Lankamuslim.org

இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

with 34 comments

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
Ameer SLJI-21. எந்தவொரு நிகழ்வையும் சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து அதுபற்றி அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள் யார்? அவர்கள் என்ன பேசுகிறார்கள்? நடுநிலையாகப் பேசுபவர்கள் யார்? குறிப்பிட்ட விவகாரத்தை நடுநிலையாகப் பேசினாலும் கூட பாதிக்கப்படுபவர்கள், ஆவேசம் கொள்பவர்கள் யார்? அதற்கென்ன காரணம்? அவர்கள் பிரச்சினையை எவ்வாறு திசைதிருப்புகிறார்கள்? போன்ற இன்னோரன்ன விடயங்களையெல்லாம் ஒரு சமூகத்திலிருக்கின்ற நடுநிலையாளர்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது அவதானங்களும் பின்னூட்டங்களும் (Comments) கருத்துக்களும் ஒருவர் பேசுகின்ற, எழுதுகின்ற, செய்கின்ற விடயங்களுக்கு சாட்சியாகும். நிதானமிழந்து உணர்ச்சிவசப்படுகின்றவர்களது அவதானங்களும் கூற்றுக்களும் சிரத்தைக்குட்படுத்தப்பட வேண்டியவைகளல்ல.

2. தலைவர்கள் விமர்சிக்கப்படக்கூடாது என்றொரு வரையறை இஸ்லாத்தில் இருப்பதாக நான் அறியேன். நான் அறிந்தவரை தலைவர்கள் தான் அதிகமாக விமர்சிக்கப்படுவார்கள். அந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு அவற்றுள் தனக்குத் தேவையானவை எவை என்பதை நிதானமாகத் தெரிவுசெய்து கொள்பவர் தான் சிறந்த தலைவர். ஒரு தலைவர் தான் விமர்சிக்கப்படக் கூடாது என்று நினைப்பாராயின் அல்லது அந்தத் தலைவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்படிக் கருதுவார்களாயின் அவர்களுக்கு தலைவர்கள் பற்றியும் தலைமைக்குரிய கடமைகள், பொறுப்புக்கள் பற்றியும் தெரியாது என்று பொருள். எனக்குத் தெரிந்ததெல்லாம் மாநபி (ஸல்) அவர்கள் மட்டும் தான் முஸ்லிம் உம்மத்தில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதராவார்கள். ஏனைய அனைவரும் விமர்சனத்துக்குட்பட்டவர்களே. தலைவர்கள் விமர்சிக்கப்படும் போது ஒரு சமூகம் ஆரோக்கியமாக இருக்கின்றதென்பது அர்த்தம். தலைவரை விமர்சிக்க முடியாதென்று ஓர் அமைப்போ கட்சியோ அல்லது அவற்றின் தலைவர்களோ நினைத்தால் அவர்கள் அடக்குமுறையை விரும்புகிறார்கள் என்பது பொருள்.

3. ஒரு தலைவர் மீது வெறுப்படைந்து அவரைத் தனிப்பட்ட ரீதியிலும் அவர் இல்லாத நேரத்திலும் மோசமாக விமர்சிப்பவர்கள் சமூகத்திலிருப்பார்கள். அதேநேரம் வெளிப்படைத் தன்மையோடு அவரை ஆக்கபூர்வமாக விமர்சிப்பவர்களும் இருப்பார்கள். ஓர் உன்னதமான தலைவர் இரண்டாவது வகை விமர்சகர்களை நிச்சயம் விரும்புவார். தன்னை உள்ளுர வெறுத்துக்கொண்டு வெளிப்படையில் தன்னுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளும் விமர்சகர்களிடமிருந்து அல்லாஹ்விடம் அவர் பாவமன்னிப்புத் தேடுவார். எனினும், உணர்ச்சிகளுக்கும் பாதிப்புகளுக்கும் அவசரமாக உள்ளாகும் தலைவர்கள் முதல்வகை மனிதர்களையே விரும்புவர்.

4. முஸ்லிம் சமூகம் பிளவுபடுவது குறைகளை சுட்டிக்காட்டுவதனால் அல்ல. மாறாக குறைகளை மறைப்பதனால் ஆகும். குறைகள் தம்பக்கம் இருந்தால் அவற்றைப் பெருமனதோடு ஏற்றுக்கொள்ளும் பண்பு தலைவர்களிடம் இருக்குமாயின் அந்தத் தலைவர்களின் கண்ணியமும் மகிமையும் வானளாவ உயரும். அவ்வாறு ஏற்றுக்கொள்வது இழுக்கு என்றும் தங்களது குறைகளை பிறர் சுட்டிக்காட்டுவது அவமானம் என்றும் கருதும் போது தான் சமூகத்தில் பிளவு உருவாகின்றது. அத்தகைய தலைவர்களை நெருங்க முடியாமை, தூரமான இடைவெளி, வெறுப்பு, நம்பிக்கையின்மை போன்ற பிரச்சினைகள் அப்போது தான் தலைதூக்குகின்றன. அவற்றால் தான் சமூகம் ஒன்றுபட முடியாமல் அவஸ்தைக்குள்ளாகின்றது.

5. எனது விமர்சனம் பிறை விவகாரத்தால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களையும் அதற்குத் தலைவர்கள் காரணமாக இருந்தார்கள் என்பதையும் மட்டுமே உள்ளடக்கியிருந்தது. தனிமனிதர்களின் தனிப்பட்ட விடயங்களை சந்திக்கிழுப்பதாகவும் அவர்களின் அந்தரங்கத்தை அலசுவதாகவும் அவற்றைக் காரணமாகக் காட்டி ஜம்இய்யதுல் உலமாவை அல்லது மற்றொரு இஸ்லாமிய இயக்கத்தை குற்றம் சுமத்துவதாகவோ, ஜம்இய்யதுல் உலமா செய்த பணிகளை மறுப்பதாகவோ அல்லது ஓர் இஸ்லாமிய இயக்கத்தை எதிர்ப்பதாகவோ இருக்கவில்லை. இது விமர்சனத்தை வாசிக்கும் ஒரு பாமரன் கூட விளங்கிக்கொள்ள முடியுமான எளிய உண்மை.

6. நிலைமை அவ்வாறிருக்க அந்த விமர்சனத்தை ஒரு சாரார் உம்மத்திற்கெதிரானது, சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வல்லது, தமது இயக்கத்திற்கெதிரானது, உலமாக்களுக்கெதிரானது, ஜம்இய்யதுல் உலமாவின் பணிகளுக்கெதிரானது, தலைவர்களின் மேன்மைகள், பதவிகள், அந்தஸ்துக்கெதிரானது என்றெல்லாம் பிரச்சாரம் செய்து பிரச்சினையின் எல்லையை வீணாகப் பெருப்பிக்கின்றார்கள்.

7. இந்த அசாதாரணத்தை எனக்கும் அவர்களுக்குமிடையில் தீர்த்துவைக்க அல்லாஹ் போதுமானவன். பிரச்சினைகளை அதனதன் அந்தஸ்தில் வைத்து நோக்கத் தெரியாதவர்களிடம் நான் நீதியை எதிர்பார்க்கவில்லை. உண்மையை அறிந்த ஒருவன் அவர்களுக்கும் எனக்குமிடையில் இருக்கிறான் என்ற நம்பிக்கையே எனது ஆறுதலுக்குப் போதுமானது.

அந்த ஏகனோடு அவன் காட்டித்தந்த நடுநிலைப்பாதையில் நின்று விவகாரங்களைப் பார்க்கும் நடுநிலையாளர்களும் எனக்கு ஆறுதல் தான். அத்தகைய நடுநிலைவாதிகள் இன்றி இந்த சமூகம் எக்காலப்பகுதியிலும் வெறிச்சோடி விடாது. அவர்கள் எனது விமர்சனத்தை நடுநிலையாகப் பார்த்து பின்னூட்டங்களும் தந்திருக்கிறார்கள்.

8. நடந்து முடிந்த விவகாரத்தில் சமூகமே பிரச்சினைப்பட்டது. அந்த சமூகம் சார்பாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றி ஒரு விமர்சனம் செய்தேன். அதற்குப் பதில் விமர்சனம் செய்துள்ள சிலர் என்னை இழிவுபடுத்தும் விதமாக செய்திருக்கும் விமர்சனங்களும் உண்டு. அவற்றுக்கு நான் எப்போதுமே காதுகொடுப்பதில்லை, அவர்களுக்குப் பதிலளிக்கும் எண்ணமும் என்னிடமில்லை.

என்னை அழகுற விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களது விமர்சனத்தில் எடுப்பதற்கு எனக்கொரு விடயம் இருந்தது. யூஸுப் முப்தியிடம் கேட்காமல் அவரை முன்மொழிய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதென்பதே அது.

அவரைக்குறிப்பிட்ட பதவியில் அமர்த்துவதற்கு எனக்கு அதிகாரம் இருப்பதாகவோ அவ்வாறு முன்மொழிவதனால் உடனடியாக அவரையுமறியாமல் அவர் அமர்த்தப்பட்டுவிடுவார் என்ற சூழ்நிலையிலோ நான் இந்த விடயத்தை அணுகவில்லை. ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஒரு யாப்பிருப்பதும் அந்த யாப்பின் படி தான் அனைத்தும் அங்கு நடைபெறுகின்றன என்பதும் எனக்குத் தெரியாததும் அல்ல. அவ்வாறிருந்தும் அஷ்ஷெய்க் யூஸுப் முப்தி அவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் நிலை எனது இந்த முன்மொழிவால் ஏற்பட்டுள்ளது. அந்த சங்கடத்தை அவருக்கு ஏற்படுத்தாமலிருக்கலாம் என்பது எனக்குப்புரிந்தது. எனது ஆக்கத்தை வெளியிடும் போதும் அந்த உணர்வு என்னிடம் இருக்கவே செய்தது. அதனால் குறிப்பிட்ட அந்த ஆக்கத்திலேயே நான் மன்னிப்பும் கேட்டிருந்தேன். இன்னும் அந்த மன்னிப்பை மீண்டும் கேட்பதில் எனக்கு எந்த மரியாதைக் குறைவும் ஏற்படப்போவதில்லை.

அஷ்ஷெய்க் யூஸுப் முப்தி அவர்கள் எனக்குப் பதில்கூறி வெளியிட்ட அவரது அறிக்கையில் அவருடைய நடுநிலைப்பார்வை பிரதிபலித்தது அல்லாஹ் அவருக்கு அருள்பாளிப்பானாக.

அவர் எனது அந்த முன்மொழிவு பற்றியோ அல்லது ஆக்கம் பற்றியோ வெளியிட்ட செய்தியில் ஒருவருக்கு ஒரு கருத்தைக் கூறும் சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும் நான் இப்பதவியை எதிர்பார்த்தவனுமல்ல, அதற்குத் தகுதியானவருமல்ல, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்புமல்ல என்று அழகுற விளக்கியிருந்தார். ஜஸாஹுல்லாஹு கைரன். நடந்து முடிந்த விவகாரத்தில் எனது இந்த அவதானங்களை முன்வைப்பதோடு முடித்துக்கொள்கிறேன். நாளை நல்லதொரு சமூகம் மலர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அதற்காக உழைக்கும் அனைவருக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக!…

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

usthazhajjulakbar.org

பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 19, 2013 இல் 10:41 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

34 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. இத்துடன் முடித்து விடாதீர்கள், ஒரு கட்டுறையுடன் உங்கள் கடமை முடிந்து விட்டதா ?? எல்லாமே சரியாகிவிட்டதா ??? எப்படி கூறுவீர்கள் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் என்று ???? அகில இலங்கை ஜம்யத்துள் உலமா சரியான கட்டமைபையும் ஒழுங்கையும் பெற்ருக்கொள்ளும் வரை எழுதுவதும் பேசுவதும் உங்கள் முன் இருக்கும் பாரிய கடமை என்பதை நீங்கள் உணரவில்லையா ??

  ACM.Saleem

  ஓகஸ்ட் 19, 2013 at 10:52 பிப

 2. We are all Muslim , as Muslims, each members of the community have common and unique duties, I think you have unique duty toward Muslim Ummah as a leader of a well organized Islamic movement. please go head till reach an expected goal . the goal is well organized Muslim Ummah in SL

  Abdul Rasheed

  ஓகஸ்ட் 19, 2013 at 11:47 பிப

  • Well organized Islamic movement ???
   But in recent years if you look at the Muslim population
   The number of Alcohol consumers are increased.
   Earlier if we walk through a Muslim village after mahrib, we listened the recitation of Quran from most of the homes, now ????
   In posters and walls papers read, understand and teach the Quran but the reality is even the hard core members of the movements at least cannot recite Surah Fathiha properly.
   But movements are very well organized. this is the situation of Muslim community on the other hand remember Islam is not limited for Moor and Malays. Rays of lights are not limited to by birth Muslims or it’s not the fire of hell only will touch the sons and daughters of Muslim parents.
   If the problem among Muslims are headache being Kafir is cancer. We don’t feel at all about the Idols and associating partners to Allah. we are programmed of some other issues.

   But our ancestors programmed themselves as below.

   18:14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) – வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்
   May Allah guide all of us.

   His Slave

   ஓகஸ்ட் 20, 2013 at 5:52 பிப

 3. பிற தஃவா பணி செய்வோரை கிண்டல் பன்னும் மறைமுக வசனங்களை கொண்ட சுட்டிகாட்டல்கள் எந்த ஐக்கியத்தையும் ஏட்படுத்தாது எந்த நல்ல அபிப்பிராயங்களையும் பறவவும் வழி சமைத்துகொடுக்காது உண்மையில் முதலாவது விமர்சனம் எவ்வளவு நளினமாக இருந்ததோ இரண்டாவது விமர்சனம் அந்த நளினத்தை துடைதெறிந்து முதலாவது விமர்சனத்தின் உள் நோக்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி இருந்தது???

  பல துறையினறும் கூட்டாக எடுத்த முடிவுக்கு ஒரு அமைப்பை மட்டுமே குறை கூறியதும் அந்த அமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற பகிறங்கமான கோறிக்கையும் அமைப்புகளின் தலைமைகள் கூட இன்னும் விடயங்களை அனுகும் முறையையோ அல்லது விடயங்களுக்கு பொறுப்பானவர்களை இனங்காணும் காரியத்திலோ இன்னும் மயக்கநிலையிலேயே இருப்பது புலனாகி நிட்பதையிட்டு அக்கரை உள்ளவர்கள் வருந்திகொள்வதை அன்றி ஏறு வழி இல்லை???

  A.M.Mohammed Fashlin

  ஓகஸ்ட் 20, 2013 at 1:30 முப

  • you are writing this comment without understanding the useful criticisms !

   Anwer ismail

   ஓகஸ்ட் 20, 2013 at 1:42 முப

   • தலைமை சார்ந்த தலைக்கனம் யாரைவிட்டது??? பிறக்கக்க முடமாம் பேய்க்கி பார்த்து என்ன பயண்??? நகரீகத்தின் இழிநிலைதான் ஒரு மொழி ஊடகத்தில் மறு மொழியில் கறுத்துபதிவது???

    A.M Mohammed Fashlin

    ஓகஸ்ட் 20, 2013 at 2:15 முப

   • you a correct brother. brother faslin is a biased person. it is not a quality of a muslim

    mohamed

    ஓகஸ்ட் 20, 2013 at 8:20 முப

 4. usthaz….allah ungalukku arul puriwanaha…. samoohattil sikkalana nilamaihal tondrum podu ewar ethai sonnalum ungalin karuttukku takkamirukkiradu atil kulappamillamal vidayumikkiradu.ungaladu aakkangal ninruvidakkudathu.todarndu eluthungal yarayum peyar kuripputtu munmoliya vendam.antha ulamakkalai vida neengal onrum kuraindu vidavillai.

  nasrin

  ஓகஸ்ட் 20, 2013 at 3:45 முப

 5. மிகவும் வரவேற்க தக்க புத்திசாலித்தனமான முடிவு.
  முதலில் தங்கள் எழுதிய பிறை சம்பத்தப்பட்ட ஆக்கம் நன்றாகவும் இதய சுத்தியுடன் எழுதப்பட்டதாயும் செவ்வனே அமைந்திருந்தது. மிகுவும் சிலாகித்து போற்றக்கூடியதாய் இருந்தது. பின்னர் Mr ஷைத்தான் உங்களுடன் விளையாட ஆரம்பித்து 20 A4 தாள்களை உங்கள் கையில் கொடுத்து ஏதேதோ எழுதி கண்டதையெல்லாம் முன்மொழிய வைத்து விட்டான். அவன் யார் ஹசரத்?? மலக்குகளுக்கு 70,000 வருடங்கள் பாடம் எடுத்தவன் அல்லவா? கடைசியில் ஒரு ஜமாஅதே இஸ்லாமி சகோதரர் தங்களுக்கு பதிலாக இன்னொருவரை SLJI க்கு அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி யை முன்மொழிந்து தங்களை சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டார். அவரை ஆதரிக்கவும் ஒரு படை தயாராகிவிட்டது. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை.
  எழுத்தாளன் குறிப்பாக ஒரு முஸ்லிம் எழுத்தாளன் எப்பொழுதுமே ஆஹிரத்தை நோக்கமாக கொண்டே எழுத வேண்டும்.

  Eng, Rinaz Hassen

  ஓகஸ்ட் 20, 2013 at 8:41 முப

 6. உஸ்தாத்
  ACJU குறித்து எழுதுவதை நிறுத்துவது சமூகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. ACJUல் உள்ள எல்லா அமைப்புக்கலும் ஒற்றுமையாக வேலை செய்வது கண்டித்தாக தேவையானது போன்று அதன் தவறுகளை அறிவுப்பூர்வமாக கண்டிக்கவும் பண்பான முறாயீல் விமர்சிக்கவும் உங்களை போன்றவர்கள் பின்நின்றமை சமூகத்து பெரும் இலப்பாக அமைத்திருந்தது.

  அந்த பல ஆண்டு கால நடைமுறையை முறித்து தவறுகளை அறிவுப்பூர்வமாக ஆக்கபூர்வமாக விமர்சிக்க முன்வைந்தமை பெரிதும் சமூகத்துக்கு நன்மை தர கூடியது உள்ளது உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை தயவு செய்து தொடர்து முன்வையுங்கள்

  Rizkhan

  ஓகஸ்ட் 20, 2013 at 11:49 முப

 7. //தலைவர்கள் விமர்சிக்கப்படக்கூடாது என்றொரு வரையறை இஸ்லாத்தில் இருப்பதாக நான் அறியேன். நான் அறிந்தவரை தலைவர்கள் தான் அதிகமாக விமர்சிக்கப்படுவார்கள். அந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு அவற்றுள் தனக்குத் தேவையானவை எவை என்பதை நிதானமாகத் தெரிவுசெய்து கொள்பவர் தான் சிறந்த தலைவர். ஒரு தலைவர் தான் விமர்சிக்கப்படக் கூடாது என்று நினைப்பாராயின் அல்லது அந்தத் தலைவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்படிக் கருதுவார்களாயின் அவர்களுக்கு தலைவர்கள் பற்றியும் தலைமைக்குரிய கடமைகள், பொறுப்புக்கள் பற்றியும் தெரியாது என்று பொருள்.//

  well said this is the leadership quality , which our community have to have, In same villages some ulamas works like The Bodu Bala sena and naming other section of Muslims ‘munafiks’ !.this is most awful situation.

  Dr.Rifard

  ஓகஸ்ட் 20, 2013 at 12:03 பிப

  • The Professional criticism has been practicing in many western countries unlike in our society. Calling munafiks or kafir is not limited to one jamath, almsot every jamath calling each other Kafir, but Jamath-e-islamic not calling openly but they saying in very diplomatically.

   Dr. Nawas

   ஓகஸ்ட் 20, 2013 at 12:59 பிப

   • //but Jamath-e-islamic not calling openly but they saying in very diplomatically.//

    so what is wrong in Islamic diplomatic approach ? that is the way of last messenger of god

    Umar Farook

    ஓகஸ்ட் 20, 2013 at 4:24 பிப

    • great you accept that Jamath-e-islami call other muslims kafir if they not join with jamath-e-islami.

     Dr. Nawas

     ஓகஸ்ட் 21, 2013 at 12:41 பிப

     • Dr.Nawas and Umar Farook you both did not understand the SLJI well , that reflect in your comments , I humbly request both of you , study about SLJI well before comment.

      Irfan Aleem

      ஓகஸ்ட் 21, 2013 at 6:09 பிப

      • Dear Irfan Aleem, I studied and done the research well, spend and spoke with many jamath-e-islami scholars. seems your not understand this moment well. They dont call kafi openly unlike other jamaths. you attend ushra once again and listen carefully, then you’ll realize how nicely and fantastcally they calling other jamaths are kafir.

       Al the best for your research.

       Dr. Nawas

       ஓகஸ்ட் 22, 2013 at 1:45 பிப

       • Dr. Nawas NO,NEVER, Jmath-e-islami NEVER CALL other jamaths ‘kafir’. YOU ARE PUTTING THE BLAME ON SLJI WITHOUT SOUND KNOWLEDGE ABOUT IT . YOUR ALLEGATION IS BASELESS. IF YOU CAN PROOF YOUR CLAMS. SLJI WILL BE READY TO TAKE ACTION ON WHO CALL ‘other jamaths are kafir ‘

        Irfan Aleem

        ஓகஸ்ட் 22, 2013 at 3:44 பிப

 8. உஸ்தாத் அவர்களே !
  //”தலைவர்கள் விமர்சிக்கப்படக்கூடாது என்றொரு வரையறை இஸ்லாத்தில் இருப்பதாக நான் அறியேன். நான் அறிந்தவரை தலைவர்கள் தான் அதிகமாக விமர்சிக்கப்படுவார்கள். அந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு அவற்றுள் தனக்குத் தேவையானவை எவை என்பதை நிதானமாகத் தெரிவுசெய்து கொள்பவர் தான் சிறந்த தலைவர். ஒரு தலைவர் தான் விமர்சிக்கப்படக் கூடாது என்று நினைப்பாராயின் அல்லது அந்தத் தலைவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்படிக் கருதுவார்களாயின் அவர்களுக்கு தலைவர்கள் பற்றியும் தலைமைக்குரிய கடமைகள், பொறுப்புக்கள் பற்றியும் தெரியாது என்று பொருள். எனக்குத் தெரிந்ததெல்லாம் மாநபி (ஸல்) அவர்கள் மட்டும் தான் முஸ்லிம் உம்மத்தில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதராவார்கள்.”//
  என்ற மேற்குறித்த தங்களின் பதிவில் தங்கள் தலைமைத்துவப் பண்பின் பக்குவம் தெரிகின்றது. காரணம் தங்களை இங்கு மானசீகமாக விமர்சிக்க எண்ணுபவர்கள் கூட நீங்களும் ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டிருப்பதை மறந்து விட்டனரோ என்பது தெரியவில்லையாயினும் அப்படியிருந்துகொண்டே தலைவர் என்ற இடத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்ற தத்துவத்தை துள்ளியமாக நீங்கள் குறிப்பிட்டுள்ளமை நிச்சயம் தங்களின் தலைமைத்துவ முதிர்ச்சியை கோடிட்டுக் காட்டுவதுடன் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அவர்களை யாரும் தனிப்பட்ட ரீதியாக விமர்சிக்கவில்லை என்பதும் அதுவும் ஜம்இய்யாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தான் அனைவரும் சிரத்தை காட்டினார்கள் என்பதனையும் நாம் உணரவேண்டியுள்ளோம்.
  அத்துடன் உஸ்தாத் அவர்களிடம் நான் வைக்கும் ஒரு வேண்டுகோள் என்னவெனில் இப்படியான ஒரு நேரத்தில் தாங்கள் ஊடகங்களுக்கு கருத்துக்களை பதிவு செய்யு முன்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக இது குறித்த விபரங்களை நேரிய முறையில் அணுகிப் பெற்ற பின்னரே தங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்திருந்திருந்தால் இப்படி தங்களுக்கும் ஒரு விமர்சனம் வந்திருக்காது. இது பிறை விடயத்தில் மாத்திரமல்ல நீங்கள் வேறொரு முப்தியை தலைவராக்க பரிந்துரை செய்த விதமும் அவ்வளவு ஏற்புடையதொன்றாக காணப்படவில்லை. காரணம் பிறை விடயத்தில் ஜம்இய்யாவின் தலைவரால் தவறிழைக்கப்பட்டிருந்தாலும் அது தலைமைத்துவத்தையே மாற்றப் போதுமான காரணமாக அமையவில்லை. இருந்தாலும் இயக்கங்களின் தலைவர்களாக இருந்து கொண்டு வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் இது போன்ற நிர்வாக விவகாரங்களை சமர்ப்பிப்பதனை விட உலமாக்கள் தலைவர்கள் அமீர்கள் என்ற ரீதியில் சகல இயக்க வேறுபாடுகளையும் மறந்து நீங்கள் உங்கள் மத்தியிலேயே தீர்வு காணும் ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொண்டால் சகல பிரச்சினைகளுக்கும் அதுவே தலை சிறந்த தீர்வாக அமைந்து விடும் என்பதில் ஐயமில்லை.
  இந்த வகையில் தங்களின் முதல் இரு அறிக்கைகளையும் விட மேற்குறித்த அறிக்கை மிகவும் பக்குவமானதும் முதிர்ச்சிமிக்கதுமான அறிக்கையாக எங்களால் கருத முடிகின்றது. இது சகல முஸ்லிம் சகோதரா்களினது மத்தியிலும் நிலவிய ஒரு வித “குய்யோ முறையோ” என்ற மனோபாவங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதுடன் ஜம்இய்யாவும் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு சென்று சகலரதும் ஒத்துழைப்புகளுடம் தம் பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்ற வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக !

  M.Ossan Salam - Doha

  ஓகஸ்ட் 20, 2013 at 6:41 பிப

 9. முதலில் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ராஜினாமா செய்து, பொருத்தமான துடிப்பான ஒருவரிடம் ஜமாத்தே இஸ்லாமியின் தலமையை கையளிக்க வேண்டும்.

  தூங்கு ….. தலைமைகளால் முஸ்லிம் இயக்கத்துக்கு இனி எத்தகைய பயனும் இல்லை. இவ்வாறான தலைமைகள் சமூகத்தை முடக்குகின்றன.

  Rikas

  ஓகஸ்ட் 20, 2013 at 6:46 பிப

 10. எல்லா விடயத்திலும் அல்லாஹ்வை பயந்து கொள்வோமாக!!!!!!!!

  Imthiyas

  ஓகஸ்ட் 20, 2013 at 6:55 பிப

 11. தவறுகள் புரியப்படுவதற்கு ஓர் அறிவு தேவை, தன்னடக்கம் தேவை, பொறுப்பு தேவை, சுயவிமர்சனம் செய்யும் பண்பு தேவை, ஏற்கும் மனப்பான்மை தேவை! மேலாக தவறைத் தானே வெளிப்படுத்தும் தைரியம் தேவை.

  தெரியாமல் செய்வன மட்டுமே தவறு என்பதும், தெரிந்து செய்பவைகள் குற்றங்கள் என்பதுவும், வேண்டுமென்றே செய்பவைகட்கு இறைவனிடம் மன்னிப்பு இல்லை என்பதும் வேறு!

  தங்களது // தலைவர்கள் விமர்சிக்கப்படக்கூடாது என்றொரு வரையறை இஸ்லாத்தில் இருப்பதாக நான் அறியேன் ……..// என்ற தொடரில் அமைந்துள்ளவற்றை மறுப்பதற்கில்லை.

  ஆயினும், எந்த விமர்சனமும், விமர்சனம் செய்யப்படுபவரது பதவி நிலையிலும், அவர்கள் செயற்பட்ட விதத்தில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதாகவும், அவற்றுக்கு ஆக்கபூர்வமான மாற்றுவழிகளைக் கூறுவதாகவும் இருக்க‌ வேண்டும். தவிர அவரைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிப்பது ஆரோக்கியமற்றது என்பதற்கு மேல், வரம்பு மீறல் என்ற இறைநிராகரிப்பிலும் தள்ளிவிடும். ஒரு முஸ்லிமின் கண்ணியம் மிக முக்கியமானது. நாம் நடுநிலையான சமுதாயம் என அல்லாஹ்வால் பரிந்துரை செய்யப்பட்டோர் என்பதை மறவாது பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

  பொது வாழ்வை மேற்கொள்வோர் விமர்சனங்களை எதிர்கொள்ள, அவற்றிலுள்ள நல்ல கருத்துக்களை அலசி ஆராய, தன்னைப் புடம் போட, இன்னும் சிறந்த முறையில் சேவையாற்றும் வழிமுறைகளைக் கண்டறிய தயார் நிலையிலும், மனோபாவத்திலும் இருக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

  பதிவுகளில் காணப்படும் விமர்சனங்கள் நமது இழி நிலையை துலாம்பரமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

  nizamhm1944

  ஓகஸ்ட் 20, 2013 at 8:49 பிப

 12. உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்கள் ”இத்துடன் முடித்துக் கொள்கிறேன் ” என்ற ஆக்கத்தின்
  மூலம் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய ”தலைமைத்துவ பண்பை”மிகச் சிறப்பாக வெளிப் படுத்தியிருக்கிறார் அவர்.சவ்வால் தலைப் பிறை தொடர்பாக ஜம்மியதுல் உலமா சபை இதர அமைப்புக்களுடன் எடுத்த தீர்மானத்தை அதன் தலைவர் பிரகடணப் படுத்தியதி
  லும்,கிண்ணியா ஜம்மியதுல் உலமா சபை தாம் பிறையை கண்களால் கண்டு விட்டு பிரகடணப் படுத்தியதிலும் ஏற்பட்ட முரண்பாட்டில் முஸ்லிம்களும் விழித்துக் கொண்ட னர்.இதனால் தமது மார்க அறிவு,கல்வி,வாழும் சூழல் அனுபவம் போன்ற வற்றின் உதவியுடன் விமர்சிக்கத் தொடங்கினர்.இதன் சாதக பாதக தன்மைகள் ஒருபுறமிருக்க ,இந்த விமர்சணங்கள் முஸ்லிம் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்தியது.எனவே எதிர்காலத்திலும் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம் சமுதாயத்தை இலகுவாக யாராவும் ஏமாற்றிவிட முடியாது
  இலங்கை முஸ்லிம்கள் அணைவரதும் சொத்தான ஜம்மியதுல் உலமா சபை ,ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக இருக்கின்ற காரணத்தினால்,உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்களுக்கு சொந்தமில்லாமல் போய்விடுமா? ஜம்மியதுல் உலமா சபையின் யாப்பில் ஒரு தவ்வா இயக்கத்தின் தலைவருக்கு ஜ.உ.சபையை விமர்சணம் செய்வதற்கோ அல்லது கருத்து சொல்வதற்கோ அனுமதியில்லை யென்றொன்றுண்டா? அவருக் கெதிராக தாறுமாறாக விமர்சணம் செய்வோர் சிந்திருக்க வேண்டும்.அவருயை விமர்சணங்களில்
  நிறைய படிப்பிணைகள் கிடைத்தன.அவரது பெருந்தன்மையும் வெளிப்பட்டன.
  ஜம்மியதுல் உலமா சபை தலைவரின் அறிவித்தலின் போது ஆக்ரோஷம் வெளிப் பட்டது.பிறைக்கண்டவர்களை பொய்யர்கள் ஆக்கியது,பெருநாள் கொண்டாடியவர்களை யெல்லாம் தவ்பா” செய்து கொள்ளுமாறு வேண்டிய து இவையணைத்தும் தவ றுகள் அல்ல
  குற்றங்களாகும்,இவை குற்றங்கள் என்று அறியாதவரல்ல உஸ்தாத் அவர்கள். ஆனால் அவை தவறுகள் என்றே குறிப்பிட்டிருந்தார்.குற்றங்களை குற்றங்களாக நீரூபித்து விட்டு
  ஜம்மியதுல் உலமா சபை தலைவரை பதவி விலகுமாறு கோரி,பிறிதொருவர் சிபார்சு
  பண்ணப் பட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்..
  எது எவ்வாறெனினும் ”சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவது ஒரு குற்றம்”என்பது இந்தியாவின்ஓய்வு பெற்ற சட்ட மேதை திரு கிருஷ்ன அய்யர்என்பவரது கருத்தாகும்.எனவே உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்கள் காலமறிந்து விடுத்த அனைத்து ஆக்கங்களும் சவ்வால் மாத விண்ணில் மின்னும் நட்சத்திரங்களாகும்.

  ismath inoon

  ஓகஸ்ட் 21, 2013 at 2:35 முப

  • அறிந்து தெறிந்து தெளிவாக புறிந்து செய்வதுதான் குற்றமாகும்??? கின்னியா ஜெம்மியதுல் உலமாவுக்கு கடந்த பெப்ரவரி மாததில் இருந்து வேறு தலைமை தெறிவு செய்யபடது நன்றாக தெறிந்திருந்த நிலையிலும் மேலும் பிறைகண்ட விடயத்தை தெளிவாக அறிந்து தெறிந்த பின்னரே வீம்புக்காக தனது 18 வருட மார்க கல்வியின் புலமையை மட்டும் வைத்து ரிஸ்வி முப்தி பத்ஃவா வழங்கி இருந்தார்கள் வானொலியில் என்று இம்மையிலும் மறுமையிலும் ஏற்றுகொள்ளதக்க விஞ்ஞான பூர்வமான ஆதராங்களை பகிறங்கமாக வைத்து விட்டு , முப்தி அவர்கள் குற்றம் செய்ததாக உரத்து சொல்லுங்கள் இல்லையேல் தெளிவில்லாத ஒரு விடயத்தில் கேட்டதை மட்டும் வைத்து அநியாயமாக ஒரு ஆலிமை நோகடிக்க முனைகிறீர்கள் என்பதை மறவாதீர்கள்??? உலகலாவிய ஒரு அமைப்பின் ஸ்ரீலங்காவின் தலைமையின் ஒரு விடயம் பற்றிய சர்சைக்குறிய தீர்வாக முன்வைக்கபட்டது தலைவரை மாற்றுங்கள் என்பதாகும் இந்து எந்த அளவு அந்த சர்சைக்கி தீர்வாகும்???

   யூஸுப் முப்தி ஜெம்மியதுல் உலமாவின் தலைமையை ஏட்பதால் எப்படி இந்த பிறைவிடையம் தீர்வுக்கு வரும் ??? பிரச்சினைக்கான தீர்வு பிரச்சினையை தீர்பதாக இருக்க வேண்டுமா அல்லது வேறு பிரச்சினைகள் தொடரவழி வகுப்பதாக இருக்க வேண்டுமா?

   பொதுவாக ரிஸ்வி முப்தியை குற்றவாளி கூண்டில் நிறுத்தி விமர்சிப்பவர்கள் யாறுமே நேர்மையோடு அந்த விடயத்தோடு சம்மந்தபட்ட பிறைகுழுவையோ முஸ்லிம் பண்பாட்டு அழுவல்கள் துறையையோ, கொழும்பு பெரிய பள்ளிவாயல் நிர்வாகத்தையோ சேர்த்து விமர்சனங்களை முன் வைக்காமல் தனியே ஜெம்மியதுல் உலமாவின் தலைமையை மட்டும் நோக்கி விமர்சனத்தை முன்வைப்பது விமர்சனத்தின் சார்பு நிலையை எடுத்து இயம்புகிறது என்பதை எந்த ஒரு மனிதனுமே புறிந்து கொள்வான்???

   ஏட்பட்ட பிரச்சினைகளை பற்றி அலசி அதட்கான காரணங்களை விமர்சிப்பவர்கள் அதட்குறிய தீர்வை முன்வைக்கும் போது அது தீர்வாக இருக்க வேண்டுமே ஒழிய இன்னொறு பிரச்சினைக்காண ஆரம்பமாக இருக்ககூடாது???

   வெள்ளி கிழமையே பெருநாள் என்பதை முடிவு எடுத்து அறிவித்த அந்த நேரத்திலும் அதட்கு அடுத்த நாளும் சம்மந்தபட்ட தரப்புகள் அறிந்து தெறிந்து நன்றாக புறிந்து இருந்தும் வேண்டும் என்றே வீம்புக்கும் அங்காரதிட்கும் இருமாபுக்குமாக வேறு யாரோ ஒருவரின் நிகழ்சி நிரழுக்காக பிழையான முடிவை எடுத்தனர் என்று அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் அல்லாஹ்விடமோ இந்த உலகில் உள்ள எந்த ஒரு விசாரனை கமிஷனிடமோ சமர்பிக்க தக்க எந்த ஆதாரமும் இன்றி வெறுமனே ஊடகங்கள் வாயிலாக அறிந்த விடயங்களை மட்டும் வைத்து உலமாக்களின் கன்னியத்துடனும் கவுரவுத்துடனும் விளையாடி குற்றம் சுமத்தி சமூகத்தின் தலைமைதாங்கும் உலமாக்களின் ஆற்றல்களை தயங்க வைக்கவும் பின் வாங்கவைக்கவும் முனைபவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளாவிட்ட டாலும் அந்த நாளில் முழு உலக மனிதர்களின் முன்னரும் அறிந்து தெறிந்து நன்றாக புறிந்து இராத இருவிடயத்தைவைத்து சுமத்திய குற்றசாட்டுகளுக்கு ஒவ்வொறு அச்சரமாக பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதையாவது நாபகத்தில் வைத்திருக்கட்டும்!!!

   தவறுகள் உணரபட்டநிலையில் ஆருதல் சொல்லவேண்டிய உம்மத் தலைமைகளை தலைகுனியவைக்கவே துணிவதால் வரும் காலங்களில் பிறைவிடயம் மட்டும் அல்ல எல்லா விடயங்களிலுமே துணிவோடு உரிய கால நேரத்தில் தீர்மானம் எடுக்கும் நிலை மந்தமாக போகிறது? துல்கஃதா மாத தலைபிறையை தீர்மானிக்கும் விடயம் இதட்கு உதாரணமாக போகிறது? சர்வதேசபிறையைவைத்து மாதங்களின் ஆரம்பங்களை கனித்துகொள்பவர்கள் பொதுமக்களை பயண்படுத்தியே தம் சூழ்ச்சிகளை அரங்கேற்றும் நாள்கள் நெருங்கி வருகின்றன???

   இனிமேலும் இந்த நாட்டில் எங்கே யார் எந்த நேரத்தில் பிறை கண்டதாக சாட்சி சொல்லி சத்தியமிட்டுவிட்டால் அவர் முஸ்லிம் என்ற காரணத்தோடு மட்டுமே அந்த பிறை முழு சமூகதிட்குமான பிறையாக பிரகடனபடுத்தவேண்டிய நிர்பந்தங்களும் சந்தர்ப சூழல்களும் முன்னோக்கி வந்துகொண்டிருக்கின்றன???

   A.M Mohammed Fashlin

   ஓகஸ்ட் 21, 2013 at 11:46 முப

 13. masha allah nalla mudivu nan varavetkiren engal thalaivargalai name ippadi podu udagangal mulam vimarsanam seidal anniyavar’galuku name engal inathai patri therindu kollvadukku ilaguvaki vittadu pol agi vidum. adu avuruku nastam etpadumo illayo muslimgalagiya nam ellorukum than adanal inda mudivai unmayaga manadal varavetkiren.

  m.ifthikar

  ஓகஸ்ட் 21, 2013 at 8:04 பிப

 14. லதீப் பாரூக்

  முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியாக் கிராமம் நாட்டின் வட கிழக்குக் கரையோரமாக அமைந்திருக்கிறது. சுமார் 98 சதவீதமானவர்கள் இங்கு முஸ்லிம்கள். மார்க்க அறிஞர்கள், புலமைத்துவ மட்டத்தைச் சேர்ந்தவர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பிற தொழில்களைப் புரிபவர்கள் என சகல மட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.

  புனித ரமழான் மாதம் வந்தாலே, கிராமத்தின் சூழ் நிலை முழுமையாக மாற்றம் அடைகிறது. நோன்பு நோற்பதிலும், இரவுத் தொழுகைகளிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய மாதத்தின் ஆரம்பத்தைத் தீர்மானிப்பதற்கான தலைப் பிறை வழமையாகத் தென்படும் பிரதேசங்களில் இதுவும் ஒன்று. இத்தலைப் பிறையை அடிப்படையாக வைத்தே, ரமழான் மாத நோன்பை முஸ்லிம்கள் நோற்க ஆரம்பிக்கவும், நோன்பை நிறைவு செய்து நோன்புப் பெருநாளைக் கொண்டாடவும் செய்கிறார்கள்.

  இவ்வாண்டும் அதற்கு விதி விலக்கல்ல. ஆகஸ்ட் 06, 2013 அன்று கிண்ணியாவாசிகள் தலைப் பிறையைக் காணும் ஆர்வத்தில் இருந்தார்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கிண்ணியாக் கிளையின் பிறைக் கமிட்டி அதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தது.

  கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா என்பது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை உள்ளடக்கிய பாரியதொரு நிறுவனமாகும். பலவேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவ்வமைப்பின், பிறைக் குழுத் தலைவராக இருப்பவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள். இவ்வமைப்பே கிண்ணியாப் பிரதேசத்தில் பிறை பார்ப்பதற்குப் பொறுப்பாக இருக்கிறது.

  கொழும்பில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகமும் மேமன் சமூகத்தைச் சேர்ந்த இருவரை, கிண்ணியாப் பிறைக் குழுவுடன் இணைந்து பிறை பார்க்கும் கருமத்தில் ஈடுபடும் படி கிண்ணியாவிற்கு அனுப்பி வைத்திருந்தது. ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை (பெருநாள் தலைப் பிறை) பார்க்குமாறு ஜம் இய்யதுல் உலமாவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

  பெரியாத்துமுனை, பெரிய கிண்ணியா, ஜாமிஉல் மஸ்ஜித் பகுதி, காக்காமுனை போன்ற பிரதேசங்களில், புதன் கிழமை மாலை 6.32 இற்கும், 6.35 இற்கும் இடையில் ஒருவர் பின் ஒருவராக இருபத்தைந்து பேர் வரை ஷவ்வால் தலைப் பிறையைக் கண்டிருக்கிறார்கள்.

  பிறை கண்ட ஆறு பேர், போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட ஜாவாப் பள்ளிவாயல் தலைவராக இருக்கும் அஷ்ஷெய்க் ஜாபிர் (நளீமி) அவர்களை சந்தித்திருக்கிருக்கிறார்கள். சகல தகவல்களையும் உறுதி செய்து கொண்ட அவர், ஜம்இய்யதுல் உலமா கிண்ணியாக் கிளைக்கு இதனைத் தெரியப்படுத்தி உள்ளார். கிண்ணியாக் கிளை இத்தகவல்களை மேலும் ஆராய்ந்தது.

  கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் கமிட்டியை கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா அவசரமாகத் தொடர்பு கொண்டது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், முடியவில்லை.

  எவ்வாறாயினும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஜம்இய்யதுல் உலமாவில் இருந்து கிடைத்த பதில் அவ்வளவு திருப்திகரமானதாக இருக்கவில்லை. கிண்ணியா பிறைக் கமிட்டி உலமாக்கள், அறிஞர்கள், சமூக மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருந்த போதிலும், தாம் பொய் சொல்வதாக உணர்கின்ற வகையில், கொழும்பில் இருந்து அநாவசியமான பல கேள்விகள் அதனிடம் கேட்கப்பட்டன.

  பிறகு தமது கருத்துக்கள் மறுக்கப்பட்டு, மேமன் குழுவினதும், வானிலை அவதான நிலையத்தினதும் கருத்து ஏற்கப்பட்டு, வியாழக் கிழமை எட்டாம் நாள் நோன்பு நோற்கப்படும் எனவும், வெள்ளிக் கிழமையே பெருள்நாள் கொண்டாடப்படும் எனவும் கூறப்பட்ட போது, கிண்ணியாவாசிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

  மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கியஸ்த்தர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிறை கண்டவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அவசரக் கூட்டம் ஒன்று அன்றிரவு ஒன்பது மணிக்கு கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா காரியாலயத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் மீண்டும் ஆராயப்பட்டு, மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு, தலைமையகத்திற்கு எத்தி வைக்கப்பட்டது போது, கொழும்பு பெரிய பள்ளிவாயலில் பிறைக் குழு தமது மாநாட்டை நிறைவு செய்து, கலைந்து சென்று விட்டார்கள் என்ற பதிலே அவர்களுக்குக் கிடைத்தது. வியாழன் நோன்பு நோற்கப்படும் எனவும், வெள்ளிக் கிழமையே பெருநாள் கொண்டாடப்படும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தீர்மானித்திருப்பதாகவும் வேறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இம்முடிவால் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவும், கிண்ணியாப் பிறைக் குழுவும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இச்செயற்பாடு காரணமாக வெறுப்புக்குள்ளான கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா, அங்குள்ள மக்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பிற்கு முரணாக, வியாழனன்று பெருநாள் கொண்டாடும் படி அறிவிப்புச் செய்தது.

  அடுத்த நாள் ஆகஸ்ட், 08 வியாழக் கிழமை அன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ஆற்றிய உரையைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் மூதூர் மக்களுக்கு தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

  கிண்ணிய ஜம்இய்யதுல் உலமா, தஃவா அமைப்புக்கள், அரசியல்வாதிகள், முக்கியஸ்த்தவர்கள் மற்றும் பலருடன் இணைந்து 8 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஷ்வ்வால் தலைப் பிறை பற்றி எடுத்த முடிவை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம்.

  01. கிண்ணியா மற்றும் மூதூர் மக்கள் பிறை கண்ட பிறகு, வானியல் அவதான நிலையத்தின் தகவல்களின் படி, பிறை காண்பது சாத்தியமில்லை என்று கூறுவது சரியானதல்ல. ஜம்இய்யதுல் உலமாவே பிறை பார்க்குமாறு வேண்டி, அதற்காக மாநாட்டையும் நடாத்தி விட்டு, அதே நாளில் பிறை தென்படாது என்று கூறுவது முன்னுக்குப் பின் முரணானதாகும்.

  02. பெருநாள் கொண்டாடுவதாக உறுதிப்படுத்துகின்ற கிண்ணியா கிளையின் கடிதத்தில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் கையெழுத்திடவில்லை எனவும், கையொப்பம் போலியானது எனவும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் அவர்களால் கையெழுத்திடப்பட்டமை உறுதிப்படுத்தப்படுகிறது. இவர் இவருக்கு முன் தலைவராக இருந்து, தனது முதுமானிப் பட்டத்தை நிறைவு செய்வதற்காக சூடான் சென்ற அஷ்ஷெய்க் ஏ.ஆர். நஸ்ஸார் (பலாஹி) அவர்களின் விருப்பத்துடன் தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவினால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விற்கும் அறிவிக்கப்பட்டது. கிண்ணியா மக்கள் மத்தியில் இது நன்கு அறியப்பட்ட விடயமாக இருந்தும், கொழும்பில் ஜம்இய்யதுல் உலமா தலைமையகம் இதனை அறியாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

  03. பிறை தென்பட்ட பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாயல் இமாம் மௌலவி ரியாஸ் அவர்களிடம் எதுவித விசாரணையையும் அ.இ.ஜ.உலமாவினால் அனுப்பப்பட்ட மேமன் சமூகத்தைச் சேர்ந்த குழு மேற்கொள்ளவில்லை. பதிலாக பிறை கண்ட சிலரைச் சந்தித்த இவர்கள், அவர்களுடன் தமிழில் உரையாடி விட்டு, கொழும்பு பிறைக் குழுவுக்கு எத்தி வைக்கும் போது, மேமன் மொழியில் எத்தி வைத்துள்ளனர். ஆகவே, மேமன் குழுவினர் என்ன எத்தி வைத்தார்கள் என்பது மக்களுக்கு விளங்கவில்லை.

  04. கிண்ணியா ஜ.உ வின் முன்னாள் தலைவர் தனது உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளார் என்பது முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயதுல்லாஹ் மற்றும் செயலாளர் எம்.எஸ்.எம். ஸபாத் ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். கி. ஜ. உ விடம் எதுவித விளக்கமும் கோராமல், ரிஸ்வி முப்தி அவர்களால் வானொலியில் மேற்கொள்ளப்பட்ட உரை கிண்ணியாக் கிளைத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் உணர்வுகளைக் காயப்படுத்துவது மட்டுமன்றி, கிண்ணியா மற்றும் மூதூர் மக்களை கேவலப்படுத்தவும் செய்கிறது.

  05. கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவினால் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துக் கூறும் போது ரிஸ்வி முப்தி அவர்கள் கிண்ணியா, மூதூர் மக்களுக்கு சுனாமி மற்றும் பிரச்சினை காலங்களில் மேற்கொண்ட உதவிகளைக் குறிப்பிட்டார். இது விடயத்துடன் சம்பந்தமில்லாததொரு விடயமாகும். கிண்ணியா மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. இது வருந்தத்தக்கது.

  06. இவ்விடயம் தொடர்பாக தனது பத்வாவை வெளியிட்ட ரிஸ்வி முப்தி அவர்கள், வியாழன் அன்று நோன்பை விட்டவர்கள் அதனை மீள நோற்க வேண்டும் எனவும், அந்த நாள் நோன்பு நோற்றவர்கள் நன்மாராயம் பெற்றவர்கள் எனவும் தெரிவித்தார். தமது சொந்தக் கண்களால் பிறை பார்த்தவர்கள், தமது சொந்த மண்ணில் பெருநாள் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது என்பதே இங்குள்ள கேள்வியாகும். பிறை பார்த்ததும் நோன்பு நோற்று, பிறை பார்த்துப் பெருநாள் கொண்டாடுவதே இஸ்லாமிய சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது. ஒருவர் பின் ஒருவராக கிண்ணியாவில் சுமார் இருபத்தைந்து பேர் பிறை கண்டிருக்கிறார்கள்.

  சமூகத்தைப் பிழையாக வழிநடாத்தும் வகையிலான இந்த பத்வாவை எந்த அடிப்படையில் இவர் வெளியிட்டிருக்கிறார் என்பதே இங்குள்ள கேள்வியாகும். இரண்டாம் நபர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களை வைத்து, ரிஸ்வி முப்தி அவர்களினால் தனது பத்வாவை வெளியிட முடியுமாக இருந்தால், தமது கண்களால் பிறை கண்டு, இஜ்திஹாத் அடிப்படையில் பெருநாள் கொண்டாடுவதற்கு எடுத்த முடிவை தவறு என்று கூற முடியுமா என்ற விடயத்தை அல்லாஹ்விடமே விட்டு விடுகிறோம்.

  07. கிண்ணியாவில் இருந்து உத்தியோகபூர்வமாக எவரும் தமக்கு பிறை கண்ட விடயம் தொடர்பாக அறிவிக்கவில்லை எனவும் ரிஸ்வி முப்தி குறிப்பிட்டார். தன்னை மௌலவி என்று கூறிக்கொள்கின்ற ஒருவர் இத்தகைய அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறுவது கண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில், கிண்ணியா பிறைக் குழுவிற்குப் பொறுப்பான அஷ்ஷெய்க் ஏ.எஸ். ஜாபிர் அவர்கள் இது தொடர்பிலான சகல விபரங்களுடனுன் கொழும்புக்கு அறிவித்திருந்தார்.

  எனவே, ஜம்இய்யதுல் உலமா தலைவரின் இவ்வுரை முக்கியத்துவம் இல்லாதது. ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பைச் செவிமடுத்த கிண்ணியா ஜ,உலமா, தஃவா அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பிறைபார்த்தவர்களை உள்ளடக்கிய கூட்டம் ஒன்றை 9.00 மணிக்கு ஒழுங்கு செய்து ஆராய்ந்து, பிறை கண்டதை உறுதிப்படுத்தியதோடு, 9.30 இற்கு மீண்டும் கொழும்பிற்குத் தெரியப்படுத்தியது. ஆனால், அதிர்ச்சி அளிக்கின்ற வகையில், அவர்கள் தமது கூட்டத்தை நிறைவு செய்து கலைந்து சென்று விட்டார்கள் என்று கூறப்பட்டது. முழு சமூகத்தையும் பாதிக்கக் கூடியதான இம்முக்கியமான மார்க்க விவகாரத்தில் தொடர்பில், இது முழுமையான பொறுப்பற்ற செயற்பாடாகும்.

  இதே வேளை, கிண்ணியா ஜ. உலமா நீதியமைச்சர் ரவூஃப் ஹகீம் அவர்களைத் தொடர்பு நிலமையைத் தெளிவு படுத்தியது. நீண்ட நேரமாகத் தொடர்பு கொள்ளப்பட முடியாமல் இருந்த ரிஸ்வி முப்தி அவர்களை இறுதியில் நீதி அமைச்சர் தொடர்பு கொண்ட போது, எக்காரணம் கொண்டும் முடிவை மாற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதன் பிறகே கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா அடுத்த நாள் பெருநாள் கொண்டாடுவதாக ஒரு மனதாகத் தீர்மானித்து, மக்களுக்கு அறிவித்தது.

  08. இந்நிலையில், பிறை கண்ட மக்களின் தகவல்கள் அனைத்தையும் விட, தனது மேமன் சமூகத்தைச் சேர்ந்த இருவர் கொண்ட குழு வழங்கிய தகவல்கள் நம்பகமானவை என எந்த அடிப்படையில் ரிஸ்வி முப்தி அவர்கள் நியாயப்படுத்தலாம்? பிறை கண்ட மக்களின் கருத்துக்களைப் புறம் தள்ளி விடுவதற்கு மௌலவி ரிஸ்வி அவர்கள் முடிவெடுப்பதற்கு அவரைத் தூண்டிய இரகசிய நிகழ்ச்சி நிரல் என்ன என்பதே கேள்வியாகும்.

  09. கிழக்குக் கரையோரத்தில் மாலை 6.23 அளவில் பிறை தென்படும் சாத்தியம் இருப்பதாக ரிஸ்வி முப்தி குறிப்பிட்டிருந்தார். பிறை 14 அல்லது 15 நிமிடங்களுக்கு வானில் தரித்து நிற்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 6.35 அளவில் பிறையை மக்கள் பார்த்ததாக மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு இந்த விடயங்களைக் கலந்துரையாடி, அது குறித்துத் திருப்தி அடைந்த நிலையில், கொழும்பு ஜ.உ ற்கு 6.58 இற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், தகவல் பிந்திக் கிடைத்ததாக ரிஸ்வி முப்தி குறிப்பிடுவது அருவருக்கத்தக்கதும், வெட்ககரமானதுமாகும். முழு சமூகத்தையும் பாதிக்கக் கூடியதான இந்த மார்க்க விவகாரத்தில் எவ்விதம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தேசியத் தலைவர் இவ்விதம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளலாம்?

  கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கர்வமும், பொறுப்பற்ற மனப்பான்மையும் உள்ள கொழும்பு ஜம்இய்யதுல் உலமாவில் நம்பிக்கை இழந்து, கிழக்கு மாகாண உலமாக்கள் கிழக்கிலங்கைக்கான தனியான பிறை கமிட்டி ஒன்றை உருவாக்குவது சம்பந்தமாக கலந்துரையாட ஆரம்பித்தார்கள். இதே வேளை, நாட்டின் பிற பகுதிகள் அ.இ. ஜ. உலமாவின் கருத்தை மதித்து, வியாழக் கிழமை நோன்பு நோற்றன. இம்முரண்பாடு தொடர்பில் கிண்ணியா மக்களுடன் கதைத்த போது, வியாழக் கிழமைதான் பெருநாள் தினம் என எனக்கு உறுதியனது. நாட்டில் பெரும்பாலானவர்களின் நிலையும் இதுவே!.

  விடயம் அறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின் படி, இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக, ஜம்இய்யதுல் உலமா பல வாரங்களுக்கு முன்னதாகவே தனது முடிவை எடுத்திருந்தது. விடயம் தெரிந்திருந்ததால், ஜ. உலமாவின் முன்னணி அங்கத்தவர்கள் பலர் வியாழனன்று நோன்பு நோற்கவில்லை. தற்போதைய தலைமையின் கீழ் வேகமாகத் தனது நம்பகத் தன்மையை இழந்து வருகின்ற ஜம்இய்யதுல் உலமாவின் கவலை தருகின்ற நிலையே இதுவாகும்.

  இதே வேளை, அகில இலங்கை ஜ.உ கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தது. இவ்விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனப் பூச்சாண்டி காட்டுவதற்கே இச்சந்திப்பு என பலரும் கருதினார்கள். தெளிவான நிகழ்ச்சி நிரல் வழங்கப்பட்டு, பிறை கண்டிருந்த மூதூர் மக்களும் அழைக்கப்பட்டால் மாத்திரமே இதில் கலந்து கொள்ள முடியும் என கி.ஜ.உ தெரிவித்தது.

  எவ்வாறாயினும், கடந்த 16 ஆம் திகதி இரு தரப்பினருக்கும் மத்தியில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கிண்ணியா சார்பாக 35 அங்கத்தவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஏற்றுக்கொள்ளாததன் மூலம் கொழும்பு ஜம்இய்யதுல் உலமா தவறொன்றை இழைத்திருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  இரு தரப்பினராலும் வெளியிடப்பட்டு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.ஏ. முபாரக் அவர்கள் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கையின் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

  01. கிண்ணியா உலமா சபையுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, புதன் மாலை பிறை தென்பட்டிருப்பதை உறுதிப்படுத்துவதோடு, வியாழன்று பெருநாள் கொண்டாடியதையும் சரியென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுதிப்படுத்துகின்றது. இதே நேரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவித்தலுக்கு அமைவாக வெள்ளிக் கிழமை பெருநாள் கொண்டாடியவர்களும் சரியையே செய்திருக்கிறார்கள்.
  (இது மக்களின் காதுகளில் பூ சுற்றி, ஜ.உ தலைவரின் மதிப்பைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட அறிக்கை. சரியும் பிழையும் எவ்வாறு ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியும்? இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணாக முன்னெப்போதும் இல்லாத வகையிலான இத்தவறை மேற்கொண்டவர்கள் ஜம்இய்யதுல் உலமாவிற்குப் பொறுத்தமானவர்கள் தானா?).
  02. வானொலியில் ஒலி பரப்பான ரிஸ்வி முப்தியின் உரை கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் உணர்வுகளைப் பாதித்தமைக்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வருந்துகிறது.

  03. உலக நாடுகளில் இருந்து தகுதியானவரகளை வரவழைத்து சரியான தீர்மானத்திற்கு வருவதன் மூலம் இனி வருகின்ற காலங்களில் தேவையற்ற குழறுபடிகளும், பொது மக்கள் மத்தியில் குழப்ப நிலையும் உருவாகாமால் இருப்பதற்கான பொறிமுறையொன்றை வகுப்பதற்கும் இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

  வரலாற்றில் மிகவும் சிரமமானதொரு காலத்தைக் கடந்து கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினால், அதிகளவிலான குழறுபடிகள் காணப்படுகின்றதொரு தலைமைத்துவத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் வைத்து கொண்டிருப்பது சாத்தியமில்லை.

  ஜம்இய்யதுல் உலமா மீது கோபமும், மரியாதை இன்மையும் முஸ்லிம் சமூகத்தில் வேகமாகப் பரவி, அது தனது மதிப்பை இழந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.

  சமூகத்தின் அவசியப்பாடுகளுக்கு ஏற்ப ஜம்இய்யதுல் உலமாவின் ஓட்டை, உடைசல்களை சரி செய்வதென்பது காலத்தின் தேவையாகும்.

  தனிமனித ஆதிக்கம் இல்லாத, வார்த்தையிலும், செயல்பாடுகளிலும் தக்வா பிரதிபலிக்கின்ற, சமூகத்தின் நலன்களை மனதில் நிறுத்திய, சமூகத்தின் மரியாதையும், நம்பிக்கையும் காணப்படுகின்ற நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்இய்யதுல் உலமா ஒன்றே இன்றைய காலத்தின் தேவையாகும்.

  எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லாத, அரசியலில் ஈடுபடாத, அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாத, முஸ்லிம் சமூகத்தின் சமய உரிமைகளுக்காகப் பயமின்றி வாதாடுகின்ற, ஏழைகளையும், பணக்காரர்களையும் ஒரே மாதிரியாக மதிக்கின்ற, ‘நிழல்’ வியாபாரிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளாத, உலகம் சுற்றாமல் நாட்டில் சமூகத்தோடு இருந்து, சமூகத்தின் காதுகளாகவும், கண்களாகவும் செயற்படுகின்ற தலைமைகளே இன்றைய காலத்தின் தேவையாகும்.

  Azmin

  ஓகஸ்ட் 22, 2013 at 1:02 பிப

  • //risan
   21/08/2013 at 9:59 pm

   6.09.2006 ஆம் திகதி அதன் தலைமையகத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சார்பிலும் பெரிய பள்ளிவாசலின் சார்பிலும் சில தீர்மானங்களை ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து பிறை பற்றிய தீர்மானங்கள் யாவும் பிறைக்குழுவின் குறிப்பிட்ட 05 தீர்மானங்கள் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டு வந்தன.

   தீர்மானங்கள் வருமாறு:

   (1) உள்நாட்டு வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
   (2) பிறை பார்ப்பது என்பது வெற்றுக் கண்களால் பார்ப்பது என்பதை அடிப்படையாகக் கொள்ளப்படும்.
   (3) ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்களுக்கு தென்படுவது சாத்தியம் அற்றது என நம்பகரமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து வானியல் அடிப்படையான அந்நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதோடு அதன் அடிப்படையில் அன்றைய தினம் பிறை காணாத நாளாக கொள்ளப்படும்.
   (4) வானியல் துறையில் புலமை பெற்ற அறிஞர் குழு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் குழுவிற்கு துணையாக செயற்படும்.
   (5) பிறை வெற்றுக் கண்களுக்கு தென்படுவது அசாத்தியமானது என தெரிவு செய்யப்பட்ட நாளில் ஒருவர் அல்லது பலர் பிறை கண்டதாக கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமையகத்திற்கு கட்டுப்படல் என்றவகையில் முஸ்லிம் சமூகத்திற்கு இணைந்து செயற்படல் என்ற வகையில் குறித்த நாளில் நோன்பு நோற்கவோ பெருநாளைக் கொண்டாடுவதற்கோ பிறரை விண்டவோ பிரகடணப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் பிறையைக் கண்டதன் அடிப்படையில் செயற்படும் அனுமதியை பெறுவர்.

   இத்தீர்;மாணத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அன்றைய நாள் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர், அதன் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ. றிஸ்வி முப்தி ஒப்பமிட்டு இவ்வறிக்கையை எடுத்துள்ளனர்.

   இவ்வறிக்கையை மேலும் உறுதிப்படுத்துமுகமாக 15.08.2007 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு 12 மீரானியா ஜும்ஆ மஸ்ஜிதில் நாட்டிலுள்ள அறபிக் கல்லூரி உஸ்தாத்மார்களுக்கான மாநாட்டில் மேற்படி தீர்மானம் இரண்டாம் தடவையாக ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்;டது.

   அத்துடன் சென்ற 2011 ஜுலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற முதலாவது பிறை தேசிய மாநாட்டிலும் இதே தீர்மானங்கள் மூன்றாம் முறையாகவும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் நாட்டிலுள்ள ஜம்இய்யாவின் மாவட்ட, பிராந்தியக் கிளைகளின் உலமாக்கள் மடடுமின்றி கல்விமான்கள் வானியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

   அதாவது குறிப்பிட்ட 05 தீர்மானங்களும் முறையே 06.09.2006 ஃ 15.08.2007 ஃ 16.07.2011 என மூன்று முறைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அப்படியானால் கிண்ணியாக்கிளையினருக்கு இந்தத் தீர்மானங்கள் பற்றி ஒன்றுமே தெரியாதா? அல்லது இந்தத் தீர்மானங்களை அறிந்தும் இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்தார்களா? என்ற கேள்விகளுக்கு அவர்களே பதில் சொல்ல வேண்டும்.

   கண்ட பிறை உறுதியாக இருந்து அது மறுக்கப்படுமானால்!

   பிறை கண்ட விடயம் தமக்கு உறுதியாக இருந்து அதனை பொறுப்பாளர்கள் மறுத்தால் என்ன செய்ய வேண்டும்? என்ற இந்த சிறிய விடயத்தையாவது கிண்ணியாக்கிளை அறியவில்லையா? சாட்சி மறுக்கப்படும் போது ஒருவகையில் தாம் அதனை அமுல்படுத்த முடியுமே தவிர பிறரைத் தூண்டக் கூடாது என்பதே சரியான தீர்ப்பாகும். ஏனெனில் அதன் மூலம் உம்மத்துக்கு மத்தியில் பிளவுகள் சர்ச்சைகள் ஏற்படலாகாது என்தே இதன் பிரதான நோக்கமாகும்.//

   //ஜம்இய்யதுல் உலமா மீது கோபமும், மரியாதை இன்மையும் முஸ்லிம் சமூகத்தில் வேகமாகப் பரவி, அது தனது மதிப்பை இழந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.//
   இப்படி கோபபடுபவர்கள் இதட்கு முன்னரும் பழய கோபத்துடன் இருப்பவர்கள் அன்றி புதிதாக யாரும் இல்லை??? இவர்களை சமூகம் என்றால் கோபபடாமல் என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் மக்களை சமூக சமுத்திரம் என்றுதான் அழைக்க வேண்டும்???

   A.M Mohammed Fashlin

   ஓகஸ்ட் 22, 2013 at 2:15 பிப

   • சகோதரரே ! இந்த விவகாரத்தில் வம்பு வளர்க்க விரும்பவில்லையெனினும் மேலே குறிப்பிட்டுள்ள 5 தீர்மானங்கள் குறித்த ஒரு தெளிவற்ற விடயம் இருப்பதனால் அது குறித்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வது ஜம்இய்யாவின் கடமை என்பதால் இங்கு அதனைக் குறிப்பிட விழைகின்றேன். (1) மற்றும் (2) ஆகிய தீர்மானங்கள் நபி வழி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. (4) வது தீர்மானம் ஒரு நிர்வாக கட்டமைப்பின் தேவை எனும் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று என்றாலும் (3) வது தீர்மானம் எந்த குர்ஆன் ஹதீஸ் அடிப்படையை ஆதாரமாக வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்பதை நிரூபித்தால் இந்த விவகாரத்தில் ஜம்இய்யாவின் முடிவே சரியானது என்ற முடிவுக்கு நாம் வரலாம். இதற்கு எந்த இமாம்களையோ மத்ஹப்களையோ ஆதாரமாகக் காட்டக் கூடாது. காரணம் பிறை பார்க்கும்படியான ஏவல் நபிகளாருடையது. அவர்களே அது குறித்த மாற்றுவழிகளையும் கூறியிருக்க வேண்டும். ஆயின் அதற்குரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். ஆனாலும் (5) வது தீர்மானம் 5 சதத்துக்கும் பிரயோசனமற்ற தர்க்கமுமற்ற ஒரு தீர்மானமாகும். ஏனெனில் மார்க்கத்தில் ஒன்றில் உண்டு அல்லது இல்லை என்ற தெளிவான தீர்ப்பையே நாம் காண்கின்றோம். ஆனால் இது மயக்கம் நிறைந்த தீர்வாக தோற்றம் பெற்றுள்ளது. எனவே இந்த அம்சத்தை நீக்கி விட்டால் அது முழுமை பெற்ற தீர்மானமாக ஆகிவிடும்.

    M.Ossan Salam - Doha

    ஓகஸ்ட் 26, 2013 at 4:30 பிப

    • இப்படியான ஆட்சேபனையை மூன்றுதடவைகள் மேட்படி தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்ட அந்த சந்தர்பத்தில் அல்லவா நீங்கள் தெறிவித்து இருக்க வேண்டும் அல்லது உங்கள் நண்பர்களான கின்னியா உலமாசபையினராவது தெறிவித்து இருக்க வேண்டும் தீர்மானத்தை மூன்று தடவைகளும் ஏகமனதாக ஏற்றுகொண்டுவிட்டு பின்னர் சம்மந்தம் இல்லாத இடத்தில் ஆட்சேபிப்பதுதானா உங்கள் மார்கம் உங்களுக்கு கற்றுதந்த வழிமுறை???

     இனியாவது பிறைதொடர்பில் மேட்கொள்ளபட உள்ள தீர்மானதிட்கு உரிய காலதில் வருகை தந்து உங்கள் புலமையையும் ஆட்சேபனையையும் அங்கே தெறிவித்து ஒழுங்குபடுத்துங்கள்???

     அறபு மொழி இல்லாமல் எப்படி குஃஆனை விளங்கமுடியாதோ அல்லாஹ்வின் தூதரை இந்த உலகில் உண்மைபடுத்திய மனிதர்களுக்கு காட்டிய ஸஹாப்பாக்களினதும் அவர்களின் சந்ததிகளினதும் மார்கம் குறித்த விளக்கம் இன்றி நாமாக மார்கத்தை விளங்க முயட்சித்தால் தொழுகை இல்லாத நிலையில் மதுவை ஹலால் ஆக்கும் முப்திகளும் வீதியால் போர பெண்களிடம் எல்லாம் பால்குடிக்க ஆர்வபடுத்தும் இமாம்களுந்தான் இந்த உலகில் இனி இருப்பார்கள்???

     A.M Mohammed Fashlin

     ஓகஸ்ட் 26, 2013 at 9:36 பிப

 15. மாஷா அல்லாஹ் ஒரு உண்மையான அறிஜ்ஜருக்குரிய பாணியில் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள். இவ்வாறான தலைவர்கள் தான் எமது சமூகத்துக்குத் தேவை. எடுத்த எடுப்பில் கொட்டித் தீர்க்கின்ற உணர்ச்ச்ப் பிண்டங்களை விட தூர நோக்காக ஒரு விடயத்தை அணுகுகின்ற மனிதர்கள் எமது சமூகத்தில் காண்பது மிக மிக அறிது. அந்த வகையில் ஒரு சிறந்த ஆளுமையையும் , எழுத்தில் பண்பாட்டையும் இந்த மனிதனிடம் காணமுடியுமாக உள்ளது. அல்லாஹ் அவருக்கு அருள் புரிய வேண்டும். அவரது ஆரோக்கியத்திலும் , அறிவிலும் பரகத் சைய்ய வேண்டும்.
  ஒரு பிரச்சினையில் பொங்கி எழுந்து ஆவேசமாக பேசுபவர்கள் பாமரர்கள் , தலைமை தாங்க தகுதியற்றவர்கள் (மார்க்கத்தைப் படித்தவர்களாக இருந்தாலும் கூட) என்பது பிறை விவகாரம் எமக்கு சொல்லும் ஒரு பெரிய உண்மையாகும்.

  mohammad irshad (Qassimi)

  ஓகஸ்ட் 24, 2013 at 11:53 பிப

 16. பிழைகள் அகற்றப்படுவதற்கு அல்லது களையப்படுவதற்கு, அப்பிழை எவ்வளவு காலம் நடைமுறையில் இருந்தது என்பதுவோ, அல்லது எத்தனை முறை, எத்தனை பேரால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருததென்பதோ, ஆதாரமாகிவிடக்கூடாது.

  பிழை திருத்தப்பட அது பிழை என்பது உணரப்படுவதே அதன் தகுதி. அதனை விடுத்து கூறப்படும் எவ்விதச் சாக்குப் போக்குகளும் இஸ்லாம் ஆகிவிடவோ, நியாயம் ஆகிவிடவோ முடியாது . தீர்ப்புக்கள் அனைத்தும் குர்ஆனின் அடிப்படையில் எடுக்கப்பட்டால் சர்ச்சையே இருக்காது என்பதை இத்தருணத்திலாவது தலைமைகள் உணர வேண்டும்.

  nizamhm1944

  ஓகஸ்ட் 27, 2013 at 9:00 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: