Lankamuslim.org

One World One Ummah

அரசையும் வர்த்தகர்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள பொது பலசேனா

with one comment

மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
555அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் திரு கோதாபே ராஜபகஷே அவர்களுக்கும் இடையில் பௌத்த மதகுருமார் சகிதம் நேற்று முன்தினம்  08/03/2013 இடம் பெற்றபேச்சுவாரத்தையில் “ஹலால் ” சான்றிதழ் வழங்குவதனை நிறுத்துவதற்கான உடன் பாடு காணப் பட்டதாக இன்று லங்காதீப பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்பாக கருத்து தெரிவித்த ஜம்மியாஹ்வின்  பிரதிநிதி ஒருவர் : முஸ்லிம்களுக்கு  ஹலால் எவ்வளவு முக்கியம் என்பதனை பௌத்த மத குருமார் நன்கு புரிந்து கொண்டு கதைத்ததாகவும் அதேபோல் இலங்கையின்ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஹலால் சான்றிதழ் அத்தியாவசியமானதென்பது குறித்தும் பேச்சு வார்த்தைகளின் பொது ஆராயப் பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளுடன் நேற்று 09/03/2003 கலந்துரையாடி ஏற்றுமதிதேவைகளுக்கான சான்றிதல்களை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்து ஆராயுமாறு தாம் வேண்டிக் கொள்ளப்பட்டதாகவும் அவ்வாறு ஆராயப்பட்டு எடுக்கின்ற ஒரு பொறிமுறையை அமைச்சரவை செயற்குழுவிடம் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பாது காப்பு செயலாளர்  தெரிவித்ததாகவும் மேற்படி ஜம்மியஹ்வின் பிரதி நிதிதெரிவித்தார்.

இன்று காலை இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் கூடிய வர்த்தகர்கள் சகலரும் ஹலால் சான்றிதழ் தமது உற்பத்தி சந்தைபடுத்தல் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு அவசியம் தேவை என்பதனை வலியுறுத்தியுள்ளனர்.

எனவே உள்நாட்டு சந்தைப் படுத்தலுக்கு ஒரு விதமாகவும் முஸ்லிம்களுக்கும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு வேறு ஒரு விதமாகவும் உற்பத்திகளை மேற்கொள்தல் பெரும் சிக்கலான உற்பத்திச் செலவினங்களை அதிகரிக்கின்ற அதேவேளை நம்பகத் தன்மையை பாதிக்கின்ற ஒரு நடைமுறையில் சிக்கலான பொறிமுறை என்பதிலும் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.

எது எப்படிப் போனாலும் இந்த பொதுபல சேனா  சிங்கள பௌத்தர்களுக்கும் அவர்களது பொருளாதாரத்திற்கும் காவலர்கள் என்று கூறி அவர்களது பொருளாதாரத்தை இன்று கேள்விகே குறியாக்கியுள்ளதோடு ஹலால்சான்றிதழுக்காக யார் யார் காலிலோ  மண்டியிட வைத்துள்ளது.

குறுகிய சுரண்டல் நோக்கங்களுடன் முஸ்லிம்கள் மாத்திரம் ஹலால் உற்பத்திகளைசந்தைபடுத்தல்களை ஏற்றுமதிகளை மேற்கொள்ளாது  இலங்கையின் பொருளாதாரத்திற்கு தேசப் பற்றுள்ள முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் மூலம் எத்தகைய பங்களிப்பினைச் செய்துள்ளார்கள் என்பதனை இன்று பொது பல சேனா உலகறியச் செய்துள்ளது.

ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவது முழுமையாக ஒழிக்கப் படுமானால் இலங்கை பொருளாதார ரீதியிலாக மாத்திரமன்றி அரசியல் இராஜ தந்திர ரீதியில் அரபு முஸ்லிம் உலகில் பெரும் அபகீர்த்தியை அடைந்து கொள்ள வேண்டி எற்படும் என்பதில் சந்தேகமில்லை.

தேசப் பற்றுள்ள முஸ்லிம்கள் இந்த நாட்டின் அரசிற்கும் பொருளாதாரத்திற்கும் அன்று போல் இன்று போல் என்றும் தமது பங்களிப்பை வழங்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதனை ஜனாதிபதி ,பாதுகாப்புச் செயலாலர்மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் மாத்திரமல்லாது பௌத்த மத குருமாரும்,வர்த்தகர்களும், புத்தி ஜீவிகளும், பொருளாதார நிபுணர்களும்  தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் வழங்குவதனை நிறுத்தினால் முஸ்லி ம்கள் ஹலாலான  உணவு மற்றும் பாவனைப் பொருட்களை கொள்வனவு  மற்றும் நுகர்வு செய்வர் ஆனால் பாதிக்கப் படப்போவது நமது தேசமே என கூட்டங்களில்  கலந்து கொண்ட மத குருமார் உற்பட வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் வழங்குவதனை தற்காலிகமாக நிறுத்தி விட்டு அது தொடர்பான சகல விதமான  பேச்சு வார்த்தைகளுக்கும் போவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சிங்கள பௌத்தர்களின் பொருளாதாரத்திற்கு ஹலால் சான்றிதல் ஆபத்தானது என விஷமப் பிரச்சாரம் செய்த “பொது பல சேனா” வும் அதனை பின்னால்  நின்று இயக்கியவர்களும்  ஹலால் சான்றிதழ் பெற்று வர்த்தகம் செய்யும் 85% வீதமான சிங்கள பௌத்த வர்த்தகர்களினதும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பெரும் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசாங்கத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திலும் வெளிநாட்டுச் செலாவணி உழைப்பிலும்  ஹலால் சான்றிதழ் பாரிய தாக்கத்தினை செலுத்துவதால் ஜம்மியத்துல் உலமா அன்றி அரசாங்கமே சகல தரப்புக்களாலும்நம்பத் தகுந்த ஒரு முறையினை அறிமுகப்படுத்த வேண்டும்.

உள்நாட்டு முஸ்லிம்களின் நுகர்விற்கு கூடிய விலையில் ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்கள் சந்தைப் படுத்தப் பட வேண்டும் என்பது தவறு.

ஹலால் சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் தற்போது கோடிக்கணக்கில் மாத மொன்றிற்கு நஷ்ட அடைகின்றனர் என்றால்; ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் இலாபத்தினை கருத்திற்கொண்டு உள்நாட்டு முஸ்லிம்களின் நுகர்வுக்காக சந்தைப் படுத்தப் படும் ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களின் விலைகளை குறிக்க வேண்டுமே அல்லாது கூட்டி விற்பனை செய்வது உற்பத்தி சந்தைப் படுத்தல் கோட்பாடுகளுக்கு முரணான அநீதியாகும்.

அதே போல் ஹலால் சான்றிதழை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அபத்தமானது. சுதேச பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பினை வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒரு தரச் சான்றிதழை முஸ்லிம்கள் தமது செலவில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுவது பரிசுத்த முட்டாள் தனமாகும்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கண்காணிப்பின் முகாமைத் துவத்தின் கீழ் வரும் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனத்தினை நடாத்துவதற்கான முழு செலவினங்களையும் கட்டமைப்பு வசதிகளையும் வேதனங்களையும் இலங்கை  வர்த்தகர்  சம்மேளனமும் வர்த்தகர்களும் அரசும் பொறுப்பெடுக்க வேண்டுமே அல்லது அப்பாவி முஸ்லிம்களின் தலையில் சுமத்த முடியாது. அது பெரும் அநீதியாகும்.

உள்நாட்டு சந்தையில் ஹலால் சான்றிதழ் இருக்கக் கூடாது என எவராவது மீண்டும் கொக்கரித்தால் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்குவதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவோ என்னய்யா முஸ்லிம் நிருவனான்களோ மேற்கொள்ளவே கூடாது…..! நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றேல், முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் தூக்கிய ஆயுதம் தங்கள் பக்கமேபக்கமே திரும்புவதனை பொது பல செனாவோ அல்லது அவர்களுக்கு பின்னல் இருப்பவர்களோ உணர்ந்து கொள்ளவும் மக்கள் தெரிந்து கொள்ளவும் உள்ள சந்தர்ப்பம் இல்லாமல் போய் விடும்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 9, 2013 இல் 10:00 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. அல்லாஹ் பொய்களின் மேல் உண்மையைப் போட்டுவிடுகிறான்.

    nizamhm1944

    மார்ச் 10, 2013 at 8:30 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: