Lankamuslim.org

இந்து அமைப்பும் பொது பல சேனாவும் இணைத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

with 3 comments

hindu_protestகிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த மதங்களையும் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே, இன்றே

ஒன்றுப்படுவோம், மதமாற்றத்திற்கு எதிராக போராடுவோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .

மதமாற்ற தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைநிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம், அன்றாடம் தமிழ் பத்திரிகைகளை பார்க்கும்போது இந்துக்கள் குடும்பம் குடும்பமாக மதம் மாறுவதை காணக்கூடியதாகவுள்ளது. அதற்கான விளம்பரங்கள் நாளுக்கு நாள் பத்திரிகைகளில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது எமக்கு மட்டுமல்ல, கத்தோலிக்க திருச்சபைக்கும் சம்பிரதாயமாக அமைதியாக வாழும் முஸ்லிம்களுக்கும் வரும் பிரச்சினையாக அமைந்துள்ளது என்றும் தேரர் தெரிவித்துள்ளார் .

இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு எதிராக இந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.இதில் ஜனாதிபதியின் இந்து மத ஆலோசகர் பாபுசர்மா, ஐயப்பதாச குருக்கள் , பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட பல குருமாரும் சுமார் 500க்கு மேற்பட்ட இந்து பக்தர்களும் கலந்துகொண்டனர்.

hindu_protest

Advertisements

Written by lankamuslim

மே 27, 2014 இல் 8:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. மோடியின் வாளைபிடிக்க இலங்கை இந்துக்களின் பாதுகாவலர்களாக பேரினவாதம் தன்னை சித்தரிக்க எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று

    Mufahir

    மே 27, 2014 at 12:32 பிப

  2. பொது பல சேனா, குறிப்பாக, கலபொல தேரர் தன் மேல் ஒட்டியிருக்கும் சகதியை, நாற்றத்தை, தந்திரமாக இந்துக்களின் மீது உரசிவிட்டு, அவர்களை கிறிஸ்தவ, முஸ்லிம்களின் நிரந்தர எதிரியாக்க முனைந்துள்ளார். அதற்கு சில பூசாரிகள் விலை போயுள்ளனர். பிரித்தாளும் தந்திரத்தின் ஒரு பக்கம்.

    இந்த தேரரின் நடவடிக்கைகளால், தமிழ் பேசும் இந்து, முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியிலும், தமிழ்- சிங்களம் பேசும் கத்தோலிக்க சமுதாயத்தின் மத்தியிலும் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வை தகர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    nizamhm1944

    மே 27, 2014 at 11:04 பிப

  3. பார்த்தாயா வைகோ ஸ்ரீ லங்காவில் தமிழர்களும் சிங்களவர்களும் எவ்வளவு ஒற்றுமையாக வாழுகிறார்கள்.உனது அரசியல் வண்டி ஒடுவதுக்கு நீ நாடகம் போடுகிறாய்.

    Daoud Tharik

    மே 28, 2014 at 1:28 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: