Lankamuslim.org

தீயில் கருகிய தந்தையும் அவரின் மூன்று வயது குழந்தையும்

leave a comment »

fireசம்மாந்துறை  வளாத்தப்பிட்டி , இஸ்மாயில் புரம் சுனாமி கிராமத்துக்கு பின்புறம் ஒரு குடிசையில் தனது இரு குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த சின்­னத்­தம்பி ஆதம்­லெவ்வை மற்றும் அவ­ரது மூன்று வய­தான மகன்   மொஹம்மட் ரியான் தீயில் கருகி வபாத்தாகியதுடன்  ஏழு வய­தான மகள் பலத்த தீக் காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணி­ய­ளவில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் குடி­சைக்குள் பர­விய தீயி­னா­லேயே அவ்­வி­ரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண  தெரி­வித்துள்ளார்

ஒரு குடிசை வீட்டில் சின்­னத்­தம்பி ஆதம்­லெவ்வை அவரின் மனைவி,இரு பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்து வந்­துள்ளார். இந் நிலையில் அவரின் மனைவி சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லியில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 7 மற்றும் 3 வய­து­டைய இரு பிள்­ளை­க­ளுடன் ஆதம்­லெவ்வை நேற்று முன்தினம் இரவு வீட்டில் நித்­தி­ரைக்கு சென்­றுள்ளார்.

இந் நிலையில் சுமார் 11.30 மணிக்கு குறித்த குடிசை தீயில் கரு­கி­யுள்­ள­தாக 119 அவ­சர தொடர்பு இலக்கம் ஊடாக சம்­மாந்­துறை பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதனை அடுத்து அங்கு விரைந்த பொலி ஸார், இருவர் ஸ்தலத்­தி­லேயே கொல்­லப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னித்­துள்­ளனர்.

அத்­துடன் கடும் தீக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளான சிறுமி ஒரு­வரை பொது மக்­களின் உத­வி­யுடன் அவர்கள் அம்­பாறை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­க­ளுக்­காக சேர்த்­துள்­ளனர்.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2015 இல் 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: