Lankamuslim.org

முஸ்லிம் சவால்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவர் பெளத்தர்கள்! பொதுபல சேனா எச்சரிக்கை

with 10 comments

BB“முஸ்லிம் அடிப்படை வாதிகளின் அபாயகரமான சவால்களுக்கு முகங் கொடுக்கும் அஹிம்சை வாதிகளான பெளத்தர்கள், தமது பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். உணர்வுள்ள பெளத்தர்கள் தமது பிரச்சினைகளுக்கு மோதலினூடாகத் தீர்வு காண்பர்.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலபொட அத்தே ஞானாசார தேரர். கிழக்கிலுள்ள 10 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள், சவூதி அரேபியாவிலிருந்து உதவிகளைப் பெற்று பெளத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அது மட்டுமல்லாது, தமது சமய நியதிகளையும் இலங்கை அரசமைப்பின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளவும் எவ்வித அச்சமும் இன்றிச் செயற்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு – 07, சுதந்திர சதுக்கத்தில் உள்ள நூலகச் சேவை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,  உலகிலுள்ள பெளத்தர்கள் பெரும் சவால்களுக்கு முகங் கொடுக்கின்றனர். அதுபோலவே இலங்கையிலுள்ள பெளத்தர் களும் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். உலகில், சமாதானம், நல்லிணக்கம் எனப் பேசிக்கொண்டிருப்பவர்கள் எமது சமயத்துக்கு எதிராக செயற்படுகின்றனர்.  அன்று கத்தி, துப்பாக்கிகளூடாக பெளத்தர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், இன்று வேறு வடிவத்தில் கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

பெளத்தர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள இந்த அரசின் ஆட்சியில்தான் பெளத்த மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் எமது கலாசாரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
 
அபாயகரமான முஸ்லிம் அடிப்படைவாதம்

பெளத்தர்கள் எதிர்நோக்கும் மிக அபாயகரமான சவால் முஸ்லிம் அடிப்படைவாதமாகும். 10 முஸ்லிம் அமைப்புகள் நாடு முழுவதும் பல இடங்களில் நிறுவப்பட்டு, சவூதி அரேபியாவுடன் தொடர்புகொண்டு பெளத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.தென் தாய்லாந்து, பங்களாதேஷ் முதலான நாடுகளில் பெளத்தர்கள் தாக்கப்படுகின்றனர். பங்களாதேஷிலுள்ள பெளத்தர்கள் வாளை எடுத்துக் கொண்டுதான் கடைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலைதான் தற்போது கிழக்கில் உருவாகியுள்ளது.

கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய பகுதிகள் முழுமையாக முஸ்லிம் அடிப்படைவாதமாக மாறியுள்ளன. அங்குள்ளவர்கள் தமக்கென ஒரு தனியான நீதிமன்றம், தனிச்சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துகின்றனர். ஒரு நாட்டில் எப்படி இவ்வாறு செய்ய முடியும்? அரசிலுள்ள பல அமைச்சர்கள் பெளத்த சக்திகளுக்கு எதிராகப் பேசுகின்றனர். ஆனால் பெளத்த சமயத்தைப் பாதுகாக்கும் சட்ட மூலமொன்றை நிறைவேற்ற முடியாமல் தான் அவர்கள் இருக்கின்றார்கள்.
 
பெளத்தரும் ஆயுதம் ஏந்துவர்

முஸ்லிம் அடிப்படைவாதத்தால் அச்சுறுத்தப்படும் பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பெளத்தர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை எதிர்காலத்தில் உருவாகும். ஏனெனில் எமது மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பெளத்தர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தீர்வு காணாவிட்டால், உணர்வுள்ள பெளத்த மக்கள் மோதலினூடாகவே அதற்குத் தீர்வு காண்பர். அந்த நிலை ஏற்படாது என நாம் நினைக்க முடியாது எனத் தெரிவித்தார் ஞானாசார தேரர்.-உதயன்

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 2, 2013 இல் 1:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

10 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. இதைப் பைத்தியம் என சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த நாட்டையே சீர்குலைக்கும் அடிப்படையற்ற, அண்டப் புழுகுகளை குற்றச் செயல்களுக்காக நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர், காவியுடைக்குள் ஒளிந்து கொண்டு, இந்நாட்டின் அரசியல் யாப்புக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

  ஆயுதக் கலாசாரத்தால் 70களில் ஜேவிபி யினராலும், பின்னர் புலிகள் இயக்கத்தினராலும் நாடு முகங்கொடுத்ததை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத நிலையில், இந்த தேரர் ஆயுதம் தூக்கும் கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து இந்நாட்டின் அமைதிக்குப் பங்கம் விழைக்கிறார். இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தோற்றுவிப்பது. சட்டத்தையும் ஒழுங்கையும் மீறிய செயலாகவும் இது காணப்படுகின்றது.

  இதற்கு எதிராக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிடில், இது விஸ்வரூபம் எடுத்து இந்நாட்டை அழிவில் விளிம்பில் கொண்டு போய்விடும். உலக நாடுகளிலும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள அபகீர்த்திக்கு பசளையிடுவதாக அமையும்.

  nizamhm1944

  ஒக்ரோபர் 2, 2013 at 7:17 பிப

 2. Dangerous situation is developing rapidly

  Abdul Haqq

  ஒக்ரோபர் 2, 2013 at 7:37 பிப

 3. பெளத்த தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி முஸ்லிம்களை தாக்கும்போது ஜனாதிபதி – நாம் தாக்குதல்களின் பின்னிணை கண்டிப்பாக பார்க்கவேண்டும் எல்லா தாக்குதலுக்கும் பின்னணிகள் உண்டு என்று கூறி சட்ட நடவடிக்கை தேவையற்றது என்பாரோ

  Eng.Mufahir

  ஒக்ரோபர் 2, 2013 at 7:44 பிப

 4. ஜனாதிபதி நாட்டின் ஜனாதிபதியாக இருக்கப் போகிறாரே அல்லது 70 வீத பௌத்தர்களின் ஜனாதிபதியாக மட்டும் இருக்கப் போகிறார என்பதை அவர் தீர்மானிக்கும் காலமிது !!

  Eng.Mufahir

  ஒக்ரோபர் 2, 2013 at 7:58 பிப

 5. Yah Allah protect the muslim ummah from this evil forces

  Imran Azeez

  ஒக்ரோபர் 2, 2013 at 11:04 பிப

 6. இந்த கபோதி இருக்கும்வரை எமக்குத் தொல்லைதான் யா அல்லாஹ் இவனின்

  ஆட்டத்தை அடக்குவாயாக

  samsudeenj

  ஒக்ரோபர் 2, 2013 at 11:10 பிப

 7. The current ruling party ( Muslim ministers ) must take responsibility for any actions against minorities by Buddhist extremist elements. Now Sri lanka is number one lawless country in the world.

  Kapila

  ஒக்ரோபர் 2, 2013 at 11:52 பிப

 8. Mr President

  what is The background for the rise of BBS and other evil groups …. the answer is there is no law and order in the country .

  Rizkhan

  ஒக்ரோபர் 3, 2013 at 12:08 முப

 9. பெளத்த தீவிரவாதிகள் உருவாக்கி வரும் இன, மதவெறுப்பு பிரசாரத்தால் மிக விரைவில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது நன்கு திட்டமிடப்பட்ட ஆயுத தாக்குதல்கள் இடம்பெறலாம்.

  அந்த பயங்கரவாதிகளின் இலக்குகளாக பள்ளிகளும் பள்ளிகளில் தொழுகையில் ஈடுபட்டுகொண்டு இருக்கும் முஸ்லிம்களும் , தேவாலயங்களில் வணக்கத்தில் ஈடுபட்டுகொண்டு இருக்கும் கிறிஸ்தவர்க்ளும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படலாம் – பெளத்த தீவிரவாதம் தற்போது நன்கு திட்டமிடப் பட்ட இயக்கமாக வளர்ந்து வருகிறது – இது மிகப் பெரும் ஆபத்தை உணர்த்துகிறது .

  இதேவேளை அரசாங்கம் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தயாராக இல்லை என்பது பெரும் அதிர்ச்சியான உண்மை !! சிறுபான்மை மக்களை யார் பாதுகாப்பது

  Rauf Ameen

  ஒக்ரோபர் 3, 2013 at 12:22 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: