Lankamuslim.org

கறுப்பு ஒக்டோபர்: அணையாத சாபத் தீ…!

leave a comment »

எஸ்.ஹமீத்
Northern Muslimsஎங்கள்
ஆன்ம வேர்களினை
அக்கினித் திராவகத்தால்
அபிஷேகம் செய்தார்கள்…!

எமது
இருப்பின் ஸ்திரத்தை
நெருப்பு வஸ்திரத்தால்
நீறாக்கிக் கரைத்தார்கள்…!

அகத்தில் தீ எரித்தார்கள்-முதுகில்
அகதிப் பேர் பொறித்தார்கள்…!
துவக்கு முனைகளினால் எம்மை
வடக்கு மனைகளிலிருந்து
வழித்தெறிந்தார்கள்…!

இன்னும்…

குண்டுகளைக் காட்டியெமைக்
குலை நடுங்கச் செய்தார்கள்-ஆண்களோடு
பெண்டுகளைப் பிள்ளைகளைக்
கொன்றுவிட முயன்றார்கள்…!

பொன்னகையோடு சேர்த்தெமது
புன்னகையும் பறித்தார்கள்-நெஞ்சில்
புண்களினை விதைத்தார்கள்…!

கோழிக் கறியும் நெய்சோறும்
குடமிளகாய் தாளித்த புளி ரசமும்
எங்கள் வீடுகளில் இலவசமாய் வாங்கி வாங்கி
எச்சிலூற உண்டவர்கள் ஈற்றினிலே ஊரைவிட்டே
எம்மினத்தை வெளியேற்றி ஏப்பம் விட்டார்கள்…!

கட்டிய ஆடையுடன்-அணை
கட்ட முடியா அழுகையுடன்
காடு, மேடு, கடல் கடந்தோம்…முன்னர்
காணாத திசையெங்கும் கால் பதித்தோம்…!

அடி மனதின் ஆழத்தில்
அன்றெழுந்த கோபத் தீ…
உள் நெஞ்சுக் கருவறையில்
உதித்தெழுந்த யாகத் தீ…
சொல்லவொண்ணா வேதனையில்
சுழன்றெழுந்த சோகத் தீ…
சர்வ தீயும் சங்கமித் தெழுந்து வந்த
சாபத் தீ…!

‘எளியோனை வதைத்த வலியோனே..
உனைவிட வலியோன்
உனைச் செய்வான் வதம்…!’

‘துப்பாக்கி காட்டித் துரத்தினாய் ஊரைவிட்டு..
அந்தத் துப்பாக்கியே உனைத் துரத்தும் உலகை விட்டு…!’

‘அகதிச் சனங்களாய் எம்மை ஆக்கினாய்; நீவிரோ
அனாதைப் பிணங்களாய் ஆகிடக் கடவீர்…!’

இன்னமும் அணையாமல்
எரிகிறது தீ…..!
மிச்சமுள்ள-
பாவத்தின் எச்சங்கள்
பரிகாரம் காணும்வரை-

அது அணையவே அணையாது…!!

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 10, 2013 இல் 7:00 முப

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: