Lankamuslim.org

One World One Ummah

ஹலால் சான்றிதழ் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என அரசாங்கம் சிந்தித்ததில்லை

with one comment

Keheliya-Rambukwella-inபின்னிணைப்பு: ஹலால் சான்றிதழ் சமயம் ஒன்றைச் சார்ந்த விடயமாகும். அதனை அரசாங்கம் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துவது என்பது பொருத்தமற்றதாகும். ஹலால் சான்றிதழ் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என அரசாங்கம் ஒரு போதும் சிந்தித்தது கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹலால் முஸ்லிம் மக்களின் சமயம் சார்ந்த விடயம் ஆகையால் அனை உலமா சபை நிர்வகிப்பதே பொருத்தமானது. என்னைப் பொறுத்தவரை ஹலால் என்பது பிரச்சினைக்குரிய விடயமல்ல. சில குழுவினரே அதனைப் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். இதுபற்றி அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

ஹலால் சான்றிதழை அரசாங்கம் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நேற்று முன்தினம் வேண்டுகோள்விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வீரகேசரி -எம்.எப்.எம் .பசீர்

பின்னிணைப்பு:-

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிதுள்ளதாவது ,   ஒரு சமயத்துக்கு உரிய ஒரு பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்பதென்பது ஒரு பொருத்தமான நடவடிக்கை அல்ல.ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்பது முறையல்ல என்று மல்வத்தை பீடாதிபதி திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சில குழுவினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அர்த்தம் அற்ற பாவகரமான ஒரு நடவடிக்கையாகும். இப்பிரச்சினை தொடர்பில் இன்று அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் அமைச்சர் சம்பிக்க ரனவக்கவுடன் சுமுகமாகப் பேசிக்கொண்டிருப்பதை நான் அவதானித்தேன் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 28, 2013 இல் 5:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. VIDEO: Govt. cannot take over issuance of Halal certification – Keheliya

    http://www.adaderana.lk/news.php?nid=21796&mode=beauti

    Haffi -VIDEO:

    பிப்ரவரி 28, 2013 at 7:36 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: