Lankamuslim.org

One World One Ummah

அல்ஹாஜ் S.S.M. அபூபக்கர் வயதானாலும் மனம் தளராதவர் !

leave a comment »

abubakarமுஹ்ஸி ரஹ்மத்துல்லாஹ்: அல்ஹாஜ்  S.S.M. அபூபக்கர் அவர்கள்  சத்திய இஸ்லாத்தை திறம்பட ஆய்வு செய்து, இஸ்லாத்தை குடும்பம் சகிதம் ஏற்றுக் கொண்டவர். இன்றும் அவர் தான் பெற்ற பெரும் பாக்கியம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தீராத வேட்கையில், உன்னத நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்.

1989 இல் வவுனியா மதீனா நகரில் வாழ்ந்த போது விடுதலைப் புலிகள் பாராளுமன்றத் தேர்தல் கேட்பவருக்கு மரண தண்டனை என்று பகிரங்கமாக அறிவித்து, அன்னாரது வீட்டு வாயலிலும் அறிவித்தல் இட்டு விட்டு சென்ற போது, யாருமே அச்சம் காரணமாக தேர்தலில் போட்டியிட முன்வராத போது துணிச்சலுடன் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் களமிறங்கி வன்னியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதல் முகவரி தேடிக் கொடுத்த பிதா மகன்.

அதுபோல 1994 இலும் மீண்டும் இறைவன் நாட்டத்தால் பாராளுமன்றம் பிரவேசிக்க அவரால் முடிந்தது. அதுவும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெரும் விருட்சத்தின் கீழ் சாத்தியமானது. அதுவே முஸ்லிம் காங்கிரஸ் முதல் தடவையாக ஆளும் கட்சியில் அரியாசனம் அமர்ந்த  சந்தர்ப்பம் ஆகும். தான் பதவி வகித்த காலத்தில் தன்னால் முடிந்த வரை அல்லாஹ்வுக்கு என்று மக்களுக்கு சேவை செய்தார். அந்த சேவைகள் அடையாளச் சின்னங்களாக இன்றும் திகழ்கின்றன.அல்ஹம்துலில்லாஹ்.

இன்று வரை முஸ்லிம் காங்கிரஸ் வன்னியில் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டிருப்பது மறைந்த ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷரப், மற்றும் அபூபக்கர் போன்றவர்களின் மக்கள் ஆதரவுடனான தூய எண்ணமும் செயற்பாடுகளுமே ஆகும். பின்னர் மர்ஹூம் நூர்தீன் மசூர், ரிஷாத் பதியுதீன், முத்தலிப் பாவா மற்றும் பலரது  பங்களிப்புடன் அது தொடர்ந்தது.

வடக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்கு வித்தாகி,உரமாகிய முன்னோடிகளில் முதன்மையானவர் அவர் என்று அடையாளப்படுத்துவதில் தவறில்லை. முதன் முதலில் முஸ்லிம் காங்கிரஸ் 1988 இல் வடமேல் மாகாணத்தில் புத்தளத்தில் மாகான சபை உறுப்பினர் ஒன்றைப் பெறுவதற்கும் அயராது உழைத்தார். கால ஓட்டம், வயது, ஓய்வு யாரைத் தான் கவ்விக் கொள்வதில்லை.

தனது மாவட்ட மக்களும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மக்களும் இரண்டறக் கலந்து வாழும் புத்தளத்தில் தனது  வாழ்வின் பெரும் பகுதியை கழித்து வரும் அவர் வயதானாலும் உள்ளம் தளாரதவர் என்ற ரீதியில் அரசியல் மாற்றங்கள் மற்றும் தேர்தல்கள் வந்து விட்டால் அதோடு ஏதோ ஒரு வகையில் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் தவறுவதில்லை. தனது ஆற்றல்களையும், அனுபவங்களையும் பிறருக்கு வழங்கி விட வேண்டும் என்ற அதீத ஆர்வம் அதற்கு ஒரு காரணமாகும்.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் அல்குரான், சுன்னாவின் அடிப்படையில், அதை முன்னிலைப்படுத்தி உருவானதை சதாவும் நினைவுபடுத்தும் அவர் அதன் மகத்தான வெற்றிகள் அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கில் பயணிக்கையில் மலைபோல் எழுந் நிற்கும் என்று கூறுவதுடன் மாத்திரம் அன்றி, அதன் தலைவர்களுக்கு தொடராக பல்வேறு வழிகளிலும் உணர்த்தி வந்துள்ளதையும் காணலாம்.

இன்றும் சமய சமூக பற்று,உணர்வு, மனித நேயம் என்பவற்றுடன் வாழ்ந்து வரும் அவர் இன்று தனது 75 வது (2015-2-8) வயதைப் பூர்த்தி செய்கிறார். அல்ஹம்துலில்லாஹ்.அவரது அனைத்து நற் கருமங்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. அன்னாருக்கு பேரருள் புரிவானாக.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2015 இல் 12:25 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: