Lankamuslim.org

One World One Ummah

ஒரு இனத்தை அடி­மைப்­ப­டுத்தி ஒரு இனத்தின் சுய­ந­லத்தை மட்டும் பல­ப­டுத்­து­வது அல்ல தேசிய பாதுகாப்பு

leave a comment »

Untitledஒரு இனத்தை அடி­மைப்­ப­டுத்தி ஒரு இனத்தின் சுய­ந­லத்தை மட்டும் பலபடுத்வது அல்ல தேசிய பாதுகாப்பு. தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்த முன்னர் தேசிய ஒற்­று­மையை பலப்படுத்­த­வேண்டும் நாட்டில் இதுவரை காலமும் வென்­றெ­டுக்க முடி­யாத தேசிய ஒற்­று­மையை இனி­மேலும் இவர்­க­ளிடம் எதிர்­பார்க்க முடி­யாது. ஆகவே, மூவின மக்­களின் உரி­மை­க­ளையும் பாது­காத்து பல­மான ஆட்­சியை கட்டியெ­ழுப்ப நாங்கள் தயா­ராக இருக்கின்றோம் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­ கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

தேசிய பாது­காப்பு, வள­மான பொரு­ளா­தார வளர்ச்சி, கல்வி மற்றும் சுகா­தார வச­திகள் உள்­ளிட்ட மக்களின் அடிப்­படை உரி­மை­களை முழு­மை­யாகப் பாது­காத்து நாட்டின் தலை­மைத்­து­வத்தை ஏற்க நாம் தயா­ராக உள்ளோம் என்றும் அவர் குறிப் பிட்டார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தேசிய கொள்கைப் பிர­க­டன வெ ளியீடு நேற்று கொழும்பில் சுகந்­த­தாச விளை­யாட்டு மைதான உள்­ளக அரங்கில் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்

நாடு விடு­தலை அடைந்த­வுடன் இந்த நாட்டில் அர­சியல் ரீதியில் பல மாற்­றங்கள் ஏற்­பட்டன. இந்த நாட்டை பல தலை­வர்கள் ஆட்சி செய்­துள்­ளனர். பல­ரது கொள்­கைகள் நடை­மு­றை­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் கடந்த 67ஆண்­டு­களில் இந்த நாடு சரி­யான பாதையில் பய­ணிக்­க­வில்லை. அனைத்தும் தற்­கா­லிக மாற்­றங்­க­ளா­கவே அமைந்­தன. இப்­போதும் அந்த நிலைமை தான் ஏற்­பட்­டுள்­ளது.

ஆட்சி மாற்றங்கள்

இந்த நாட்டு மக்­களால் கடந்த 67 ஆண்­டு­க­ளாக ஆட்சி மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது, தலை­வர்­களை மாற்­றி­யுள்­ளனர், ஆனால் இவை அனைத்­திலும் இந்த நாட்­டுக்கு எந்தப் பயனும் ஏற்­ப­ட­வில்லை. இந்த நாட்டின் பொரு­ளா­தாராம் இன்­று­வரை மிகவும் கீழ்­மட்­டத்தில் தான் உள்­ளது. இப்­போ­தைய நிலையில் நாடு 7 இலட்­சத்து நாற்­ப­தா­யிரம் கோடி ரூபாய் கடனில் உள்­ளது. 3 லட்­சத்து 5௦ ஆயிரம் ரூபாய் ஒரு நபரின் தனியார் கட­னாக உள்­ளது. ஆகவே ஆண்டின் வரு­மா­னத்தை விடவும் ஆண்டின் செலுத்த வேண்­டிய கடன் தான் அதி­க­மாக உள்­ளது. நாட்டில் 2௦ வீத­மான மக்கள் மட்­டுமே சுக­போக வாழ்க்கை வாழ்­கின்­றனர். ஏனைய அனை­வரும் மிகவும் கடி­ன­மான வாழ்க்­கை­யி­னையே வாழ்­கின்­றனர். நாட்டில் 40 வீத­மான மக்கள் நாளாந்த வரு­மா­ன­மாக 25௦ ரூபாய்க்கும் குறை­வான வரு­மா­னத்தை பெறு­கின்­றனர்.

1000 பேர் உயிரிழப்பு

இலங்­கையில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் உயிர் இழக்­கின்­றனர். உலகின் நாம் நான்­கா­வது இடத்தில் உள்ளோம். சிறு­நீ­ரக நோயினால் மட்டும் ஒரு நாளைக்கு 6 பேர் உயிர் இழக்­கின்­றனர், மார­டைப்­பினால் ஒரு நாளைக்கு 1௦8 பேர் உயிர் இழக்­கின்­றனர். புற்­று­நோ­யினால் ஒரு நளைக்கு 12 பேர் உயிர் இழக்­கின்­றனர். வாகன விபத்­து­க­ளினால் ஒரு நாளைக்கு 8 பேர் உயிர் இழக்­கின்­றனர். இவற்றை குறைக்க முடி­யா­துள்­ளது. அந்த அள­வுக்கு நாட்டின் பாது­காப்பு மற்றும் வேலைத்­திட்­டங்கள் உள்­ளன. நாட்டில் மனச்­சாட்சி உள்ள குடி­ம­க­னாக இவற்றை மாற்­றி­ய­மைக்க நாம் முன்­வர வேண்டும். அந்தக் கடமை ஒவ்­வொரு குடி­ம­க­னுக்கும் உள்­ளது. ஆகவே மன­சாட்­சி­யுடன் செயற்­படும் ஒவ்­வொரு நப­ரு­டனும் கைகோர்த்து செயற்­பட மக்கள் விடு­தலை முன்­னணி தயா­ராக உள்­ளது.

எதற்கு அரசாங்கம்

இந்த நாட்டில் மக்கள் சுகா­தா­ர­மாக வாழக்­கூ­டிய நிலைமை இல்­லை­யென்றால், கல்­வி­ய­றிவு இல்­லை­யென்றால், பாது­காப்பு இல்­லை­யென்றால், மனித உரி­மைகள் மற்றும் சிறந்த பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள் இல்­லை­யென்றால் அந்த நாட்டில் ஏன் மக்கள் வாழ வேண்டும். நாட்டில் ஜன­நா­யகம், ஒற்­றுமை உள்­ளிட்ட மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­ய­வில்லை என்றால் எதற்­காக அந்த நாட்­டுக்கு ஒரு அர­சாங்கம். ஆகவே இவை அனைத்­தையும் மாற்­றி­ய­மைத்து நாட்டில் மக்­களின் தேவை­களை பூர்த்­தி­செய்யும் ஆட்­சியை அமைக்க நாம் முன்­வரத் தயா­ராக உள்ளோம்.

பொரு­ளா­தார, கல்வி

இந்த நாட்டை முன்­னெ­டுத்து செல்­ல­வேண்­டு­மெனின் பல­மான பொரு­ளா­தார மற்றும் கல்வி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து செல்ல வேண்டும். சர்­வ­தேச பொரு­ளா­தா­ரத்­துடன் நாம் இணைந்து செயற்­பட வேண்டும். எமது பொரு­ளா­தார செயற்­பா­டுகள் உள்­நாட்டு வளர்ச்­சியில் மட்­டு­மில்­லாது சர்­வ­தேச வியா­பா­ரத்­தையும் தக்­க­வைக்கும் வகையில் அமைய வேண்டும். ஆனால் எமது நாட்டின் செயற்­பா­டுகள் அவ்­வாறு இல்லை. இலங்­கைக்கு என்று ஒரு உற்­பத்தி இல்லை. ஆகவே பொரு­ளா­தார முறையில் நாம் முழு­மை­யான மாற்றம் ஒன்றை செய்­ய­வேண்டும். அதேபோல் இலங்­கைளில் கல்வி கற்கும் மாண­வர்­களின் எண்­ணிக்கை குறை­வ­டைந்து கொண்டு செல்­கின்­றது. சாதா­ரண தர மாண­வர்கள் முதல் உயர்­கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்­கான அனைத்து உத­வி­க­ளையும் மக்கள் விடு­தலை முன்­னணி முன்­னெ­டுக்கும்.

தேசிய பாது­காப்பு

அதேபோல் தேசிய பாது­காப்பு தொடர்பில் எமது தலை­வர்கள் பேசு­கின்­றனர். ஒரு இனத்தை அடி­மைப்­ப­டுத்தி ஒரு இனத்தின் சுய­ந­லத்தை மட்டும் பல­ப­டுத்­து­வது அல்ல தேசிய பாது­காப்பு. தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்த முன்னர் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­த­வேண்டும். நாட்டில் வாழும் மக்­களின் உரி­மை­களை பெற்றுக் கொடுத்து அதன் மூலம் ஒரு தேசிய பாது­காப்பை உரு­வாக்க வேண்டும். ஆகவே இலங்­கையில் எந்த இனத்­த­வ­ருக்கும் பாதிப்­புகள் ஏற்­ப­டாத வகையில் பல­மான தேசிய பாது­காப்பை நாம் ஏற்­ப­டுத்திக் கொடுக்க தயா­ராக உள்ளோம்.

தேசிய ஒற்­றுமை

இந்த நாட்டில் கடந்த காலங்­களில் பிர­தான இரு கட்­சிகள் மாறி மாறி ஆட்­சியை நடத்­தியும் இந்த நாட்டின் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்த முடி­ய­வில்லை. இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வை முன்­வைக்க முடி­ய­வில்லை.இந்த நாட்டில் சிங்­கள தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்­கின்­றனர். இவர்கள் எவரும் வேறு எந்த நாட்டில் இருந்தும் இலங்­கைக்கு வர­வில்லை. இவர்கள் அனை­வரும் இலங்­கையின் குடி­மக்கள். அவ்­வா­றான மக்­களின் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­து­வதை விடுத்து இன­வா­தத்தை முன்­வைத்தால் இந்த நாட்டை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது. மக்கள் மத்­தியில் சந்­தே­கத்­தையும் முரண்­பா­டு­க­ளையும் ஏற்­ப­டுத்தி தேசிய ஒற்­று­மையில் பெரிய விரி­சலை இவர்கள் ஏற்­ப­டுத்தி வைத்­துள்­ளனர். எனவே சகல மக்­களின் மத உரி­மை­களை, இன உரி­மைகள் அனைத்­தையும் சம உரி­மை­க­ளாக ஏற்­றுக்­கொண்டால் மட்­டுமே நாட்டில் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்த முடியும். இன்று தேசிய ஒற்­றுமை பற்றி பேசு­கின்­றனர், சம­வு­ரிமை பற்றி பேசு­கின்­றனர், ஆனால் இத்­தனை கால­மாக ஏன் அவற்றை செய்ய முடி­யா­மலோ போய்­விட்­டது. ஆகவே இன்று இவர்­களின் வாயில் இருந்து வரும் வாக்­கி­யங்கள் அனைத்தும் பொய் வாக்­கி­யங்­களே. மீண்டும் ஆட்­சியை கைபற்றி அதி­கா­ரத்தை தக்­க­வைக்­கவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். எனவே மக்கள் விடு­தலை முன்­னணி தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்தும் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்கும்.

சுகா­தாரம்

நாட்டின் சுகா­தார நிலை­மைகள் நாளுக்கு நாள் சீர­ழிந்து வரு­கின்­றது. நாட்டில் நோய்கள் வித­வி­த­மாக பரவ ஆரம்­பித்­துள்­ளன. இலங்­கையில் ஒரு காலத்தில் உண­வு­களில் எவ்­வித கலப்­ப­டமும் இல்­லாது ஆரோக்­கி­ய­மாக இருந்­தது. ஆனால் இன்று சிறு­வர்­களின் உணவு முதற்­கொண்டு அனைத்து உண­வு­க­ளிலும் கலப்­படம் காணப்படுகிறது.

நாம் இவற்றை மாற்­றி­ய­மைக்க வேண்டும். ஆகவே சுகா­தார சேவை­களை பலப்­ப­டுத்தி ஆரோக்­கி­ய­மான நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்க மக்கள் விடு­தலை முன்னணி தயாராக உள்ளது.

விடுதலை

இந்த நாட்டில் விடுதலை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். ஊடக சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டும். கருத்து சுதந்தரம் அடிப்படை உரிமைகள் இல்லாவிட்டால் எவ்வாறு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும். ஜனநாயகத்தையும் மக்களின் கருத்துகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்த விடுவதன் மூலமே இந்த நாட்டின் பாதுகாப்பையும் ஒற்றுமையையும் பலப்படுத்த முடியும். ஆகவே மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தில் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்கள் விரும்பும் அனைத்தையும் வென்று கொடுக்கும் என்ற உறுதிப்படுத்துகின்றோம் எனக் குறிப்பிட்டார்-vk

Written by lankamuslim

ஜூலை 23, 2015 இல் 6:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: