Lankamuslim.org

One World One Ummah

இனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ

with 2 comments

1இந்தியாவின் தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு பௌத்த பிக்குகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் ஒரு  பௌத்த பிக்கு மீது தாக்குதல் நடாத்தப்பட்டது இந்த  சம்பவங்களின் பின்னணியில்,தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளது என பொதுபல சேனா தெரிவித்திருந்தது .

இதை கண்டித்து மறுத்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்    பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் உருவாக்கும் நோக்கில் அவற்றுக்கு ஆதரவளித்து நீர் ஊற்றி வளர்த்தெடுக்கும் அமைப்பே பொதுபல சேனா இந்த அமைப்பு நாட்டில் தொடர்ந்தும் இயங்குமானால் நாட்டின் அமைதியை மீண்டும் நாசம் செய்துவிடும் , மீண்டும் வெடிகுண்டு கலாசாரத்தை கொண்டுவந்து விடும் இந்த  அமைப்பை அரசாங்கள் தடை செய்யவேண்டும்எ ன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  உப தலைவர் எம்.டி.எம். பர்சான் தெரிவித்துள்ளார் .

தமிழ்நாட்டில் இலங்கை பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல் பின்னணியில் தமிழ் நாட்டு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான தவ்ஹீத் ஜமாத்தே என்ற சூத்திரதாரி அமைப்பு உள்ளது. தமிழ் நாட்டின் தவ்ஹீத்  ஜமாத்தின் தலைவர் ஜெய்னுல் லாப்தீனுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாகவுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உள்ளது. அதேபோன்று இலங்கையிலுள்ள தவ்ஹீத் ஜமாஅத்துடனும் தொடர்புகள் உள்ளன. எனவே இந்த கூட்டணி இணைந்து இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டுள்ளன என்று பொதுபல சோனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதுதொடர்பில் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார் .

இது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இரு மதங்களுக்குள் பிரச்சினையென்றால் அதனை சுமுகமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதனைவிடுத்து அடிதடியாலோ, காடைத்தனமாகவோ பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

இந்நிலையில் இந்தியாவின் தமிழக பகுதிகளில் வைத்து இலங்கை பிக்குகள் தாக்கப்பட்ட பின்னணியில் தவ்ஹீத்  ஜமாத் அமைப்பு இருப்பதாக அப்பாட்டமான பொய்யை இனவாத அமைப்பான பொதுபல சேனா சுமத்தியிருந்தது.30 வருடகால யுத்தம் முடிவடைந்து சிங்கள-முஸ்லிம் மக்கள் இடையே சுமுகமான உறவு காணப்படும் இந்நேரத்தில் பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு இனவாதத்தை தூண்டி நாட்டில் மீண்டும் ஒரு இனமுரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

தமிழகத்தில் வைத்து பிக்குகள் தாக்கப்பட்டதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், ஈழ உணர்வாளர்களும், வைகோவின் ஆட்களும், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களுமே இருக்கின்றனர்.

இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என்று அவர்களே ஒப்புக்கொண்டனர். மேலும் இந்திய ஊடகங்களிலும் தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டன. இவை அனைத்தும் தமிழ் பெயர்கள். மேலும் அவர்களின் மொழிப் பிரயோகமும் இதனை தெட்டத்தெளிவாக விளக்குகின்றது. ‘சிங்கள நாயே ஓடிப்போ, தமிழனை கொன்று விட்டு இங்கு வந்தாயா….”என கூறித்தாக்கினர். இந்த வார்த்தைப் பிரயோகங்கள் தமிழ் இனவாத சக்திகள் தான் மேற்கொண்டுள்ளன என்பதை புலப்படுத்தி காட்டுகின்றது. எனவே இலங்கை பௌத்த பிக்குகள் மீதான இந்தத் தாக்குதலை இந்துத்வ கட்சிகளும், புலிஆதரவாளர்களுமே மேற்கொண்டுள்ளனர்.

இந்த விடயம் சாதாரண ஒரு சிறுவனுக்கு கூட விளங்கிகொள்ள முடியும். ஆனால் இனவாத அமைப்பான பொதுபல சோனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விளங்கவில்லை. இதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.அதாவது பொதுபல சேனா உள்ளிட்ட சில அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு நாட்டில் குழப்பகரமான நிலையை உருவாக்கி இனவாதத்தை ஏற்படுத்துவதே அவர்களின் அரசியல் நோக்கமாகும்.

நாங்கள் எமது நாட்டுக்கு சார்பாகவே செயற்படுகின்றவர்கள். நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்கள் அல்ல. இலங்கைக்கு எதிராக செயற்படும் அமெரிக்காவுக்கு எதிராக நாங்கள் வீதிக்கு இறங்கி பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆனால் இதனையெல்லாம் மறந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அமைப்பான பொதுபல சோனா எங்கள் மீது அப்பாட்டமான பொய்யை சுமத்தியுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள், ஈழ உணர்வாளர்கள், மாணவர்கள் என பலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வைகோ, சீமான் ஆகியோர் ஜெனீவா சென்று புலிகளுக்கு சார்பாக கதைத்து வருகின்றனர்.

ஆனால் பொதுபல சேனா இதற்கு எதிராக செயற்படவும் இல்லை. எதிராக கருத்து தெரிவிக்கவும் இல்லை. எனவே பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை நீர் ஊற்றி ஆதரவளித்து வளர்த்தெடுக்கும் அமைப்பே பொதுபல சேனா. இந்த அமைப்பு நாட்டில் தொடர்ந்தும் இயங்குமானால் நாட்டின் அமைதியை மீண்டும் நாசம் செய்துவிடும் , மீண்டும் வெடிகுண்டு கலாசாரத்தை கொண்டுவந்து விடும் இந்த இந்த அமைப்பை அரசாங்கள் தடை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

1 2 3

Advertisements

Written by lankamuslim

மார்ச் 20, 2013 இல் 6:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. Haffi -

  மார்ச் 21, 2013 at 10:42 பிப

 2. Some sinhala english meda say this !!!!!!!!!!

  The attack on the Buddhists monks in Tamil Nadu has been placed on Sri Lanka’s Thauheed Jamaana Muslim organisation by some factions. This has been condemned by the secretary of their organisation Abdul Rasin Rafikdeen.

  The organisation had quipped that the assaults on Buddhist monks at Chennai and Tamil Nadu are thoroughly condemned by their organisation and in future such acts should never be allowed to happen had been stressed by them

  Adding further the Secretary of the Thauheed Jamaana organization Abdul Rasin Rafikdeen had added that we do have connections with our branch organisation in Tamil Nadu but were never indulged in such acts. It is true we made our voice for the Tamil people. At the Geneva talks we are with Sri Lanka. We challenge anyone if he could prove the allegations pointed at us in this Bikkhu assault.

  Haffi -

  மார்ச் 21, 2013 at 11:02 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: