Lankamuslim.org

முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும் ஒரு போதும் வாழவுமில்லை அவ்வாறு வாழப்போவதுமில்லை: ACMC

with one comment

hameed“பொது பல சேனா முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் சமய ஸ்தாபனங்கள் மீதும். விடுத்திருக்கின்ற அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதோடு முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும் ஒரு  போதும் வாழவுமில்லை  அவ்வாறு

வாழப்போவதுமில்லை” என்பதை மிகத்தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம்.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் எங்கே இருந்தார்கள் என்றே தெரியாத ஒரு கூட்டம் யுத்தம் நிறைவடைந்ததும், ஏதோ வீராதி வீரர்கள் போன்று வெளியில் வந்து கடந்த 02 வருடங்களாக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திகொண்டு இருக்கின்றார்கள்.

நாட்டின் அமைதியின்மையில் ஆதாயம் தேடும் சில சக்திகளின் கைகூலிகளாக மீண்டும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக ஆரம்பத்தில் அடையாளம் தெரியாதவர்களாக பள்ளிவாசல்களுக்கு கல்லெறிந்து தமது அடாவடித்தனத்தை ஆரம்பித்தார்கள். பின்னர் “ஹலால்” கோஷத்துடன் வெளியில் வந்தார்கள்.

முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை களத்தில் இறக்கி       பயங்கரவாதிகளாக காட்டி தம் இலக்கை நோக்கி பயணிப்பதற்காக 11.000 முஸ்லிம் வாலிபர்கள் பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி பெற்று வந்திருப்பதாகவும், மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு கொள்கலன்களின் ஆயுதம் கொண்டு வந்திருந்ததாகவும், பொய்களை கட்டவழித்தார்கள் ஏனெனில் எவ்வாறாவது முஸ்லிம் வாலிபர்களை விரக்தியின் விளிம்பிற்குள் தள்ளி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்து இதைதான் நாம் முன்கூட்டியே கூறினோம் என்று ஒரு படம் காட்ட நினைத்தார்கள். ஆனாலும் முஸ்லிம்கள் சமாதானத்தை நேசிக்கின்ற சமூகம் என்ற வகையில் பொறுமையாக நிதானமாக விஷயங்களை அணுகினார்கள்.

இதனால் விரக்தியடைந்த பொது பல சேனா முஸ்லிம்களின் உணர்வுகளை மீண்டும் தூண்டுவதற்கு புனித அல்குர்ஆனை பற்றியே பொய்களை இட்டுக்கட்டினார்கள். மேலும் பெண்களின் கௌரவமான ஆடைகளை விமர்சித்தார்கள். பெண்களின் ஆடைகளை விமர்சிக்கும் துறவிகளை முதல் தடவையாக இலங்கையில் கண்டோம். இவை எதன் மூலமாகவும் தங்கள் இலக்கை அடையமுடியாமல் போன பொது பல சேனா அளுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில் தங்கள் அடாவடித்தனங்களை அரங்கேற்றினார்கள்.

இதனால் முழுநாடும் சர்வதேசத்தின் முன் தலை குனிந்து நிற்கிறது. இருப்பினும் பொது பல சேனாவுக்கு எதைபற்றியும் கவலையில்லை. பொய்யை முதலீடாகக் கொண்டு தன் இலக்கை அடைவதில் மாத்திரம் குறியாக இருக்கிறது.

இந்த பின்னனியில் தான் தனக்கு வலு சேர்ப்பதற்காக மியன்மாரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு காரணகர்த்தாவாக முழு சர்வதேசத்தாலும் அடையாளங் காணப்பட்ட அசின் விராது தேருடன் கைகோர்த்து இருக்கின்றார்கள். இரு நாடுகளினதும் முஸ்லிம்களின் கொலைகளின் காரணகரத்தாக்கள் கைக்கோர்த்திருப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் தீவிரவாதிகள் நல்லவர்களை தீவிரவாதிகள் என்பதும் சமாதானத்தின் எதிரிகள் சமாதானம் பற்றி பிரலாகிப்பதும், கொலைகாரர்கள் தங்களுக்காக யாரும் பேசுகிறார்கள் இல்லையே என்று புலம்புவதும் தான் புதுமையாகும்.

அன்று வடகிழக்கு முஸ்லிம்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை மதித்து பிரபாகரனுடன் ஒத்துழைக்க மறுத்ததனால் பல உயிர்களையும் ,சொத்துக்களையும், வாழ்விடங்களையும் இழந்தார்கள். அவ்வாறான சமுதாயத்துக்கு நன்றி கடனாக யுத்தம் முடிந்ததும் அதன் உணர்வுகளை குத்தி குதறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அநீதியையும் அக்கிறமத்தையும் தடுத்து நீதியையும் சமாதானத்தையும் போதித்த புத்தரின் பெயரை கூறிக்கொண்டு இந்த கூட்டம் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது ஆனால் “அதர்மம் என்றும் அழிந்தே தீரும்” என்பதை இவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்

Y.L.S ஹமீட்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 இல் 6:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. நானும் ஒரு கோழி என்னையும் போட்டு வக்குங்கள் என்ற ரீதியில், அறிக்கை விடுவதிலேயே முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது காலத்தை ஓட்டி முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, கடந்த ஊவா தேர்தல் வெகு துலாம்பரமாக வெளிப்படுத்திவிட்டது.

  முஸ்லிம்கள் தாம் முட்டாள்களல்ல, தேவைப்படின் முஸ்லிம் அரசியல்வாதிகளையே தூக்கி வீசத் தலைப்பட்டு விடுவார்கள் என்பதற்கு ஊவா தோல்வி ஒரு அத்தாட்சி.

  உண்மையில் பொது பல சேனாவின் செயற்பாட்டுக்கு முழுமையான பின்னணி யார் என்பதை அனைவரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அந்த அரசுக்கு இன்னமும் சாமரம் வீசிக் கொண்டு இருப்பதுடன், அவர்களது செயலைக் கண்டிக்காமல், பொ ப சே வை விமர்சிப்பதன் மூலம் முஸ்லிம்களை, தமது குறைகளைக் கண்டு கொள்ள விடாது திசைதிருப்ப முனைவது பொது பல சேனாவின் செயலைவிடக் குறைந்ததல்ல.

  அஞ்சியும் கெஞ்சியும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளே! பாராளுமன்றில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரேரணை கொணர்ந்த போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நன்றாகவே முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளார்கள். கூட இருந்து கொல்லும் வியாதியாகி விட்டனர் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும்.

  nizamhm1944

  ஒக்ரோபர் 1, 2014 at 12:19 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: