Lankamuslim.org

One World One Ummah

“தேசிய மற்றும் இனங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்”- NSC

leave a comment »

NSC logo sri lankaபின்னணி: கடந்த காலங்களில் நமது இலங்கை தாய்த் திருநாட்டிட்கு கடக்க நேர்ந்த இருண்ட காலப் பகுதிகள் காரணமாக இனங்கள் ஒன்றை விட்டு மற்றது பிரிந்து தூர விலகும் ஒரு கவலைக்கிடமான நிலைமை ஏற்பட்டது. பொறுப்புள்ள ஒரு அரசின் மூலமே இந்த நிலையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நம் நாட்டில் பல தசாப்தங்களாக நிலவி வரும் ஒற்றுமையின்மை, சந்தேகம், மத மற்றும் இன சகிப்புத்தன்மையின்மை போன்றவை காரணமாக நமது அன்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் பாரிய பின்னடைவை அடைந்துள்ளமை கசப்பாக இருப்பினும் உண்மையே. இந்நிலையில் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிட்கு ‘நல்லிணக்கம்’ என்பதை ஒரு இன்றியமையா நிபந்தiனாயகக் கொள்வது ஆட்சிக்கு வருபவர்களுக்கு கட்டயாமாகும். இதற்காக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல், மத அமைப்புக்களின் பங்களிப்பு போன்றவை முக்கியமாகும்.

இந்த அடிப்படையில் கீழே விவரிக்கப்பட்டுள்ள யோசனைகளை தங்களது கட்சியின் கவனத்திட்கு கொண்டு வருவது பயன்மிக்கதாக இருக்கும் என தேசிய ஷுரா சபை கருதுகின்றது.

1. தேசிய நல்லிணக்கம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல்

யுத்தம், பகைமை, வண்முறை போன்றவைகள் காரணமாக இனங்கள் பிரிந்து சென்றுள்ள தற்போதைய சூழலில் நல்லிணக்கம் என்பது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய அம்சமாகும். இதற்கு காத்திரமானதொரு தலைமைத்தவத்தை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என நாம் கருதுகின்றௌம்.

மேலும், சம்பந்தப்பட்ட அனைவரும் நல்லிணக்கத்திட்கான புதிய பெறுமானங்களை மதித்தவர்களாக செயல்படுவதும் அவசியமாகும். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படுவதையும், சமமான பிரஜைகளாக தன்மானத்துடன் வாழும் உரிமை மற்றும் அதற்கான சூழல் உருவாக்கப் படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

2. சட்டத்தின் ஆளுகை

சட்டத்தை பேணுதல், பக்கசார்பற்றிருத்தல்,  பொறுப்புக் கூறல் போன்ற உயரியஅம்சங்களுடன் நாட்டில் சட்டத்தின் ஆளுகை உண்மையான விதத்தில் திகழ்வதை அரசு உறுதி செய்தல் வேண்டும். இதற்காக அரசியலமைப்பு ஆணைக்குழு உட்பட்ட ஏனைய ஆணைக் குழுக்களை கால தாமதமின்றி ஸ்தாபிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ~ஷுரா சபை வலியுறுத்துகின்றது.

3. அரசியலமைப்பு சீர்திருத்தம்

அரசியலமைப்பின் பல அம்சங்களில் சீர்திருத்தங்கள் செய்வது அவசியம் என்பது வெளிப்படை. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளோம்:

a) அடிப்படை உரிமைகள் மெலும் விரிவாக்கப்பட வேண்டியதுடன், அதை நடைமுறைப் படுத்தும் முறைமையும் பலமூட்டப்படுதல் வேண்டும்.

b) இனங்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த சுயேச்சையான தேசிய சபை ஒன்றை ஸ்தாபித்தல் வேண்டும். ஏனைய அம்சங்களுடன் அரசியலைமைப்பின் வாசகம் (5), (6), (11) மற்றும் அதன் 7 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சில வாசகங்களை பலமூட்டியவாறு ஒதுக்கப்படுதலின் அபாயத்தை அன்மதிதுள்ள பிரிவினரின் உரிமைகளை பாதுகாப்பதட்காக கொள்கைகளும் திட்டங்களும்  உட்பட்ட தேசிய செய்லதிட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.

c) சகல பங்காளர்களும் -குறிப்பாக எண்ணிக்கையில் குறைவான இனங்கள்- பிரதிநிதித்துவம் பெரும் விதத்தில் எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களை நியமித்தல் வேண்டும்.

d) பாராளுமன்றத்தில் போன்றே உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றில் சிறுபான்மை இனங்கள், சிறிய அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புக்கள் போன்றவை நியாயமான மற்றும் வீதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெறும் விதத்தில் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல் வேண்டும்.

e) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்று மற்றும் தேர்தல் காலத்திற்கான, நிதி மற்றும் ஏனைய வளங்களை பயன் படுத்துவது தொடர்பான தௌpவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

4. பகைமையை தூண்டும் பேச்சு

விட்டுக்கொடுத்தலும் ஒற்றுமையும் நல்லிணக்கத்திட்கான முக்கிய பன்புகளாகும். ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நபருக்கு அல்லது பிரிவினருக்கு எதிராக பகைமையை தூண்டும் விதத்தில் பேசுதல் மற்றும் செயற்படுத்தலை முற்றாக தடை செய்யும் சட்டங்கள் இயற்றப்படுதல் வேண்டும்.

5. காணிப் பிரச்சினைகள் – சொந்த இடங்களுக்கு திரும்பும் சூழல்

விடுதலைப் புலிகள் விரட்டியதாலும், பாதுகாப்புப் படைகள் காணிகளை சுவீகரித்ததாலும் தங்களுடைய பாரம்பரிய இடங்களை விட்டும் வெளியேற நேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையானோர் இன்னும் அகதிகளாக நாட்டில் பல இடங்களில் துன்பம் அனுபவித்து வருகின்றனர். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்
செயற்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாகவும் சம அந்தஸ்துள்ள மக்களின் ஒரு அடிப்படை உரிமையாகவும் அவர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்வதற்கான வசதிகளை எதுவித ஏற்றத்தாழ்வுமின்றி அரசு ஏற்படுத்தித் தருதல் வேண்டும் எனவும் தேசிய ஷுரா சபை கேட்டுக்கொள்கின்றது.

6. திட்டமிட்ட அபிவிருத்தி

நகர அபிவிருத்தி அதிகார சபை கடந்த காலத்தில் எதுவித திட்டமும் இல்லாமல் அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெருமளவு மக்களின் அன்றாட வாழ்வில் பாரிய குழறுபடிகளை ஏற்படுத்தியதை யாவரும் அறிவர். எனவே அரசு தலையிட்டு இது தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை வழங்க வேண்டும். அதனடிப்படையில், முதலாவதாக மேற்படி அதிகார சபையின் பிடிவாத செயற்பாடுகளால் வதிவிடங்களை இழந்து பாதிப்பிற்கு உட்பட்டவர்களுக்கு தகுந்த தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். அடுத்ததாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக கணிப்பீடுவுகளை மேற்கொள்ளாமல் புதிய திட்டங்களை செயற்படுத்துவதை இடைநிறுத்த செய்ய வேண்டும்.

7. பிரதிநிதித்துவம் மற்றும் ஒதுக்கீடு

சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாராளுமன்றத்திலும் ஏனைய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளில் போன்றே அரச நிர்வாகத்திலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் விதத்தில் நிர்வாக மற்றும் தேர்தல் தொகுதி எல்லைகளை விதாசார அடிப்படையில் நிர்ணயித்தல் அவசியமாகும். இதே வேளை காணி மற்றும் இயற்கை வளங்களும் நியாயமான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படுவதும் கட்டாயமாகும்.

8. சமூகத் தீமைகள்

தேசத்தின் சமூக, கலாசார மற்றும் மதக் கட்டடைப்பை பாதுகாப்பதற்காக மதுபானம் உட்பட்ட போதை வஸ்துக்கள், விபச்சாரம், கெசினோ உள்ளிட்ட ஏனைய சூதாட்டங்கள் உட்பட அனைத்து தீய விடயங்களையும் முற்றாக தடை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

9. விவசாய இரசாயனங்கள்

பயிர் செய்கையின் போது இரசாயனங்களை அடிப்படையாகக் கொண்ட பசளை, ப+ச்சி மற்றும் களை நாசினிகளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த சட்டங்களை அறிமுகம் செய்வதோடு அவற்றின் எல்லைகளை மீறுவதால் ஏற்படக் கூடிய தீமைகளை விளக்குவதட்காக  இத்துடன் தொடர்பான சுகாதார மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நாடளாவிய விதத்தில் ஒழுங்கு செய்ய வேண்டும்.

10. ஒளடதக் கொள்கை

அரச மருத்துமனைகளில் இலவசமாகவும், ஏனைய இடங்களில் சகாயமான விலைக்கும் அத்தியாவசிய மருந்து வகைகள் தாராளமாக கிடைப்பதை அரசு உறுதி செய்வதற்காக பொருத்தமான ஒளதடக் கொள்கை அடிப்படையிலான சட்டங்களை இயற்ற வேண்டும்.

– தேசிய ஷூரா சபை

Advertisements

Written by lankamuslim

ஜூலை 24, 2015 இல் 4:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: