Lankamuslim.org

One World One Ummah

நல்லாட்சி என்றால் என்ன ?, இனவாதம் என்றால் என்ன ? கற்பிக்க தயாராகும் ஞானசாரர்

leave a comment »

bo10நல்லாட்சி என்ற செல் எவ்வகையான அர்த்தத்தை குறிக்கிறது என்பதை தெளிவாக இந்த தேசிய அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் ,சர்­வ­தே­சத்­தி­னதும் இந்­தி­யா­வி­னதும் தனிப்­பட்ட தேவை­யினை மாத்­திரம் பூர்த்தி செய்ய பெளத்த சிங்­க­ள­வர்­களை பயன்­ப­டுத்­து­வ­தா­கவும் தீவிரவாத   அமைப்பான  பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கலகொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்துள்ளார் .

இன­வா­தத்­தி­னையும் தேசிய வாதமாக எண்ணி ஆட்சி நடத்தும் ஆட்­சியின் கீழ் நாம் வாழ்கின்றோம் சர்­வ­தே­சத்­தி­னதும் இந்­தி­யா­வி­னதும் தனிப்­பட்ட தேவை­யினை மாத்­திரம் பூர்த்தி செய்ய சிங்­க­ள­வர்­களை பயன்­ப­டுத்­ப்படுகின்றனர்  எனவும் .பொது­பல சேனா பௌத்த அமைப்­பினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்துள்ளார் .இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளதாவது

ஒவ்­வொரு அரசும் தமது ஆட்­சியில் ஒரு சொல்­லினை மெரு­கூட்­டிக்­காட்­டு­கின்­றன. அதேபோல் இம் முறையும் தேசிய அர­சாங்கம் நல்­லாட்சி என்ற சொல்­லினை பிர­தா­னப்­ப­டுத்தி ஆட்சி நடத்­து­கின்­றது. ஆனால், உண்­மையில் இந்த அர­சாங்­கத்­திற்கு நல்­லாட்சி என்றால் என்ன என்­பது தெரி­யாது.

ஒரு சிலரின் தேவை­க­ளுக்கே இவர்கள் முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்­றனர். சர்­வ­தே­சத்தின் முடிவு இலங்­கை­யிலும் ஆட்­சி­யினை தீர்­மா­னிக்­கின்­றது. இந்­தி­யாவின் முடி­வுகள் இலங்­கையில் ஆட்­சியில் தாக்­கத்­தினை செலுத்­து­கின்­றது.

வட­மா­காண அர­சியல் வாதி­க­ளி­னதும் கிழக்கின் அர­சியல் வாதி­க­ளி­னதும் கோரிக்­கைகள் இங்கு ஆட்­சி­யினை தீர்­மா­னிக்­கின்­றன. ஆனால் சிங்­கள மக்­களின் குரல் இந்த அர­சுக்கு கேட்­க­வில்லை. சிங்­கள பௌத்த மக்­களின் விருப்பம் அவர்­களின் பாது­காப்பு தொடர்பில் தேசிய அர­சாங்­கத்­திற்கு அக்­கறை இல்லை.

கடந்த காலங்­களில் பல சந்­தர்ப்­பங்­களில் தேசிய அரசு உரு­வா­கு­வ­தற்கு பல வாய்ப்புகள் அமைந்­தன. ஆனால் அப்­போது இது தொடர்பில் எந்­த­வொரு சிங்­கள அர­சி­யல்­வா­தியும் அக்­கறை செலுத்­த­வில்லை. ஆனால் இன்று தேசிய அர­சாங்கம் அமைக்க எந்­த­வொரு தேவையும் இல்­லாத நிலையில் தமிழ் பிரி­வி­னை­வா­தி­களின் தேவை­யினை பூர்த்தி செய்யும் நோக்கில் இவர்கள் தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்து பிர­பா­க­ரனின் தேவை­யினை பூர்த்தி செய்து வரு­கின்­றனர்.

தேசிய வாதம் பற்றி பேசும் இவர்­க­ளுக்கு தேசி­ய­வாதம் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது தெரி­யாது. இன­வா­தத்­தினை தேசிய வாதமாக கருதி இனவாதத்தினையே பலப்படுத்தி வருகின்றனர். இவர்களை நம்பி வாக்கு வழங்கிய பொதுமக்கள் இன்று அதிருப்தியில் உள்ளனர். எனவே, மக்களே வெகு விரைவில் மாற்றம் ஒன்றினை எதிர்பார்ப்பார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஞானசாரர்
எதிர்வரும் காலங்களில் செயற்பாட்டு அரசியலில் களமிறங்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.அரசியலில் களமிறங்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் கோரிக்கை விடுத்து வருவதாகவும் இந்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சில அச்சு ஊடகங்கள் இனவாத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமத்திய குற்றச்சாட்டுக்கள் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக சுதந்திரத்தை தடுக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கு எதிரகாவும் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 25, 2015 இல் 5:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: