Lankamuslim.org

One World One Ummah

பீச் பார்க் நிர்மாணம் மஸ்ஜித் இணக்கப் பாட்டுக்கு அமைய முன்னெடுப்படும்

leave a comment »

hareesஅஸ்லம் எஸ்.மௌலானா: இடை நிறுத்தப்பட்டுள்ள சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகளை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இணக்கம் காணப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் முன்னெடுப்பதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களிடம் அனுமதி வழங்கியுள்ளார்.

சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள தடைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (30) பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கொழும்பில் அமைந்துள்ள கரையோர பாதுகாப்பு திணைக்கள தலைமையகத்திற்கு சென்று அதன் பணிப்பாளர் நாயகமான கலாநிதி அனில் பிரேமரட்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்ட விதி முறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்து அப்பணிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் தலை தூக்கியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இதன்போது விபரித்துக் கூறினார்.

தான் கல்முனை மேயராக பதவி போது 2008ஆம் ஆண்டு முறையான அனுமதியுடன் தன்னால் அமைக்கப்பட்ட பீச் பார்க் தற்போதைய மேயரினால் விஸ்தரிக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது என சுட்டிக்காட்டிய ஹரீஸ் எம்.பி. இவ்வேலைத் திட்டத்தின் போது கல்முனை மாநகர சபை சில தவறுகளை விட்டுள்ளதை தாமும்  மாநகர சபை நிர்வாகமும் ஏற்றுக் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

இந்த சர்ச்சை தொடர்பாக கடந்த வாரம் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் கல்முனை மாநகர சபை மேயர் உள்ளிட்ட அதிகாரிகளும் மாகாண சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் பலரும் ஒன்று கூடி கலந்துரையாடி சில இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம் எனவும் ஹரீஸ் எம்.பி. குறிப்பிட்டார்.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜெசூரினால் முன்வைக்கப்பட்ட  திருத்தங்களை ஏற்றுக் கொண்டு அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட இத்தீர்மானங்களின் பிரகாரம் இந்த பீச் பார்க் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது எனவும் அதற்கான அங்கீகாரத்தை தங்களிடம் கோருவது எனவும் அக்கூட்டத்தில் ஏகமனதாக் முடிவு செய்யப்பட்டதாகவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் ஹரீஸ் எம்.பி. எடுத்துரைத்தார்.

அத்துடன் அக்கூட்டத் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையையும் பணிப்பாளர் நாயகத்திடம் அவர் கையளித்தார்.

இந்த பீச் பார்க் நிர்மாண வேலைகள் மேலும் கால தமதமடையுமாயின் இதற்காக நெல்சிப் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி நவம்பர் மாதமளவில் திரும்பிச் சென்று விடும் எனவும் ஹரீஸ் எம்.பி. இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆகையினால் இவ்வேலைகளை மீண்டும் உடனடியாக ஆரம்பித்து பீச் பார்க் திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அனுமதி வழங்கி உதவ வேண்டும் என பணிப்பாளர் நாயகத்திடம் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

ஹரீஸ் எம்.பி.யினால் கூறப்பட்ட நியாயங்களை ஏற்றுக் கொண்ட கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனில் பிரேமரட்ன பள்ளிவாசல் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் குறித்த மூன்று பிரதான திருத்தங்களுடன் பீச் பார்க் நிர்மாண வேலைகளை முன்னெடுப்பதற்கு பணிப்பாளர் நாயகம் அங்கீகாரம் வழங்கினார்.

சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணம் முறைகேடாக இடம்பெறுவதாக சில தனி நபர்களும் பொது மக்கள் சார்பான அமைப்புகளும் பெருமளவிலான முறைப்பாடுகளை செய்ததைத் தொடர்ந்து அது குறித்து தமது திணைக்கள உயர் அதிகாரிகள் குழுவொன்றை கொழும்பில் இருந்து அனுப்பி அங்கு இடம்பெற்றுள்ள சட்டத்திற்கு முரணான வேலைகளையும் தவறுகளையும் உறுதிப்படுத்திய பின்னரே தாம் சட்ட நடவடிக்கை எடுத்து அந்த நிர்மாண வேலைகளை இடை நிறுத்த உத்தரவிட்டதாக பணிப்பாளர் நாயகம் ஹரீஸ் எம்.பி.யிடம் சுட்டிக்காட்டினார்.

தற்போது கரையோரப் பாதுகாப்பு திணைகள்த்தின் விதி முறைகளுக்கு அமைவாக அந்த பிழைகளை திருத்தம் செய்வதற்கு முன்வந்திருப்பதால் பீச் பார்க் நிர்மாணத்தை தொடர்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது எனவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்,

இதற்கான திருத்த வரைபடத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸைக் கேட்டுக் கொண்டார்.

இதன்போது கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனில் பிரேமரட்ன, தமது திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹரீஸ் எம்.பி. தெரிவித்த விடயங்கள் குறித்து மேலதிக விபரங்களை பெற்றுக் கொண்டதுடன் இது தொடர்பிலான அறிக்கையையும் கோரினார்

Advertisements

Written by lankamuslim

ஜூலை 31, 2013 இல் 11:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: