Lankamuslim.org

புத்தளம் PPAF !அதன் மாவட்ட காரியாலயத்தை திறந்துள்ளது

with one comment

PPAF- Puttalamமுஹ்ஸி ரஹ்மத்துல்லாஹ்:  புத்தளம் தொகுதிக்கும், மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மக்களுக்கும் கடந்த 25 வருடங்களாக 1989 முதல் 2010 வரையான ஆறு பொதுத் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத பாரிய குறைப்பாட்டின் எதிரொலியாக இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக உதயமானது புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம்(PPAF).

இரு பிரதான கட்சிகளில் போட்டியிட்டு இறுதியில் நமது வேட்பாளர்கள் வீசிய கையும், வெறும் கையுமாக வீடு திரும்பிய கசப்பான அனுபவங்கள் சகலருக்கும் குறிப்பாக புதிய தலைமுறைக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. அவர்களின் உணர்வுகளை பெரிதும் காயப்படுத்தியது. எனவே தொடர்ந்தும் அமைதி பேண முடியாமல், மௌனத்தைக் களைத்த PPAF அதன் சமூக, அரசியல் பயணத்தில் முக்கிய மைல் ஒன்றை (30.01.2015) அன்று அதன் மாவட்ட காரியாலயத்தை புத்தளம் மன்னார் வீதியில், காசிமிய்யா மத்ரசாவுக்கு முன்பாக திறந்து வைத்ததன் மூலம் வெற்றிகரமாக கடந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

PPAF ஸ்தாபகர்களில் ஒருவரும், சமூக ஆர்வலருமான ஆசிரியர் H.M.M.சிபாக் தலைமையில் எளிமையான முறையில் இடம் பெற்ற திறப்பு விழாவில் சமய, சமூக, கல்வி, அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினர்.

ஆசிரியர் சிபாக் PPAF இன் தோற்றம், வளர்ச்சி,பணிகளின் வியாபகம்,சவால்கள் குறித்து விளக்கி PPAF இன் பயணத்தில் பங்காளர்களாக அனைவரும் இணைந்து கொள்ளும் படியும் வேண்டுகோள் விடுத்தார்.

புத்தளத்தின் மூத்த அரசியல் பிரமுகர் அல்ஹாஜ் M.H.M. நவவி பிரதான கட்சிகளில் தானும், மர்ஹூம் M.I. பிஷ்ருல் ஹாபியும் போட்டியிட்டு, வெற்றி பெறமுடியாமல் போனமைக்கான காரணிகளை விலா வாரியாக விபரித்தார். தொடர்ந்தும் பெரும்பான்மை கட்சிகளை நம்பி, களமிறங்குவது எந்த வகையிலும் அறிவுடமையாகாது. PPAF இன் பணிகள் காலத்தின் கட்டாயத் தேவை. அதற்காக முன்னின்று உழைப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். PPAF இற்கு தனது ஒத்துழைப்பும்,ஆதரவும் தொடர்ந்தும் கிடைக்கும் என்றார்.

புத்தளம் மாவட்ட ஜம்மிய்யத்துள் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் இலக்கு தூய்மை என்றால அதை அடையும் வழிமுறையும் தூய்மையாக அமைய வேண்டும். PPAF இஸ்லாமிய வரம்புகளைப் பேணி பயணிப்பதன் மூலம் மக்களுக்கான அதன் நோக்கத்தை அடைந்து கொள்ளவும், அது செயற்பட்ட விதத்துக்கான கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளவும் முடியும். PPAF இன் பணிகள் வெற்றி பெற வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும் என்றார்.

புத்தளம் பெரிய பள்ளி தலைவர் அல்ஹாஜ் P.M.M. ஜனாப், முன்னாள் தலைவர் அல்ஹாஜ் S.R.M.M.முசம்மில், முன்னாள் பிரதியமைச்சர் S.S.M.அபூபக்கர் ஆகியோரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

“இரும்பு போன்ற நெஞ்சம் கொண்ட இளைஞர்களுக்கு வாள்கள் தேவையில்லை. இளைஞர்களின் கனவுகள் ஒரு போதும் தோற்பதில்லை”  PPAF இன் பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. அதன் விசாலமான பணிகள் மனிதம் வாழும் இடங்கள் தோறும் தொடர அவன் பேரருள் புரிவானாக.

PPAF- Puttalam

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2015 இல் 9:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. Muhusi Rahmathulla

  புத்தளம் மக்களின் அபிலாஷைகள் !
  பொதுத் தேர்தல் அண்மித்துக் கொண்டிருக்கிறது. புத்தளம் பிரதிநிதித்துவம் குறித்து தீராத வேட்கையுடனும், தணியாத தாகத்துடனும் முனைப்புக்கள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் புத்தளம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் கருத்துப் பரிமாறல்கள் இடம் பெற வேண்டும்.
  அவற்றுள் சிலவற்றை கோடிட்டுக் காட்டுவது பொருத்தமாகும்.
  1. கல்வி,உயர் கல்வித் துறையில் மேலும் புரட்சிகரமான மாற்றங்கள், உயர்தொழில் நுட்பக் கல்லூரி, கல்வியல் கல்லூரி, கடற்றொழில், நீரியல் வள கல்விசார் நிலையங்கள், இதர தொழில் சார் நிறுவனங்கள்.
  2. பிரதேச செயலகப் பிரிவு தோறும் தரமான முன்னணிப் பாடசாலைகளாக சிலவற்றை பரிணமிக்கச் செய்தல். அவற்றுக்கு தேவையான சகல பௌதீக,மனித வளங்களை பெற்றுக் கொடுத்தல். இதர பாடசாலைகளின் பௌதீக,மனித வளங்களை பெற்றுக் கொடுத்தல். வெற்றிடமாகவுள்ள சகல ஆளணியினர் நியமனம்.
  கல்வி,உயர் கல்வி புலமைப் பரிசில்கள்,ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள்,
  3. அரச, தனியார் வேலை வாய்ப்புக்கள், வெளிநாட்டு வேலை வாய்ய்ப்புக்கள், சுயதொழில் வேலைத் திட்டங்கள், பயிற்சிகள்,சந்தை வாய்ப்புக்கள்.
  4. பொருளாதாரத் திட்டங்கள், விவசாய, கால்நடை, கைத்தொழில்,கடற்றொழில்,தொழில் நுட்பம்,அபிவிருத்தி சார்ந்தவை. இவை மூலம் நேரடியான,மறைமுகமான தொழில் வாய்ப்புக்கள்.
  5. அடிப்படை வசதிகளின் மேம்பாடு. வீடமைப்பு, சுகாதாரம், மின்சாரம், தண்ணீர், தகவல் தொடர்பு, போக்குவரத்து, பாதை, வடிகாலமைப்பு. வீடமைக்க காணியற்றோருக்கு காணித் துண்டுகளை வழங்குதல், வீட்டு கடன் வசதிகள்,சமுர்த்தி கொடுப்பனவுகள்,உதவிகள், நிவாரணங்கள்.
  6. விஷேட வெளிநாட்டு முதலீடுகள், அவற்றின் மூலம் தொழில் வாய்ப்புக்கள், வருமான ஈட்டல்கள். அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், நடை முறையில் உள்ளத் திட்டங்களை பூர்த்தி செய்தல். பிரதான நகரங்களின் துரித அபிவிருத்தி.
  7. நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சமூக நலன்புரித் திட்டங்கள், விளையாட்டுத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள், இளைஞர் யுவதிகளின் ஆற்றல்களை வெளிக் கொணர திட்டங்கள்.
  8. கலை, கலாசார, பண்பாடு விழுமிய மேம்பாட்டுத் திட்டங்கள். சமய, இன நல்லிணக்கத் திட்டங்கள்.
  9. சிறுவர் நலன்புரித் திட்டங்கள், மகளிருக்கான பொருளாதாரத் திட்டங்கள், மாற்றுத் திறனாளிகள், அங்கவீனர்கள், முதியோர், நலிவுற்றோர் ஆகியோருக்கான நலன்புரித் திட்டங்கள்.
  10. அனர்த்த முகாமைத்துவ வேலைத் திட்டங்கள்.
  இவை போன்று ஏராளம் உள்ளன. இவற்றைப் படிப்படியாக நிறைவு செய்வதற்கு சமூக ரீதியாக உள்ளார்ந்த செயற்பாடுகளுக்குப் புறம்பாக தேசிய மட்ட அரச, அரச சார்பற்ற பங்களிப்பும் இன்றியமையாதது.

  Muhusi Rahmathulla

  பிப்ரவரி 1, 2015 at 10:52 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: