Lankamuslim.org

முஸ்லிம்கள் சார்பாக மனோ கணேசனிடம் மண்ணிப்புக் கேட்கின்றோம்: SLTJ

with 9 comments

ரஸ்மின் MISc
sltjகடந்த சில தினங்களுக்கு முன்பு ஹிரு தொலைக்காட்சியின் “ப(B)லய” என்ற நிகழ்ச்சியில் மனோ கணேசன், உதய கம்மன்பில, சுமந்திரன், மற்றும் சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தொலை பேசி வழியாக தம்புள்ளையில் இருந்து தொடர்பு கொண்ட ஒரு சகோதரர் தம்புள்ளையில் பள்ளி தாக்கப்பட்டது, அதன் பின்பு பள்ளியை மீட்டுத் தருவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் இன்று பள்ளியை முழுமையாக உடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் இருக்கும் நீங்கள் இது தொடர்பாக என்ன செய்கின்றீர்கள்? என்றொரு கேள்வியை முன் வைத்தார்.

கேள்விக்கு பதிலளித்த அஸ்வர் அவர்கள் நாங்கள் (அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள்) தான் ஜனாதிபதியுடன் பேசி அதற்கு தீர்வு பெற்றுத் தந்திருக்கின்றோம். என்று சொன்னார். அப்போது குறுக்கிட்டு பேசிய மனோ கணேசன் அவர்கள் அப்படியானால் தம்புள்ளை பள்ளிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்கின்றீர்களா? என்றொரு கேள்வியை எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த அஸ்வர் அவர்களோ இஸ்லாம் காட்டித் தந்த நாகரீகத்தை மறந்து, மாற்று மத அன்பர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கவுரவத்திற்கு இழுக்கை உண்டாக்கும் விதமாக “நீங்கள் உங்கள் கோவிலைப் பற்றிப் பேசுங்கள் பள்ளியைப் பற்றி பேசாதீர்கள் என்று தடுத்தார்.

அப்போது மனோ கணேசன் அவர்களோ “எமது சகோதரர்களான முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு நாம் குரல் கொடுப்போம்” என்றார்.

மீண்டும் பேசிய அஸ்வர் “அப்படியானால் நீங்கள் சுன்னத் செய்துவிட்டு வாருங்கள்” என்று மார்க்கத்தில் தனக்குள்ள பூஜ்ஜிய நிலையை தெளிவாக உணர்த்தும் விதமாக பதிலளித்தார்.

அரசாங்கத்தின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காகவும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய சொற்ப உலக ஆதாயத்திற்காகவும், மார்க்கத்தின் கட்டளைகளைப் பற்றி கொஞ்சமும் தெரியாத அஸ்வர் போன்றவர்கள் இந்த வார்த்தைகள் வன்மையாக கண்டிக்கத் தக்கவையாகும்.

இது முதல் தடவையல்ல!

அஸ்வர் அவர்கள் இப்படி அநாகரீகமாக நடந்தது இதுதான் முதல் தடவையல்ல, இதற்கு முன்பும் ஷக்தி தொலைக் காட்சியின் “மின்னல்” நிகழ்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரங்கா அவர்களுக்கும் இதே போன்ற அநாகரீகமான வார்த்தையை இவர் சொல்லியதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளும் கட்சிக்காக அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்தவர்கள்!

முஸ்லிம்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் மற்ற சக மனிதர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என்பதை திருமறைக் குர்ஆன் தெளிவாக விபரிக்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!  (அல்குர்ஆன் 33 – 70)

மேற்கண்ட வசனத்தை இறைவன் “நம்பிக்கை கொண்டோரே!” என்ற வார்த்தையின் மூலம் தான் ஆரம்பிக்கின்றான். ஒருவன் அல்லாஹ்வை இறைவன் என்று நம்பி ஏற்றுக் கொண்டுவிட்டால், முதலில் அவனுக்கு பயப்பட வேண்டும். இரண்டாவது நேர்மையான வார்த்தைகளினால் மற்றவர்களுடன் உறவாட வேண்டும் என இறைவன் பணிக்கின்றான்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன். (அல்-குர்ஆன் 16:125 )

மற்ற நம்முடைய சக சகோதரர்களுடன் நாம் நமது உறவுகளை வளர்ப்பதற்கான அறிவுரையை இறைவன் மேற்கண்ட வசனத்தின் மூலம் சுட்டிக் காட்டுகின்றான். ஒருவர் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன் உறவாடும் போது விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் இஸ்லாத்தை பற்றி அவர்களுக்கு எத்தி வைப்பதுடன் அவர்களிடம் விவாதித்தால் அழகிய முறையில் விவாதிக்கும் படியும் இறைவன் கட்டளையிடுகின்றான்.

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.  (அல்குர்ஆன் 41:34)

நம்முடன் பகைமை பாராட்டுபவர்களுடன் கூட எப்படி நடக்க வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.

ஆக ஒரு முஸ்லிம் குர்ஆனுக்கு கட்டுப்பட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுப்பவனாக இருக்க வேண்டும் அப்படியிருக்கும் போது சக மனிதர்களுடன் மனித நேயத்துடன் நடக்கக் கூடியவனான அவன் மாறிவிடுவான்.

அஸ்வர் போன்றவர்கள் மேற்கண்ட திருமறை வசனங்களை ஆழமாக பொருளுணர்ந்து படித்து, இஸ்லாத்தின் கட்டளைகளை ஏற்று நடப்பதுடன், மற்றவர்களை மதித்து நடப்பதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆளும் கட்சிக்காக அல்லாஹ்வின் வசனங்களை மறந்து வாழ்ந்தால் கண்டிப்பாக மறுமையில் நஷ்டம் மாத்திரம் தான் மீதியாகும் என்பதை மனதில் ஆழமாக பதிந்து கொள்ள வேண்டும்.

உத்தமத் தூதரின் உயரிய பண்பு.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாசலில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், “நிறுத்து, நிறுத்து” என்று கூறி, தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து, “அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்” என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து “பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது. இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்” என்று கூறி உபதேசம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி), நூல்: முஸ்லிம் (429)

பள்ளிக்குள் சிறு நீர் கழித்தவரையே அவர் கழித்து முடிக்கும் வரை விட்டு விட்டு, அவருக்கு இஸ்லாத்தின் தூய செய்திகளை கற்றுக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் என்று மேற்கண்ட செய்தி சொல்கின்றது.

பள்ளியை அசிங்கப்படுத்தியவருடனேயே இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வளவு பண்பாக நடத்திருக்கும் போது, அஸ்வர் போன்றவர்கள் இவற்றை மறந்து அநாகரிகமாக நடந்து கொண்டதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சமுதாயம் சார்பாக மண்ணிப்புக் கேட்கின்றோம்.

இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளைகளைப் பற்றி அறியாத, தெளிவற்ற அஸ்வர் போன்றவர்களின் நடத்தை காரணமாக சகோதரர் மனோ கணேசன் அவர்களுக்கு ஏற்பட்ட சங்கடத்திற்கு முஸ்லிம் சமுதாயம் சார்பாக நாம் பகிரங்க மண்ணிப்புக் கேட்டுக் கொள்கின்றோம்.

அது மட்டுமல்லாது அஸ்வர் போன்றவர்கள் இனியாவது இறைவனுக்கு பயந்து தங்கள் நாவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

இறுதியாக!

பாராளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கும் அஸ்வர் அவர்கள் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி போல தன்னைக் காட்டிக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். ஆனால் இவருடைய அரசியல் வாழ்வில் அரசாங்கத்திற்கு ஜால்ரா அடித்ததைத் தவிர முஸ்லிம்களுக்காக இவர் எவ்விதமான பிரயோஜனமாக சேவைகளையும் ஆற்றவில்லை என்பதை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு

கிழக்கு மாகாண சபை தேர்தல் நேரத்தில் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதையாக இலங்கையில் எந்தப் பள்ளிவாயலும் உடைக்கப்படவில்லை என்று நா கூசாமல் பொய்யுரைத்தார்.

முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் இனவாத செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன, பள்ளிகள் தாக்கப்படுகின்றன என்று எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய நேரத்தில் அவருடைய கருத்துக்கு எதிராக முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பச்சையாக பொய்யுரைத்தார்.

முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக குரல் கொடுப்பதற்கு பதிலாக ஆளும் தரப்பை திருப்திப் படுத்துவதற்காக முஸ்லிம்களின் உரிமைகளையே விட்டுக் கொடுத்து, சமுதாயத்தை காட்டிக் கொடுத்தவர் தான் இந்த அஸ்வர்.

அஸ்வர் போன்றவர்களின் இது போன்ற அநாகரீகமான நடத்தைகளினால் நமது சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் மாற்றுமத அன்பர்கள் கூட, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றி தவறாக எண்ணவும், விரக்தியடையவும் வாய்ப்பிருக்கின்றது.

சமுதாயத்திற்கு எவ்விதத்திலும் பிரயோஜனமற்ற இவர்களை பொதுமக்கள் சமுதாயத்திலிருந்து ஓரங்கட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை. இன்ஷா அல்லாஹ்.

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 2, 2013 இல் 8:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

9 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. இவர்கள் அல்லாஹ்வால் வழிகெடுக்கப்ட்டவர்கள். இன்னும் சில முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்கள தமது அமைச்சர் பதவிக்காக முஸ்லிம்களைக் காட்டிக் கொடுப்பதில் நான் முந்தி, நீ முந்தி எனச் செயல்பட்டு ஆட்சியாளரிடம் நல்ல பெயர் பெற்றுக் கொள்ளப் பாடுபடுபவர்கள்.

  முஸ்லிம்களு்க்கு இந்நாட்டில் நடப்பது பொய்ப் பிரசாரம் என நாக்கூசாமல், அல்லாஹ்வின் அச்சமின்றி, மறுமைப் பயமுமின்றிப் பகிரங்கமாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர், முஸ்லிம் பள்ளிகள் உடைக்கப்படுகின்றன என்ற கூற்றை நம்ப வேண்டாம் என மேடைகளில் கூறும் பொழுது கைகட்டி, வாய்பொத்தி அதனை ஆமோதிக்கின்றனர். இன்னும் சிலர், பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை எதிர்த்தால், நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் எல்லாம் உடைக்கப்பட்டு விடும். அதனால் அந்நிலையில் இருந்து முஸ்லிம்களைக் காக்கவே மெளனமாக பிரச்சினை யைப் பெரிதுபடுத்தாமல் விடுகிறோம் என கப்சா விட்டு நம்மை முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள்.

  இதுதான் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பிரகிருதிகள் செய்து கொண்டிருப்பது. சரி அதுதான் போகட்டும் எனப் பார்த்தால், முஸ்லிம் களுக்காகப் பாராளுமன்றிலும், ஊடகங்களின் மேடைகளிலும் குரல் கொடுக்கும், சிங்கள, தமிழ் சகோதரர்களையும் சாடுகிறார்கள். உண்மையை வெளிப்படுத்தத் தடையாயுள்ளார்கள்.

  வெளிநாட்டு முஸ்லிம் இராஜதந்திரிகளன் வருகையின் போது அவர்களைச் சந்தித்து, இந்நாட்டில் முஸ்லிம்கள் சகல சௌபாக்கியங்களுடனும் சுதந்திரமாக, எவ்வித அச்சமுமின்றி வாழ்கின்றார்கள் எனக் கூறி வைக்கிறார்கள். இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக் கப்பட்டதாகக் கூறுப்படுவனவற்றுள் எவ்வித உண்மையுமில்லை என நிலைமையைத் தலைகீழாக மாற்றி விடுகிறார்கள். துரோகிகள்.

  இங்கு முஸ்லிம்களுக்கு நடக்கும் பிரச்சினை, ஐநா மனித உரிமைக்கான ஆணையாளரால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது ஓர் இறை செயல் என்‌றே கூற வேண்டியுள்ளது. எவருடைய பங்களிப்புமின்றி தானாக நடைபெற்றது. இந்த சுயநல, நக்கி வாழும் முஸ்லிம் அரசியல்வாதி களால் மேற்கண்ட நவின் அம்மையாரின் குற்றச்சாட்டுக்கூட பொயயாகிவிடும் நிலையே தோன்றியுள்ளது.

  முஸ்லிம மக்கள் இந்த தறுதலைகளுக்கு எதிராக பகிரங்கமாக ஆர்பாட்டங்களை நடத்தி இவர்களின் தோலை உரித்து, உண்மை உருவை உலகுக்குக் காட்ட வேண்டும்.

  அத்தோடு இவர்களின் தீங்குகளிலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்றுமாறு வல்ல நாயன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்க வேண்டும். இவை காலத்தின் கட்டாயம். தவற விடுவோமாயின் பின்னர் வருந்த வேண்டி வரும்.

  nizamhm1944

  ஒக்ரோபர் 2, 2013 at 10:10 பிப

 2. இப்படியான முனாபிக்குகள் கியாமம்வரை இருக்கத்தான் செய்வார்கள். பாராளுமன்றத்தில் இருக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகள் (இருவரைத்தவிர) மற்ற அனைவரையும் ஓரம்கட்ட வேண்டியது முஸ்லீம்களின் பொறுப்பு. செய்வார்களா எமது முஸ்லீம்கள்.மாற்று மத சகோதரர்கள் எமக்காக குரல் கொடுக்கும்போது அவர்களின் பேச்சுக்கு இடையே குறுக்கிட்டு அவர்கள் சொல்வது பொய்யென கூறி ஜனாதிபதியிடம் நல்ல பெயர் வாங்க முயற்ச்சி செய்கிறார்கள். அதில் முதலிடம் அஸ்வர்தான் முடிந்தால் அவர் தேர்தலில் போட்டியிட்டு வரட்டும். வந்தால் தெறியும் அவரின் மதிப்பு.

  யா அல்லாஹ் முதலில் முஸ்லீமகளை முனாபிக்களிடமிருந்து காப்பாற்றுவாயாக. எமது சமூகத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ் சகோதரர்களே உங்களுக்கு எமது நன்றி

  மேலும் SLTJ சகோதரர்களே உங்கள் குரல் முஸ்லீம்களுக்காக ஓங்கி ஒலிக்கட்டும். அல்லாஹவின் துனை என்றென்றும் உண்டு அல்லாஹ் மிகப்பெரியவன்

  samsudeenj

  ஒக்ரோபர் 2, 2013 at 11:52 பிப

 3. azwar rajapak do you have done kathna (sunnath) if yes its not suitable for you

  abdul

  ஒக்ரோபர் 3, 2013 at 12:11 முப

 4. forget about aswer. who is this ….. on a national list…. we are ashamed that this fellow calls himself a muslim still………..

  Zahra Anver

  ஒக்ரோபர் 3, 2013 at 7:02 முப

 5. வரவேட்கப்படவேண்டிய அறிக்கை ஆனல் அறிக்கை இடுவோர் இதே அறிவுரையை பின்பற்றி சொந்த சமூகத்தில் தங்கள் கொள்கைகளை ஏட்காத மனிதர்களோடும் பண்பாக நடந்துகொள்ள வேண்டுமே? ஈத் அல் பித்த்ர் பிறைவிடயத்தில் இவர்களின் கட்டுரைகளும் இவர்களின் பேச்சுகளும் ஏனைய உலமாக்களை எவ்வளவு இழிவுபடுத்தி இருக்கிறது என்பதை எழுதிய பேசிய அவர்களே இன்னொறு தடவை செவிமடுத்தால் விளங்கும்? போதனைகள் அடுதோறுக்கு சொல்லபடுவது போன்று தாங்களும் பின்பற்ற வேண்டியது என்பதை எப்போது இவர்கள் அறிவர்கள்

  A.M Mohammed Fashlin

  ஒக்ரோபர் 3, 2013 at 8:49 முப

  • NICE COMMENT…..

   N.M.S.

   ஒக்ரோபர் 3, 2013 at 11:56 முப

  • உலமாக்களுக்கு சுன்னத் செய்யும்படி SLTJ சொல்லவில்லையே அஸ்வர் பேசியது பொறுத்தமில்லை என்றுதானே அவர்கள் கூறியது. முஸ்லிம்களுக்கு சவால்விடும் சேனாக்களுக்கு எதிராக பகிரங்கமாக சவால்விட்டது இந்த SLTJ என்பதும் அஸாத் என்ற மனிதரும்தான் என்பதை மறக்கவோ மறைக்கவோ முடியாது.

   samsudeenj

   ஒக்ரோபர் 3, 2013 at 4:21 பிப

 6. குற்றம் செய்தவர் தண்டிக்கப்படல் வேண்டும். குற்றம் செய்தவரே மன்னிப்பும் கேட்க வேண்டும். ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது. அவரவர் செய்தவற்றுக்கே கூலி கொடுக்கப்படும் போன்றவை குர்ஆனிய அடிப்படை.

  ஆதலால், குற்றம் செய்தவர் அஸ்வராக இருக்க, குற்றமற்ற முஸ்லிம்கள் மனோ கனேசனிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டுவதில்லை. முஸ்லிம்கள் சார்பாக எவரும் மன்னிப்பு கேட்கவும் வேண்டியதில்லை. நாம் எதைச் செய்யினும் அது குர்ஆனிய கட்டுக் கோப்புக்குள் அமைந்திருக்க வேண்டும்.

  குற்றவாளிக்கு எதிராக முஸ்லிம் மக்கள் கொதிப்படைந்துள்மை, வெறுப்படைந்தள்ளமை, கருத்து வெளியிட்டுள்ளமைகளே பாதிக்கப்பட்டவருக்காக நாம் வெளிபபடுத்தியிருப்பன. மேலும், அதற்காக வருத்தம் தெரிவிக்கலாம். இது முஸ்லிம்களின் கூற்றல்ல என்பதை அவருக்குத் தெரிவிக்கலாம்.

  nizamhm1944

  ஒக்ரோபர் 4, 2013 at 7:47 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: