Lankamuslim.org

One World One Ummah

கருப்பு ஒக்டோபர் நினைவாக !

with one comment

முஜீபு ரஹ்மான்
black octoberஅகதியாய் 23 வருடம்…
அடிமையாய் இன்னும்
எத்தனை வருடம்…?கூடு திரும்பும்
பறவைக்கூட்டம் பார்க்கும் போதெலாம்
நாடு திரும்பும் ஏக்கம்
எங்களை வாட்டும்!சிறகின் ஆசை
வானை அளக்கும்…
சின்ன விதையின் ஆசை
மண்ணில் முளைக்கும்…
நீரின் ஆசை
நிலத்தின் தாகம் சேரும்…
வேரின் ஆசை
இலை, தழையாய் மாறும்…
எங்கள் வாழ்வின் ஆசை
என்று தாய்மண் சேருவோம்?
என்ற ஏக்கம்…ஏக்கம் தீர்ந்தது
தாய் மண் சேர்ந்தோம்
பாம்புக் கடிக்கோ,
பாழும் நோய்க்கோ
மருத்துவம் இல்லை…
இறந்தவர் பெயரை
எழுதிப் பழகும்
எம் பிள்ளைகள்
மேற்படிப்புக்கு கல்வி முன்னேற்றமுமில்லை.
ஒரு மையித்துக்குப் போகவும்
உரிய நேர போக்குவரத்து இல்லை
அதனைக் கேட்டால்
ஆயிரம் தொல்லை…நாளை நாளை என்று
நம்பியிருந்தோம்.
உரிமையில்லா வாழ்வு
சாவினும் கொடியதால்,
தப்பித்து ஓட மனமோ தவிக்கிறது…

எங்களை வைத்து
அரசியல் வாழும்…
அபிவிருத்தியை வைத்து
தேர்தல் அணிகள் சேரும்…
ஆனால், இன்னும்
முகாமிலிருந்து எங்களை மீட்க
அவர்களால் முடியவில்லை…
எங்கள் முழு நிலத்தையும்
பங்கு போட
ஒன்று சேர்ந்து கொள்ளும்
முதலாளி அரசியல்…

எங்கள் உரிமை நிலத்தில்
எங்கள் மூச்சுக்காற்றில்
நாங்கள் மூச்சு விடவும்
விதிமுறைகள்!
எம் வயல்வெளிக் காற்றின்
வாசம் இழந்து…
பனை மர நிழலின்
பாசம் இழந்து…
எங்கள் அல்லி மலரின்
நிறமிழந்து…
புல் இழந்து… பூ இழந்து
காய்ந்து துடிப்பது
எங்கள் இதயம்.

உழைக்கும் உறவுகளே…
நிலமிழந்து
வளமிழந்தது
நாட்டை முன்னேற்றுவதாய்
நடக்கும் நாடகத்தில்
நிலங்களை இழந்து கிடப்பது
நாம் அனைவரும் தான்.

பறிக்கப்பட்ட
எம் பிள்ளைகள் கல்வியும்,
தனியார்மயமாக்கத்தால்
பறிக்கப்பட்ட
பிள்ளைகள் கல்வியும்,
பாடத்திட்டத்தால் வேறு
பறிக்கப்பட்டதில் ஒன்று!

அகதிகள் மனச்சுமை
தாங்கிடு நிலமே! – எங்கள்
தலைமுறைக் கண்ணீர்
தாங்கிடு கடலே…
எங்கள் சோகத்தின் ஆழம்
சுரந்திடு ஊற்றே!
அகதிகள் வேலியை
முறித்திடு காற்றே…
முடங்கிய வாழ்வின்
கதிரே நீயும் கருகாதே…

அகதி என்பது
எங்கள் குற்றமா?
நின்று பதில் சொல்!
நிலவே நீயும் நழுவாதே…

(1990 ஒக்டோபர் இறுதி வாரத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றபட்ட இவ்வாரத்தை வருடா வருடம் கருப்பு ஒக்டோபர் என நினைவுபடுத்தப்படும். ஆனால், இவ்வருடம் இந்நிகழ்வு திட்டமிட்டோ அல்லது அவர்களுக்கென்று உரிய பிரதிநிதிகள் இல்லாமலோ மறக்கடிக்கப்பட்டுள்ளது. இக்கரிய வாரத்தை நினைவுபடுத்தும் நோக்கில் இது எழுதப்பட்டது.

உண்மையில் அவர்களின் இன்றைய தாயக வாழ்வு அந்த அகதி வாழ்வைவிடக் கொடுமையானது, பரிதாபத்திற்குரியது. ஊடகங்களே ஏன் உங்கள் மௌனம்? செயற்பாட்டாளர்களே உங்கள் அமைதியின் பின்னால் ஏதாவது ஒரு புயல் காத்திருக்கிறதா? சிந்தனைச் சிற்பிகளே! எதிர்கால இவர்களின் வாழ்வு குறித்து உங்கள் சிந்தனைகள் ஏன் இன்னும் பாதை திறக்கவில்லை?)

Sri lanka Muslim youth forum -தினால் கடந்த ஆண்டு  அனுஷ்டிக்க பட்ட ‘கருப்பு ஒக்டோபர்’ நிகழ்வுகளின் போது ஒட்டபட்டிருந்த போஸ்டர்கள்:

Blackoctobr-2012

Black october-001 Black october-003 Black october-006 Black october-004

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 1, 2013 இல் 4:40 பிப

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Rizan Ali

    நவம்பர் 1, 2013 at 8:28 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: