Lankamuslim.org

One World One Ummah

வன்னி மக்களுக்கு 100 மில்லியன் ரூபாய்

leave a comment »

??????????இணைப்பு-2இர்ஷாத் றஹ்மத்துல்லா: வன்னி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிப்புக்குளான மக்களின் தேவைகள் குறித்து கண்டறிந்து அதற்கான உதவிகளை நல்கு வகையில் அனர்த்த முகாமைத்தவ அமைச்சர் மஹிந்த அமரவீர் நேற்று (2012.12.30) மாலை மன்னார் மாவட்டத்துக்கு வருகைத் தந்தார்.

இங்கு வருகைத் தந்த அமைச்சர் மன்னார் அரசாங்க அதிபர் பணிமனையில் இடம் பெற்ற உயர் மட்ட கூட்டமொன்றில் கலந்து கொண்டார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,பிரதேச செயலளார்கள்,அனர்த்த முகாமைத்தவ அமைச்சின் அதிகாரிகள்,வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் லியாவுதீன்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் இணைப்பு செயலாளர்களான அலிகான் சரீப்,றிப்கான் பதியுதீன்,முனவ்வார் உட்பட பாதுகாப்பு தரப்பினரும்,உள்ளுிவ்ராட்சி மன்றங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் ஏற்படடள்ள பாதிப்புக்கள் குறித்து பிரதேச செயலளார்கள் விளக்கமளித்தனர், மன்னார், மடு, மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ள அச்சுறுத்தல்களால் பெரும் எண்ணிக்கையிலான மக்களும்,விவசாய மற்றும் கால் நடைகளுக்கு அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

வெள்ள பாதிப்புக்குள்ளான வன்னி மாவட்ட மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை வழங்கவென 100 மில்லியன் ரூபாய்களை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன்,சேதமுற்ற சொத்தக்களின் விபரங்களை அரசாங்க அதிபர்கள் மூலம் சமர்ப்பிக்குமாறும்,இதற்கென விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க ஆலோசித்தள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அதே வேளை சகல திணைக்களங்களும் தமது நிர்வாகங்களுக்கு கீழுள்ள வேலைத்ததிட்டங்களுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் விசேடமாக வைத்திய சேவைகளை அவசரமாக வழங்க நடவடிக்கையெடுக்குமாறு சுகாதார அதிகாரிகளிடம் அமைச்சர் அமரவீர கேடடுக் கொண்டார்.

?????????? ?????????? ??????????

இணைப்பு-2

மன்னாரில் மீண்டும் அடை மழை

இர்ஷாத் றஹ்மத்துல்லா – நேற்று மாலை முதல் மன்னாரில் மீண்டும் பெய்து வரும் அடை மழை காரணமாக தலைமன்னார் பிரதேசத்தில் பல கிராமங்கள் மூழ்கியதுடன்,400 குடும்பங்கள் வரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்டென்லி டிமெல் தெரிவித்தார்.

நேற்று மாலை பெய்த மழையினால் மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம்,கட்டுக்காரன் குடியிறுப்பு,துள்ளுக் குடியிறுப்பு,கீளியன்குடியிறுப்

பு ஆகிய பிரதேசங்களே வெள்ள நீரினால் நிரம்பி காணப்படுவதாகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்புரைக்கமைய அம்மக்களுக்கான நிவாணரப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரவு 10 மணியளவில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தமையினால் அம்மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டதாகவும்,அவ்விடத்துக்கு விஜயம் செய்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கச் செய்ய போதுமான முயற்சிகளை முன்னெடுத்ததாகவும்,அமைச்சரின் பிரத்தியேக செயலளார் றிப்கான் பதியுதீன் கூறினார்

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2012 இல் 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: