Lankamuslim.org

One World One Ummah

நல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்: NFGG

leave a comment »

good-governmentநல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  (NFGG) வேண்டுகோள்: புதிதாக அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (National Front For Good Governance – NFGG) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு,

போருக்குப் பிந்திய இலங்கையில், சமூக நல்லிணக்கமும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும் நிரந்தரமானதும் கௌரவமானதுமான சமாதானமும் மேலோங்க வேண்டும் என்பதே அனைவரினதும் அபிலாசையாக உள்ளது.

ஆனால், சமகால இலங்கையின் அரசியல் போக்குகள், இதற்கு எதிரான திசையில் நகரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமானதல்ல. இந்நிலை உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நமது அரசியல் அரங்கில் ‘நல்லாட்சி’ (Good Governance) பற்றி பல தரப்பினராலும் அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால், பேசுகின்ற பலருக்கு அது பற்றிய போதிய தெளிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியிலும் இது குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

‘நல்லாட்சி’ என்பதை வெறுமனே ‘சிறந்த ஆட்சி’ என்று மட்டும் மேலோட்டமாகப் புரிந்து கொள்ளும் அபாயமும் நிலவுகிறது. பணம் சம்பாதிக்கும் வியாபாரமாக அரசியல் மாறியுள்ள இன்றைய சூழ்நிலையில், அதனை ஒரு சேவையாக, சமூகக் கடமையாக, கூட்டுப் பொறுப்பாக முன்னிறுத்த வேண்டிய அவசியம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

உலகின் சில ஆட்சி முறைகள், வேறு பல ஆட்சி முறைகளை விடவும் சிறந்து விளங்குவதற்கு, அவை பின்பற்றும் நல்லாட்சி அம்சங்களே பிரதான பின்னணிக் காரணிகளாக அமைந்துள்ளன.
நல்லாட்சிப் பண்புகள் நடைமுறையில் பிரயோகிப்பதற்கு சாத்தியமற்ற சித்தாந்தங்கள் அல்ல. அவை பிரயோக ரீதியாக பரிசோதிக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமான இலக்குகளும் வழிமுறைகளுமாகும்.

சட்ட ஆட்சியை (Rule of Law), சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் நிலைநிறுத்துவது நல்லாட்சியின் முக்கிய பண்பாகும். சமூக நீதியை (Social Justice) நிலைநிறுத்துவது நம் அனைவரினதும் தார்மீக்க் கடமையாகும். இதனைப் பேணுவதற்கு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பொது உடன்பாட்டை (Consensus) ஏற்படுத்துவது இன்றியமையாததாகும்.

இந்தப் பின்னணியிலேயே அனைத்து மக்களும் பங்கேற்கும் பண்பு (Participatory Approach) வளர முடியும். இந்தப் பங்கேற்பு, அர்த்தபூர்வமான பங்கேற்பாக (Meaningful participation) அமைந்தால் மட்டுமே நிலைத்து நிற்கும் விளைவுகளை அடைய முடியும்.

தீர்மானம் எடுக்கும் சக்திகள், வெளிப்படைத்தன்மையைப் (Transparency) பேண வேண்டும். எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அவை ஏன் எடுக்கப்படுகின்றன, அவை எப்படி அமுல்படுத்தப்படுகின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. இந்த வகையில் தகவல் அறியும் உரிமை (Right to Information) அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த வெளிப்படைத் தன்மையை சிறந்த முறையில் பேணுவதற்கு வகை கூறுதல் அல்லது பொறுப்புக் கூறுதல் (Accountability) என்ற அம்சம் இன்றியமையாததாகும். எல்லோரையும் உள்வாங்கும் வகையிலான சமத்துவ நோக்கின் பால் செயற்படுவதற்கு, வினைத்திறன், விளைதிறன் (Efficiency & Effectiveness) கொண்ட நல்லாட்சிப் பண்புகளை நாம் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

ஊழல், துஷ்பிரயோகங்களை இல்லாதொழித்து, நமது ஆட்சி முறையில் நிலவும் பலவீனங்களைத் களைவதற்குப் பொருத்தமான தொலைநோக்குடைய தலைமைத்துவம் (Visionary Leadership) காலத்தின் தேவையாக மாறியுள்ளது.நடைமுறையில் நமது அரசியல் செயற்பாடுகள் தேர்தலை மட்டுமே மையப்படுத்தியதாக சுருங்கி விட்டது. மக்களது அரசியல் பங்குபற்றல் (Political Participation)  ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டே வருகிறது.

மக்களது ஆக்கபூர்வமான அரசியல் பங்களிப்பை மறுத்து, தமது சமூகப் பொறுப்புணர்வை அலட்சியப்படுத்தி விட்டு, பணம் உழைக்கும் தொழிலாக மட்டும் மாறியுள்ள, ஊழல் மலிந்த இந்த அரசியல் வியாபாரம், ஒட்டுமொத்த இலங்கையின் எதிர்காலத்திற்கான பாரிய சவாலாக மாறியுள்ளது. இந்த இழிநிலை முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆதாயங்களுக்காக செயற்படாமல், பொது நன்மையின் மீது அக்கறை கொண்டு உழைக்கும் எல்லா சக்திகளும், அனைத்து மக்களுக்குமான புதிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபட வேண்டும்.

அந்தவகையில் எமக்கு ஒரு மாற்று  அரசியல் கலாசாரம் உடனடித் தேவையாக மாறியுள்ளது. இந்நாட்டின் எல்லா சமூகங்களும் புரிந்துணர்வுடனும், பொது நன்மையின் அடிப்படையிலும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

இந்தப் புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அணி திரளுமாறு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நாட்டு மக்கள் அனைவருக்கும் – அரசியல் சக்திகளுக்கும், சிவில் சக்திகளுக்கும் – பகிரங்க அழைப்பொன்றை விடுக்கிறது.

பல்வேறு முரண்பாடுகளால் ஆழமாகப் பிளவுண்டு போயுள்ள இலங்கை சமூகத்தை – ஒவ்வொரு தரப்பினரது தனித்துவத்தையும் வித்தியாசத்தையும் மதித்து – ஒன்றிணைப்பதற்கான (Bridge Building) வரலாற்றுக் கடப்பாடு நம் முன்னே உள்ளது.

நீதியும் சுதந்திரமும் உண்மையான ஜனநாயகமும் நிலவும் – நிலைத்து நிற்கும், அபிவிருத்தியடைந்த, எல்லோருக்குமான புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றிணைந்து செயற்படுவோம். நமது அரசியல் நகர்வில் இது ஒரு திருப்புமுனையாகவும், வரலாற்றுப் பங்களிப்பாகவும் அமையும்.

நல்லாட்சி அம்சங்களின் அடிப்படையில் ஒன்றுபட்ட அமைப்புகள், கடந்த சில ஆண்டுகளாக சமூக அரசியல் பணிகளில் தொலைநோக்குடன் கூட்டிணைந்து செயற்பட்டு வருகின்றன. அதன் விளைவாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (National Front for Good Governance – NFGG) உதயமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 20, 2014 இல் 3:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: