Lankamuslim.org

One World One Ummah

றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மௌலவி மக்தூம்

with 23 comments

மௌலவி A J M மக்தூம்
Family members of Saudi Crown Prince Sultan bin Abdulaziz perform final prayers at his grave at Al Oud cemetery in Riyadhஅஸ்ஸலாமு அலைகும் :றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்2:155(

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல் குர்ஆன் 2:156)

أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல் குர்ஆன் 2:157)சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் றிசானாவை அவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் (மரன சாசனம்) பற்றி வினவவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப் பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.

உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப் படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

அப்போது நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரிய படுத்தினேன்.

என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா? என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது. அங்குள்ள அதிகாரிகளிடம் இது பற்றி கூறி, அவருக்காக பரிந்து பேசினேன். அவர்களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப் படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது? என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொட்சம் இருப்பதாகவும், அதனை சதகா செய்திடுமாரும் வேண்டிக் கொண்டார்.

அவற்றை யாருக்கு? எங்கு? எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்கப் பட்டபோது, இங்கேயே, எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார்.

அவருக்கு “ஷஹாதா” (அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு) என்னும் சாட்சிப் பிரகடனம் கூற சொல்லிக் கொடுக்கப் பட்டது.

அதன் பிறகு இரண்டு ரகஅதுகள் தொழவும், துஆ செய்யவும் அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது.

அங்கிருந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தது போன்றே இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அங்கிருந்த அனைவரின் எதிர் பார்ப்பும் ரிசானா மன்னிக்கப் பட வேண்டும் என்பதே. நீண்ட நேர உரையாடல் எந்த பலனும் அளிக்காத போதும், அவரின் தண்டனை நிறைவேற்ற நியமிக்கப் பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப் பட்ட போது கூட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உயரதிகாரியிடம் ஒருவர் மன்னித்து விட்டார்களா? என்று கேட்டார், இன்ஷா அல்லாஹ் மன்னித்து விடுவார்கள் என்றே அவர் அதற்கு பதில் அளித்தார். அதாவது இறுதி நேரத்திலாவது மன்னித்து விடுவார்கள் என்பதே அவரின் எதிர் பார்ப்பாக இருந்தது. நாட்டு மன்னர், இளவரசர் சல்மான் போன்றோர் இதற்காக முயற்சித்தும் பலனளிக்காமை இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. மேலும் அங்கிருந்த யாரும் அவருடன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. பண்பாகவும், பாசமாகவுமே நடந்து கொண்டார்கள்.

அதன் பிறகு அவருக்கு நியமிக்கப் பட்டிருந்தது போன்றே அல்லாஹ்வின் நாட்டத்துடன் சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரை சுவர்கத்திற்கு சொந்தக் காரியாக ஆக்கியருள்வானாக. இப்பொழுது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வந்தது. அது: “முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை செய்திட முயற்சி செய்தாலும், இறைவனின் ஏற்பாட்டை மீறி ஒன்றும் செய்திட முடியாது. மேலும் முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு தீமையை செய்திட நினைத்தாலும் இறைவனின் ஏற்பாட்டை மீறி எந்தவொன்றும் செய்திட முடியாது”

உங்கள் மகள் ரிசானா விடயத்திலும் இதனையே கற்றுக் கொண்டோம். முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். நான் கூட உங்கள் மகளுக்காக நிறையவே துஆ செய்தேன். உங்கள் மகளின் மரண தண்டனைப் பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்கு கேள்வி பட்டது. அதாவது மேற்குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது. அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது “இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப் படுகிறார் என்றால் அநியாயக் காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக” என்று கூட பிரார்த்தித்தேன்.

மேலும் அது பற்றிய செய்திகள் வருகிறதா? என்று அடிக்கடி இணைய தளங்களை பார்த்தேன். எனினும் அங்கே செல்லும் வரை எந்த செய்தியையும் காணவில்லை. அங்கிருந்த அதிகாரிகளிடம் இது பற்றி வினவிய போது, உங்கள் நாட்டு தூதரகம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே உத்தியோகப் பூர்வமாக செய்தி வரும் வரை நான் வேறு யாரிடமும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.

இது இவ்வாறிருக்க இன்று ஊடகங்களில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் நிறைய பரிமாறப் படுகின்றன. சில முஸ்லிம் சகோதரர்கள் கூட ஈமானுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அல்லாஹ் எங்களை மன்னிக்க வேண்டும். உண்மையை விளங்கப் படுத்தும் நோக்கிலேயே இதனை எழுதினேன். நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.

நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப் பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை வெளி உலகுக்கு கொண்டு வருவேன். இங்கு விமர்சிக்கப் படுவது அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் சட்டம் என்பதாலேயே இதற்கு முயற்சி செய்கிறேன். வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.

உங்கள் மகள் ரிசானா அநியாயாமாக கொள்ளப் பட்டிருந்தால், தெரிந்து கொண்டே அவருக்கு அநியாயம் செய்தோரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் இதற்கு பதிலாக அநியாயம் செய்தோரின் நன்மைளை எடுத்து இவரின் நன்மைகளில் சேர்க்கப் படவோ, அவர்களுக்கு போதியளவு நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரின் தீமைகளை அவர்களின் மீது சுமத்தப் படவோ வாய்ப்புள்ளது. மேலும் இவருக்கு நிறைய வெகுமதிகளையும், சுவன பாக்கியத்தையும் இறைவன் வழங்குவான். அதே நேரம் இவர் தவரிளைத்திருந்தால் அந்த தவறு இத்தண்டனை மூலம் மன்னிக்கப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். 14:42

உயிரிழந்த அக்குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை என்பதற்காக அவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னிபதற்கும், மன்னிக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. மன்னித்திருந்தால் நிறைய நன்மைகளை அடைந்திருப்பார்கள் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்த தவறவில்லை.

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். 42:40

அவர்கள் இக்குழந்தையை எவ்வளவு சிரமத்துடம் பெற்றெடுத்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். மேலும் அவர்கள் உங்கள் மகள் தான் இக்கொலையை செய்திருப்பாள் என்று உறுதியாகவே நம்பாமல் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு முன் வந்திருக்க முடியாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோவத்துடன் இருந்தார் என்பதே. எது எப்படியோ மருத்துவ அறிக்கையும் அதனை உறுதி செய்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன், மிகவும் ஞானமுள்ளவன். அவனுக்குத் தான் தெரியம் எதில் மக்களுக்கு நலவு இருக்கிறது, எதில் தீமை இருக்கிறது என்று. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216

உங்கள் மகள் உலகமறிய இவ்வாறு மரணத்தை சந்தித்ததன் மூலம் என்னென்ன மாற்றங்கள், நலவுகள் ஏற்பட போகிறதோ என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் ரிசானா விடுதலையாகி வந்திருந்தாலும் என்றோ ஒரு நாள் மரணமடைந்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பணிப் பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாகுவது உண்மையே. எனவே இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்று பெற்றோர்கள், கணவன்மார்கள் உட்பட அனைவரும் தமது பொறுப்பிலுள்ள பெண்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எந்நிலையிலும் இறைவனின் விதியை மீறி உங்கள் மகள் ரிசானாவின் மரணம் இடம்பெற்றிருக்க முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ
“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (3:154)
இறைவன் ஒரு மனிதனுடைய மரணத்தை குறித்ததொரு பூமியில் வைத்து பிரிப்பதாக விதித்திருந்தால், அந்த இடத்திற்கு செல்வதற்கான தேவையை ஏற்படுத்துவான் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக, உங்கள் பொறுமைக்கு நற்கூலி வழங்குவானாக, உங்கள் மகள் ரிஸானாவின் பாவங்களை மன்னித்து அவருக்கு சுவன பாக்கியத்தைத் தந்தருள்வானாக…

இப்படிக்கு
A J M மக்தூம்

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 13, 2013 இல் 11:45 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

23 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. thank you very much your post.i got lot of thinks

    niyazcader

    ஜனவரி 14, 2013 at 12:30 முப

  2. இரண்டு நபர்கள் பாறிய வழிபறி கொல்லையின் மூலம் பெரும் தொகை பணம் சம்பாதிக்கின்றனர் பின்னர் அந்த புலப்பை கைவிட்டு விட்டு கையில் இருந்த தொகையை மூலதனமாகவைத்து ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை ஆரம்பிக்கின்றனர் வியாபாரமும் ஆகா ஓஹோ என வளர்கிறது இடையில் இரு பங்காளிகளுக்கிடையே சண்டை இதனால் தங்களது சொத்துகளை பிரித்துகொள்ள ஒரு நீதியாளரை நாடுகின்றனர் அவர்களுக்கு இஸ்லாமிய ஷஃரியாவை போதிக்கும் நீதிபதியை பற்றியே நல்லென்னம் இருக்கிறது அதனால் அந்த நீதிபதியிடம் தங்கள் கதையை கூறி தங்கள் சொத்ஹ்டுக்களை பங்கிட்டு தீர்பு வழங்குமாறு கூறுகின்றனர் இவர்களின் கதையை கேட்ட அந்த நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குவார்???

    PMAMF Mohammed H.I.R.A.Z

    ஜனவரி 14, 2013 at 12:47 முப

    • மர்ஹூமா ரிசானா நபீக் அவர்களின் மரண தண்டனை தொடர்ப்பான நேரடி வர்ணனை ஒன்றை கேட்பது போல் இருந்தது மவ்லவி மக்தூம் அவர்களின் ஆறுதல் கடிதமாஹும்.சரிஆ சட்டத்தை கொச்சைபடுத்த வேண்டும் ,என்பதட்காஹவே சந்தர்ப்பம் பார்த்திருப்போரும் ,அரசாங்கத்தை குற்றம் சட்டவேண்டும் என்பதட்காகவே ரிஜானாவின் விவகாரத்தை தாறுமாறாக விமர்சனம் செய்வோருக்கும் மத்தியில் ,நடுனிலையளர்கலுக்கு தெளிவொன்று கிடைத்திருக்குமானால் அல்ஹம்துலில்லாஹ் .

      Ismath Inoon

      ஜனவரி 14, 2013 at 10:15 முப

    • avarkalukku urimay ellatha soththukkalay pakira mudiyathu anrum antha soththukkalay puthu nala sevaikaluku oppadaykum padium kooruvaar

      nm imran

      ஜனவரி 14, 2013 at 2:50 பிப

    • அது சவூதி நீதிபதியாக இருந்தால் இரண்டு பேரினதும் பாஸ்போர்டை கேட்டு வயதைப்பார்திருப்பார் அதில் எவருக்கு பாஸ்போர்டின் அடிப்படையில் வயது கூடியதோ அவரை ஆதாரங்களில்லாமல் மரணதண்டனைக்கு தள்ளிருப்பார்.அது உண்மையான பாச்போர்டா இல்லையா என அவர் நீதிபதி யோசிக்கவும் மாட்டார் .

      Osama

      ஜனவரி 14, 2013 at 6:24 பிப

    • if i m on the seat i will order both of them to hand over that wealth to BAITHUL MALL , ALLAHU AKBAR

      Husni

      ஜனவரி 14, 2013 at 9:44 பிப

  3. இரண்டு நாட்களாக சவுதியில் இருந்து வெளிவரும் இணைய தளங்கள்,புளக்குகள்,இணைய பத்திரிகைகளை அவதானித்துகொண்டிருக்கிறேன் இந்த பெண் குறித்த செய்திகளுக்கு பின்னூட்டம் எழுதி உள்ள நூற்றுகணக்கான அறபிகள் இந்த பெண்ணுக்கு பதுவா செய்பவர்களாகவும் காயித் பின் நாபிஹ் பின் ஜெஸ்யான் அல் உதைபி அவர்களுக்கும் அவர்களின் குடும்பதிட்கும் ஆறுதல் சொல்லும் கருத்துகளாகவே வருகின்றன ஷரியா தேசத்தில் ஷரியா பற்றிய அறிவு எந்த அளவு கீழ் மட்டத்தில் இருக்கின்றது என்பதை அந்த அறபு இணைய தளசெய்திகளை அதட்குறிய பின் ஊட்டங்களை வாசிக்க கூடியவர்களாள் நன்கு விளங்கி கொள்ள கூடியதாக இருக்கும்

    PMAMF Mohammed H.I.R.A.Z

    ஜனவரி 14, 2013 at 1:21 முப

  4. பதினைந்தே நாளில் அதுவும் குக்கிராமத்து பெண் அரை குறை படிப்புள்ள பெண் இலக்கண இலக்கிய பாரம்பரிய அரபை மட்டுமே விளங்கி கொள்ளும் அந்த அரபி எஜமானியுடன் சண்டை சச்சரவில் ஈடுபட்டு குழந்தையை கொள்வேன் என்டு மிரட்டினாலாம்??? கொஞ்சமாவது மூலைக்கும் முன்னானுக்கும் சம்மந்தம் இருந்தா இப்படி சொல்கிறது அவர்கள் தரப்பு நியாயம் என்டு???

    அறபி பெண்களுக்கு அதுவும் குடும்ப பெண்களுக்கு அந்நிய ஆண்களுடன் அந்நிய சமூகத்துடன் பலகும் வாய்ப்பு கிடைபதில்லை அதனாலேயே அவர்களுக்கு கொச்சை அறபெல்லாம் புறிந்துகொள்ளும் சக்தி கிடையாது அறபி பெண்களால் நன்கு கருத்தாளமுள்ள உயர் இலக்கண இலக்கிய நடையை கொண்ட பேச்சரமே பேசபடுவது வழக்கமாகும் அப்படியான அறபை 2005 மே 4 இல் அந்த வீட்டிகு சென்று 2005 மே 21 கிடையில் எங்கோ குக்கிறாமத்தில் பிறந்து அரைகுறை படிப்புடன் பணி பெண்ணாக வந்த பெண் பயின்று தன் எஜமானியுடன் சண்டை பிடித்து குழந்தையை கொள்வேன் என்று மிரட்டி உள்ளார் என்பதாக கூறுபவர்கள் 15 நாட்களுக்குள் அப்படி ஒரு பாஷையை சாதாரணமானோரால் சண்டைபிடிக்கும் அளவுக்கு சடுதியாக பேசும் வகையில் பயில முடியுமா என்று யோசிக்க வேண்டாமா?

    சரி அப்படி சண்டைபிடித்து கோபித்து கொண்டிருக்கும் பெண்ணிடம் 7 வருடங்கள் உருண்டோடியும் அந்த குழந்தையை மறக்கமுடியாமல் உலகமே கேட்டும் அந்த பெண்ணை மன்னிக்க முடியாத அளவுக்கு அதீத பாசத்துடன் இருந்த அந்த பெற்றோர், எப்படி அந்த குழந்தையை அதுவும் உணவூட்டுவதட்காக இந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள் என்பதை யார்தான் கேள்வியாக எழுப்ப மாட்டர்???

    இயல்பாகவே அறபிகளுக்கு சந்தேகம் அதிகம் அதனால் இப்படி கோபித்து கொண்டிருக்கும் பெண்ணிடம் குழந்தையை கொடுத்து விட்டு சென்றால் தங்கள் மேல் உள்ள கோபத்தால் குழந்தைக்கி சரியாக உணவு கொடுப்பாலோ மாட்டாலோ என்ற சந்தேகம் எழவே செய்யும் அதனால் அவர்கள் அப்படியான நிலமையில் கொடுக்க வாய்பே இல்லை

    மரணித்த பெண்ணிடம் யாரும் வினவ முடியாது என்பதட்காக இவ்வளவு நாளும் மூடு மந்திரமாக இருந்த விசாரனை அறிக்கையெல்லாம் பகிறங்கபடுத்தபட்டு அந்த பெண்ணின் மரணத்தை நியாயபடுத்த வெளிகிட்டு இருகின்றார்கள் இது அந்த நாட்டின் உலவு துறையின் கச்சிதமான ஏட்பாட்டில் அவர்களின் காவலர்களாகிய நம் நாட்டு உலமாக்களால் கன கச்சிதமாக முன் எடுக்கபட்டுகொண்டிருகிறது

    PMAMF Mohammed H.I.R.A.Z

    ஜனவரி 14, 2013 at 1:40 முப

  5. சவூதி அரேபியாவுக்கு பெண்களை வீட்டு வேலைக்காரியாக ( அடிமையாக ) அனுப்புவதனை ,இந்தோனேசிய ,Pakistan/ பங்களாதேஷைப் போன்று இலங்கை அரசாங்கமும் தடை செய்ய வேண்டும். மற்றும் ஒவ்வொரு பெற்றோரும் , குடும்பத்தினரும் தங்களது பெண்களை அடிமைகளாக அனுப்புவதனை நினைத்து கூட பார்க்க வேண்டாம். சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்கார (அடிமைகள் )பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், அநீதிகள் பெரும்பாலும் மறைக்கப் படுகின்றது, மற்றும் பெண்களின் கூச்ச சுபாவம்/ வெட்கம் காரணமாக அவர்கள் வெளியே சொல்வதில்லை. இங்கு புட்டிப்பால் குடித்து,வேலைக்காரியிடம் வளர்ந்தவர்கள் தான் அதிகம் , ஆதலால் கருணை , இரக்க குணம் மிகவும் குறைவு. இதனை இங்கு பணியாற்றும் சகோதர ,சகோதரிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். .

    Ajmal, K.S.A

    ஜனவரி 14, 2013 at 3:40 முப

  6. ///முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார்.///

    கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள் பேசும் தமிழ் நடையையே, விளங்குவது சிறிது சிரமத்துடன் விளங்க வேண்டி இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்திலுள்ளவரின் தமிழை சகோதரி ரிசானா எப்படி விளங்கி இருப்பார் என்று கேட்கத் தேவை இல்லை. இந்த மொழிபெயர்ப்பாளர் தமிழில்தான் ரிசானாவுடன் உரையாடினாரா என்று தெரியவில்லை.

    இந்த உரையாடல்கள் ஒலிப்பதிவுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. அப்படிப் பதிவு செய்திருந்தால், கட்டுரையாளர் அவர்கள் ஒலிப்பதிவு நாடாக்களை வினவி வெளியிடலாமல்லவா.

    ///இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.///

    தமிழ் நாட்டைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் கேட்கும்போது, ரிசானா குற்றத்தை ஏன் மறுத்தார் என்று புரியவில்லை. இதனது ஒலிப்பதிவு நாடா இருக்கிறதோ தெரியவில்லை.

    ///ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை வெளி உலகுக்கு கொண்டு வருவேன். ///

    முழுத்தகவல்களும் கிடைக்குமா என்பது சந்தேகமே. அந்த தகவல்கள் சகோதரி ரிசானாவிற்கு சாதகமாக இருந்துவிட்டால், இந்த உலகத்திற்குக் கொண்டு வருவது சாத்தியமானதா? அதுவும் சவூதியில் இருந்துகொண்டே வெளியிடலாமா என்பதும் கட்டுரையாளருக்குப் பிரச்னையை ஏற்படுத்தாதா?

    கட்டுரையாளரே, நீங்கள் தகவல்களை உலகுக்குக் கொண்டுவரும் நாளில், ரிசானா சம்பந்தமாக அரசியல் செய்தவர்கள், ரிசானாவைப் பார்க்கக் கிளம்பி ஊர்சுற்றிய அரசியல் பிரதானிகள், நமது உலமாக்கள், பத்திரிகைக் காரர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரபு தெரிந்தவர்கள், இன்னும் பலர் இந்த விடயத்தில், என்னென்ன செய்தார்கள் என்ற முழு விபரங்களையும் தந்தால், மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

    வேறொன்றுக்கும் இல்லை. இந்த புண்ணியவான்களின் பச்சோந்தித்தனத்தை, இலங்கை முஸ்லிம் சமூகம் அறிந்துகொள்ளத்தான்.

    Rashad

    ஜனவரி 14, 2013 at 6:05 முப

  7. குர்-ஆன் வசனங்களை ஆதாரமாக வைத்து நீங்கள் கூறிய கருத்துக்கு நன்றி, என்றாலும் சவுதியின் ஷரியா சட்டம் 100% அமுல் நடாத்தப்படுகிறது என்றால் அது கேள்விக்குரியதே? யூத,நாசராக்களின் தேவையை அனுசரித்து, மன்னர் பரம்பரை ஆட்சியை உறுதி செய்து கொள்ள செய்யப்படும் ஷரியா சட்ட அமுலாக்கம் என்றால் மிகை அல்ல, என்பது எனது தாழ்மையான கருத்து இதில் யாருக்கேனும் அசௌகரியம் ஏட்படின் மன்னிக்கவும்.

    marzook

    ஜனவரி 14, 2013 at 8:06 முப

  8. Dear brother Makthoum, I read half of your article here and there. No patient to read. Anger is more than that. After long time, I cried on 09 Jan. That is for Rizana. I did not expect, Saudi will do this unfair judgement. Please read the article written by brother Latheef Farook. Ma Shaa Allah, an excellent article. I fully agree with him and that is the true. Now, Saudi Govt. is saying that the mother did not pardon Rizana, so we had to execute her.

    Sir, please provide two things to us. 1. Witnesses who saw this murder. 2. Postmortem report which proof that child’s death is not a natural death.

    You provide these two, we will be silent. Without these two don’t write this and that.

    sulaiman muhammad

    ஜனவரி 14, 2013 at 9:50 முப

  9. Masha Allah. Excellent article about Rizana. Each and every point is clearly described. True Muslims should have patient in their life in each and every situation. Brothers, don’t make silly comments and be patient in your life. Allah knows all.

    Ghouse

    ஜனவரி 14, 2013 at 10:54 பிப

  10. unaipola oru uyrin arumai theriyathe kevalama ETappan erukum matum epadi nadakathan seium. Rizanawin maranathai yaralum gnaya paduthe mudiathu

    MUNEER

    ஜனவரி 15, 2013 at 1:33 முப

  11. தமிழில் type செய்ய …eg . tamil – தமிழ்

    http://www.google.com/transliterate/

    Ajmal, K.S.A

    ஜனவரி 15, 2013 at 9:40 பிப

  12. தமிழில் மிக இலகுவாக டைப் செய்ய கீழ் உள்ள லிங்க் சிலவேளை வசதியாக இருக்கும் முயட்சி செய்யுங்கள் http://english-to-tamil-keyboard.appspot.com/

    PMAMF Mohammed H.I.R.A.Z

    ஜனவரி 15, 2013 at 11:30 பிப

  13. padinelu vayadil marana thandanai kodukkalaama,islam markathil adatku anumadi ullada.

    nazeemaaslam

    ஜனவரி 16, 2013 at 11:05 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: