Lankamuslim.org

தமிழ் பெண்களை வர்ணிக்கும் அஸ்வர், முஸ்லிம் பெண்களின் பிரச்சினை பற்றி பேசுவாரா ?

with 7 comments

7தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஆளும் தரப்பு எம்.பி அஸ்வர், பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையானது அருவருக்கத்தக்கதாகும். ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே அசௌகரியப்படுத்தும் செயலாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவி  செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சண். குகவரதன் மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவரான, அஸ்வர் எம்.பி ஏனைய சமூகத்தினருக்கு பிழையான முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அஸ்வர் எம்.பி ‘வெள்ளவத்தையில் தமிழ் பெண்களின் ஒய்யார நடையை’ ரசித்துக்கொண்டே இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். வெள்ளவத்தையில் தமிழ் பெண்கள் ஒய்யாரமாக நடப்பதாகக் கூறும் அஸ்வர் எம்பிக்கு தமிழ் பெண்களின் பாதுகாப்பிற்கும், சுதந்திரமான நடமாட்டத்திற்கு உள்ள ஆபத்துக்கள் தெரியவில்லை.

கொழும்பில் தாலிக்கொடிகள், சங்கிலிகள், கொள்ளையடிக்கப்படுகின்றன. இப் பிரதேசங்களில் குறுக்குப் பாதைகளில் தமிழ் பெண்கள் தனியாக நடந்து சென்றால் பணம் பறிக்கப்படுகின்றது. மாணவிகளுக்குக் கூட இதே நிலைதான்.இந்த யதார்த்தம் இவரது கண்களுக்குத் தெரியவில்லையே. அதிலும் இன்றைய புனித ரமழான் காலத்தில் மூத்த அரசியல்வாதியொருவர் இவ்வாறு தமிழ் சமூகத்தை இழிவுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தந்தையைப் போன்ற ஒருவர் ஒய்யார நடை பற்றிப் பேசுவதா?

இவரது இவ் உரையானது பிழையான முன்னுதாரணமாகும். நாளை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக எவராவது பிரஸ்தாபிக்கும் போது, ஏன் புதுக்கடையில், மாளிகாவத்தையில் முஸ்லிம் பெண்கள் ஒய்யாரமாக நடந்து செல்கின்றனரே, அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று நாம் பதில் அளித்தால் எப்படி இருக்கும் என அஸ்வர் சிந்திக்க வேண்டும்.

ஆனால், நாம் அப்படி தரக்குறைவாக பேச மாட்டோம். அதுமாத்திரம் அல்ல, முஸ்லிம் சகோதரிகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள அபாயா அணியும் பிரச்சினை பற்றி நமது தலைவர் மனோ கணேசன் தான் பேசுகின்றார். இதுபற்றி அஸ்வர் பேசுவது இல்லை. அதுமட்டும் அல்ல, இப்படி ஒரு பிரச்சினையே முஸ்லிம் பெண்களுக்கு இல்லை என்பது போல் அஸ்வர் அரசுக்கு ஆலவட்டம் வீசுகின்றார்

பாராளுமன்றம் நாட்டின் உயர்பீடம். இங்கு பேசும்போது, பொறுப்புடன் பேச வேண்டும். ஒரு சமூகத்தின் பெண்களை இழிவுபுடுத்திப் பேசும்போது, இன்னொரு நாள் தமது சமூகத்தின் பெண்களுக்கு எதிராகவும் அது ‘பூம ரேங்’ ஆகத் திரும்பும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் நாம் காணும் சுதந்திரம் மேல் பூச்சாகத்தான் இருகின்றது.  தமிழ் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி, வரையறைக்கப்பட்ட கலாச்சார சுதந்திரத்துடனேயே  வாழ்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.  இன்று இந்த கலாச்சார சுதந்திரம் முஸ்லிம் மக்களுக்கும்கூட இல்லை.  இந்த கசப்பான உண்மைகளை அடுத்த முறை வாயை திறக்கும் முன்னர் முன்னாள் ஐதேக, இந்நாள்  ஆளுந்தரப்பு தேசிய பட்டியல் எம்பி அஸ்வர் உணர்ந்து கொள்ள வேண்டும் என சண். குகவரதன் மேலும் தெரிவித்துள்ளார்.TC

Advertisements

Written by lankamuslim

ஜூலை 29, 2013 இல் 9:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. ,திரு குகவரதன் அவர்களே, …….. அஸ்வர் செய்த அந்த உரை உண்மையிலே தமிழ் முஸ்லிம் என்று இல்லாமல் முழு சமுதாயத்தையுமே கேவலப்படுத்துகிற ஒரு உரை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,,,அந்தக் ……. ஞானசரையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்,,,இந்த இரு …….களும் வாயைத் திறந்தாள் அவனுகளின் மூளை off ஆகும்,,எனவே அஸ்வர் …… சொன்னதை முஸ்லிம்களின் கருத்தாக எடுக்க வேண்டாம்,,

  Mohamed A. A

  ஜூலை 30, 2013 at 1:17 முப

 2. என்ன ஐயா இந்த …. தாத்தாவ பற்றி உங்களுக்கு என்ன தெரியும். கவிஞன் என்றும் இளையவன். உங்களுக்கு கவி பாட முடியாது அதனால்தான் இவர்மேல் பொறாமை. எமது முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்துள்ள பொக்கிஷம். முஸ்லிம் பெண்களைப்பற்றி இவர் கலலைப்படமாட்டார். பள்ளிவாசல்கள் உடைப்பது மூடுவதுபற்றி பேசுவதில் என்ன இன்பமுள்ளது. சிங்கார ஒய்யார நடைபற்றி பேசினால்தான் திரிலாயிருக்கும.

  Musalman

  ஜூலை 30, 2013 at 1:47 முப

 3. we are not call him Azwer Haji. Because He already “MURTHATH” Ones he said HON; President is a GOD, Therefor don’t tel him he is a Muslim also his statement not representing as a Muslim statement

  hathafe

  ஜூலை 30, 2013 at 2:46 முப

 4. வயதான இந்த மனிதன் நோன்பு காலத்திலும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைவதைப் பார்த்தால் …………………. இல்லை போலும்.

  Daoud Tharik

  ஜூலை 30, 2013 at 3:40 முப

 5. முதலில், இவர் எக்காலத்திலும், இக்காலத்திலும் முஸ்லிம்களின் பிரதிநிதி அல்ல என்பதை அன்பர் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பேசுவதை முஸ்லிம்கள் பேசுவதாக எண்ணி .முஸ்லிம்களுக்கு எதிராகத் தாமும் அவ்வாறு பேசலாம் என்ற எண்ணத்தை வளர்க்காதீர். குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும் உரிமை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உண்டே, தவிர அப்பாவி முஸ்லிம்களைத் தண்டிப்பதல்ல. அது இன ஐக்கியத்தை, அமைதி வாழ்வை விலையாக்கிவிடும். பாராளுமன்றில் இதுவரை இப்படியொரு வயசாளி, நோன்பு காலத்தில், இவ்வாறான எக்ஸ தர ..த்தை வாந்தி எடுத்த சரித்திரம் உண்டா?

  இவர் பிரேமதாஸ அவர்களின் காலத்தில் …யதற்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டதே பாராளுமன்றப் பதவியும், அமைச்சுப் பதவியும். அடிவருடலும், அதே வேளை காலைவாரிவிடும் கலையிலும் கைதேர்ந்த, மனித சமூகத் துரோகத்தை, தன்னை வளப்படுத்தப் பாவிப்பவர். இப்போதைய அவரது கூற்றும் அவ்வாறானதே! இது அவருடைய எல்லையல்ல.

  தமிழில் ஒரு பழமொழி, நக்கிற ….க்கு செக்கென்ன சிவலிங்கம் என ஒன்று இருக்கிறது. எங்கு அதற்கு ருசி தெரிகிறதோ அங்கெல்லாம் நக்கும்.

  nizamhm1944

  ஜூலை 30, 2013 at 7:49 முப

 6. Aswar is not a Muslim, not a human…. That is a …………….. we can go on our way.

  Aman Anver

  ஜூலை 30, 2013 at 4:57 பிப

 7. This …….. Aswer is a stupid. He has all qualities of a MUNAFIQ

  Fathima Zahra Anver

  ஜூலை 31, 2013 at 8:53 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: