Lankamuslim.org

One World One Ummah

மதத் தலங்கள் மீதான தாக்குதல்கள் :அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் விசனம்

with one comment

hakeem2பொது மக்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடும் படையினருக்கு எதிராக சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், இனவாதத்தை தூண்டும் விதத்தில் வெறுக்கத்தக்கதாக பேசப்படும் பேச்சுக்களை படங்கள் தண்டனைக்குரிய பாரதூரமான குற்றச்செயலாக ஆக்குவதற்கு சட்டம் இயற்றப்பட இருப்பதாகவும், பெண்களுக்கும், இளவயதினருக்கும் எதிராக புரியப்படும் குற்றச்செயல்களுக்கு கூடுதல் தண்டனை விதிக்கக்கூடிய விதத்தில் சட்டத்தின் மூலம் வழிவகைகள் செய்யப்படவுள்ளதாகவும் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (31) முற்பகல் இலங்கை வந்த ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் பிரஸ்தாப திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அடுல் கெஷாப் மற்றும் அவர்களது குழுவினர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே. சிஸன் ஆகியோருடன் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் பிற்பகல் சந்தித்ததனர்.

இச்சந்திப்பின் போது நாட்டின் குற்றவியல் சட்டம் தொடர்பாகவும், விரைவில் அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் பரவலாக கலந்துரையாடப்பட்டது.

உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், பிரதி உதவிச் செயலாளர் அடுல் கெஷாப் ஆகியோர் அமைச்சரிடமும், அமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டீ சில்வாவிடமும் சில முக்கிய கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு உரிய விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

குறிப்பாக இலங்கையில் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், எரியூட்டல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது பற்றி விசனம் தெரிவித்த நிஷா தேசாய் பிஸ்வால் அவற்றைத் தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருப்பதையிட்டு கவலை வெளியிட்டார்.

அதன் பின்னணியை எடுத்துரைத்த அமைச்சர் ஹக்கீம் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் வணக்கஸ்தலங்கள் மீதான அவ்வாறான தாக்குதல்களுக்கு தூண்டுகோலாய் அமைந்த இனவாதத்தைத் தூண்டும் சிலரின் வெறுப்பூட்டும் பேச்சுக்களின் விபரீதம் குறித்தும் கூறினார்.

இவ்வாறான வெறுப்பூட்டும் இனவாதப் பேச்சுக்களை குற்றவியல் சட்டக் கோவையில் பாரதூரமான குற்றச் செயலாக உள்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறினார். இது பற்றி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதன் முதலில் அரசாங்கத்திற்கு வழியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

குற்றச் செயல்களை நீதிமன்றங்களில் வெளிப்படையாக தெரிவிப்பதற்கு அச்சம் காரணமாக தயக்கம் காட்டும் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சாட்சிகள் விடயத்தில் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமகின்றன என உதவிச் செயலாளர் தேசாய் பிஸ்வால் வினவிய பொழுது பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான உத்தேச  புதிய சட்டம் அந்த விடயத்தில் ஒரு திருப்புமுனையாகவும், மைல்கல்லாகவும் அமையுமென அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.  மூன்று தசாப்தகால யுத்தத்தின் விளைவாக வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் செயலிழந்திருந்த நீதிமன்றங்கள் மீண்டும் செயல்பட்டு வருவதாகவும், அண்மையில் சகல வசதிகளுடனும் கூடிய புதிய மூன்று நீதிமன்றக் கட்டடத் தொகுதிகள் வட மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

hakeem2 hakeem3

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2014 இல் 10:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. “We are concerned about the worsening situation with respect to Human Rights including continued attacks against religious minorities as well as the weakening of the rule of law and increase in the levels of corruption and impunity. All of these factors lead to undermine the proud tradition of democracy in Sri Lanka,” she said in her opening statement.

  Responding to questions on the issue she further said “Churches and mosques are burned down where people feel they cannot practice their faith without fear,. I believe that the concerns of the international community are justifiable.”

  The United States said today that it does not contemplate economic sanctions although a third resolution will be brought against Sri Lanka, owing to the ‘lack of progress on accountability and the deteriorating Human Rights situation in country’.

  Addressing a packed media briefing, Nisha Desai Biswal – US Assistant Secretary of State for South and Central Asian Affairs reiterated that the international community was ‘losing its patience’.

  Answering questions posed by journalists to the effect that if the resolution would call for an international investigation, Biswal declined to be precise.

  “It is too early to determine the text of the resolution, I will say that while our strong preference has always been for a Sri Lankan process to unfold I have very clearly noted that lack of progress in Sri Lanka has led to frustration and a great deal of skepticism in my government and in the international community and as I have said patience is wearing this. So I cannot tell at this point what would be in that resolution but our hope has always been that this would be a Sri Lankan national process,” she said.

  Making a shift from the war to post war issues in Sri Lanka, Biswal said the international community was concerned about the ‘deteriorating situation in Human Rights, the rule of Law and the rise in corruption’.

  “We are concerned about the worsening situation with respect to Human Rights including continued attacks against religious minorities as well as the weakening of the rule of law and increase in the levels of corruption and impunity. All of these factors lead to undermine the proud tradition of democracy in Sri Lanka,” she said in her opening statement.

  Responding to questions on the issue she further said “Churches and mosques are burned down where people feel they cannot practice their faith without fear,. I believe that the concerns of the international community are justifiable.”

  In her opening remarks as well as during the Q and A session that followed, the composed Biswal didn’t veil that the United States was ‘ frustrated’ at the pace in which ‘progress was being made’ in Sri Lanka.

  “Five years at the end of the conflict meaningful steps on reconciliation are yet to be taken . The government has asked for space but when that space is not used to effectively to pursue peace, justice and accountability it draws concern of the international community,” she said

  newsman

  பிப்ரவரி 1, 2014 at 9:18 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: