்லை.

கேள்வி:

நாட்­டுக்­காக அந்­நிய செலா­வணி ஈட்­டித்­தரும், வெ ளிநா­டு­களில் வசிக்கும் இலங்­கை­யரின் நல­னுக்­கான திட்­டங்கள் என்ன?

பதில்:

அவர்­க­ளுக்­காக வீட­மைப்புத் திட்­ட­மொன்றை உரு­வாக்­க­வுள்ளோம். எமது ஆட்­சிக்­கா­லத்தில் அவர்­களின் குடும்­பங்­க­ளுக்கு, பிள்­ளை­க­ளுக்கு விசேட நலன்­பு­ரித்த திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளோம். அவ்­வா­றான திட்­டங்­களை எதிர்­கா­லத்­திலும் முன்­னெ­டுப்போம்.

கேள்வி:பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீங்கள் ஏன் திறந்த விவா­த­மொன்­றுக்கு அழைக்கக் கூடாது?

பதில்: பிர­த­மரை அதிகமானோர் அழைத்­தார்கள். ஆனால் அவர் அந்த சவாலை ஏற்­றுக்­கொள்ள தயா­ராக இல்லை.

கேள்வி:

நீங்கள் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்டு, இன்னும் உத­விகள் தேவைப்­படும் மக்­க­ளுக்கு எவ்­வா­றான புனர்­வாழ்வு திட்­டங்­களை முன்­னெ­டுப்­பீர்கள்?

பதில்:

அவர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தோடு உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை செய்­வதே எமது முதல் திட்­ட­மாகும். அவர்­க­ளுக்­கு­ரிய வேலை­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­துடன் காயங்­க­ளி­லி­ருந்து மீண்டு ஒரே தேசமாக பயணிக்க ஆவண செய்வோம்.

கேள்வி:

நீங்கள் பிரதமரானால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பீர்களா? மஹபொல புலமைப்பரிசில் தொகை அவ்வாறே வழங்கப்படுமா? அல்லது குறைக்கப்படுமா?

பதில்:

மஹபொல புலமைப்பரிசில் தொகை ரூபா 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். நாம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம். பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சிகளை வழங்குவதற்கு விசேட திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளோம். பயிற்சியின்போது அரச திறசேரியினூடாக கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

கேள்வி:

நீங்கள் பிரதமரானால் எரிபொருள் உட்பட ஏனைய பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிப்பீர்களா?

பதில்:

சர்வதேச விலை நிர்ணயத்தின் அடிப்படையிலேயே எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. அரிசி, பருப்பு, மா, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுப்போம்.-VK

Advertisements

Written by lankamuslim

ஜூலை 24, 2015 இல் 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: