Lankamuslim.org

நிஷா பிஸ்வால் வருகிறார் , கமலேஷ் சர்மா வந்துள்ளார் , ஹியூ ஸ்வைர் சென்றார்

leave a comment »

Nisahaதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் எதிர்வரும் திங்கட்கிழமை (02) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார்.

அவருடன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய துணை உதவி செயலாளர் அதுல் கெஷாப்பும் வருகை தரவிருக்கின்றார். புதிய அரசாங்கத்துடன் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதுடன் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவார்.

சிவில் சமூகத்தினர் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார் என்று தெரியவருகின்றது.

கமலேஷ் சர்மா இலங்கை வந்தடைந்தார்

பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இன்று (31) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார். பொதுநலவாய தலைமைத்துவம் குறித்து வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதுடன், அரசாங்கத்தின் முக்கிய முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஹியூ ஸ்வைர் நாடு திரும்பினார்

பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் இலங்கை விஜயத்தை முடித்துகொண்டு நாடு திரும்பியுள்ளார் . ஹியூ ஸ்வைர் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது முறை என்பதோடு, புதிய அரசு பதவியேற்ற பின் நாட்டுக்கு வருகை தந்துள்ள முதலாவது மேற்குலக நாடுகளின் இராஜதந்திரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2015 இல் 12:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: