Lankamuslim.org

One World One Ummah

நுகேகொடையில் பிரசவித்த புதிய இனவாதம்

leave a comment »

nugஅளவுக்கு அதிகமான வெப்பத்தினால் நிலைகொண்டிருக்கும் திறந்தவெளி பிரதேசமொன்றை தூரத்தே நின்று நோக்கும் போது அங்கு அனலாய் பறக்கும் வெப்பக்காற்­று­ட­னான மாயத்­தோற்றம் ஒன்று நீரோ­டையைப் போன்று காட்­சி­ய­ளித்துக் கொண்­டி­ருக்கும். உண்­மை­யி­லேயே அது நீரோடை தானா என்­பதை அறி­வ­தற்காய் நெருங்கும் போது கண்­ணுக்குத் தென்­பட்ட தோற்றம் அங்கே மாயமாய் மறைந்­தி­ருப்­ப­தையே காண முடியும். இத­னைத்தான் கானல் நீர் என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. ஒன்று மில்­லா­மையை ஒரு தோற்­றமாய் உரு­வ­கித்துக் காட்­டு­வ­தற்கு வெப்­பத்­திற்கு மாத்­தி­ரமே ஆற்றல் இருக்­கி­றது எனலாம்.

இலங்­கையின் அர­சியல் களத்­துக்குள் ஐக்­கியம், இன ஒற்­றுமை, நல்­லி­ணக்கம், ஒரு­மைப்­பாடு, சாந்தி, சமா­தானம், சக­வாழ்வு, சகோ­த­ரத்­துவம், விட்டுக் கொடுப்பு, புரிதல், நீதி, நேர்மை, புனி­தத்­துவம் என்­றெல்லாம் பேசப்­ப­டு­கி­றது.

மேடைப் பேச்­சுக்கும் கருத்­துக்­க­ளத்­துக்கும் கேட்­ட­தற்கும் எழு­து­வ­தற்கும் அதனை வாசிப்­ப­தற்கும் மேற்­கூ­றப்­பட்­டுள்ள சொற்­ப­தங்கள் இன்­சொற்­க­ளாக இருக்­கின்ற போதிலும் அவை­ய­னைத்தும் கானல் நீராய் தென்­ப­டு­கின்ற மாய வார்த்­தை­க­ளா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. இத்­த­கைய மாயவார்த்­தை­களால் மயங்­கிக்­கி­டக்­கின்­ற­வர்கள் விழித்­துக்­கொண்டால் சிறப்­பாக இருக்கும்.

இவற்­றோடு, இன­வாதம், மத­வாதம், பிர­தேச வாதம் என்­ப­னவும் ஒன்­றாக சங்­க­மித்துக் கொண்­டால் நாடு பொறுக்­குமா ? மக்கள் தான் சகிப்­பார்­களா என்­ப­வையும் இயல்­பான கேள்­விக்­கு­றி­க­ளாக இருக்­கின்­றன.

சிங்­க­ளவன், தமிழன், முஸ்லிம், வடக்கைச் சேர்ந்­தவன், கிழக்கைச் சேர்ந்­தவன், தெற்கைச் சேர்ந்­தவன், மலை­ய­கத்தைச் சேர்ந்­தவன், கொழும்பைச் சேர்ந்­தவன், மேல் நிலை சாதிக்­காரன், கீழ் நிலை சாதிக்­காரன் என்­றெல்லாம் புற்­று­நோ­யையும் விட மிகக்­கொ­டிய விஷம் இலங்கை தேச­மெங்கும் பரவிக் கிடக்­கின்ற நிலையில் இத்­த­கைய கொடிய விஷத்தை அகற்றி விடு­வ­தென்­பது இன்­றைய 21 ஆம் நூற்­றாண்டில் இய­லாத காரி­ய­மாகும். ஒரு­வேளை இலங்கை எனும் தேசம் ஒட்­டு­மொத்­தமாய் இயற்கை அழி­வுக்குள் ஆட்­பட்டால் அதன் பின்­ன­ரான புதிய சமு­தாயம் பிர­பஞ்­சத்தை போற்­று­வதாய் அமை­யலாம்.

இன­வாதம், மத­வாதம் என்­ப­வற்­று­ட­னான மேற்­கூ­றப்­பட்ட கொடிய சொற்­ப­தங்­க­ளுக்கு தமி­ழர், சிங்­க­ள­வர், முஸ்­லிம்கள் என்ற மூவி­னத்­த­வரும் சொந்­தக்­கா­ரர்­க­ளா­கவும் சரி­ச­ம­மான பங்­கு­தா­ரர்­க­ளா­கவும் இருந்து வரு­கின்­றனர் என்­பது தான் மனச்­சாட்­சியின் பிர­காரம் மறுத்துக் கூற முடி­யாத அதே நேரம் சகித்துக் கொள்­ளவே இய­லாத உண்­மை­யு­மாகும். இத்­த­கை­ய­தொரு வட்­டத்­துக்குள் சஞ்­ச­ரித்துக் கொண்­டி­ருக்­கையில் சாதா­ரண குடி­ம­க­னுக்கு விடியல் என்­பது எவ்­வாறு சாத்­தி­ய­மாகும்.

2015 ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தனது சொந்தக் கிராமம் செல்­வ­தற்கும் அதே நேரம் பொல­ன­று­வையைச் சேர்ந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமர்­வ­தற்கும் என்ற வகையில் நாட்டு மக்கள் தீர்­மானம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு 62 இலட்­சத்து 17 ஆயி­ரத்து 162 பேர் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இவர்­களில் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இணைத்து கொண்­டனர்.

தமிழ் மொழியைப் பேசு­கின்ற மக்­களின் வாக்­கு­களால் தான் மைத்­திரி வென்றார் என்று கூறினால் அது விதண்டா வாத­மாகி விடும். அத்­துடன் இந்த வெற்­றிக்கு தமிழ் பேசும் மக்கள் உரிமை கொண்­டாட முடி­யுமே தவிர முழு உரி­மத்­துக்கும் சொந்­தக்­கா­ரர்கள் அல்ல என்­பதைப் புரிந்து கொள்ள தமிழ் பேசும் மக்கள் தயா­ரா­யுள்­ளனர்.

எனினும் இந்த உண்மை நில­வ­ர­மா­னது முற்று முழு­தாக திரி­பு­ப­டுத்­தப்­பட்ட நிலையில் இன­வாத அர­சியல் முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. அப்­பாவி மக்கள் என்று இலங்­கையில் எவரும் கிடை­யாது. எல்­லோ­ருமே அவ­ரவர் செயற்­பா­டு­களில் காரி­யக்­கா­ரர்­களே ஆவர். அந்த வகையில் இன­வா­தத்தை தூண்டி எண்ணெய் ஊற்றி சுவாலை விடச் செய்து கொண்­டி­ருக்கும் நாசுக்­கான சூட்­சு­ம­மான மாயா­ஜால வார்த்­தை­களில் சிங்­க­ள­வர்­களும் ஒன்­றித்து விடு­கின்­றனர்.

தேர்­தலில் தோல்­வியைத் தழு­விக்­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப க் ஷ தனது சொந்த ஊருக்கு திரும்­பி­யதும் வடக்கு மக்கள் எனக்கு எதி­ராக வாக்­க­ளித்து விட்­ட­தா­கக்­கூ­றி­யி­ருந்தார். அதே போன்று சில தினங்­க­ளுக்கு முன்பு கூட வடக்கு கிழக்கு மக்­க­ளுக்கு தானே வாக்­க­ளிக்கும் உரி­மையைப் பெற்றுக் கொடுத்­த­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

இது இவ்­வா­றி­ருக்க சிங்­கள மக்­களை மடை­யர்­க­ளா­கவும் முட்­டாள்­க­ளா­கவும் தொடர்ச்­சி­யாக சித்­த­ிரித்து வரு­கின்ற இன­வாத சிந்­தனை கொண்ட பத­வி­மோ­கத்­து­ட­னான அர­சியல் வாதி­களும் தமிழ் மக்­களும் முஸ்­லிம்­களும் வாக்­க­ளித்­த­தா­லேயே மஹிந்த தோல்­வி­ய­டைந்­த­தாக பிர­சாரம் செய்­கின்­றனர்.

மீண்டும் புலிகள் உயிர்த்­தெ­ழப்­போ­வ­தா­கவும் பிரி­வினை தலை தூக்­கப்­போ­வ­தா­கவும் விஷத்தைக் கக்கி இன­வா­தத்தை விதைத்து நீரூற்றி வரு­கின்­றனர். அதுவும் வேரூன்றி வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

இங்கு இல­குவாய் புரிந்து கொள்ளக் கூடிய உண்மை என்­ன­வெனில் மஹிந்த ராஜ­பக்க ்ஷ என்ற சிங்­களத் தலை­வரை தோற்­க­டிப்­ப­தற்கும் மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற சிங்­களத் தலை­வரை வெற்றி பெறச் செய்­வ­தற்கும் தமிழ் பேசும் மக்கள் உதவி புரிந்­துள்­ளனர் என்­பது மட்­டும்தான்.

தமிழ் பேசும் மக்கள் மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற சிங்­களத் தலை­வ­ரை­யல்­லாது தமிழ் பேசும் ஒரு­வ­ருக்கு வாக்­க­ளித்­தி­ருந்தால் மாத்­தி­ரமே இன­வாத ரீதியில் வாக்­க­ளித்­தி­ருப்­ப­தாக கூற முடியும். அதனை ஏற்­கவும் முடியும். ஆக வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்­களும் நாட்டின் அனைத்­துப்­ப­கு­தி­க­ளையும் சேர்ந்த முஸ்­லிம்­களும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளித்து அவரை ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமரச் செய்­வ­தற்கு உத­வி­ய­ளித்­ததை இன­வாத வாக்­க­ளிப்பு என்று இன­வா­தி­களால் வர்­ணிக்­கப்­ப­டு­மே­யானால் அதனை விட வடி­கட்­டிய முட்­டாள்­தனம் வேறு எதுவும் இருக்க முடி­யாது.

இவ்­வாறு சுமார் ஒன்­றரை மாத காலம் ஓடி­விட்ட நிலையில் தான் கடந்த புதன்­கி­ழமை 18 ஆம் திகதி மீண்டும் இன­வாதக் கூட்­டணி கொழும்பு நுகே­கொ­டையில் கூடி­யது.

நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் நன்­மை­ய­ளிக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவோ இல்­லையோ அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் ஆட்­சிக்­க­விழ்ப்­புக்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கும் அர­சி­யல்­வா­தி­களின் காய்­ந­கர்த்­தல்கள் அசத்­த­லா­கவே அமைந்து விடு­கின்­றன.

ரோஹண விஜே­வீர எனும் முற்­போக்கு வாதியின் பாச­றையில் அர­சியல் கற்று பிற்­கா­லத்தில் அவ­ரது கொள்­கை­யையே புரட்டிப் போட்டு பிற்­போக்கு அர­சி­யல்­வா­தி­யா­கவும் இன­வாதத் தீயைப் பரப்பும் பேச்­சா­ள­ரா­கவும் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச பற்றி புதி­தாக எதுவும் கூறு­வ­தற்­கில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் புதிய திரைக்­க­தையில் முக்­கிய பாத்­திரம் ஏற்­றுள்ள விமல் வீர­வன்­சவே கடந்த 18 ஆம் திகதி புதன்­கி­ழமை நுகே­கொ­டையில் கூட்­டி­ணைந்­த­தற்­கான கார­ண­மா­க­வுள்ளார்.

பொம்­ம­லாட்டக் களத்தின் கயிறு மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கையில் இருக்க கயிறால் முடி­யப்­பட்ட பொம்­மை­யாக விமல் வீர­வன்ச ஆகின்றார். இவர்­க­ளுடன் இணைந்­தி­ருப்­பவர் தான் முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார. இவர் தான் இடது சாரி­களின் சவப் பெட்­டிக்கு இறுதி ஆணியை அடித்­தவர் என்று தற்­போ­தைய வடமேல் மாகாண முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர ஐக்­கிய தேசியக் கட்­சியை விட்டு விலகிச் செல்­வ­தற்கு முன்­ப­தாக கூறி­யி­ருந்தார். அவ­ரது கூற்று பொய்த்து விட­வில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் அவர் அமைச்­ச­ராக பிர­த­ம­ராக இரு தட­வைகள் ஜனா­தி­ப­தி­யா­கவும் இருந்து விட்ட நிலையில் மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­ப­தி­யாகும் முயற்சி தோல்­வி­ய­டை­யவே இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­ப­தா­கவே வீட்­டுக்குச் சென்­றுள்ளார் அவர்.

அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்வு பெறும் காலம் வந்­து­விட்ட போதிலும் அதனை அவரால் ஏற்றுக் கொள்ள முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. தனது சகோ­த­ரர்­களை நம்பி பத­வி­யி­ழந்து கௌர­வ­மி­ழந்து நிற்கும் அவர் தனது வாரி­சையும் அவர்­களை நம்பி ஒப்­ப­டைத்து விட்டு ஓய்வு பெறு­வ­தற்கோ அல்­லது மீண்டும் ஏமா­று­வ­தற்கோ தயா­ரில்லை என்­ப­தா­லேயே இன­வா­தி­க­ளுடன் இணைந்­தா­வது அர­சி­யலில் நீடித்­தி­ருப்­ப­தற்கும் அத­னூ­டாக தன­யனின் எதிர்­கா­லத்தை நிர்­ண­யித்துக் கொள்­வ­தற்கும் திட­சங்­கற்பம் பூண வேண்­டிய இக்­கட்­டான நிலை­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்ளார் என்று கூறு­வது தான் பொருத்­த­மா­னது. மஹிந்­தவின் தோல்­வியும் மைத்­தி­ரியின் வெற்­றியும் நாட்டில் பெருத்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற சம­கா­லத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பிள­வி­னையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதற்­கேற்­றாற்போல் கடந்த 18 ஆம் திகதி நுகே­கொ­டையில் இடம்­பெற்ற பேரணிக் கூட்­டத்தில் மேல் மாகாண முத­ல­மைச்சர் பிர­சன்ன ரண­துங்க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சி.பி. ரத்­னா­யக்க, ரி.பி ஏக்­க­நா­யக்க உள்­ளிட்­டோரும் மேடை­யே­றி­யி­ருந்­தனர். இங்­குதான் மஹிந்­தவின் திட்­டத்­துக்கு அத்­தி­வாரம் இடப்­பட்­டது.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் இனியும் மஹிந்­த­வுக்கு இட­மில்லை என்­ற­தொரு தோற்­றப்­பாடு எப்­போதோ உரு­வாகி விட்­டது. மஹிந்த குடும்­பத்தார் அதி­கா­ரத்தில் இருந்த போது சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் உதா­சீ­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

குறிப்­பாக எதிர்க்­கட்­சித்­த­லைவர் நிமல் சிறி­பால டி சில்வா தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் பிர­த­மர்­க­ளான ரத்­ன­சிறி விக்­கி­ர­ம­நா­யக்க டி.எம். ஜய­ரத்ன உள்­ளிட்ட பலரைக் கூற முடியும்.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து ஐ.ம.சு.மு.வுக்குள் நுழைந்த மஹிந்த சம­ர­சிங்க, கெஹ­லிய ரம்­புக்­வெல, ராஜித சேனா­ரத்ன, லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன, பேரா­சி­ரியர் ஜி.எல். பிரீஸ் மற்றும் பல­ருக்கு இருந்த கௌரவம் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­ன­ருக்கு இருக்­க­வில்லை.

இதன் வெளிப்­பா­டாக நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்தல் ஊர்­ஜி­த­மா­கி­யி­ருந்­தது.

அடுத்து நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­தலின் போது இலங்­கையின் அர­சியல் களம் புது­மை­களை காண­வுள்ள அதே­வேளை சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தனித்து தனது கைச்­சின்­னத்தில் கள­மி­றங்கும் சாத்­தியம் அதி­க­ரித்­துள்ள அதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை தலை­மை­யாக கொண்­ட­தொரு கூட்­டணி தனி­யாக கள­மி­றங்கும் சாத­கத்­தன்மை ஓங்­கி­யி­ருக்­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான முன்­னணி, ஜே.வி.பி., ஜன­நா­யகக் கட்சி என தென்­ப­கு­தியைச் சேர்ந்த அனைத்து சிங்­களக் கட்­சி­களும் தனித்துப் போட்­டி­யி­ட­வுள்­ளமை தெளி­வா­கி­யுள்­ளது.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது தற்­போது ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருப்­பதால் முழு நம்­பிக்­கை­யோடு கள­மி­றங்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

இன்று முழு நாட்டினதும் ஏதிர்பார்ப்பாக இருப்பது என்வெனில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தேர்தலில் களமிறங்குவாரா? அவர் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவாரா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை விட்டு வெளியேறுவாரா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இன்றைய அரசியல் களத்தில் ஒருவித குழப்பகரமான நிலை நீடித்து வருவதற்கு பிரதான காரணமே மேற்கூறப்பட்டிருக்கின்ற இனவாதக் கூட்டணியாகும். இந்தக் கூட்டணியின் பிரதானியும் இயக்குநருமாக மஹிந்தவே திரைக்குப் பின்னால் இருந்து வருகிறார்.
அவரது சகாக்களே தற்போது களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பிரதமர் வேட்பாளர் பிரவேசமானது பொதுத் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஆரம்பமாகும். அந்த நேரத்தில் மக்களின் குரலுக்கு செவிமடுத்தே பிரதமர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட தீர்மானித்த தாகவும் அவர் அறிவிக்கக் கூடும். அப்படி நடந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே கிடையாது. இந்தக் கூட்டணி யானது இனவாதத்தில் எப்படியான விஸ்வ ரூபம் எடுக்கப் போகிறது என்பதை பொறுத் திருந்தே பார்க்க வேண்டும். இப்படியான சந்தர்ப்பங்களில் தமிழ், முஸ்லிம்  மக்கள் தமிழ், முஸ்லிம்  அரசியல் பிரதிநிதிகள்  மிக அவதானமாக செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர். விருப்பு வெறுப்புக்கள் கட்சிபேதம் ஆகியவற்றுக்கு அப்பால் மலையக சமூகம் சார்பிலான பிரதிநிதித்துவமே பிரதானம் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். நுகேகொடையில் இனவாதத்தின் புதிய பிரசவம் இடம்பெற்றதாலும் அங்கு கூடிய கூட்டத்தாலும் தமிழ் பேசும் மக்கள் கலவரமடைய தேவையில்லை. இது உணர்ச்சி வச மேலீட்டால் இடம்பெற்றது. இன்னும் காலங்கள் எதிரே உள்ளன.-ஜே .ஜி .ஸ்டீபன்

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 21, 2015 இல் 9:39 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: