Lankamuslim.org

One World One Ummah

செப்பெல் ஹில் படுகொலை :சுட்டவர் முஸ்லிமாகவும் ,கொல்லப்பட்டவர்கள் வெள்ளையராகவும் இருந்திருந்தால்

with one comment

hiஏ.அப்துல்லாஹ் :   அமெரிக்காவில் மூன்று முஸ்லிம் மாணவர்கள் தலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள விவாகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா மற்றும் உயரதிகாரிகளின் மௌனத்தை துருக்கி ஜனாதிபதி அர்துகான் கண்டித்துள்ளார்

தமது நாடு­களில் இடம்­பெறும் இத்­த­கைய கொலை  தொடர்பில் அமெரிக்க அர­சி­யல்­வா­தி­களே பொறுப்புக் கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .மொஹமட் பரகத் (23 வயது), அவ­ரது மனைவி யசூர் (21 வயது), யசூரின் சகோ­தரி ரஸான் மொஹமட் அபூ –சல்ஹா (19 வயது) ஆகிய பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள்   அய­ல­வ­ரான கிரெய்க் ஸ்டீபன் ஹிக்ஸ்  (46 வயது) என்பனனால் சுட்டுக் கொல்­லப்­பட்டனர்.

HIIIஇந்த கொலைக்கு இஸ்லாமிய மத வெறுப்பு காரணம் என கொல்லப்பட்டவர்களின் ,உறவினர்களும் , பெரும்பாலான அமெரிக்க முஸ்லிம்களும் , சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர் ,அதேவேளை இந்த கொலைக்கான காரணம் தனிப்பட்ட பிரச்சினை , வாகன தரிப்பிட பிரச்சினை எனக் கூறி    மேற்கு ஊடகங்கள் உண்மையை மூடி மறைக்க , மக்களை திசை திருப்ப முயன்றுவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் ,அதேவேளை இந்த வெறுப்பு படுகொலை அமெரிக்காவில் அண்மையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘ அமெரிக்கன் சினைப்பர் ‘ என்ற படத்தின் மாதிரியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

இந்த படுகொலை தொடர்பான செய்திகளை மேற்கு    ஊடகங்கள் வெளியிடுவதில் அதன் இரட்டை நிலைப்பாடு வெளிப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது .  இதேவேளை சம்பவத்தின் கொலையாளி ஒரு முஸ்லிமாகவும் கொல்லப்பட்டவர்கள் வெள்ளையர்களாகவும் இருந்திருந்தால் மேற்கு ஊடகங்கள் கொலையாளியை ஒரு இஸ்லாமிய பயங்கரவாதிகாயக சித்திரித்திருக்கும் என அரசியல் ,சமூக ஆர்வலர்கள் சுட்டிகாட்டியுள்ளனர் .HIIஅமெரிக்க வட கரோ­லி­னாவில் சபெல் ஹில் பகுதியில்  சுட்டுக் கொல்­லப்­பட்ட மேற்­படி மாண­வர்­களின் ஜனாஸாவில் பெருந்தொகையானவர்கள் கலந்துகொண்டுள்ளனர் .படுகொலைகளின் பின்னர் சர­ண­டைந்­துள்ள ஸ்டீபன் ஹிக்ஸ், தற்­போது படு­கொலைக் குற்­றச்­சாட்டில் டர்ஹம் நக­ரி­லுள்ள சிறைச்­சா­லையில்  தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

பேஸ்புக் இணை­யத்­த­ளத்தில் ஸ்டீபன் ஹிக்ஸ் மத எதிர்ப்பு செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளார் ஹிக்ஸ் மதத்­திற்கு எதி­ரான கொள்­கையை கொண்­டுள்­ளவர் என தெரி­விக்­கப்­ப­டு­கின்றது ஆனால் அவ்­வாறு அவர் மத எதிர்ப்புக் கொள்­கையை கொண்­டி­ருந்­த­மைக்­கான சான்று எதுவும் கிடை­யாது என மாவட்ட விசா­ர­ணை­யாளர் ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார்.

“நான் நாஸ்­திகன் ஒருவன் அல்லன். நான் வேதா­க­மத்தின் உண்மை தொடர்பில் அறி­யா­மையில் உள்ளேன். அதேசமயம் நான் ஒரு நாஸ்­திகன். ஏனெனில் வேதா­கமம் நிஜத்தை அறி­யாத நிலையில் உள்­ளது. உங்கள் மதம் உல­கிற்கு பாரிய தீங்கு இழைத்­துள்­ளது. எனக்கு அதனை அவ­தூறு செய்­வ­தற்­கான உரிமை உள்­ளது என கூற முடியும்.” என அவர் இணை­யத்­த­ளத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் வியா­ழக்­கி­ழமை படு­கொலை செய்­யப்­பட்ட மூவரின் மர­ணச்­ச­டங்கின் போது உள்ளூர் பொலிஸ் தலைவர் தெரி­விக்­கையில், மேற்­படி படு­கொ­லைகள் தொடர்­பான அனைத்து விட­யங்­க­ளையும் உள்­ள­டக்கி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக தெரி­வித்துள்ளார்

இதேவேளை மெக்­ஸிக்­கோ­வுக்கு விஜயம் செய்­துள்ள துருக்­கிய ஜனா­தி­பதி அர்துகான்  அங்கு உரை­யாற்­று­கையில், அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரி, உப ஜனா­தி­பதி ஜோ பிடென் ஆகியோர் மூன்று  முஸ்­லிம்­களின் படு­கொலை தொடர்பில் எது­வித அறிக்­கை­யையும் வெளி­யி­டாமை குறித்து குற்­றஞ்­சாட்­டியுள்ளார். நீங்கள் இத்­த­கைய சம்­பவம் குறித்து மௌனம் சாதித்து அறிக்கை எத­னையும் வெளி­யி­டா­தி­ருப்­பீர்­க­ளாயின் உலகம் உங்­களை நோக்கி மௌனம் காக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார் .

அதேவேளை சியோனிச ,மற்றும் மேற்கு ஊடகங்கள்  மேற்குலக மக்களை தமது எஜமானர்கள் காட்டும் திசையில் வழிநடாத்தவும் , இஸ்லாத்தையும் ,முஸ்லிம்களையும் மேற்குலக மக்களின் எதிரிகளாக சித்தரிக்கவுமான தொடர்ந்தும் செயல்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது அமெரிக்கா உட்பட மேற்கு உலகில் இஸ்லாத்துக்கும் ,முஸ்லிம்களுக்கும் எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது , தற்போது வெறுப்பு அமைப்புக்கள் உருவாக்கி திட்டமிட்டு செய்ல்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று  சில முஸ்லிம் நாடுகளில் போராடிவரும்  சில முஸ்லிம்  போராளிகள் அமைப்புக்களும் மேற்கு ஊடகங்களின் பசிக்கு தீனி வழங்குவது போன்று செயல்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 14, 2015 இல் 6:00 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. As the US President Barack Obama condemned the brutal killing of the young Muslims in North Carolina, the FBI launched an inquiry parallel to police investigation to probe the heinous crime, after several calls by Muslim groups to open a full hate crime investigation.

  “No one in the United States of America should ever be targeted because of who they are, what they look like, or how they worship,” the president said in a statement released by the White House, The New York Times reported.

  “As we saw with the overwhelming presence at the funeral of these young Americans, we are all one American family.”

  Coming under pressure from several Muslim groups and other community organizations, the FBI, federal prosecutors and the Civil Rights Division of the Department of Justice launched the inquiry.

  A few days after Chapel Hill shooting, more than 100 advocacy and community organizations called on the Department of Justice “to open a full and rigorous federal hate crime investigation and to publicly condemn this heinous attack,” according to Buzz Feed.

  Keeping silent over Chapel Hill shooting, the US president has been criticized by Turkish President Tayyip Erdogan and other Muslims leaders for not offering condolences to the Muslim families.

  Abdul Rasheed

  பிப்ரவரி 15, 2015 at 7:09 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: