Lankamuslim.org

One World One Ummah

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு

leave a comment »

bandulla_gunaஇணைப்பு -2: 2016 ஆண்டு தொடக்கம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்   பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார் .

இணைப்பு -2

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுதுடன்  5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிஇதுள்ளார் .ஐந்தாம் தரத்தில் புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துகின்ற போதும், அதனை மாணவர்களின் திறமைகளை இனங்கண்டு கொள்வதற்காக மாத்திரம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முதலாம் தரத்திலிருந்து நான்காம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் சூழல், சவால், திறமைகளை இதன்போது கணிப்பிட முடியும்.பிரதான நகரங்களை மையமாக கொண்ட முன்னணி பாடசாலைகளுக்கு மாணவர்கiளை உள்வாங்கும் போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, செயற்பாட்டு ரீதியாக நோக்குமிடத்து அனைத்து வளங்களையும் கொண்ட பாடசாலைகளை தோற்றுவிக்கும் போது ஒரு சில பாடசாலைகளுக்கு மாத்திரம் விடுக்கப்படும் கேள்வி குறைவடையும்.எனவே, 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்ற ஒன்று இடம்பெறாது.

அதன்பொருட்டு தேசிய கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மாணவர்களின் வயதுக்கு ஏற்றவகையில் ஒன்றரை மணித்தியால திறமை கணிப்பீட்டு பரீட்சை மாத்திரம் நடத்தப்படும்.

ஐந்தாம் தரத்தை அடையும் மாணவர்களின் கணிதத்திறமை, பொது அறிவு, சுற்றாடல், அவர்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் போன்றவற்றை கணிக்கும் பரீட்சையாக அமையும்.

எனினும். மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய, இளம்பருவத்தை சுவீகரிக்கக் கூடிய, பெற்றோருக்கு மேலதிக செலவின சுமையை ஏற்படுத்தக் கூடிய புலமைப் பரிசில் பரீட்சை 2016 ஆம் ஆண்டு நடத்தப்படாது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கும் வளங்களை மேம்படுத்தக் கூடிய வகையில் உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் இந்த நிலைப்பாட்டுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மாறுபட்ட கருத்தினை வெளியிட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின்

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பிரபல பாடசாலைகளில் உள்வாங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளின் போது சில பாடசாலைகளின் பெயர்கள் அறிவிக்கப்படவி;ல்லை.

இது தொடர்பில் நேற்றையதினம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தகவல் வெளியிட்டிருந்தது. இன்றைய செய்தியாளர் சந்திப்பிலும் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிட்டார்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 19, 2013 இல் 7:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: