Lankamuslim.org

ஜனாதிபதியின் இஸ்ரேலிய விஜயம்: முஸ்லிம்கள் கவலை கொள்வது ஏன்?

leave a comment »

லதீப் பாரூக்
MAHINஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கிற்கான விஜயத்தின் போது, இஸ்ரேலிற்கு இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை, அறை நூற்றாண்டுகளாக பின் கதவினால் நாட்டிற்குள் நுழைவதற்குத் தருணம் பாத்திரந்த இஸ்ரேலிற்கு, பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக மாறியுள்ளது. ஜனாதிபதி தனது சுற்றுப் பயணத்தின் போது, ஜோர்தான், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை என்பவற்றிற்கும் விஜயம் செய்திருந்தார். 1950 களில் நடுப்பகுதியில் இலங்கையில் இஸ்ரேலுக்குக் கதவடைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பஸ்தீன் ஒருமைப்பாட்டிற்கான இலங்கைக் கமிட்டியின் தலைவராக மூன்று தசாப்தங்களாக பதவி வகித்தவர் என்பது இஸ்ரேலிற்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.

MAHINதந்திரம் மற்றும் அடுத்தவர்கள் மீதான குள்ளநரித்தனம் என்பவற்றின் மூலம் தனது இருப்பைத் தக்க வைத்து வருகின்ற இஸ்ரேல், இலங்கையில் கதவடைப்பு செய்யப்பட்டிருந்த நிலையிலும்,  இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும்  ஒரே நேரத்தில், ஒருவரையொருவர் அறியாத முறையில் பயிற்சி வழங்கியது. இவ்விதம் யுத்த காலத்தில் நாட்டிற்குள் இஸ்ரேல் புகுந்து கொண்டது.

அதிலிருந்து தனது சொந்த முகத்தையோ, பலஸ்தீனியர்களின் அவலங்களையோ மைய நீரோட்ட மீடியாக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி விடாமல் பார்த்துக் கொள்வது உள்ளடங்கலாகப் பல்வேறு கைங்கர்யங்களில் அது ஈடுபட்டது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் கொடுமைகளுக்கு எதிரான பலஸ்தீனியர்களின் போராட்டத்தில் உறுதியான ஆதரவாளியாக இலங்கை இருந்து வந்த நிலையில், ராஜபக்ஷவின் விஜயம் அதற்கு முடிவுரையாக அமைந்திருக்கிறது.

இதற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாத இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் வங்குரோத்து நிலைமையையும் இந்த விஜயம் தோலுரித்துக் காட்டியுள்ளது.

பலஸ்தீனியர்களின் நலன் என்பதற்கு அப்பால், இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில், தமது சொந்த விவகாரங்களிலும் இப்பிரச்சினை தொடர்புபடுகின்றது. இஸ்ரேலின் பிரசன்னம் இருக்கும் இடங்களில் எல்லாம், அதன் இரகசியப் புலனாய்வு அமைப்பான மொஸாட்டின் பிரதான இலக்காக இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களே உலகளவில் இருந்து வருகிறார்கள். அநாயாசமாகப் பணத்தை அள்ளி வீசி, உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பணியில் அமர்த்தி, முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய சமூகங்களைத் தூண்டி விடுகிறார்கள்.

உதாரணமாக, குறிப்பிடத்தக்க அளவிலான இனவாத கும்பல்கள் தமது முஸ்லிம் விரோதப் பிரசாரத்தை ஆரம்பிக்கும் முன்பே, இஸ்ரேலின் பிரசன்னம் சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பிரச்சினைகளை உண்டு பண்ணலாம் என முஸ்லிம் புத்தி ஜீவிகள் பலர் அச்சம் கொண்டிருந்தனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகத் தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல் அலைகளை நோக்கும் போது, இப்பயம் சரியானதே என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸியோனிஸ்ட்டுகளோடு குசலம் கொண்டாடி வருகின்ற அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு, இவர்கள் உண்மையில் யார் என்பதோ, இவர்களது பின்புலம் என்ன என்பது பற்றியோ அறிவிருப்பதில்லை. உண்மையைச் சொல்வதானால், இந்த ஸியோனிஸ்ட்கள் ஜேர்மன் நாஸிகளைப் போன்றவர்களே!.

1860 ஸ்விட்ஸர்லாந்தின் பெஸ்ல் நகரில் சந்தித்துக் கொண்ட சியோனிஸத் தலைவர்கள், பலஸ்தீனியர்களை உதைத்து, அவர்களது வீடுகள் மற்றும் நிலங்களில் இருந்து அவர்களை வெளியே தள்ளி விட்டு, அப்போது உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த பஸ்தீனில் யூதத் தேசம் ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்தார்கள்.

பல்வேறு குழறுபடிகளைச் செய்து, முதலாம் உலகப் போரில் துருக்கியைக் கவிழ்த்து, பலஸ்தீனைப் பிரத்தானியக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். பிரித்தானியாவின் ஆசிர்வாதத்தோடு, பலஸ்தீனியர்களைப் படுகொலை செய்து, அகதி முகாம்களுக்குள் விரட்டியடித்தார்கள். இப்பலஸ்தீனியர்கள் இன்றும் முகாம்களில் துன்புற்று வருகிறார்கள். பிறகு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா என்பவற்றைக் கொண்டு, ஐநா சபையில் குளருபடிகளைச் செய்து, ஐ.நாவின் அடிப்படைகளுக்கு முரணாகவும், ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா நெறிமுறைகளுக்கு முரணாகவும், ஐ.நாவின் அங்கீகாரத்தோடு திருடப்பட்ட பலஸ்தீனிய நிலத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள்.

1அதிலிருந்து இஸ்ரேல் பல்வேறு யுத்தங்களைத் தொடுத்து, மேலும் பலஸ்தீன் மற்றும் அரபு நாடுகளின் நிலங்களைச் சுவீகரித்துக் கொண்டது. மத்திய கிழக்கை ஒரு கொலைக்களமாக மாற்றியது. 1930 இல் இருந்து, பலஸ்தீனில் இஸ்ரேல் 63 பாரிய படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலின் குற்றங்களைக் கண்டு, எதுவும் செய்வதற்குக் கையாலாகாத நிலையில், ஐ.நா சபை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்ற கோல்ட் ஸ்டோன் தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த தனது சொந்த அறிக்கையையே ஐ.நாவினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

அத்தோடு இஸ்ரேல் நிற்கவில்லை. மத்திய கிழக்கை மேலும் சிறு சிறு நாடுகளாகப் பிரித்து, அதன் மூலம் தனது மேலான்மையைப் பிராந்தியத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் விரும்புகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பவை கூட இதனைத்தான் விரும்புகின்றன.

இதன் விளைவுதான், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில், முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய சக்திகள் இணைந்து தொடுத்திருக்கின்ற யுத்தங்கள். ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன. மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். மேலும் மில்லியன் கணக்கானவர்கள் இவற்றின் போது அகதிகளாகின்றார்கள்.

அமெரிக்காவின் தேச பிதாக்களுள் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் யூதர்களைக் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“(யூதர்கள்) அவர்கள் நாட்டுக்குள் புகுவதைன் நீங்கள் தடுக்கவில்லையானால்,  உங்கள் பிள்ளைகள் உங்களைச் சபிப்பார்கள்…”

இந்த முன்னறிவித்தல் இன்று உண்மைப்படுத்தப்பட்டு விட்டது. யூத லொபிகள்தான் இன்று அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன. இதன் காரணமாக அமெரிக்கா இஸ்ரேலைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. இஸ்ரேலின் முடிவற்ற குற்றச் செயல்கள் குறித்து எந்தவொரு அமெரிக்க அரசியல்வாதியும் வாய் திறக்க முடியாது என்கின்ற அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது. பராக் ஓபாமா சிகாகோவைத் தளமாகக் கொண்ட யூதக் கோடிஸ்வரர் ஒருவர் மூலம் கவனமாக ஆராயப்பட்டு, பதவியில் அமர்த்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (யூதர்கள் விரும்பாத ஒருவர் அமெரிக்காவில் ஜனாதிபதியாக முடியாது என்பது பிரபலமான விடயம்).

ஏனைய நாடுகளைப் போல் அல்லாமல், இஸ்ரேல் இங்கு வந்திருப்பது இலங்கைக்கு உதவுவதற்கோ, அல்லது நல்லுறவொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கோ அல்ல. தமது உலகளாவிய ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கான தமது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

1தம்மோடு கருத்து முரண்பட்டுக் கொள்பவர்களின் வாய்களை மூடுவதற்காக கொலைகளையும் அவர்கள் புரியலாம். அது அந்தத்த நேரத்தின் தேவையைப்  பொறுத்தது.    அவர்கள் சமூகங்களை ஒன்றோடொன்று மோத விடுவார்கள் என்பது மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தில் இருந்தே சில துரோகிகளை, குறிப்பாக அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்து, சமூகத்திற்குள் பிரிவினையையும், பிரச்சினைகளையும் உண்டு பண்ண முயற்சி செய்வார்கள்.

அத்தகைய நிலையில், இலங்கையைப் போன்ற சிறிய நாடொன்றினால், ஸியோனிஸ்ட்டுகளோடு மள்ளுக் கட்ட முடியுமா என்பதே கேள்வியாகும். இனவாத சக்திகள் இலங்கையில் இந்தளவு தலைதூக்க முன்னர், 2009 இல், இஸ்ரேலின் பிரசன்னம் குறித்த கவலைகளைக் குறிப்பிட்டு ஆக்கமொன்றை எழுதினேன். இலங்கை- இஸ்ரேல் உறவுகள் குறித்த வரலாற்றை அது மீள்பார்வை செய்ததோடு, இலங்கை முஸ்லிம்களின் பயம் எத்துனை நியாயமானது என்பதையும் விளக்குகிறது.

(காலத்தின் தேவை கருதி அந்த ஆக்கமும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது).

2009 இல் லதீப் பாரூக் அவர்கள் எழுதிய கட்டுரை:   
.
அதிகரிகரித்து வரும் இஸ்ரேலுடனான உறவு- முஸ்லிம்கள் கவலை கொள்வது ஏன்?

இலங்கையில் கால் பதிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த இஸ்ரேல், காலத்திற்கு காலம் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் தனது காலை அது ஊன்றி இருக்கிறது. இந்நெருங்கிய உறவு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆழமான கவலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இஸ்ரேலின் முஸ்லிம்களுக்கு எதிரான நீண்ட கால எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கத் தலைமையில் உலகளவில் முஸ்லிம் சமூகத்தை ஒடுக்குவதற்கும், அழிப்பதற்கும் எடுக்கப்பட்டு வருகின்ற முயற்சிகளில் இஸ்ரேலின் பங்கு என்பவற்றின் காரணமாகவே இப்பயம் உருவாகியுள்ளது.

சிறியதொரு தொகையான தேசியவாதிகள் முஸ்லிம்களும், தமிழர்களும் நாடு கடத்தப்பட வேண்டும் என்று கூறி வரும் நிலையிலும், அக்குழு சமூகத்தில் தாக்கம் ஒன்றை ஏற்படுத்தக் கூடியதாக இருந்து வரும் நிலையிலும், பூரண அதிகாரங்களையும், பதில் சொல்ல வேண்டிய கடப்பாடும் கொண்ட, ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ‘சர்வதிகாரத் தலைமைத்துவத்தின்’ கீழ், முஸ்லிம் தலைமைகள் எதையும் செய்வதற்குக் கையாலாகமல் இருந்து வருகின்ற நிலையில், இப்பிரச்சினை மேலும் கவனத்தை ஈர்ப்பதாகின்றது.

அண்மைய ஆண்டுகளில் அமைச்சர்கள், அரச மற்றும் தனியார் துறை சார் உயர் அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் என இஸ்ரேல் செல்கின்றவர்களின் தொகை அதிகரித்துள்ளமையும், இஸ்ரேலிய “முதலீட்டாளர்கள்” முதலீடு செய்கின்ற வீதம் அதிகரித்துள்ளமையும், வளர்ந்து வருகின்ற இவ்வுறவை எடுத்துக் காட்டுவதாக உள்ளன.

1950களில் இருந்தே இலங்கையோடு நெருங்கிய உறவைப் பேணுவதற்கு இஸ்ரேல் முயற்சி செய்து வந்தது. வெளி விவகாரம் தொடர்பிலான கேள்வியொன்றிற்கு, முன்னாள் பிரதமர் எஸ்.டபில்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் பின்வருமாறு பதிலளித்தார்: “முன்னைய அரசாங்கம் இணங்கியது போல், தனது ராஜ்ய மட்டப் பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில், இஸ்ரேல் எமக்குத் தொடர்ச்சியான அழுத்தத்தை வழங்கி வருகிறது. எனவே, நீங்கள் அவ்வாறே செய்யலாம் எனக் கூறி இருக்கிறேன். பிறகு இஸ்ரேலுக்கான எமது பிரதிநிதியை நியமிப்பது தொடர்பான கேள்வி எழுந்தது. தீர்க்காலோசனை செய்வதற்காக இப்போதைக்கு அந்த முடிவை தள்ளிப் போட்டிருக்கிறேன்”.

அவரது காலத்தில்தான் 1958 இஸ்ரேலிற்கு வதிவற்ற தூதுவர் ஒருவர் இஸ்ரேலிற்கு நியமிக்கப்பட்டார். பிறகு சிறிமாவோ பண்டார நாயக்க மூலம் அவர் திருப்பி அழைக்கப்பட்டார். 1965- 1970 காலப்பகுதியில் ஐக்கிய தேசிய
கட்சி ஆட்சியில் இருந்த போது, ரோமுக்கான இலங்கைத் தூதுவரே இஸ்ரேல் விவகாரத்தையும் கவனித்து வந்தார்.

ஏமாற்று- ஓர் இஸ்ரேலியக் கருவி
இதே காலப் பகுதியில் கொழும்பில் தனது விவகாரங்களைக் கவனிப்பதற்காக இஸ்ரேலால் நியமிக்கப்பட்டவர்  மிக மிகத் துடிப்பான ஒருவர். உதாரணமாக ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.

அது 1967. இஸ்ரேல் அரபு நாடுகளுக்கு எதிராகத் தனது மூர்க்கத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்த காலம். தற்போது சந்தையில் இல்லாத, அக்காலத்தில் இனங்களுக்கு இடையிலான குரூதத்தைத் தூண்டி வந்த இலங்கைப் பத்திரிகை ஒன்றில், எனது இதழியல் பணியை ஆரம்பித்தேன்.

குறித்த இஸ்ரேலியப் பிரதிநிதி, அப்பத்திரிகை நிறுவனத்திற்கு அடிக்கடி விஜயம் செய்வதை அவதானித்திருக்கிறேன். பத்திரிகையின் ஆசியர் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த டீ.பீ. தனபால அவர்கள், அவரோடு நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருப்பார். பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரும், முகாமைத்துவ இயக்குனருமான சிரிபால குணசேனவும் அவர்களுடன் அடிக்கடி இணைந்து கொள்வார்.

இந்த விஜயங்களின் போது, குறித்த இஸ்ரேல் பிரதிநிதி, ஆங்கில நாளிதழான சன் பத்திரிகையின் ஆசிரியரான கலாநிதி காமினி விஜேவர்தன மற்றும் தவஸ சிங்கள நாளிதழின் ஆசிரியரான டேவிட் கருணாரத்ன ஆகியோரைச் சந்திப்பதற்கு ஒரு போதும் தவறியதில்லை. டாக்டர் கருணா ரத்னவை இஸ்ரேல் பிரதிநிதி சந்தித்த அடுத்த தினமே, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தறிக்கும் வகையிலான காட்டூன்களை தவஸ அடிக்கடி தாங்கி வந்தது. “தம்பியா” போன்ற தரக் குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. இஸ்ரேலை சந்தோஷப்படுத்துவதற்காக இந்நாட்டின் சக குடி மக்களான முஸ்லிம்களின் உணர்வுகள் பாதிக்கப்படுவதை, அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு நாள் திடீரென ‘உங்களுக்கு வெளிநாடு செல்கின்ற விருப்பம் இருக்கின்றதா?” என ஒரு முறை திரு தனபால அவர்கள் என்னிடம் கேட்டார். வெளிநாடு செல்வது என்பது மிகப் பெரியதொரு கனவாக இருந்த காலம்.  நான் ஆம் என்று சொல்லி விட்டேன். பிறகு செல்ல வேண்டிய நாடு இஸ்ரேல் என்று தெரிந்ததும், முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு அநீதிகளையும், அட்டூழியங்களையும் புரிந்து வருகின்ற ஒரு சக்தி என்ற வகையில், அதிர்ச்சியடைந்து, வந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.

சில தினங்கள் கழிய எனது சக பத்திரிகையாளர், சன் பத்திரிகையின் விளையாட்டுத் துறை ஆசிரியராக இருந்த எஸ்.எச். யூனுஸ் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். சடுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானப் பயணத்தில், முற்பகல் 11.00  அளவில் ரத்மலானையில் இருந்து பயணப்பட்டுப் போனார். அங்கிருந்து பம்பாய், ரோம் வழியாக தெல்அவிவ் செல்வதாக ஏற்பாடு. பகல் 12.30 கூட ஆகியிருக்காது. பம்பாய் விமான நிலையத்தைப் போய் அவர் சேர்வதற்கே நேரம் போதுமானதாக இருக்காது. அதற்குள் டெல்அவிவில் இருந்து, யூனுஸ் தகவல் வழங்குவதாக இடம்பெற்றிருந்த செய்தியில், இஸ்ரேலில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதாக குறிப்பிடுகின்ற  சன் பத்திரிகையின் சரி பார்ப்புப் பிரதி டாக்டர் விஜேவர்தனவின் மேசை மீது இருக்கிறது.

நேர்மையும், வாய்மையும் இலங்கையின் புலமைத்துவ சமூகத்தின் ஒருங்கிணைந்த பண்பாக இருந்து வந்த அந்த நாட்களில், இத்தகையதொரு சம்பவம் இடம்பெற்றமை எம்மை திடுக்கிடச் செய்தது. எந்தளவு தூரம் தனது காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்கு, குறித்த இஸ்ரேலியப் பிரதிநிதிக்குப் பலம் இருக்கிறது என்பதை அதன் மூலம் புரிந்து கொண்டோம்.

உண்மையில், முற்றிலும் தவறான இவ்வண்டப் புலுகள் யூனுஸால் எழுதப்பட்டிருக்கவில்லை.  அவருக்குத் தெரியாமல் இஸ்ரேலியப் பிரதிநிதிதான் அதனை எழுதியிருந்தார். இது தொடர்பாக, சில நாட்கள் கழித்து, டாக்டர் காமினி விஜேவர்தண அவர்களிடம் வினயமாகக் கேட்ட போது, எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கும் அவர் சொன்னார்: “லொக்காவைக் (தனபாலவைக்) கேளுங்கள்”.

இதுதான் பொது மக்களைப் பிழையாக வழிநடாத்துவதற்காக மீடியாக்களைத் தவறாகப் பயன்படுத்துகின்ற இஸ்ரேலின் கொள்கையாகும். இன்று உள்ளூர் மீடியாக்களில் வெளியாகின்ற எண்ணற்ற திரிபு படுத்தப்பட்ட செய்திகளை நோக்கும் போது, இஸ்ரேல் குறித்த அழகியதொரு பதிவை ஏற்படுத்துவதற்காக, அவை திரிபுபடுத்தப்பட்டவையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க இயலாமல் இருக்கிறது.

1970 இல் கொழும்பில் இருந்து இஸ்ரேல் தூதுவராலயத்தை இல்லாமலாக்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் வாக்குறுதியை வழங்கியமை, பெருந்தொகையான முஸ்லிம் வாக்குகளை அதற்குப் பெற்றுக் கொடுத்தது. பொருளாதாரத் தடைகள் பற்றிய அச்சுறுத்தல்களையும் தாண்டி, தனது வாக்குறுதியை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்க நிறைவேற்றினார். இதே காலப்பகுதியில் பலஸ்தீன விடுதலை அமைப்பு தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையம் ஒன்றை இலங்கையில் ஆரம்பித்தது. 1982 இல் அதற்கு தூதுவராலய அந்தஸ்த்தும்  வழங்கப்பட்டது.

இலங்கையின் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாடு சுதந்திரமானதும், புகழத்தக்கதுமாகும். 1979 உலகக் கோப்பைக் கிரிகெட் போட்டிக்கான தெரிவு காண் போட்டிகளில், 15 அணிகள் பங்கேற்ற தொடரில், இஸ்ரேலுக்கு எதிராக இலங்கை விளையாடவில்லை.

பிறகு 1983 ஜூலை கலவரம் வெடிக்கிறது. வடக்கில் தமிழ் ஆயுதக் குழுக்களை அடக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுகிறது. பிரிட்டனும், ஐக்கிய அமெரிக்காவும் தமது கரங்களை விரித்து விட்ட நிலையில், ஏனைய நாடுகளிடம் உதவிக் கரங்களை நீட்ட வேண்டிய நிலைக்கு ஜனாதிபதி ஜயவர்தன தள்ளப்படுகின்றார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இஸ்ரேல், இலங்கையில் அமெரிக்கத் தூதரகத்தில் இஸ்ரேல் நலன் பகுதி ஒன்றை ஆரம்பித்தது. இதற்கு டேவிட் மட்னா வதிவிடத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் இஸ்ரேலியப் புலனாய்வு அமைப்பான மொஸாட்டைச் சேர்ந்தவர் என்பது பின்னைய அறிக்கைகள் மூலம் தெரிய வந்தது.

முஸ்லிம்கள் இந்நகர்வை எதிர்த்தார்கள். மதிப்பிற்குரிய முஸ்லிம் அரசயவாதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமாக இருந்த டாக்டர் எம்.ஸீ.எம். கலீல் தூதுக் குழுவொன்றைத் தலைமை தாங்கிக் கொண்டு சென்று, ஜனாதிபதி ஜயவர்தன அவர்களை சந்தித்தார். குழு தமது கவலைகளை வெளியிட்டது. ஆனால், அவ்வேண்டுகோளை நிராகரித்த ஜனாதிபதி ஜயவர்தன பின்வருமாறு தெரிவித்தார்: “நான் சாத்தானிடம் வேண்டுமானாலும் சென்று உதவி கேட்பேன். முஸ்லிம்கள் வேண்டுமானால், அரசாங்கத்தில் இருக்கலாம். இல்லா விட்டால் வெளியேறலாம்”.

முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் சங்கடமடைந்தார்கள். எதுவும் செய்ய இயலாத நிலையில் தாம் இருப்பதை உணர்ந்தார்கள். வெளிநாட்டமைச்சர் ஏ.ஸி.எஸ். ஹமீத் அரசாங்கத்தின் நகர்வை நியாயப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் மேல் நம்பிக்கை இழந்த முஸ்லிம்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். (இறுதியில் முஸ்லிம் காங்கிரஸ் உடைந்து நிகர்ந்து போனமை வெறு கதை). வளர்ந்து வந்த இலங்கை- இஸ்ரேல் உறவுகளுக்கிடையில் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் Chaim Herzog 1986 இல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இஸ்ரேல் இலங்கையை நாகரீகமடைந்த நாடாகவே கருதவில்லை என்பது காலத்திற்குக் காலம் உறுதிப்படுத்தப்பட்டே வருகிறது. “By Way of Deception; The Making and Unmaking of a Mossad Officer” என்ற நூலில் Victor Ostrovsky  மற்றும் Claire Hoy ஆகியோர் குறிப்பிடுவது போல. “மரங்களில் இருந்து இறங்கி நீண்ட காலம் சென்று விடாத, குரங்கைப் போன்ற மக்களைக் கொண்ட, அபிவிருத்தி அடையாத, நாகரீமடையாத நாடு என்ற வகையில், அதனிடம் இருந்து நாம் அதிகம் எதிர்பார்க்கக் கூடாது” என்ற அளவுக்கே இஸ்ரேல் இலங்கையை மதித்து வருகிறது.

இலங்கையர்களை மேலும் இழிவுபடுத்துகின்ற வகையில், மேலும் பல்வேறு தகவல்களைக் குறித்த நூல் வழங்குகிறது.

ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ இஸ்ரேலிய நலனுக்கான பகுதியை 20, ஏப்ரல், 1990 இல் மூடினார். தொடர்ந்து இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தார்.

மீண்டும் இலங்கை இஸ்ரேல் இடையேயான ரகசிய பேச்சு வார்த்தை, 1996 இல் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக தில்லியில் தங்கி இருந்த போது ஆரம்பமானது. புது தில்லிக்கான இஸ்ரேலியத் தூதுவரும், கொழும்புக்கான இந்தியத் தூதுவருமான சிவஷங்கர் மேனனும் வைத்தியசாலையில் கதிர்காமரைச் சந்தித்தார்கள். மேனன் முன்பு இஸ்ரேலுக்காக இந்தியத் தூதுவராக இருந்தவர். தற்போது (2009 இல்) இந்திய வெளிவிவகார செயலாளராக இருக்கிறார். கதிர்காமரை இஸ்ரேலியத் தூதுவர் பல தடவைகள் சந்தித்ததாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த ரகசியத் தொடர்புகளின் விளைவாக, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஜூன், 2000 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

எனவே, அப்போதும் கூட உத்தியோகபூர்வ உறவுகள் இல்லாத போதும், இராணுவ மட்டத்தில் உறவுகள் பலமாக இருந்தன. இராணுவ பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கு விஜயம் செய்வதும், ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதும் தொடர்ந்தன. இத்தொடர்புகள் இன்று வரைத் தொடர்கிறது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் வெளிநாட்டு சேவையில் இருந்த டபிள். யூ. செனவிரத்ன இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அடிக்கடி எழுப்பப்படுகின்ற வினா, முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்பலைகளை உருவாக்கத் தேசியவாதிகளையும், கடும்போக்குவாதிகளையும் இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ளாது என்று கூறுவதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது என்பதுதான். இதனால், இனங்கள் இடையிலான உறவில் விரிசல்களைத் தோற்றுவித்து, இனப்ப்பிரச்சினையை மேலும் சிக்கலானதாக இஸ்ரேலின் பிரசன்னம் மாற்றி விடுமோ என முஸ்லிம்கள் அஞ்சுகிறார்கள். கிழக்கில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் இடையில் ஏற்பட்ட விரிசல்களின் பின்னணியில், இஸ்ரேல் இருந்திருப்பதாகவும் வேறு ஏற்கனவே பரந்து பட்ட அளவில் ஊகங்கள் நிலவுகின்றன.

அத்தகைய பின்னணியிலேயே இலங்கையின் வெளிவிவகார செயளாளர் டாக்டர் பாலித கொஹோ, இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரசிற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ வாழ்த்துச் செய்தியோடு இஸ்ரேலிற்கு விஜயம் செய்தார். (ஷிமோன் பெரஸ் கானா படுகொலையில் பெயர் பெற்றவர். ஐ.நா அகதி முகாமிற்கு உள்ளேயே நூற்றிற்கு மேற்பட்ட அப்பாவிப் போது மக்களை கொன்று குவித்தவன்).
யூதர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஹொலோகொஸ்ட் நிகழ்வுடன் தொடர்புடைய யாத் வாஷேமிற்கு, டாக்டர் கொஹோன தனது நான்கு நாள் விஜயத்தின் போது விஜயம் செய்த போதிலும், டெய்ர் யாஸீன், கப்ர் காஸிம் போன்ற இஸ்ரேலியப் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்கு அவருக்கு நேரம் இல்லாமல் போனமை கவலை தருவதாகும். பின்னைய கிராமத்தில் யூதப் பயங்கரவாதி Menachem Begin இன் வெறியாட்டத்தில் ஆண், பெண், வயது வித்தியாசம் இன்றி எண்ணற்றவர்கள் மாண்டு போனார்கள். (இஸ்ரேல் பிரதமராகப் பின்னாட்களில் தெரிவான இவனுக்கு நோபல் பரிசு வேறு வழங்கப்பட்டது என்பது சமகால உலகின் கசப்பான யதார்த்தம். அதுவும் சமாதானத்திற்கான நோபல் விருது). எந்தளவுக்கெனில், கர்ப்பிணிப் பெண்ணொருவரின் வயிற்றுக் கிழித்து, சிசுவைக் கூட விட்டு வைக்காமல், இவன் கொலை செய்தான்.
அடுத்த உயர் மட்ட விஜயத்தை மேற்கொண்டவர் பிரதமர் ரத்தன ஸ்ரீ விக்கிரம நாயக்க. அவரது செயலாளரும், இஸ்ரேலிற்கான முன்னாள் தூதுவருமான மஹிந்த பந்துசேன உள்ளடங்கிய குழுவொன்றுடன் 2008, மார்ச்சில் அவர் இஸ்ரேலிற்கு விஜயம் செய்தார். இஸ்ரேலைத் திருப்திப்படுத்துவதற்காக, லெபனானிலும், சிரியாவிலும் பலஸ்தீனியர்கள் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவதாக அவர் குற்றம் சுமத்தினார். பலஸ்தீனியர்களிடம் இருந்துதான் தற்கொலைத் தாக்குதலை தமிழ் இளைஞர்கள் கற்றுக் கொண்டதாக வேறு அவர் பேசினார். இக்குற்றச்சாட்டு இது வரை நிரூபிக்கப்படவில்லை.
விக்ரமநாயகவின் உரையில், குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், தமிழ் இளைஞர்களையும், இலங்கை இராணுவப் படைகளையும் பயிற்றுவித்ததில் இஸ்ரேலின் பங்கு குறித்த அம்சத்தை  அவர் கவனமாகத் தவிர்த்துக் கொண்டதுதான்.
இது தொடர்பில் “By Way of Deception; The Making and Unmaking of a Mossad Officer” என்ற நூலில், 67, 68 ஆம் பக்கங்களில் கூறப்பட்டிருக்கின்ற விடயங்கள் இவ்விடத்தில் மேற்கோள் காட்டத்தக்கதாகும்.
“இரண்டு பக்க (தமிழ் ஆயுதக் குழுக்கள் மற்றும் அரச படைகள்) துருப்புக்களையும், ஒருவரை அறியாமல் ஒருவரை, இஸ்ரேல் பயிற்றுவித்தது.  இஸ்ரேலிடம் இருந்து வாங்கும் ஆயுதங்களுக்குரிய கொடுப்பனவுகளை செய்வதற்கு, உலக வங்கி மற்றும் முதலீட்டாளர்களை ஏமாற்றிப் பணம் கரப்பதற்கு இலங்கைக்கு இஸ்ரேல் உதவி புரிந்தது”.
அதே புத்தகத்தின் 129, 130 ஆம் பக்கங்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“யோஸியும், இஸ்ரேலியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்ற குழுவொன்றைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். அவர்கள் எனது (சிங்களக்) குழுவினரை சந்திக்கக் கூடாது…….. அவர்கள் தமிழர்கள். சிங்களவர்களின் பரம எதிரிகள்”.
கடற்படைத் தளத்தில் தமிழர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஆழ ஊடுறுவும் நுட்பங்கள், நிலக் கண்ணிகளைப் புதைத்தல், தொடர்பாடல், தோரா போன்ற கப்பல்களை அழிப்பது எப்படி போன்ற நுட்பங்களை அவர்கள் பயின்றார்கள். ஒவ்வொரு குழுவிலும் 28 பேர் இருந்தார்கள். யோஸி அவர்களை அழைத்துக் கொண்டு, அந்த இரவு ஹைபாவிற்கு செல்ல வேண்டும் எனவும், நான் சிங்களவர்களை அழைத்துக் கொண்டு தெல்அவிவிற்கு வர வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன் மூலம் இரண்டு குழுக்களும் எதிரெதிரே சந்தித்துக் கொள்கின்ற வாய்ப்புத் தவிர்க்கப்பட்டது.
பயிற்சி நெறி துவங்கி இரண்டு வாரத்திற்குள், Kfar Sirkin இல் இரண்டு சாராரும் ஒருவரை ஒருவர் அறியாத நிலையில், பயிற்றுவிக்கப்பட்டு வந்த போதுதான் உண்மையான பிரச்சினை ஆரம்பமானது. அது ஒரு மிகவும் பெரிய தளம். அவ்வாறிருந்த போதும், இரண்டு சாராரும், உடற்பயிற்சி நேரத்தில், ஒரு சில அடித் தூரத்தில் கடந்து சென்றார்கள். (நல்ல வேளையாக ஒருவரை ஒருவர் கவனிக்கவில்லை). அடிப்படைப் பயிற்சிகளுக்குப் பிறகு Kfar Sirkin இல், தமிழர்கள் இதுவரை கற்பிக்கப்பட்டிருந்த முறைமகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைக் கற்பிப்பதற்காக, சிங்களவர்கள் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அது ஒரு உச்ச கட்டம். அவர்களை முழுவதும் வேலையில் ஈடுபடுத்தி, பிஸியாக வைப்பதற்காக, நாம் தண்டனைகளைக் கற்பனை செய்ய வேண்டி இருந்தது. அல்லது இரவு நேர உடற்பயிற்சிகளை வழங்க வேண்டி இருந்தது. அதன் மூலம் இரண்டு குழுவினரும் ஒரே நேரத்தில் தெல்அவிவிற்கு வருவது தவிர்க்கப்பட்டது. இரு குழுக்களும் சந்தித்துக் கொண்டிருந்தால், இவர்களில் ஒருவரின் நடவடிக்கையும் கூட, இஸ்ரேலின் அரசியல் சூழ்நிலையை ஆபத்தானதாக மாற்றி இருக்கும்”.
உள்ளூர் அறிக்கைகளின் படி, இரண்டு நாடுகளும் பல்வேறு ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதாகவும், இரு நாடுகளுமே பயங்கரவாதப் பிரச்சினையை முகம் கொடுப்பதாகவும் பிரதமர் விக்ரமநாயக அவரது விஜயத்தின் போது தெரிவித்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகள் பசுமையான வரலாறு மற்றும் நாகரீகத்தைக் கொண்ட நாடு, அறுபது ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பலஸ்தீனியர்களின் நிலத்தில் உருவாக்கப்பட்ட இஸ்ரேலோடு எத்தகைய ஒற்றுமைகளைக் கொண்டிருக்க முடியும் என்பதுதான் புரிந்து கொள்ளச் சிரமமானது.
பயங்கரவாதத்தின் முன்னோடிகளான சியோனிஸ்டுகள் எவ்வாறு பயங்கவாதம் குறித்துக் கதைக்க முடியும்? எல்லாம் சாத்தான் வேதம் ஓதும் கதைதான். தமது வீடுகள், நிலங்கள், குடும்பம், மனித உரிமைகள் அனைத்தையும் இழந்து, ஐ.நா சபையினாலும், அரபு சர்வதிகாரிகளாலும் புறந்தள்ளப்பட்ட பலஸ்தீனியர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது எவ்வாறு?
முஸ்லிம் உலகின் இதயப் பிரதேசத்தில் இஸ்ரேலைக் குடியமர்த்தியதில் இருந்து, பிராந்தியத்தின் அரசியல் ஸ்திரத் தன்மை இன்மையின் பிரதான மூலமாக இஸ்ரேல் திகழ்கிறது. மேற்குலகக் காலனித்துவ சக்திகளின் காவல் அரணாக அது முதல் இஸ்ரேல் செயற்பட்டு வருகிறது. 1955 இல் எகிப்தை ஆக்கிரமிப்பதற்கு பிரான்ஸும், பிரித்தானியாவும் கூட்டுச் சேர்ந்தன. 1967 இல் எகிப்து , சிரியா ஆகிய நாடுகளை இஸ்ரேல் தாக்கியது. அமெரிக்காவைக் கட்டுப்படுத்தும் யூத லொபிகள் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு முக்கியமான பங்கை வகித்தன.

ஐ.நா தீர்மானங்களை மதித்து நடக்க இஸ்ரேல் தொடர்ந்து தவறியே வருகிறது. ஆனால், அதற்குத் தண்டனை வழங்கும் வகையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்தகைய நடவடிக்கையொன்று எடுக்கப்படும் பட்சத்தின் ஐ.நா செயலாளர் நாயகம் அவர்கள் கூட தனது தொழிலை இழக்க வேண்டி வரலாம்.

பலஸ்தீனிய எல்லைக்குள் இறுக்கமான போக்கை இஸ்ரேல் தொடர்ந்து பேணி வருகிறது. அமெரிக்கப் பணத்தில் யூதக் குடியிருப்புக்கள் அமைக்கப்படும் முயற்சி உத்வேகத்தோடு இடம்பெற்று வருகிறது. அமெரிக்கா மூலம் வழங்கப்படும் யுத்த விமானங்கள், அபாச்சி ஹெலிகப்டர்கள், யுத்தக் கப்பல்கள், கவச வாகனங்கள், மற்றும் தரைப் படைகள் என்பவற்றைப் பயன்படுத்தி, அவர்களின் கொலை வேட்டை தொடர்கின்றது. பெப்ரவரி 27, 2008 இல் இருந்து பிரதமர் எஹுட் ஒல்மர்ட் 120 பலஸ்தீனியர்களைப் படுகொலை செய்துள்ளார். இவர்களில் இரண்டு நாள் சிசுவொன்றும் உள்ளடங்கும். (இது 2009 இல் இக்கட்டுரை எழுதப்படும் வரையான தகவல்).

இஸ்ரேல் நாட்டிற்குள் வருவதும், போவதும் ஒரு புறம் இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தலை மட்டுமே இலக்கு வைத்த குறுகிய பார்வை கொண்ட கொள்கைகள் காரணமாக உருவான இனவாத யுத்தம், நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமை இஸ்ரேலை மட்டுமன்றி, பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளையும் நாட்டின் உள்வீட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கச் செய்துள்ளது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இந்த சோக நாடகத்தின் முடிவில் பிரயோசனம் அடையப் போவது இலங்கை அல்ல என்பதை மட்டும் அடித்துக் கூறலாம்.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 14, 2014 இல் 7:46 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: