Lankamuslim.org

One World One Ummah

கிழக்கு தமிழ் முஸ்லிம் அமைச்சர்களும், உறுப்பினர்களுக்கும் நன்றி கடன் செலுத்த

leave a comment »

kalapathiஎஸ்.அஷ்ரப்கான்: கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் அமைச்சர்களும், உறுப்பினர்களுக்கும்  நன்றி கடன் செலுத்துவதற்காகவே நான் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் களமிறங்கி உள்ளேன். எனது பாராளுமன்ற பிரவேசத்தினுடாக தமிழ் பேசும் சமூகத்தினருக்கு நான் பட்ட கடனை நிறைவேற்றுவேன் என கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும் பொதுத் தேர்தல் வேட்பாளருமான ஆரியதாச கலபதி தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் நேற்று (22) இடம்பெற்ற  சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் தனதுரையின்போது குறிப்பிடுகையில்,

ஆரம்ப காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் ஒரேயொரு பாடசாலை மாத்திரம் இருந்தது. அப்பாடசாலையிலே சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் என இனப்பாகுபாடின்றி ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் கல்வி கற்று வந்ததால் தமிழ் மொழி பேசும் வாய்ப்பும் எனக்கு உருவாகியது.

அதனடிப்படையில் இன பேதமின்றி 1968 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி இளைஞர் அமைப்பின் மாவட்ட செயலாளராக என்னை நியமித்தார்கள். அன்றிலிருந்து பல தரப்பட்ட சேவைப் பணிகளில் ஈடுபட்டு 1979ஆம் ஆண்டு நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் முதல் முதலாக காலடி வைத்து அதில் வெற்றி பெற்று அம்பாரை நகர சபைத் தவிசாளராக கடமைகளைப் பொறுப்பேற்று அப்பகுதி மக்களின் குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்த காலமும் இருந்தது.

அதனைத் தொடர்ந்து 10 வருடங்களின் பின் 1989ஆம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 1994ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாக கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். அதன் பின் 2012ஆம் ஆண்டும் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன்.

எனவே அவர்களுக்காகவே கரையோரப் பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டிய சந்தர்ப்பம் கனிந்துள்ளது. அதுவே வருகின்ற பாராளுமன்றத் பொதுத்தேர்தலாகும். அதன் அடிப்படையின் கீழ் கிழக்கு மாகாணம் என்பது மூவின மக்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக செறிந்து வாழும் பிரதேசம் என்றபடியால் தமிழ் பேசும் மக்கள் இன்று என்னோடு கைகோர்த்து இருக்கிறார்கள். அவர்களை கைவிடப் போவதுமில்லை, கையேந்த விடப் போவதுமில்லை. அதன் நிமிர்த்தம் பாராளுமன்ற வெற்றியின் பின் தமிழ் பேசும் பிரதேசங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்குதல், கிராமங்கள் தோறும் காணப்படும் ஒவ்வொரு பொதுப் பிரச்சினைகளையும் இனங்கண்டு அதனை நிவர்த்தி செய்தல், காணி அனுமதிப் பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொடுத்தல், மாதத்திற்கு ஒரு முறை பிரதேச செயலகத்திற்கு சென்று அப்பிரதேச மக்களின் குறைபாடுகளை நேரடியாக இனங்கண்டு அவ்விடத்திலேயே தீர்வு காணல், காணியற்ற மக்களுக்கு அரச காணிகளைப் பெற்றுப் கொடுத்தல், கல்வி, கலாசார, பண்பாட்டு அலுவலகங்கள் அபிவிருத்தித் திட்டம், விவசாயிகளின் நலன் கருதி விவசாய அபிவிருத்தித் திட்டம், வறுமையற்தோர் கிராமத்தை உருவாக்கும் திட்டம், நடமாடும் சேவை ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடாத்துதல், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தித் திட்டம், வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்,  உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்தல், சுய தொழில் அபிவிருத்தித் திட்டம், மீன் பிடி அபிவிருத்தித் திட்டம் போன்ற பல திட்டங்கள் என்னால் அம்பாரை மாவட்டம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Written by lankamuslim

ஜூலை 23, 2015 இல் 12:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: