Lankamuslim.org

One World One Ummah

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி குறைப்பு

with one comment

Law-College-lankaஇலங்கை சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை குறைத்துள்ளதாக அதன் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  2012  ஆம் ஆண்டு  நடைபெற்ற  சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சையில்         முறைக்கேடுகள் நிகழ்ந்ததாக முறையிடப்பட்டுவரும் நிலையிலேயே சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சைக்கான அனுமதி  வெட்டுப்புள்ளிகளை 3 புள்ளிகளால் குறைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் சட்டக்கல்லூரிக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 309 இலிருந்து  551 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற சட்டக் கல்லூரி அனுமதிப்பரீட்சையில்  சிங்கள மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கு 14 புள்ளிகள் வீதம் வழங்க  வேண்டும் எனவும் அப்போதே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை தீர்க்க முடியுமெனவும்   பொதுபலசேனா  தெரிவித்திருந்தது .

சிங்கள மொழி மூலமான பரீட்சை வினாத்தாளில் 7 வினாக்கள் தவறாக இருந்ததாகவும் அதுவொரு மொழியாக்கப்பிழை எனவும் அதற்கு புள்ளிகள் வழங்கப்படவேண்டும் எனவும் அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

அதேவேளை இலங்கை சட்டக் கல்லூரியினால் நடத்தப்படும் பிரவேச பரீட்சையின் போது, மூன்று மொழிகளிலும் தனித்தனியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என தேசிய நிபுணத்துவ சபை என்ற சட்டக் கல்லூரி நுழைவு பரீச்சையில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்துவரும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 1, 2013 இல் 11:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. சட்டக்கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சை வினாத்தாள்கள் தற்போது 3 மொழிகளிலும் வழங்கப் படுகிறதா?

    விமலேஸ்வரன் பிரசாந்

    ஒக்ரோபர் 19, 2016 at 4:37 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: