Lankamuslim.org

One World One Ummah

கட்டுப்படுதல் அவசியம் – அதே நேரம் விமர்சிப்பதும் அவசியமே!

with 2 comments

முஹம்மத் றஸாத்

You Set the Timeகட்டுப்படுதல் அவசியம் – அதே நேரம்

விமர்சிப்பதும் அவசியமே!

காரணம்..

நாங்கள் மந்தைகளல்ல – உமரை

நேசிக்கும் முஸ்லிம்கள்!

ஊறுகாயாய் மாறிவிட்டது

இலங்கை முஸ்லிம் சமூகமா அல்லது

தலைகளா ???

தேவை என்றால் தொட்டுக் கொள்வதற்கும்

இல்லை என்றால் தூக்கி எறிவதற்கும்

நாம் என்ன பகடைக் காய்களா ???

காய்கள் கனியாகுமாம்! ஆனால்

கிளைகள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றதே!!!

கழித்தல் நின்றுவிடுமோ ! இல்லை

கூட்டுதல் நின்றுவிடுமோ ! இரண்டும்

நிற்கப்போவதில்லை,

இதுதான் யதார்த்தம், மாறானதேனில்

கண்களைத் திறந்து கொண்டு

கனவு காண்கின்றீர்கள்.

மரம் சாய்ந்து விடும் நிலை வந்தால் !

முட்டுக் கொடுப்பது முஸ்லிம் சமூகமே

முட்டாள் தலைகளல்ல !

முடிவுகளை நியாயப்படுத்த

சமாதானங்கள் புறப்பட்டு விட்டன !

அதுவல்ல இது இதுதான் அது !

அல்லது

அதுதான் இது இதுவல்ல அது !

என்று கூற.

இன்னுமொரு ஜெனீவா வருகின்றது !!!

இதற்கும் முட்டுக் கொடுப்போமா ? அதில்

இலங்கையின்

இனவாத இருப்பையும் – முஸ்லிம்களின்

நிச்சயமற்ற இருப்பையும்

மூடி மறைப்போமா ???

சந்தர்ப்பங்களை சாகடிப்வர்களே!

நீங்கள் உணரவில்லையா ? அன்றேல்

அறியவில்லையா ?

முஸ்லிம்களை நோக்கி

முதன் முதலாய் தூக்கிய ஆயுதம்

அவர்களுக்கு எதிராகவே திரும்புவதை?

பொது ‘பல்லா’ சேனாவும்,அதற்கு

விசில் ஊதுபவர்களும்

உணர்ந்துகொள்ளவும்

மக்கள் தெரிந்துகொள்ளவும் உள்ள

சந்தர்ப்பத்தை? –

சாகடித்து விட்டீர்களே …

இதற்குத்தான் சொல்வதோ…

நீந்தத் தெரியாதவனை துளையிட்ட

படகில் பயணம் அனுப்புவதென்று!

இங்கு –

படகை தயாரித்தவர் யாரோ?

வழி அனுப்புவது யாரோ?

பயணம் செய்பவர் யாரோ?

இது உங்கள் பதிலுக்கு.

விட்டுக்கொடுப்பா ? விவேகமா ?

எதிர்காலம் பதில் சொல்லும் – அது

விவேகமற்ற விட்டுக்கொடுப்பு.

தலைகளே விட்டுக்கொடுங்கள்

எமது உரிமைகளையல்ல – உங்கள் கதிரைகளை

காத்திரமானவர்கள்

காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 13, 2013 இல் 5:50 பிப

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. நன்றி நண்பரே!
  சிறந்த கவியாக வடித்திருக்கிறீர்கள்… என் எண்ணங்களையும் சேர்த்து…

  Sanoon Mohideen

  மார்ச் 13, 2013 at 10:16 பிப

 2. முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் சில மதவிரோத சக்திகளால் ஏற்படுத்தப்பட்டு வரும் அட்டூழியங்களையும் நிட்டூரியங்களையும் களைய வேண்டிய பொறுப்பு இந்நாட்டின் அதிகாரபூர்வ அரசின் கடமை.

  ஒரு நாட்டில் ஒரு இனம் பெரும்பான்மையாக இருப்பதன் காரணமாக, இன்னொரு சிறுபான்மைச் சமூகம் நசுக்கப்படுவதும், அவர்களின் மத அனுஷ்டானங்களைக்கூட சுதந்திரமாக நிறைவேற்ற முடியாத நிலையை உருவாக்குவதும், அவர்களது வழிபாட்டுத் தலங்களை பட்டப்பபகலில் பலரும், அரச அதிகாரிகள் முதல் பொலிஸார் வரை பார்த்திருக்க தகர்ப்பதும், அதைப் பார்த்துக் கொண்டு அரசு தனக்கு எதுவும் தெரியாதது போலவும், தமக்கு இதுவரை யாரும் முறையிடவில்லை எனவும் கூறிக் கொண்டிருப்பதும் விசனத்துக்குரியது அல்ல, அது கண்டனத்துக்குரியது.

  பெரும்பான்மை என்ற தகுதி, மற்றைய சிறுபான்மையை அடக்கியாளக் கொடுக்கப்பட்ட அதிகாரம் அல்ல என்பதை அரசு தனது சட்டத்தைப் பாவித்து, இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடும் காடையரை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும். இதுவே அனைவரும் வேண்டுவது. நாட்டுக்கு நலம் பயப்பது.

  பெரும்பான்மை என்ற குறுகிய வட்டத்துள் சிந்தித்து, இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அழி‌வுகள் இன்னும் நமக்குப் பாடம் புகட்டவில்லை என்றால் அதனை அழிவின் அறிகுறியாகவே கருத வேண்டியுள்ளது.

  இந்த நாட்டில் அனைத்து சாராரும் தமது மத நடவடிக்கைகளை தங்குதடையின்றிச் செய்வதற்கு இந்நாட்டின் அதியுயர் அதிகாரம் கொண்ட அரசியல் யாப்பு கூறிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு அது அனைவரினதும் பிறப்புரிமையுங்கூட.

  அதைவிடுத்து, இந்நாட்டு முஸ்லிம்கள் மூன்றாந் தர பிரஜைகள் போன்று, ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள், இந்நாட்டுக்கு ஆதரவு தெரிவித்ததால் எமக்கு வரும் அநியாயங்களை தட்டிக் கேளுங்கள் என அரசிடம் கையேந்திக் கொண்டிருப்பது சுத்த கையாலாகத்தனம் மட்டுமல்ல. உரிமையைப் பறிகொடுக்கும் ஈனத்தனம். அடிமைத் தனத்தின் அவலக குணம்.

  நம்மைப் பாதுகாக்க வேண்டியது இந்நாட்டை ஆளும் அரசின் கடமை. முஸ்லிம் நாடுகள், இந்நாட்டுக்கு ஆதரவு தெரிவித்தததைக் காரணமாக்கி நாம் அரசிடம் எம்மைக் காப்பாற்றும்படி வேண்டினால், நாளை இதே முஸ்லிம் நாடுகள் இந்த நாட்டுக்கு எதிராக வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் நாம் எதைச் சொல்லி நமது உரிமையை கேட்பது. அச்சந்தர்ப்பத்தில் நாம் இந் நாட்டில் உரிமையுடன் வாழ முடியாதா? மேலும் அரபு நாடு ஒன்று இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பிரச்சினை கொடுத்தால் அப்போது இந்நாடுதானே தட்டிக் கேட்க வேண்டும்!

  ஆதலால், அரபு நாடுகள் இந்நாட்டுக்கு ஆதரவு கொடுத்துத்தான் நாம் இங்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டுமா? அரபு நாடுகள் ஆதரவு கொடுக்காத போது நமக்கு அந்த சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாதா? என்பதைச் சிந்தித்து, நாம் இங்கு சுதந்திரமாக வாழ யாருடைய தயவும் தேவையில்லை என்பதை உணர்ந்து, அது நமதும் பிறப்புரிமை என்பதை வலியுறுத்தி, நமது உரிமைக்காகக் குரல் கொடுப்போம். அதைவிடுத்து சலுகை வாழ்வைப் பெறவோ அதன் மூலம் அடிமைகளாக இந்நாட்டில் எம்மை ஆக்கிக் கொள்ள முயலாதிருப்போம்.

  இந்த நாட்டுக்கு ஒரு அபகீர்த்தி வரும்போது அதனைப் போக்குவதற்காக நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டியது, பொறுப்பும். தேசப்பற்றுமுள்ள ஒவ்வொரு பிரஜையினதும் கடமை. நமக்கு இங்கு யாரோ அநியாயம் செய்கின்றனர் என்பதற்காக அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது. அதே வேளை நமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதும், சாத்வீகமாகப் போராடுவதும் நமது கடமையும், உரிமையுமே!

  nizamhm1944

  மார்ச் 15, 2013 at 8:41 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: