Lankamuslim.org

One World One Ummah

அமெரிக்க அமுக்க நிறுவங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இரத்து

leave a comment »

lobbyஅமெரிக்காவுடனான இலங்கையின் உறவு வலுபடுத்த அமுக்க குழு அல்லது அமுக்க நிறுவங்களுடன் முன்னைய அரசாங்கத்தினால் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகள் புதிய  அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது

போர்க்­குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்ட இலங்கை, அமெரிக்காவுடனான உறவுவை  வலுபடுத்துவ­தற்காக, பத்தாயி­ரக்­க­ணக்­கான டொலர்களை மாதம் தோறும், இந்த அமுக்க நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­னைய அர­சாங்கம் செலுத்தி வந்­தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து, புதிய அர­சாங்கம்அமெ­ரிக்­கா­வுடன் நெருக்­க­மான உற­வு­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.இதை­ய­டுத்தே, அமெ­ரிக்க அமுக்க அமுக்க நிறு­வ­னங்­க­ளுடன் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­பா­டு­களை புதிய அர­சாங்கம் முறித்துக் கொள்ள முடிவு செய்­துள்­ளது.

அமெ­ரிக்க அதி­கா­ரிகள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், ஊட­கங்கள், மற்றும் கருத்­து­ரு­வாக்­கு­னர்கள் மத்­தியில் இலங்­கைக்கு ஆத­ர­வான பிர­சா­ரத்­தினை மேற்­கொள்­வ­தற்­காக, வாசிங்­டனைத் தள­மாக கொண்ட, எட்டு நிறு­வ­னங்­க­ளுடன் உடன்­பா­டுகள் செய்து கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக, கடந்த ஆண்டில் அமெ­ரிக்க நீதித் திணைக்­களம் தெரி­வித்­தி­ருந்த்து. இந்த நிறு­வ­னங்­க­ளுக்கு மாதம் 5 ஆயிரம் டொலர் தொடக்கம்,75 ஆயிரம் டொலர் வரை கட்­ட­ண­மாகச் செலுத்­தப்­பட்டு வந்­தது.

இந்த நிறு­வ­னங்­களின் உதவி தற்­பாது தேவை­யில்லை என்று புதிய அர­சாங்கம் கரு­து­வ­தா­கவும், இதனால், தேர்­த­லுக்குப் பின்னர், இந்த நிறுவனங்களுடனான உடன்பாடுகள் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 22, 2015 இல் 6:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: