Lankamuslim.org

One World One Ummah

ஜம்இயதுல் உலமா பாதுகாப்பு செயலாளர் சந்திப்பில் விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன

with 2 comments

ACJUஏ.அப்துல்லாஹ்: அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திபொன்று இன்று செவ்வாய்கிழமை 19.02.2013 இடம்பெற்றுள்ளது .இந்த  சந்திப்பில்  ஹாலால் சான்றிதழ் தொடர்பிலும் ஏனைய முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்பிலும் விரிவாக பேசப்பட்டுள்ளது .இதில் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இவை தொடர்பான விபரங்கள் பின்னர் பதிவு செய்யப்படும்.

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு செயலாருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல தொடர்பான உத்தியோகபூர்வமான அறிக்கை  பின்னர் பதிவு  செய்யப்படும்.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2013 இல் 7:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. பொது பல சேனைக்கி பின்னால் அரசு இருக்கிறது என்பது அதன் கோறிக்கைகளை அரசே முன் நின்று நிவர்த்தி செய்வதில் இருந்து அப்பட்டமாக வெளிச்சதிட்கு வந்துள்ளது இனி ஒவ்வொறு சந்தையிலும் கடைகளிலும் ஹலால் சின்னம் பொறிக்கபட்டதும் பொறிக்கபடாததுமான ஒரே பொருட்களின் இரு வேறு பொதிகளை காணலாம்

  மஸ்ஜிதுகளுகெதிரான எந்த வன்முறைகளும் போலிஸ் முறைபாடுகள் உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் ஆவனபடுத்தபடாததால் இன்று பாராளுமன்றில் பச்சை பொய்யை ஆளும் கட்சி வாய்கூசாமல் கூற அதனை மந்தையாட்டம் நாம் வாக்களித்த முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல் வாதிகள் மௌனித்து ஏற்று கொள்வோராக இருக்கின்றனர்??? சீ..சீ.. வெக்க கேடு இந்த முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல்வாதிகளுக்கு சமூக நலத்தை விட சொந்த நலந்தான் முக்கியம் எனில் இவர்களுக்கு இஸ்லாம் எதட்கு பேசாமல் இஸ்லாத்தை துறந்து பன்சலைக்கி போய் புத்தம் சரனம் கச்சாமி என்று அரசியல் புலப்பை அமோகமாக நடத்துவதுதானே???

  PMAMF Mohammed H.I.R.A.Z

  பிப்ரவரி 20, 2013 at 10:05 முப

 2. உண்மையில் ஹலால் சான்றிதழ் வழங்கலும், ஹலால் முத்திரை பொறிக்கும் வழமையும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உருவாக்கியதல்ல, அது வியாபாரிகளின் வேண்டுகோளை ஏற்று ஆரம்பிக்கப்பட்டது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாயவுடனான சந்திப்பில், அஇஜஉ தலைவர் றிஸ்வி முபதி அவர்கள் கூறியதாக, BBC யுடனான செவ்வியில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீன் அவர்கள் தெரிவித்தார்.

  அல்ஹம்துலில்லாஹ். இது நாள் வரை, “ஹலால் முத்திரை பொறித்தல்“ இஸ்லாமியருக்காக, விஞ்ஞான வளர்ச்சியடைந்துள்ள தற்போதைய ‌உலகத்தில், முஸ்லிம்கள் ஹலால் உணவை‌க் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதால், அந்நிலையை மாற்றியமைப் பதற்கான நடவடிக்கையாகவே, அஇஜஉ வின் ஹலால் பிரிவால், இங்கு உற்பத்தியாகும் சகல உணவுகளையும், தம் பரிசீலனைக்கு உள்ளாக்கி, அதன் புனிதத் தன்மை தங்களால் ஏற்கப்பட்டு, அது தம்மால் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே, உண்ணத் தகுந்தது எனக் கூறி சான்றிதழ் வழங்கி வந்தமை, மேற்கண்ட, அஇஜஉ தலைவரின் கூற்றுடன் முற்றுப் புள்ளி வைக்கப்படுகின்றது.

  ………………., அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல, அது வியாபாரிகளின் வேண்டு கோளை நிறைவேற்ற ஆரம்பிக்கப்பட்ட ஒருஇது, இஸ்லாமிய நடவடிக்கை செயற்பாடே என்பதும் மிகவும் தெளிவு. ……………………………………………………………………..

  இதன் மூலம், இஸ்லாம் முழுமையானது, தெளிவானது, இலகுவானது, எக்காலத்துக்கும் பொருத்தமானது, யாராலும் பங்களிப்பு்ச் செய்யப்பட முடியாதது, அது காலதேய வர்த்தமானங் களுக்கு, மாற்றங்களுக்கு ஏற்ப விரிவடைந்து முழு உலகையும் வியாபித்து நிற்கும் மார்க்கம் என்ற குர்ஆனிய கருத்தை அஇஜஉ தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் ஊர்ஜிதப்படுத்தி யுள்ளார்கள்.

  ஆம், உலகின் எந்த மாற்றமும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்கிவிட முடியாது என்பதும், அவனுடைய ஹறாமைத் தவிர்த்துக் கொள்ளும் அறிவும், நடை முறையுமே எக்காலத்துக்கும், எவருக்கும், எவ்வித இடையூறுமின்றி, படித்தவன் முதல் பாமரன் வரை இலகுவாக, குறுகிய நேரத்தில், சிக்கனமாக அறிந்து பின்பற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தி உள்ளது. 1400 வருடங்களுக்கு மேலாக உலக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்ட ஹறாமைத் தவிர்த்தல் என்ற குர்ஆனிய நடைமுறை முஸ்லிம்களால், உலக அங்கீகாரத்துடன் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்துள்ளது.

  …………………………………………………………………………………….. மக்களுக்குத் தேவையான அறிவு ஹறாம் பற்றியதே. அதனை அறிந்தால் தானாக ஹலால் எதுவென்பது தெரிந்து விடும்.

  ……………………………………………………………………………………………………………………………………………………………………….

  ……………………………………………………………………………………………………………………………………………….

  nizamhm1944

  பிப்ரவரி 22, 2013 at 7:11 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: