Lankamuslim.org

One World One Ummah

ஐ.எஸ் போராளிகள் தொடர்பில் கிழக்கிலும் விசாரணை ?

leave a comment »

gmசிரி­யாவில் அந்­நாட்டு அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டு போராட்டக் களத்தில் நின்­றி­ருந்த சமயம் உயி­ரி­ழந்­த­தாகக் கூறப்­படும் இலங்­கையர் தொடர்பில் விசா­ர­ணைகள்( நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்) கிழக்கு மாகா­ணத்­திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் முஸ்­லிம்கள் செறிந்து வாழ்­கின்ற கிழக்கு மாகா­ணத்­திலும் வெளி­நாட்­டவரின் நடமாட்டங்கள் குறித்து தீவி­ர­மாகக் கண்­கா­ணிக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வு பிறப்பிக்கப்பட்டுள்­ளது. குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் காத்­தான்­குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிர­தே­சங்­க­ளிலும் இந்தக் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்

பாகிஸ்தான் உட்­பட மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து வந்­துள்ள அந்­நாட்டுப் பிர­ஜை­களின் செயற்பா­டுகள் குறித்து அவ­தானம் செலுத்­து­மாறு பொலிஸார் பணிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டு போராட்­டத்தில் ஈடு­பட்ட இலங்­கையர் மத்­திய மாகாணத்தைச் சேர்ந்­தவர் என்­பதால் மத்­திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதி­பரின் தலைமையி­லான குழு­வொன்று திங்­கட்­கி­ழமை முதல் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். போரா­ளி­யான இலங்­கையர் இலங்­கையில் இருந்து எவ்­வாறு சிரி­யா­வுக்குச் சென்றார்? சிரி­யா­வுக்குச் செல்­வ­தற்­கான விசா­வினை எவ்­வாறு பெற்­றுக்­கொண்டார்? யார் யாருடன் அவர் தொடர்புகளைப் பேணி வந்தார் போன்ற விபரங்கள் புல­னாய்வு செய்­யப்­ப­டு­வ­தாக தெரியவந்துள்ளது. சிரியாவில் கொல்லப்பட்ட அந்த நபர் பல மொழிகளைப் பேசக்கூடியவர் என்றும் பாகிஸ்தானில் சட்டத்துறை பயின்று பட்டம் பெற்றவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.-

Written by lankamuslim

ஜூலை 22, 2015 இல் 5:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: