Lankamuslim.org

One World One Ummah

சண்டியன் போல மக்களை அடக்கி ஒடுக்கி வாழந்த மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிக்க வேண்டாம்.

leave a comment »

Rishad min001இன்று இந்த நாட்டிலே வாழுகின்ற எந்தவொரு முஸ்லிம் குடிமகனும் மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை இந்த நாட்டிலே அரசியல் தலைவனாக வருவதற்கு வாக்களிக்கக் கூடாது, இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபை மைதானத்தில் திருகோணமலை மாவட்ட தவிசாளரும், மூதூர்த் தொகுதி அமைப்பாளருமான எம். ஏ. எம். மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

மஹிந்த ராஜபக்ஷவை இரண்டு முறை ஜனாதிபதியாக்கினோம். மஹிந்த ராஜபக்ஷவை முதல் முறை ஜனாதிபதியாக்கினோம். அவர் நல்லவராக இருந்தார். இரண்டாவது முறை 150 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு இந்த நாட்டிலே ஒரு ஹிட்லர் ஆட்சியை நடாத்திக்கொண்ட வரலாற்றை இந்த முஸ்லிம் சமூகம் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

சீனக்குடா, கருமலையூற்று பள்ளிவாசலை மூடிவைத்து அங்கு எவரையும் செல்ல அனுமதிக்கவில்லை. நான் அமைச்சராக இருந்தபோது படையினர் என்னை செல்ல அனுமதிக்கவில்லை.

அமைச்சர் றிஷாட், எமது ஏழை விவசாயிகளின் மஜித் நகர் காணியை மீளப்பெற முடியாது அந்த விவசாயிகளை அடைத்து துன்புறுத்தி அந்த காணிகளை மற்றவர்களுக்கு வழங்க எத்தனித்த மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் இந்த நாட்டில் பிரதமராக வரவிடக்கூடாது.

நாங்கள் அன்று பயந்து வாழ்ந்தோம். நல்ல அமைச்சுப் பதவிகளில் இருந்தாலும் எங்களது சமூகத்திற்காக பேசினோம், தம்புள்ளையில் இருந்து அலுத்கம வரைக்கும், எங்களது சமூகத்திற்கு நடந்த அநியாயங்களை, பாராளுமன்றத்திலே பேசுனோம். அமைச்சரவைக்குள்ளே பேசுனோர், தைரியமாக பேசுனோம்.

நீங்கள் இந்த நாட்டு ஜனாதிபதியாக இருந்துகொண்டு 1983 இற்கு பிறகு இந்த நாட்டிலே நடந்த ஒரு இனப் படுகொலை இந்த அளுத்கமவை பார்க்கிறேன் என்று அமைச்சரவையிலேயே தைரியமாகவே பேசினேன்.

இந்த சமூகத்திற்காக பேசுனோம். ஆனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்ல. இந்த நாட்டிலே வாழுகின்ற 20 இலட்சம் முஸ்லிம் மக்களும் அச்சத்தில் வாழ்ந்துள் ளனர்.

நான் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் ஒருவாக்குறுதி அளிக்கிறேன். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்தால் இப்பிரதேசத்தில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன்.

மஹிந்த அரசிலே அரசாங்க அதிபராக யாரை வைத்து அழகுபார்த்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் 40 வீதமான மக்கள் இருந்தபோதும் அரச அதிபராக இருந்தவர் ஒரு இராணுவ தளபதி தான். ஒரு சண்டியர் போல ஹிட்லர் போலவும் இந்த மாவட்டத்தில் நமது மக்களை அடக்கி ஒடுக்கி வாழந்த மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிக்க வேண்டாம்.

நாடு முழுவதும் படித்தவர்களை அரச அதிபராக வைத்துக்கொண்டு இந்த மாவட்டத்துக்கு மாத்திரம் இராணுவ அதிகாரியை வைத்துக்கொண்டு தமக்குத் தேவையானவற்றை செய்ததோடு செய்த அட்டகாசத்தை மறக்கவும் முடியாது.

நான் ஒரு வரவேற்பு மண்டபத்தை கிண்ணியாவில் கட்ட பணம் கொடுத்தேன். ஆனால் 4 வருடங்களாக அதனை அரச அதிபர் கட்டவில்லை. படைத்தவர் எம்மை பார்த்துக்கொண்டிருக் கிறார். அற்ப சொற்ப இலாபங்களுக்காக வாக்கை சீரழித்துவிடாதீர்கள். மஹிந்த பணத்தை வாரி இறைக்கலாம். ஆனால் ஏமாந்துவிடாதீர்கள்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 23, 2015 இல் 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: