Lankamuslim.org

கிழக்கு முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம்: ஹக்கீம்

with one comment

hakeemகிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் இடம்பெற்ற முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.கே.எம்.மன்சூர் நினைவு தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

கடந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்கு மாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு ஆட்சி அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை கிழக்கில் அமையவுள்ள மாகாண அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் தேவை. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனும் நாம் பேசுவோம் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2015 இல் 5:18 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Your News is not updated on time. I read old news…why shouldn’t it be fresh ..

    Rizwie Hassen

    பிப்ரவரி 6, 2015 at 6:35 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: