Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம்கள் துணிச்சல்மிகு தலைமைத்துவத்தையும் தெரிவு செய்வதில் தவறிழைக்கிறார்கள் : மின்னல் ரங்கா கவலை !

with 3 comments

5அஸ்லம் எஸ்.மௌலானா:2050ஆம் ஆண்டில் முஸ்லிம் ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக வந்து விடுவார் என்று பெரும்பான்மை இனவாதிகள் அஞ்சுகின்றனர் என சக்தி தொலைக்காட்சி பணிப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தில் துணிச்சல்மிகு தலைமைத்துவத்தையும் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்வதில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றனர்.எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

சிம்ஸ் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மர்ஹூம் முஹம்மட் முஸ்தபா ஞாபகார்த்த புலமைப் பரிசில் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்நிகழ்வு சனிக்கிழமை (19) காலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவை, விளையாட்டுத் துறை, தகவல் தொழில் நுட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரும் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன், கலாநிதி அனுசியா சேனாதிராஜா, அம்பாறை மாவட்ட இராணுவ அதிகாரி கேணல் மேஜர் பிரியந்த கமகே, அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு இணைப்பாளர் மேஜர் நவரட்ண, கல்முனை சாஹிராக் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா ஆகியோர் உட்பட மற்றும் பல பிரமுகர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது சுமார் 200 மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணினி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.அத்துடன் சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் முஸ்தபா, அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா; கல்வியின் மகத்துவம், அதற்கு உதவ வேண்டியதன் அவசியம், தொழில்சார் நிபுணத்துவக் கல்வியின் அவசியம், றிஸானா விவகாரம், சமகால அரசியல், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள், முஸ்லிம் தலைமைகளின் போக்கு, முஸ்லிம் காங்கிரசின் இன்றைய அரசியல் பயணம், மாற்று சிந்தனையின் அவசியம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விபரித்தார்.

1 2 3 5

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 19, 2013 இல் 11:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. முஸ்லிம் சமூகத்தில் அவ்வளவு துணிச்சல் மிக்க தலைமைத்துவங்கள் அல்லது கட்சிகள் நம் நாட்டில் தற்போது இருக்கின்றனவா ? அட ! நமக்கு தெரியாமல் போய்விட்டதே ! ஏன் இது வரை நீங்கள் சொல்லவில்லை ! சொல்லியிருந்தால் நம்ம மகாஜனங்கள் இலெக்ஷன் நேரத்தில் மாத்திரமாவது மாலை போட்டு வரவேற்றிருப்பார்களே ! அது சரி அவர்கள் எந்த எந்த விடயங்களிலெல்லாம் துணிச்சல் மிக்க வீரர்கள் என்றும் நமக்கும் சற்று சொல்லிக் கொள்ளுங்கள் !

  Ossan Salam - Doha

  ஜனவரி 20, 2013 at 3:22 பிப

 2. அதட்காக உங்களை தெறிவு செய்யமுடியுமா அல்லது முஸ்லிம்கள் உங்களுக்கு வாக்களிக்க முடியுமா??? ஆமா மலைநாட்டு மக்களிடம் ஆயிரம் வாக்குறுதிகளும் கொடுத்து ஆசைகளையும் காட்டி அந்த மக்களின் வாக்கால் நாடாலுமன்றில் நுளைந்த உங்கள் துணிச்சளை கொண்டு என்னத்த அந்த மக்களுக்கு சாதிச்சிருக்கீக???? துணிச்சலுக்கு உதாரண புருஷர்களும் தலைமைக்கு உதாரண புருஷர்களும் பேச வேண்டிய பேச்ச எதட்கும் ஒப்பாகாத நாம பேசகூடாது ஓகே மலைநாட்டு மக்கள்போல் உங்களின் பசப்பு வார்தைகளை நம்பி முஸ்லிம்கள் வாக்கு போட அவர்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என்பதை நினைவில் கொள்வது உங்களுக்கு ரொம்ப உசிதமாக இருக்கும்

  PMAMF Mohammed H.I.R.A.Z

  ஜனவரி 20, 2013 at 4:32 பிப

 3. மன்னிக்கனும் ரங்கா ! முஸ்லிம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேடைகளில் துணிச்சலாய் பேசும்போது அந்த துணிச்சலை அவர்கள் எல்லா இடத்திலும் (பாராளுமன்றம் அரசு ) காட்டுவார்கள் என்று பிழையாக நம்பிவிடுகிறார்கள். இன்று முடுஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளில் உங்களைப்போல அல்லது சம்பந்தனைப்போல முதுகெழும்புள்ள ஒரு ஆம்பிளை அரசியல்வாதி இல்லை என்று சொல்வது எங்களுக்கு கூச்சமாக இருக்கிறது.

  Imran - kalkudah

  ஜனவரி 20, 2013 at 6:39 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: