Lankamuslim.org

One World One Ummah

‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி” நூல் வெளியீட்டு நிகழ்வு

with 3 comments

???????????????????????????????எப்.எம்.பர்ஹான்: இணைப்பு -2காத்தான்குடி மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி” எனும் நூல் மற்றும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் றிஸானா நபீக்கின் தாயார் மற்றும் குடும்பத்தினர்இகாத்தான்குடி ஹைறாத் வித்தியாலய அதிபர் அஜீரா கலீல்தீன்இகாத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன், றிஸாலா வானொலி பணிப்பாளர் கபீர் எம் ஹஸன் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இரு அமர்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பெண்களுக்காக பிற்பகல் 04.00 மணி தொடக்கம் மாலை 06.00 வரை முதலாவது அமர்வு இடம்பெற்றது.

இதன்போது ‘றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி” நூலின் முதல் பிரதி மற்றும் இறுவட்டு என்பவற்றை றிஸானாவின் தாயாருக்கு காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய அதிபர் அஜீரா கலீல்தீன் வழங்கி வைத்ததுடன் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி முஸ்தபா தலைமையுரை நிகழ்த்தியதுடன் சிறப்புரையை மௌலவி மின்ஹாஜ்(இஸ்லாஹி) அறிமுகவுரையை விடிவெள்ளி பத்திரிiகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைறூஸ் ஆகியோர் நிகழ்த்தியதோடு இரண்டாவது அமர்வு இன்று இரவு ஆண்களுக்காக இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். நூர்தீன் உட்பட முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்கள், பெருமளவிலான பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான நிகழ்வு 

இந்நிகழ்வில் றிஸானா நபீக்கின் தந்தைமுஹம்மட் நபீக் மற்றும் குடும்பத்தினர் ஊக்குவிப்பு திறன் அபிவிருத்தி அமைச்சர்  பஸீர் சேகுதாவூத் இதமிழத் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாம் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் ஸெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி)இகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஸிப்லி பாறூக் உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்இமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ.ல.மு.கா உயர்பீட உறுப்பினருமான யூ .எல்.எம்.முபீன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடி பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.முஸம்மில் காத்தான்குடி இன்போ இணையத்தளப் பணிப்பாளர் உவைஸ் முகைதீன் மற்றும் உலமாக்கள் ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் ஊரப்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

Advertisements

Written by lankamuslim

மார்ச் 1, 2013 இல் 11:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. After the fact, no use of this type of publicity

  Mohammed

  மார்ச் 2, 2013 at 12:08 பிப

 2. wonderfull work . alhamthulillah.bt அரசியல்வாதிகளுக்கு இடம்கொடுத்தது மிகப்பெரிய தவறு. உண்மையில் உங்கள் பணி சிறப்பானது.

  mjm.shukry

  மார்ச் 2, 2013 at 5:09 பிப

 3. யதார்த்தமாக றிஸானா விடயத்தில் நடைபெற்றவை, அதனோடு ஒட்டிய கருத்துப் பதிவுகள், வாதப்பிரதிவாதங்கள் போன்றவை ஓர் வரலாற்றுப் பதிவாகி, ஆவணப்படுத்தப்பட்டால், அது எதிர்காலச் சந்ததியினருக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

  தவிர, அதனை பிழையான கண்ணோட்டத்துக்கு உட்படுத்தும் வகையில் காரியமாற்றுவதும், விளம்பரமாக்குவதும், அரசியலாக்குவதும், உண்மைக்கு மாறான நிலைமைகளை உருவாக்க முனைவதும் பொருத்தமற்ற செயலாகவே இருக்கும். அப்படியான தன்மை காணப்படின் அது வரலாற்றுப் பதிவாகவோ, ஆவணமாகவோ கருதப்படாது புறக்கணிப்புக்கு உள்ளாகிவிடும்.

  nizamhm1944

  மார்ச் 3, 2013 at 9:00 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: