Lankamuslim.org

One World One Ummah

நாரம்மல விபத்தில் நான்கு மாத்தளை வாலிபர்கள் வபாத்

with one comment

warakamuraஏ.சி.இக்பால், அஸ்லம் அலி : நாரம்மல பொலிஸ் பிரிவில் மெட்டியாகன பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வபாத்தாகியுள்ளனர். இந்த விபத்தில் மாத்தளை வரகாமுறையை சேர்ந்த நான்கு வாலிபர்களே (படங்கள்) வபாத்தாகியுள்ளனர். இவர்களில் இருவர் சகோதரர்களும் ஒருவர் அவர்களின் உறவினருமாவார் .மேலும் இந்த விபத்தில் முஹம்மட் நாஸிக் (21) சாகிர் (21) அலி மதீன் (20)  அமீன் (23) ஆகியோர் வபாதாகியுள்ளனர் .வபாத்தான நாஸிக் எனற வாலிபர் வரகாமுறை- உக்குவளை பிரதேச சபையின் பிரதி தலைவரான நகீர் என்பவரின் மகனாவார் .

இபோச பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .இவர்கள் 21 வயதுக்கும் 23 வயதுக்கும் உட்பட்டவர்கள் ஆவர் . வெளிநாட்டு ஒன்றில் இருந்து நாடு திரும்பிய தனது சகோதரனை அழைத்து வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .  விபத்தை அடுத்து பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

waraka1 waraka4

3

4

5

4 2 3 1

Advertisements

Written by lankamuslim

மார்ச் 18, 2014 இல் 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. தயவு செய்து நீக்கிய படங்களை மீண்டும் போடவும் பார்பவர்களுக்கு படிப்பினையாக இருக்கும்

    Imran Hussain

    மார்ச் 19, 2014 at 10:25 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: