Lankamuslim.org

அனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு ACJU அழைப்பு

with 2 comments

ACJU_Logo_Colorகொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை இனஇமத  வேறுபாடுகளை மறந்து உதவி வழங்குவதற்கு முன்வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

விடுத்துள்ளது.

கொஸ்லாந்தை மண்சரிவு தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் கொஸ்லாந்த எனும் ஊரில் நிகழ்ந்த மண்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்குண்டு இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் பலர் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சகல தரப்பினரும் ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரியவும் காணாமல் போனோரை கண்டுபிடிக்கவும் கடும் பிரயத்தனம் எடுத்துவருகின்றனர் என்பதையும் அறியக்கிடைக்கிறது.

இந்நிலையில் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றி ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பாக அப்பிரதேசத்திலுள்ள ஜம்இய்யத்துல் உலமா கிளைகள் ஏனையோரை இணைத்துக் கொண்டு தம்மால் முடியுமான உதவிகளை செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில் முஸ்லிம்களாகிய நாம் முன்னிற்க வேண்டும் எனவும் மேற்படி அனர்த்தங்கள் ஏற்படாதிருக்க பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கின்றது.

அஷ்-ஷைக் முக்ஸித் அஹ்மத்
செயலாளர் – சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2014 இல் 1:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. பெருமைக்காகவும், பொய் பந்தாவுக்காகவும் பணத்தை வீணாக்கும் முஸ்லிம் செல்வந்தர்கள் இந்த மாதிரியான நன்மை தரும், நம் சகோதர மொழி இனத்தின் இந்த துயரத்தில் உதவுவது காலோச்சிதமானது….

    NmN

    ஒக்ரோபர் 30, 2014 at 8:57 பிப

  2. சமூக சேவைப் பிரிவு என்பது அழைப்பு விடுப்பதற்க்ல்ல. உடு‌க்கை இழந்தவனின் கைகள் இடுக்கன் களைவதற்குச் செல்வது போன்று செயற்பட வேண்டும்.

    அப்பிரிவு அதற்கான ஆயத்தங்களுடன் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும. அல்லது தமது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளினதும், நிர்வாகங்களினதும் அவாறான ஆபத்தில் உதவும் பணிகளுக்கான ஆயத்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியும், கண்காணித்தும் வர வேண்டும். இதுவே அமைப்பு ரீதியில் இயங்கும் ஒரு நிறுவனம் என்பதன் அறிகுறிகள்.

    இல்லாமல், அவ்வப்பேர்து முஸ்லிம்களுக்கு அறிவித்தல் கொடுப்பதைப் பார்க்கும் போது, முஸ்லிம்கள் இவ்வாறான அனர்த்த நேரங்களில் வாளாவிருப்பவர்கள் போன்றும் அதனால், தாம் அவர்களை அச்சமயங்களில் தட்டி எழுப்பி விடுவது போன்றும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது.

    nizamhm1944

    ஒக்ரோபர் 31, 2014 at 12:12 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: