Lankamuslim.org

One World One Ummah

தமிழ் பேசும் சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்

with 12 comments

nafarகல்முனை ஹஸன்: கொடூர யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மிகக் கெடூரமான இனவாத யுத்தம் தற்போது நாட்டில் தலைதுக்கி இருக்கிறது இதனை ஒழிக்க தமிழ் பேசும் சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.

ஹலால் விடயத்தில் இனவாத சக்திகள் விட்டிருக்கின்ற அறிக்கை சம்மந்தமாக நபார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது இலங்கைத்திருநாட்டில் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாமிய மதத்தின்மீதும் கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள், அநியாயங்களை கண்டும் காணாமல் வாய்மூடி மௌனிகளாக எமது அரசியல் தலைமைகள் இருப்பது மிகவும் மன வேதனையைத்தருகிறது. ஆனால் இவை அணைத்து துன்பங்களையும் சுமந்துகொண்டு இன்று நாட்டில் எமது சமூகம் பொறுமையுடன் இருக்கின்றார்கள் என்பதற்காக இனவாத தீய சக்திகள் தொடர்ந்தும் எமது பள்ளிவாயில்கள், இஸ்லாமிய மத அனுஸ்டானங்கள், ஷரீஆ சட்டம் என்பன போன்ற பல்வேறு விடயங்களில் தலையிடுவதும், பிரச்சினைகளை உண்டுபண்ணுவதும் கண்டிக்கத்தக்க விடயமாகும். தொடர்ந்தும் இவ்வாறு நடப்பதை அனுமதிக்க முடியாது.

நாட்டின் அமைதியைக்குலைத்து மீண்டும் இந்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தீய சக்திகளுக்கு அரசாங்கம் கடும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனுடாக எமது நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும், சபீட்சமாகவும் வாழ்வதற்கு வழி பிறக்கும்.

இஸ்லாமிய அடிப்படையில் முஸ்லிம்களுக்கு உணவு விடயத்தில் ஒரு வரையறை இருக்கிறது. அத்துடன் இஸ்லாம் ஹலால் உணவை உண்பதை வலியுறுத்துகிறது. என்பதை மாற்று மதத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2012 இல் 2:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

12 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. முஸ்லிம்களை ஹலால் உண்ண வேண்டாம் என்று எப்பொழுதும், எவரும் கூறியதாக இல்லை. ஹலால் சான்றித………………………………………………………………………க்கு எதிரான கோஷங்களை திசை மாற்றி, ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீக்கு எண்ணெய் வார்க்காதீர்கள்.

  முஸ்லிம்கள் ஹலால் உண்ண வேண்டும் என்பதற்காக, இலங்கை முழுவதும் இறைச்சிக் கடைகள் நடத்தும் ஏகபோக உரிமை முஸ்லிம்களு்ககுக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

  nizamhm1944

  திசெம்பர் 31, 2012 at 6:14 பிப

  • என்ன அநியாயம் இது? ஹலால் ஹராம் பார்பது இறைச்சி மாட்டு இறைச்சியில் மட்டுமா? அரிசை தீட்டும் மாவு கலவையில் கூட பன்றியின் கொழுப்பின் உலர் பவுடர் கழந்து வரும் இந்த காலகட்டத்தில் மாட்டு இறைச்சிக்கி மட்டும் ஏகபோகம் கொடுத்தால் ஹலால் ஹராமை முற்றாக பேன முடியுமா??? பால் பக்கட்,பிஸ்கட்,பேக்கரி ஐட்டம்,இனிப்பு உணவுகள் என தினமும் அங்காடியில் வாங்க கூடிய எத்த்னையோ ஐட்டங்களில் பன்றியின் கொழுப்பு கழந்த கழவைகள் சேர்க்கபடுவதை பற்றி யார் விழிப்பூட்டுவது யார் கண்கானிப்பது???

   PMAMF Mohammed H.I.R.A.Z

   திசெம்பர் 31, 2012 at 8:47 பிப

  • muslim allathavarhalin Beef Stall iruppatu ungalukku Teriyamal irukklam

   Nuhuman

   ஜனவரி 2, 2013 at 8:01 முப

   • அற்பமானவை இல்லாததற்குச் சமன் என்பது இறைகருத்து. அதனால்தான் 25:30 இல் எனது சமூகத்தினர் குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர் என நமது தூதர் கூறுவார் என அல்லாஹ் தன் அருள் மறையில் எதிர்வு கூறியுள்ளான்.

    இப்படிக் கூறுவதால்,சிலர் குர்ஆனைப் புறக்கணிக்காமல் இருப்பது அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருக்கின்றது என்பது அர்த்தமல்ல!

    nizamhm1944

    ஜனவரி 2, 2013 at 12:45 பிப

 2. அருள்மறை குர்ஆன், அகில உலகுக்கும் அதன் அழிவு வரை செல்லுபடியாகக் கூடியதாக, குறையற்றதாக, முரண்பாடற்றதாக, மாற்றங்கள் தேவையற்றதாக, சந்தேகம் அற்றதாக, எவரதும் பங்களிப்புத் தேவையற்றதாக, பூரணப்படுத்தப்பட்டதாகக் கூறி, வல்ல நாயன் அல்லாஹ் இறக்கி, அதனை அவனது திருத்தூதர் மூலம் நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளான்.

  இதனை ஒரு ஆயத்து மூலம் அறியலாம். 5:3 – “தானாகச் செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டதும், கழுத்து நெரித்துச் செத்ததும், முட்டப்பட்டுச் செத்ததும், வனவிலங்குகள் கடித்ததால் செத்ததும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அறுத்ததைத் தவிர! இன்னும் நடப்பட்டிருந்த‌வைகள் மீது அறுக்கப்பட்டதும், அம்புகள் மூலம் நீங்கள் பாகம் பிரித்துக் கொள்வதும், உங்கள் மீது தடுக்கப்பட்டிருக்கின்றன. இவை பாவமாகும். இன்றைய தினம் நிராகரிப்போர், மார்க்கத்தைப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டனர். எனவே, அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். என்னையே அஞ்சுங்கள். இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்கு நான் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், என்னுடைய அருட்கொடையையும் உங்கள் மீது முழுமையாக்கி வைதது விட்டேன். மேலும், உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். ஆகவே எவரேனும் பாவத்தின்பால் சார்ந்திடாமல், கடும் பசியினால் நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கிருபையு‌டை யோனானவும் இருக்கிறான். “ 4,5ஆம் வசனங்களும் உணவு விடயத்தில் அறியப்பட வேண்டியவை.

  மேலும், இவைகள் அனைத்தும் நமக்கு அல்லாஹ்வால் கூறப்பட்டு நாமும் ஏற்று உறுதி மொழியும் கூறியுள்ளோம் எனவும், அதனை நம்மை நினைவு கூருமாறும் அழைப்பு விடுத்துள்ளான். 5:7 – மேலும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருட்கொடையையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய போது, “நாங்கள் செவியுற்றோம், வழிபடவும் செய்தோம்“ என்று நீங்கள் கூறிய பொழுது, எதனைக் கொண்டு உங்களிடம் வாக்குறுதி வாங்கினானோ, அத்தகைய அவனுடைய வாக்குறுதியையும் நீங்கள் நினைவுகூருங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். இதனை மேலும் உறுதி செய்து கொள்ள வேண்டுவோர், 7:172ஆம் வசனத்தைப் பார்வையிடவும்.

  6:145, 6:146 ஆம் வசனங்கள், அல்லாஹ் நாடினால், மேலும் தெளிவைத் தரலாம்.

  இவை 1400 வருடங்களுக்கு மேலாக எவ்வித பிரச்சினைகளுமற்றுப் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. நபிகளார் காலந் தொடங்கி, அண்மைக் காலம் வரை இவற்றைப் பாவனை யாளர்களே அறிந்து செயற்படுத்தி வந்துள்ளனர். அல்லாஹ்வே பாதுகாத்தும் வந்துள்ளான். நம்பிக்கையாளர்களாயின் அவர்களைப் பாதுகாப்பதை அவன் தன் கடனாகக் கொண்டுள்ளான் எனவும் கூறியுமுள்ளான். அல்லாஹ்வுடைய நடைமுறை இத்தனை காலமும் எப்படி வெற்றியளித்ததோ, அப்டியே இனியும் வெற்றியளிக்கும். இந்த மார்க்கம் அவனுடைய பாதுப்பில் உள்ளதாகவும், அவனை யாரும், எதுவும் இயலால் ஆக்கிட முடியாது எனவும் அவனே கூறியுமுள்ளான் என்பதையும் முதலில் நம்பவும் வேண்டும்.

  nizamhm1944

  ஜனவரி 1, 2013 at 3:28 பிப

  • நம் நாட்டில் உள்ள எத்தனை மனிதர்கள் நீங்கள் கூறும் நம்பிக்கையாளர்களாக இருக்கின்றனர்??? அல்லாஹ் நேசிக்கும் மனிதர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்ற மனிதர்களா நம் சமூகத்தில் மிகையாக இருக்கின்றனர்???

   PMAMF Mohammed H.I.R.A.Z

   ஜனவரி 2, 2013 at 10:56 முப

   • பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அறிந்து கொள்ள மாட்டார்கள், குறைவாகவே அறிந்து கொள்கிறார்கள் போன்ற அனைத்தும் அல்லாஹ்வின் கூற்றே! அதனைத் தெரிந்து வைத்துக் கொண்டேதான் அல்லாஹ் இத்திருமறையை நமக்கு அருளியுள்ளான்.

    அதனால்தான், விளங்காதவர்கள் மீது அல்லாஹ வேதனையை ஏற்படுத்துகிறான் எனக் கூறியுள்ளான். அதிகமானோர் விளங்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக உண்மைகளை மறைப்பது அல்லாஹ்வின் சுன்னாவல்ல!

    nizamhm1944

    ஜனவரி 2, 2013 at 12:53 பிப

  • அன்றைய காலம் மோசடிகள் குறைந்த காலம் ஏமாற்று வியாபார போட்டி குறைந்த காலம் இன்றோ எங்கும் எதிலும் கழப்படத்தையே காணமுடியும் இபோது ஹலாலைபற்றிய தெளிவான அறிவு இன்றேல் நம்மால் ஒரு வேளை உணவைகூட சந்தேகமின்றி ஹலாலான உணவாக உட்கொள்ள முடியுமா?

   PMAMF Mohammed H.I.R.A.Z

   ஜனவரி 2, 2013 at 10:59 முப

   • தங்களது கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. ஆனால் அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கருத்து பயங்கரமானது. அதாவது, அல்லாஹ் இறக்கித் தந்துள்ள சட்டம் ஏதோ குறைபாடுள்ளது (அஸ்தபிருல்லாஹ்) என்பதால், யாரோ பங்களிப்புச் செய்து, ஹலால் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே நாம் ஒரு வேளை உணவைக்கூட உண்ண முடியும் என்ற நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகிறது. இது அல்லாஹ்வை இயலாமல் ஆக்கிய, ஷிர்க் கை வருவிக்கும் நிலையைத் தேற்றுவிக்கும்.

    இலுகுவான பதில், உணவுப் பொருட்களின் சுத்தத்தை, தரத்தை, அளவு, நிறுவைகளை, விலையை, காலவதியாகும் கால அளவை, அவைகளில் என்னென்ன உட்படுத்தப் பட்டுள்ளன என்பதை எல்லாம் தகுதி வாய்ந்தவர்களால், விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, விற்பனைக்காக அவை அனுமதிக்கப்படுகின்றன.

    இந்நிலையில், தாங்கள் கூறுவது போல் கலப்படங்கள், மோசடிகள் நடவாமல் இல்லை. இப்படியான கலப்படங்கள் மோசடிகள் செய்யப்படுவதை அரசால் மட்டுமே திடீர்ப் பரிசோதனைகளின் மூலம் தடை செய்யலாம். தண்டிக்கலாம்.

    மாறாக, வருடம் ஒரு முறை ஹலால் சான்றுப் பத்திரம் வழங்கும் முறையால் எவ்வகையிலும் தடை செய்ய முடியாது. இவை அவர்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை அல்ல.

    பொதிகளில் தரப்படும், கலவைகள் பற்றிய விவரம் போதாமல் இருக்குமாயின், இன்னும் தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும் எனக் கேட்கலாம். இது நமது உரிமையுங்கூட.

    மேலாக, சந்தேகமானதைத் தவிர்த்துக் கொள்ளல் என்ற இஸ்லாமிய நடைமுறையும், நிர்ப்பந்தம் காரணமாகத் தரப்பட்டுள்ள விதிவிலக்கும் போதுமானவை.

    மக்களுக்கு ஹறாம் பற்றிய அறிவைக் கொடுத்தலும் மிக இலகு. அது அல்லாஹ்வின் வழி. இலகு வழி. சிரமம் தராதது. எளிதில் விளங்கி நடை முறைப்படுத்தக் கூடியது. இவை அனைத்துமே முற்றும் அறிநத அல்லாஹ்வால் நமக்குச் சொல்லித் தரப்படுவது.

    மேலாக, ஹறாம் சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதில் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுண்டு.

    நான்கு ஹறாமான விடயங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியாத நிலையில், ஹலால் எனக் கூறப்படும் பல்லாயிரம் உணவுப் பண்டங்களை மக்கள் வாசிக்க, வாசித்து அறிந்து கொள்ள, விளங்கிக் கொள்ள முடியுமா? எத்தனை பாஷைகள் தெரிந்திருக்க வேண்டும்? எல்லோருக்கும் வாசித்து அறியும் திறன் உள்ளதா? ஹறாம் என்பது அல்லாஹ்வால் நடைமுறைப் படுத்திக் காட்டப்பட்டு, பரீட்சிக்கப்பட்டு வெற்றியளித்த அல்லாஹ்வின் நடைமுறை. 1400 வருடங்களுக்கு மேலாக நடைமுறைச் சிக்கலற்று காணப்படுவது.

    எல்லாவற்றுக்கும் மேலாக, குர்ஆனுக்கு மாறான பண்புகளை, ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை கொண்டுள்ளது. ஒரு ஹலாலான உணவு, பணம் செலுத்தி ஹலால் சான்றுப் பத்திரம் பெறாத நிலையில், உண்ணத் தகாததாகக் கருதப்படுவது. அல்லது தடைக்கு உள்ளாவது, இது நிர்ப்பந்தம் ஆகவுமுள்ளது. இன்னும் மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்ற அல்லாஹ்வின் வாக்கை மீறுவதும், பொய்யாக்குவதுமான தன்மையைக் கொண்டுள்ளது, இஸ்லாம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹலால் சான்றிதழ் முறை.

    nizamhm1944

    ஜனவரி 2, 2013 at 9:14 பிப

    • ஜம்மியாவின் ஹலால் சான்றிதல் வழங்கும் முறைகுறித்து உங்களுக்கு எந்த அறிவும் கிடையாது அதனை தெளிவாக அறிந்த பின் கண்காணிப்பு இல்லாமல் அவர்கள் வருடதுக்கொறு முறை ஏனைய லைசங்களை புதுபிப்பதுபோல் புதுபிக்கிறார்கள் என்ற உங்கள் விளக்கத்தை மீள் பரிசீலியுங்கள் ஜம்மியா பட்டியலிடாத தாங்கள் நாளாந்தம் கொள்வனவு செய்யும் ஹலாலான உணவுகளை பட்டியல் இட முடியுமா???

     PMAMF Mohammed H.I.R.A.Z

     ஜனவரி 4, 2013 at 11:13 முப

     • ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு குர்ஆனுக்கு முரணானது என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு, அது பற்றிய அறிவு இருக்கிறது.

      குர்ஆனில் ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு ஆதாரமாக ஏதாவது இருந்தால் அது பற்றி எழுதலாமே தவிர, ஹலால் சான்றிதழ் பற்றிய அறிவு எனக்கில்லை எனக் கூறுவதால் ஒரு நிராகரிப்பை நியாயப்படுததிட முடியாது.

      அல்லாஹ், உங்களுக்கு அருளப்பட்டவற்றில் இருந்து ஆகுமாதைத் உண்ணுங்கள் எனக் கூறியிருப்பதை அறிய, அல்லாஹ் கூறிய ஹறாம் என்பதைப் புறக்கணித்துவிட்டு, அஇஜஉ வின் ஹலால் சான்றிதழைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுமெனறா கூறுகின்றீர்கள்.

      நமக்கு இங்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை என்னவென்று தெரிந்து கொள்வதா? அன்றி அது பற்றிய குர்ஆனிய அறிவா? தேவை. நமது எச்செய்கையும், குர்ஆனில் உரைத்துப் பார்க்கவே வேண்டும். தீர்ப்பும் அதன் அடிப்படை யிலேயே கொடுக்கப்படல் வேண்டும் என்பதாவது தெரிகிறதா?

      எனது முன்னைய கருத்துப் பதிவின் கடைசிப் பந்தி ஒன்றே, ஆகுமான உணவை, ஆகாததாக ஒதுக்கும் குற்றத்துக்கும், ஷிர்க் என்ற இணைவைத்தலையும் வருவிப்பதை. வெளிபடுத்தும்.

      10:59 – நீர் கூறும், ”அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்த உணவை நீங்கள், பார்த்தீர்களா? அவற்றில் தடுக்கப்பட்டவை யாகவும், ஆகுமானதாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்களே, அல்லாஹ் உங்களுக்கு அனுமதி தந்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய் கூறுகிறீர்களா? என்று கேட்பீராக!

      16:116 – அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்யைக் கற்பனை செய்வதற்காக, உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பது போல், இது ஆகுமானது, இது தடுக்கப்பட்டது என்று நீங்கள் கூறவேண்டாம். நிச்யமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கிறாரோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்க்ள. ஹறாமான உணவை 16:115 இலும் காணலாம்.

      மேலும், அல் குர்ஆன் – 6:142, 6:143, 6:144, 6:145, 6:146, 6:147, 6:148. 6:149, 6:150, 6:151, 6:153, 6:154 போன்றவை, அல்லாஹ் நாடினால் உங்களுக்குத் தெளிவை ஏற்படுத்தும்.

      இன்னும், உணவில் மட்டும்தான் ஹலால் ஹலால் முத்திரை பொறிக்க வேண்டுமா? உடைகள், அவற்றில் ஊட்டப்பபடும் வர்ணங்கள், இரசாயனப் பெருட்கள் போன்றவற்றைக் கண்காணிக்க மாடடார்களா? அவற்றுக்கும் ஹலால் முத்திரை பொறிக்கலாமே! அதைவிட, நாம் செய்யும் தொழில், உழைப்பு மூலம் பெறப்படும் பணத்தைக் கொண்டே ஹலாலான உணவை வாங்க வேண்டியுள்ளதால், நமது உழைப்பு ஹலாலானதா என்பதைக் கண்டறிய அதற்கு சான்றிதழ் வழங்கி முத்திரை பொறிப்பது யார்?

      ஹலால் சான்றும், முத்திரையும் அவசியம்தான் என்றால், ஹலாலான உணவைப் பெறுவதற்காகப் பயன்படுத்தும் பணம் பெறப்படும் வழிகளான, உத்தியோகம், உழைப்பு, வியாபாரம் போன்றவை சான்றிதழையும் முத்திரையையும் வேண்டி நிற்பது புரியவில்லையா? விவசாயத்தின் போது பாவிக்கப்படும், களைநாசினி, பசளை போன்றவைகளுக்கு சான்றிதழ் வழங்கி முத்திரை குத்துவது யார்?

      தெருவோர அங்காடிக் கடைகளில், தேநீர்க் கடைகளில், பள்ளிவாசல்களில், வீடுகளில் விழாக்களில், அன்ர்த்த ‌வேளைகளில், ‌விற்கப்படும், பங்கிடப்படும், இலவசமாகக் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள், பொட்டலங்கள் யாரால் பரீட்சிக்கப்படுகின்றன? அவைகளில் ஹலால் முத்திரை காணப்படவில்லையே!

      இப்போது, ஹறாமைத் தவிர்க்கும்படி கூறிய அல்லாஹ்வின் சட்டம் மட்டுமே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாகும் என்பதாவது புரிகின்றதா? ஹலால் சான்றிதழன் கையறு நிலை, மனித சட்டங்களின் செல்லாத் தன்மையை
      விளங்கப் போதுமானதாகும் .

      கருணையே வடிவான, மனிதர்களுக்கு சிரமந்தர விரும்பாத, இலகுவை மட்டுமே விரும்புவதாகக் கூறும் அல்லாஹ்வை நிராகரிப்பதே, இத்தனை பிரச்சினைகளையும் உருவாக்கியும், அது முழுமையாகச் செயற்படுத்த முடியாத நிலையையே அடைந்துள்ளது. இதற்கு மேலும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை பற்றி அறிய வேண்டுமா?

      ஆம் எனின், தாங்கள் அது பற்றி அறிந்தவற்றை மக்கள் முன் வைக்கலாமே! ஹலால் ஹறாம் பற்றிய விளக்கத்தை எழுதித் தங்கள் கையிருப்பைக் காட்டியுள்ளார்களே ! அவ்விளக்கம், தங்களுக்கு அடிப்பதற்கு, அடுத்தவனுக்குத் தடியையும் கொடுத்துத் தலையையும் கொடுத்துள்ளதாகத் தெரிகிறதே!

      nizamhm1944

      ஜனவரி 4, 2013 at 8:53 பிப

 3. எங்கெல்லாம், எப்போதெல்லம் முஸ்லிம்களுகெதிரான கோசங்கள் எழுப்பப்படும்போதும், நெருக்குவாரங்கள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் உறங்கிகொண்டிருக்கும் நம் உள்ளங்கள் உசுப்பி விடப்படுகின்றன. குறித்தவிடயங்களைப்பற்றிய அறிவும், அக்கறையுமில்லாமல்லிக்கும் நம்மவர்கள் உற்சாகத்துடன் உத்வேகம் பெறுகின்றனர். மேலும், அடுத்தவரிடம் அன்னியமாகிப்போகும் இஸ்லாமிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே நிலமையை சாதகமாகவும் சாதூரியமாகவும் பயன்படுத்தி நம்மோடு மாற்றாரையும் சுவர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும் செயற்பாட்டினை செய்ய முனைவோமாக. விடுத்து அவர்களின் அதே முட்டாள்தனப்பாணியில் செயற்பட்டு சட்டியை உடைக்கும் வேலையிலும் ஏடுபடாமலும் இருப்போமாக. “சதிகாரருக்கெல்லாம் சதிகாரன் இறைவன்”
  3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

  Bishrullah

  ஜனவரி 3, 2013 at 4:48 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: