Lankamuslim.org

புல்மோட்டையில் மேய்ச்சல் நிலம் மற்றும் காணிப் பிரச்சினைகள்

leave a comment »

anwerதிருகோணமலை மாவட்ட அரசாங் அதிபர்  காரியாலயத்தில் கடந்த 19ம் திகதி இடம்பெற்ற மேய்ச்சல் தரைகளுக்கான கலந்துரையாடல் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்  ஹாபீஸ் நஸீர்  அஹமட்டின் அழைப்பின்பேரில் கௌரவ அமைச்சர்  சுசில் பிரேம

ஜயந்த தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் நீதி அமைச்சர்  ரவூப் ஹக்கீம் உள்ளுராட்சிகள் அமைச்சர்  அதாவுள்ளா பிரதி அமைச்சர்  சுசந்த புஞ்சி நிலம பாராளுமன்ற உறுப்பினர்  தௌபீக் மாகாண முதலமைச்சர்  நஜீப் அப்துல் மஜீத் மாகாண சபை தவிசாளர்  அமைச்சர் கள் உறுப்பினர் கள் மற்றும் மூன்று மாவட்டத்திற்குமான அரசாங்க அதிபர் கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டு அம்பாறை மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களுக்கான பிரச்சிணைகள் ஆராயப்பட்டன

அதன்போது திருமலை மாவட்டத்துக்கான பிரச்சிணைகள் ஆராயப்பட்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர; அன்வரால் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டை திரியாய் புடவைக்கட்டு பிரதேசங்களிலுள்ள சுமார் ; 10000 தொடக்கம் 120000 வரையிலான கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் தேவைப்பாடுள்ளது எனவும் ஏற்கனவே குறித்த மேய்ச்சல் தரைகளுக்காக 2500 ஏக்கர் ; குச்சவெளி பிரதேச செயலகத்தில் கோரப்பட்டு சுமார்  500 ஏக்கருக்கு மாத்திரம் நில அளவை பெறப்பட்ட நிலையில் இன்னும் அதற்கான வேலைகள் பூர்த்தியாக்கப்படா நிலையில் கேட்கப்பட்ட 2500 ஏக்கர்  மேய்ச்சல் தரைகள் வெகுவாக பெற்றுத்தரப்பட வேண்டும் என்றும் குறித்த மேய்ச்சல் தரைகள் வழங்கப்படாமையால் வேறு பிரதேசங்களுக்கு தமது கால் நடைகளை கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது அதனால் ஏனைய பிரதேசங்களில் பிரச்சினைகளை முகம் கொடுக்கவேண்டியுள்ளது மாத்தரமன்றி கடந்த கிழமை குச்சவெளி பிரதேச சபையினால் வீதிகளிலுள்ள கட்டாக்காளி மாடுகள் அடைக்கப்பட்டு ரூபா 750 தண்டப்பணமாக அறவிப்பட்டு கால் நடைகள் விடுவிக்கப்பட்டன என்றும் இதனால் ஏழகைள் கால் நடை வளர் ப்பாளர் களின் நிலை என்ன என்பது பற்றியும் குறித்த மேய்ச்சல் தரை இல்லாததின் காரனமாகத்தன் கட்டாகாளி மாடுகள் வீதியில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்றபட்டுள்ளது

எனவே பால் உற்பத்தி மற்றும் உரிய பண்னையாளர் களின் நலன் கருதி குறித்த நூறு ஏக்கர்  பிரதேசத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி பிரதேச செயலாளருக்கு பணிக்கும்படி அமைச்சர்  சுசில் பிரேம ஜயந்தவிடம் மாகாண சபை உறுப்பினர்  வேண்டுகோள் விடுத்தார்

அதனைத்தொடர் ந்து அண்மைக்காலமாக புல்மோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பு குறித்து எடுத்துரைக்கபட்டது பிரதேச அபிவிருத்தி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் போதும்  சுனாமியால் பாதிக்கப்பட்வர் களுக்கு நிஹாப் திட்டதால் கட்டிக்கொடுக்கப்ட்ட வீடுகள் கடற்படையினால் பொண்மலைக்குடா பிரதேசத்தில் படையினாரல் வேலியிடப்பட்ட குறித்து வீடுகளை விடுவிக்ககோரியும் இன்னும் விடுவிக்கப்படாமை குறித்து இம்மாவட்டதின் அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு என்ன மதிப்பு உள்ளது அத்தோடு படையினரால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர் கின்றது மாத்திமன்றி பிரதேச செலகம் குறித்த முஸ்லிம் சமூகங்களுக்கு மாத்திரம் அத்துமீறி அரசகாணியை பிடித்தார் கள் என்ற போர்வையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர் ந்துள்ளமை குறித்து ஒரு சமூகம் சார் ந்ததாக குச்சவெளி பிரதேச செயலகம் செயற்படுவது மீண்டும் இனமுறுகளை தோற்றுவிக்க காரணமாக அமையும் என்றும்

இவ்வாறு பூஜா பூமி திட்டத்தின் மூலம் பிரதேசத்திலுள்ள காணிகள் அபகரிப்பது குறித்து பல முறை பிரதேசத்திலுள்ளவர்கள் வீதிகளுக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டே அத்திட்டம் நீதி மன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு தற்காலிகமாக வழக்கு தொடரப்படுவதால் இடைநிறுத்தப்பட்டதாகவும் இதற்கான முழுமையான தீர் வு இன்னும் பொறப்படவில்லை என்றும்

இன்று எமது நாட்டினுடைய ஜனாதிபதி மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில் இவ்வாரன ஆர்ப்பாட்டங்கள்  ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அரச அதிகாரிகள் செயற்படக்கூடாது அதை இங்கே தீரத்து வைக்கமுடியும்

எனவே அரசின் முக்கிய அமைச்சராகிய நீங்கள் விரைவாக உரிய தீர் ;வை பெற்றுத்தரவேண்டும் என்றும் மா.ச.உ.அன்வரால் வேண்டுகோள் விடுக்கபட்டது

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 23, 2013 இல் 8:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: